என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 177044"
- மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,
சர்க்கரை - 1 கப்,
மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,
எலுமிச்சை பழம் - 1.
செய்முறை:
மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.
அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.
மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.
இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).
நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.
இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பல வகையான அல்வா சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று வாழை இலையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழை இலை - 2
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
* சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.
* வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.
* இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கோதுமை ரவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- கோதுமை ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
பால் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
ஏலக்காய் - 1
செய்முறை
குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
அடுத்து அதில் கப் - 1 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.
கோதுமை ரவை மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.
குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும்.
ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும்.
அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை அணைக்கவும்.
இப்போது சூப்பரான கோதுமை ரவை பாயாசம் ரெடி.
தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.
பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
https://www.maalaimalar.com/cinema- அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளது.
- இன்று இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 3/4 கப்
கேசரிப் பவுடர் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 டம்ளர்
செய்முறை :
முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும்.
ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை கிளற வேண்டும்.
இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம்.
இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தைப் பெற்றுள்ளார்.
- பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.
கடலூர்:
கட–லூர் லட்–சுமி சோர–டியா நினைவு மெட்–ரிக் மேல்– நி–லைப்–பள்–ளி–யில் 2022-23-ம் க ல்– வி– ய ாண்– டு க்– க ா ன பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தை–யும், மாவட்ட அள–வில் 2-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ளார். வி. ஸ்ரீஹ–ரிணி 600-க்கு 591 மதிப்–பெண் பெற்று பள்–ளி–யில் 2-ம் இடம் பெற்–றுள்–ளார். இந்த 2 மாண–வி–களும் வணி–க–வி–யல், கணக்கு பதி–வி–யல் மற்–றும் கணினி பயன்–பாட்–டில் முழு மதிப்–பெண் பெற்–றும் சாதனை படைத்–துள்–ள–னர்.
மேலும் எம்.திவ்யா 600-க்கு 580 மதிப்–பெண் பெற்று 3-ம் இடம் மற்–றும் வேதி–யி–யல் மற்–றும் கணினி அறி–வி–யல் பாடத்–தில் முழு மதிப்–பெண்–ணும் பெற்–றுள்–ளார். எஸ். நந்–திதா 600-க்கு 572 மதிப்–பெண் பெற்று 4-ம் இடத்–தி–லும், சி.யுவ–ஸ்ரீ 600-க்கு 566 மதிப்–பெண் பெற்று 5-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ள–னர். பாட–வா–ரி–யாக முழு–மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 8 மாண–வர்–களும், 500-க்கு மேற்–பட்ட மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 26 மாண–வர்–களும், 450-க்கும் மேற்–பட்டமதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 21 மாண–வர்–களும் உள்–ள–னர்.
வெற்றி பெற்ற மாண–வர்–க–ளுக்கு பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா மற்–றும் உதவி தலைமை ஆசி–ரி–யர் பத்–தா–கான் ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.
- ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று ரவையில் இனிப்பு பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1/4 படி
அச்சு வெல்லம் - 12
நெய் - 5 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 12
காய்ந்த திராட்சை - 12
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை
செய்முறை:
ரவைவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும்.
இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும்.
ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் தயார்.
- ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
- கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ராஜபாளையம்
ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராஜபாளையம் மதுரைக்கடைத் தெருவில் கொடியேற்று விழா நடந்தது. நகரச்செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், பூபதி, பொருளாளர் பிச்சைக்கனி, மாவட்டப்பிரதிநிதி புஷ்பவேல், குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன், மூத்த நிர்வாகி விநாயகமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ராமர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வில்லிசை மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், தலைமைக்கழகச் சொற்பொழிவாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இருட்டுக்கடை அல்வா ருசிக்கு பெயர் போனது.
- இந்த அல்வாவின் அசாத்திய ருசிக்கு தாமிரபரணி தண்ணீரும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 200 மி.லி
சர்க்கரை - 4 ½ கப்
வறுத்த முந்திரி – 20
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
மாவை சாஃப்டாக பிசைந்த பின்பு அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி இந்த கலவையை 6 மணி நேரம் ஊற வைக்கவும். கலவை நன்கு ஊறிய பின்பு மாவை கையால் எடுத்து நன்கு அழுத்தி நீரில் அப்படியே கரைத்து விடவும்.
ஊற வைத்துள்ள தண்ணீரில் மாவு முழுவதும் கரைந்த பின்பு அதை வடிக்கட்டி பாலை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த பாலை புளிக்க செய்யவும். அதற்கு பாலை பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில் பாத்திரத்தைத் திறந்து பார்க்கும்போது பால் நன்கு புளித்து மேலே ஏடு மிதக்கும். அதை மட்டும் கரண்டியால் நீக்கிவிட்டு பாலை வடிக்கட்டவும். இப்போது அல்வா செய்வதற்கான திக்கான பால் தயார்.
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் வடித்து வைத்திருக்கும் பாலை ஊற்றவும்.
சரியாக 15 நிமிடத்திற்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு பாலை கைவிடாமல் கிண்டவும். கரண்டியால் தொடர்ந்து கிளறினால் தான் கெட்டி தட்டாமல் சரியான பதத்தில் அல்வா வரும்.
அடுத்து 3 கப் சர்க்கரையை இதில் சேர்த்து நன்கு கரையும் வரை கிளறவும்.
இரண்டும் நன்கு கலந்து அல்வா பதத்திற்கு வந்தபின்பு கடாயை இறக்கி வைக்கவும்.
சர்க்கரை பாகு
திருநெல்வேலி அல்வா செய்முறையில் சர்க்கரை பாகு தயார் செய்வது மிக மிக முக்கியம். அல்வாவுக்கு நிறத்தைக் கொடுப்பதே சர்க்கரை பாகு தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 5 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். மிதமான தீயில் சமைக்கவும். சூட்டில் சர்க்கரை கரைந்து பாகு போல் உருகி வரும். கெட்டி பதம் தட்டாமல் இருக விடாமல் கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த சர்க்கரை பாகு நிறம் மாறிக் கொதிக்க தொடங்கியதும் இறக்கி விடவும்.
திருநெல்வேலி அல்வா
இப்போது மாவு இருக்கும் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை பாகு சேர்த்து கிளறவும். வெள்ளையாக இருக்கும் மாவு நிறம் மாறி அல்வா நிறத்திற்கு வரும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
இப்போது நெய்யை ஊற்றவும். கரண்டியால் அல்வாவை கிளறி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் போதும். சுவையான திருநெல்வேலி அல்வா தயார்.
அல்வா தயாரானதும் அதை கையால் தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாமல் வந்தால் சரியான பதம் என அர்த்தம்.
இப்போது சூப்பரான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.
- புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டதால் பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழழ நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை வகித்தார்.
தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன் பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக வேதாரண்யம் கிளை மேலாளர் எழில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, வார்டு கவுன்சிலர் ஐஸ்வர்யா, மாவட்ட பிரதிநிதி பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.
புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ் சிறுத்தலை காட்டில் இருந்து காலை 8 மணி, 10:30 மணி, மாலை 3 மணி என மூன்று முறை கருப்பம்புலம், நெய்விளக்கு நால்ரோடு, வேதாரண்யம் வழியாக நாகைக்கு தினசரி மூன்று முறை இயக்கப்படும் என கிளை மேலாளர் தெரிவித்தார்.
- குழந்தைகளுக்கு சத்தான ரெசிபிகளை செய்து கொடுப்பது உடலுக்கு நல்லது.
- பாசிப்பயறில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பயறு - அரை கப்
கருப்பட்டி - 300 கிராம்
சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
ஏலக்காய் - 3
உப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:
பாசிப்பயறை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
வெந்ததில் பாதியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
கருப்பட்டியைத் தூளாக்கி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
வடிக்கட்டிய கருப்பட்டி சிரப்பை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில் வேகவைத்து அரைத்த பயறுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில், சிறிது தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்துக்குக் கொண்டு வரவும்.
4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்துக் கஞ்சியைக் கொதிக்க விடவும்.
அடுத்து அதில் வெந்த பயறைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கருப்பட்டிக் கஞ்சி தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சிவகங்கையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
சிவகங்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இதையடுத்து சிவகங்கையில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இணை செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிக்குமார், பாபு, நகர நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன், அண்ணா தொழிற்சங்கம் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று இந்த ஜாம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாதுளை முத்துகள் - 2 கப்
எலுமிச்சைப்பழம் - 2
சர்க்கரை - 2 கப்
செய்முறை:
மாதுளையை உதிர்த்து அதற்கு சமமாக சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ளவும்.
மாதுளை முத்துகளை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்து வைக்கவும். விதை அரைபடாமல் இருக்க வேண்டும். எனவே, மாதுளை முத்துகளை லேசாக அரைத்தால் போதும்.
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த மாதுளை முத்துகளைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து, 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.
பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து மாதுளை முத்துகளோடு சேர்ந்து வரும் போது, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து நன்கு கிளறவும்.
கலவையில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி, பிசுபிசுப்பு பதம் வரும்வரை கிளறவும். இதற்கு சுமார் 7 நிமிடங்கள் ஆகலாம்.
இப்போது அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மாதுளை ஜாம் தயார்.
கலவை ஆறிய பின்னர் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யவும். பல வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
குறிப்பு:
மிகவும் சுவையான இந்த ஜாம் செய்யும்போது அதிகமாக வேக வைத்துவிட வேண்டாம். பிறகு ரப்பர் போலாகிவிடும். பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். உடலுக்கு சத்து தருவதோடு ரத்தவிருத்திக்கும் ஏற்றது மாதுளை. மாதுளையின் விதைகள் வேண்டாம் என்று நினைத்தால், மாதுளை முத்துகளை நன்கு அரைத்து வடிகட்டி சாறெடுத்து பிறகு ஜாம் செய்யலாம்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்