search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179026"

    • இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்
    • பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    கப்பியறை அருகே இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண் டிய இடத்தை விஜய்வசந்த் எம்.பி பார்வையிட்டார். ரெயில்வே அமைச்சகம் மற்றும் துறைக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

    அவருடன் பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்
    • மாயனூர்-வீரராக்கியம் இடையே

    கரூர்

    கரூரில் இருந்து திருச்சி செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் மாயனூர்-வீரராக்கியம் இடையே உள்ள பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்கறையுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபரின் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

    இதையடுத்து அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ரெயில் மோதி இறந்தாரா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நடுவழியில் நிறுத்தம்
    • வாகன ஓட்டிகள் அவதி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறை தேரிவிளை பகுதியில் நேற்று மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

    இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து புனலூருக்கு பாசஞ்சர் ரயில் வந்தது.

    சுக்கு பாறை தேரிவிளை பகுதியில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் பிணம் கிடந்ததால் டிரைவர் ரயிலை நடு வழியில் நிறுத்தினார்.சுமார் அரை மணி நேரமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்ததை யடுத்து அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட ரயில்வேகேட் திறக்க தாமதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அரசு பஸ்கள் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி மாற்று பாதை வழியாக சென்றனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த உடலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    பின்னர் ெரயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தது. கன்னியாகுமரி புனலூர் பாசஞ்சர் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நாக ர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ெரயில்களும் தாமதமாக சென்றது.

    பிணமாக கிடந்தவரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.
    • 29, 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும்.

    பாபநாசம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே (மும்பை), சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயிலை (வண்டி எண்: 09419/09420) ரெயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது.

    இந்த வண்டி இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என்பதையும் அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி, 6.11.2022,13.11.2022, 20.11.2022, 27.11.2022 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை 7.25 க்கு வந்து சேரும். பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும்.

    மறுமார்க்கத்தில் 29-ந்தேதி, 5.11.2022, 12.11.2022,19.11.2022, 26.11.2022 ஆகிய சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும்.

    இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரெனிகுண்டா), புனே, (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.

    சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும்.

    தற்சமயம் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ள இந்த வண்டிக்கு கிடைக்கும் பயணிகளின் வரவேற்பைபொறுத்து நிரந்தரமாக்கப்படும்.

    எனவே இந்த வாய்ப்பினை அதிகம் பயன்படுத்திக்கொண்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரெயில் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

    • காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரியும் ரெயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 25 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    சேலம்:

    ரெயில்வே துறையை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ெரயில் நிலையங்களையும், விரைவு ரெயில்களையும் தனியார் மயக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் சேலம் ெரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட 25 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • பிணமாக கிடந்தவர் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாதவாறு கிடந்தார்.
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    குழித்துறை மேற்கு ெரயில் நிலையம் அருகே இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார் ராஜ், ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பிணமாக கிடந்தவர் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாதவாறு கிடந்தார்.

    எனவே அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு
    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ரெயில்வே தேர்வு வாரி யம் லெவல் 1 (முந்தைய குரூப் D) ஆட்சேர்ப்புக்கான கணினி அடிப்படையி லான தேர்வை நடத்துவதற்கு புகழ்பெற்ற நிறுவனத்தை நியமித்துள்ளது.

    இதில் 1.1 கோடிக்கும் அதிகமான விண்ணப்ப தாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். 12 மண்டல ரெயில்வேகளை உள்ளடக்கிய தேர்வு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிக்கப் பட்டுள்ளன. நான்காவது கட்டம் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கியுள்ளது. எந்தவிதமான முறைகே டுகளையும் தடுக்க மற்றும் அகற்றுவதற்காக பல்வேறு பாதுகாப்புகள் கட்ட மைக்கப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்களுக்கு மையத்தின் ஒதுக்கீடு கணினியில் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படுகிறது மேலும், தேர்வர்கள் தேர்வுமையத்தில் அறிக்கை செய்து தங்களைப் பதிவு செய்த வுடன், ஆய்வகம் மற்றும் இருக்கைகள் ஒதுக்கீடும் ரேண்டமாக இருக்கும். வினாத்தாள் மிகவும் பாது காக்கப்பட்ட வடிவத்தில் உள்ளது விண்ணப்பதாரரைத் தவிர வேறு யாரும் வினாத்தாளை அணுக முடியாது.

    தேர்வர்களுக்குக் கிடைக்கப்பெறும் வினாத் தாளில் உள்ள வினாக்க ளின் வரிசையும் ரேண்ட மாக மாற்றப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு விண்ணப்பதார ருக்கும் தனிப்பட்ட வினாத் தாள் உள்ளது. எனவே, முதன்மை வினாத்தாளில் உள்ள கேள்வி வரிசையி லிருந்து வரிசை முற்றிலும் வேறுபட்டது.

    தேர்வுகள் சி.சி.டி.வி. கேமராக்களின் கடுமையான கண்காணிப்பின் கீழ், ஒவ்வொரு தேர்வரின் முழுப் பதிவும் நடத்தப்படுகின்றன. இது தவிர, தேர்வர்கனின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் ரெயில்வே தனது சொந்த ஊழியர்களையும், தேர்வுகளை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக தேர்வு நடத்தும் ஏஜென்சி ஊழியர்களையும் நியமித்துள்ளது.

    விண்ணப்பதாரர்கள், சட்ட விரோதமான முறை யில் பணி நியமனம் என்ற போலி வாக்குறுதிகளை, தவறான செய்திகளைக்கவ னத்தில் கொள்ளாமல், தவ றான வழியில் வழிநடத்த முயல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    29-ந் தேதி அன்று ரயில்வே தேர்வு வாரியம் இணையதளங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் ஏற்கனவே தேர்வர்களுக்கு இந்த விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்
    • ரெயில்வே எஸ்.ஆர்.எம். யு. தொழிற்சங்கம் சார்பில் கன்னியாகுமரி புனே ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தபோது அந்த ரெயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரியில் இருந்து புனேக்கு தினசரி ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை மாற்றம் செய்துவிட்டு இன்று முதல் அதனை பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு ரெயில் நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே எஸ்.ஆர்.எம். யு. தொழிற்சங்கம் சார்பில் கன்னியாகுமரி புனே ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தபோது அந்த ரெயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.சி. பிரிவு தொழிலாளர்களை மாற்றம் செய்யக்கூடாது, தொடர்ந்து அவர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், தனியாருக்கு அந்த பிரிவை மாற்றம் செய்யக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

    • அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ஒட்டன்சத்திரத்தில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும். மதுரை செல்லும் ரெயில் காலை 7.50 மணிக்கும், திருவனந்தபுரம் செல்லும் ரெயில் மாலை 5.30 மணிக்கும் ஒட்டன் சத்திரத்தில் நிற்கும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ராமநாதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலப்பணி மீண்டும் தொடங்குகிறது.
    • 1 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை செல்லும் வகையில், 2018-ம் ஆண்டு ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

    இந்த பணிகள் 40 சதவீதம் முடிந்த நிலையில், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியாா் பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அகற்றினால் பாலம் முழுமையாக அமையும் நிலை ஏற்பட்டது. இதனால் மேம்பாலப் பணிகளுக்குத் தடை கோரி கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளாக பாலப் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில், ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் பாலப்பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டாா். தடை கோரி வழக்குத் தொடா்ந்தவா்களை அழைத்து கோட்டாட்சியா் சேக்மன்சூா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து நீதிமன்றத்துக்கு சென்றவா்கள், வழக்கை திரும்பப் பெற சம்மதித்தனர்,

    இது குறித்து த.மு.மு.க, மாநில செயலாளர் சலிமுல்லாகான் கூறியதாவது:-

    தற்போது மேம்பாலம் கட்டும் பகுதியில் எங்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்தப் பகுதி அரசு நிர்ணயித்த தொகை குறைவாக இருந்தது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த வாரம் எனது நண்பர் கீழக்கரை ஹசன் சென்னையில் இருந்து ராமநாதபுரம் ரெயிலில் வந்தபோது பாலம் கட்ட தாமதமாவதால் மக்கள் படும் சிரமத்தை எடுத்துக் கூறி வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெற்று கைெயழுத்திட்டோம்.

    இடத்தின் மதிப்புக்கு பணம் கிடைக்கவில்லை.மக்களின் விலை மதிப்பற்ற மகிழ்ச்சியை உயர்வாக கருதுகிறேன். இன்னும் 1 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை

    நாகர்கோவில்:

    தோவாளை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், மரியவளன் ஆகியோர் இன்று அதிகாலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெயில்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்.
    • இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி :

    ரெயில்களில் பயணம் செய்கிற 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், அவர்களுக்கென்று தனி இருக்கையோ, படுக்கையோ வேண்டுமென்றால், அது வழங்கப்படமாட்டாது.

    அதே நேரத்தில் பயணிகள், 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தனி இருக்கையோ, படுக்கையோ வேண்டுமென்றால், அதற்காக அவர்கள் பெரியவர்களைப்போன்று முழு கட்டணமும் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். இது தற்போது பின்பற்றப்படுகிற நடைமுறை.

    இந்த நடைமுறை, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன; 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரெயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற வேண்டும் என்று சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    இது ஒரு பிரிவினரிடத்தில் கோபத்தை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் கடுமையாக சாடினர்.

    இதையொட்டி ரெயில்வே அமைச்சகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    "ரெயிலில் குழந்தைகள் பயணம் செய்வதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன, 1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் பெற வேண்டும்" என சமீபத்தில் சில ஊடக தகவல்கள், அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

    இது தவறாக வழிநடத்துவதாகும். ரெயிலில் பயணம் செய்கிற குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை ரெயில்வே மாற்றவில்லை.

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரெயிலில் பயணிப்பதற்கு தனி படுக்கை வசதி வேண்டுமென்றால், டிக்கெட் பெற வேண்டும். அவர்களுக்கென்று தனிபடுக்கை வசதி தேவையில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே இருப்பதை போலவே இலவசமாகவே பயணிக்கலாம்.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    எனவே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரெயில்களில் தனி படுக்கை வசதியின்றி பயணம் செய்வதற்கு டிக்கெட் வாங்கத்தேவையில்லை என்பது தெளிவாகி உள்ளது.

    ×