search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179048"

    • ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப் போவதாக தகவல்
    • செய்யூர் எம்.எல்.ஏ பனையூர் பாபு, மாமல்லபுரம் கிட்டு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அம்பேத்கர் நகர் பகுதியில் மாற்று கட்சியிலிருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இணையும் விழா  நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், இதனால் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வி.சி.க ஆதரவு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

    ஏப்ரல் 14ஆம் தேதி பா.ஜ.க.வினரின் எதிர்கட்சிக்கு எதிரான போக்கை கண்டித்தும் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப் போவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

    செய்யூர் எம்.எல்.ஏ பனையூர் பாபு, மாமல்லபுரம் கிட்டு உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக அவரை வரவேற்க புதுபட்டினத்தில் உள்ள தமிழன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலம்பம் சுற்றினர். அவர்களை வியந்து பார்த்த திருமாவளவன், அவர்கள் அனைவரையும் பாராட்டி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

    • அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சியுடன் கொண்டாட திட்டமிட்டு உள்ளனர்.
    • அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி-அணிவகுப்பு நடத்தி அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    சென்னை:

    டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஏப்ரல் 14-ந்தேதி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சியுடன் கொண்டாட திட்டமிட்டு உள்ளனர்.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி-அணிவகுப்பு நடத்தி அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை ஒருங்கிணைக்கும் வகையில் மாவட்டம் வாரியாக மேலிட பொறுப்பாளர்களை திருமாவளவன் நியமித்து அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை-திருமாவளவன், தமிழினியன், இரா.விக்ரமன், கடலூர்-சிந்தனை செல்வன், விழுப்புரம்-ரவிக்குமார் எம்.பி., மதுரை-ஏ.சி.பாவரசு, சேலம்-உஞ்சை அரசன், தர்மபுரி-தகடூர் தமிழ்செல்வன், திருவள்ளூர்-பாலசிங்கம்,

    வேலூர்-இளஞ்சேகுவேரா, தேனி-ஆற்றலரசு, கோவை-பாவலன், திருப்பத்தூர்-வன்னிஅரசு, காஞ்சிபுரம்-எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., நாகப்பட்டனம்-ஆளுர்ஷாநவாஸ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு-பனையூர் பாபு எம்.எல்.ஏ.,

    திண்டுக்கல்-கனியமுதன், தூத்துக்குடி-கலைவேந்தன், விருதுநகர்-வில்லவன் கோதை, தஞ்சாவூர்-ரஜினிகாந்த், திருச்சி-இளமாறன், மயிலாடுதுறை-பாவாணன், சிவகங்கை-எல்லாளன், கிருஷ்ணகிரி-கோவேந்தன்,

    அரியலூர்-திருமார்பன், ராணிப்பேட்டை-நீலவானத்து நிலவன், ஈரோடு-சந்திரகுமார், கன்னியாகுமரி-பார்வேந்தன், தென்காசி-தமிழினியன், திருவாரூர்-குடந்தை தமிழினி, கள்ளக்குறிச்சி-சங்கத் தமிழன், திருவண்ணாமலை-விடுதலை செழியன், பெரம்பலூர்-விவேகானந்தன், புதுக்கோட்டை-இரா.கிட்டு,

    நெல்லை-செல்ல பாண்டியன், ராமநாதபுரம்-மாலின், கரூர்-தங்கதுரை, நாமக்கல்-ரத்தின நற்குமரன், திருப்பூர்-கரையரசன், நீலகிரி-நெப்போலியன், புதுச்சேரி-சிபிசந்தர் ஆகியோர் மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் மேலிட பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

    • சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.
    • கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

    இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும்.

    இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காங்கிரசுக்கு போகும் வாக்குகளை தடுக்கணும் என்பது தான் அவர்கள் திட்டம். இதர பிற்பட்ட சமூகத்தினரை ஏற்கனவே வளைத்து விட்டார்கள்.
    • மாநிலங்களில் அவர்கள் சாதிவாரியான கட்சிகளுக்கும் மாறிவிட்டார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    தனிப்பட்ட முறையில் பா.ஜனதா தலைவர்கள் மீது எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. அவர்களுடைய மதசார்பின்மைக்கு எதிரான கொள்கை, கூட்டாட்சி தத்துவத்தை குலைப்பது, இந்துத்துவா இவைதான் எனக்கு பிடிக்காதது. அவர்கள் திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள். இந்தியாவில் காங்கிரசின் ஓட்டு வங்கியே தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் தான். இப்போது அவர்களை குறிவைத்து வேலை பார்க்கிறார்கள். ரோடு போட்டு தருகிறோம். கழிவறைகள் கட்டி தருகிறோம். கோவில் கட்டி தருகிறோம், பதவி தருகிறோம் என்று ஆசைகாட்டி அவர்களை இழுக்கிறார்கள். மதமாற்றத்தை தடுக்கணும், காங்கிரசுக்கு போகும் வாக்குகளை தடுக்கணும் என்பது தான் அவர்கள் திட்டம். இதர பிற்பட்ட சமூகத்தினரை ஏற்கனவே வளைத்து விட்டார்கள்.

    மாநிலங்களில் அவர்கள் சாதிவாரியான கட்சிகளுக்கும் மாறிவிட்டார்கள். அதனால் தான் காங்கிரசுக்கு வாக்கு குறைந்துவிட்டது.

    • தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றால் வி.சி.க. வெளியேறும் என அழுத்தம் திருத்தமாக முன்பு போல திருமாவளவன் கூறவில்லை.
    • 2001-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருந்தது. அந்த கூட்டணியில் வி.சி.க.வும் இருந்தது.

    அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் போகும். நாங்கள் பா.ஜ.க. இருப்பதால் அ.தி.மு.க. பக்கம் போகவே வாய்ப்பில்லை என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் திருமாவளவன்.

    அதேநேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றால் வி.சி.க. வெளியேறும் என அழுத்தம் திருத்தமாக முன்பு போல திருமாவளவன் கூறவில்லை.

    இது தொடர்பாக மூத்த அரசியல் பார்வையாளர்களிடம் பேசிய போது, "2001-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருந்தது. அந்த கூட்டணியில் வி.சி.க.வும் இருந்தது. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்ன ஒரு பதில் இப்போதும் அற்புதமாக பொருந்தும். அதாவது வி.சி.க., தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது" என்றார். அதே டயலாக் 2024 லோக்சபா தேர்தலின் போது, "வி.சி.க., தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.தான் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது" என உருமாறி எதிரொலித்தாலும் ஆச்சரியமில்லை.

    • கருத்தியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தான் யுத்தம்.
    • பா.ஜனதாவை அவரால் எதிர்க்க முடியுமா? அசைத்துக் கூட பார்க்க முடியாது.

    சென்னை:

    விடுதலைகள் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா. ஜனதாவின் தீவிர எதிர்ப்பாளர் என்பது தெரிந்ததே. கருத்தியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தான் யுத்தம். பாரதிய ஜனதாவை ஓட ஓட விரட்டுவோம் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக பா. ஜனதா மூத்த தலைவர் எச். ராஜா கூறியதாவது:

    திருமாவளவனிடம் என்ன கருத்து இருக்கிறது. அவரை பொறுத்தவரை ஒரு காலிடப்பா. அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. பா.ஜனதாவை அவரால் எதிர்க்க முடியுமா? அசைத்துக் கூட பார்க்க முடியாது. பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி பார்த்தார்கள். ஆனால் இன்று வட கிழக்கு மாநிலங்களில் நடந்திருப்பது என்ன? 90 சதவீதம் சிறுபான்மை மக்கள் வாழும் அந்த மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம் டெல்லியில் இருந்து ஆட்டி படைக்கிறது என்று ஒரு தவறான தகவலை பரப்பி பார்க்கிறார். ஏன் மக்களுக்கு புரியாதா? பிரதமர் மோடி ஒரு பிற்பட்ட சமூகத்தை சார்ந்தவர். ஜனாதிபதி முர்மு மலைவாழ் மக்கள் சமூகம், உள்துறை அமைச்சர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது இவர் சொல்வதை மக்கள் எப்படி ஏற்பார்கள். பா.ஜனதா மீது இவர்கள் எப்படிப்பட்ட விமர்சனங்களை வைத்தாலும் அதை ஒவ்வொன்றாக மக்களே முறியடிப்பார்கள்.

    இப்போது சனாதனம் எதிர்ப்பு என்று ஒன்றை சொல்கிறார். சனாதனம் என்றால் என்ன? தொன்மையானது என்பது தான்! இந்துக்கள் எதிர்ப்பு என்று சொல்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் சிதம்பரம் கோவிலில் சென்று பரிவட்டம் கட்டி தீட்சிதர்களிடம் ஆசி பெறுகிறார். இந்த வேடம் எதற்கு? என்று அவர் கூறினார்.

    • பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும்.
    • விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது.

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பாஜனதா அ.தி.மு.க.வின் முதுகில் ஏறி சவாரி செய்ய பார்க்கிறது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும். என்னை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிரான வலுவான ஒரு கூட்டணி அமைய வேண்டும். அதற்கான முயற்சியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்.விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது.

    தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது போல் காட்டுவது அந்த கட்சியின் ராஜதந்திரம். தேர்தல் நேரங்களில் இப்படித்தான் முயற்சி செய்வார்கள். கூட்டணியை விட்டு வெளியே நிற்பது போல் காட்டுவார்கள். இது கூட்டணி கட்சியை மிரட்டுவது. அந்த ராஜதந்திரங்களை பல தேர்தல்களில் பா.ம.க. எடுத்ததை பல கட்சிகளும் பார்த்துவிட்டன. இனி அது எடுபட போவதில்லை.

    • அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம்.
    • ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காத கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு, கண்காட்சி புத்தகத்தில் பாராட்டி எழுதினார்.

    பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

    முதல்வரின் அயராத உழைப்பால் முன்னேறி இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்பட கண்காட்சி அமைந்து இருக்கிறது.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என பேசி இருக்கிறார். அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம். திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல இருப்பதே அடுத்த கட்ட பணி.

    ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காத கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் சட்டத்தின் காரணத்தை கூறும் கவர்னர் மனிதாபிமான அடிப்படையில் கூட முடிவு எடுப்பதற்கு ஏன் யோசிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.ஜி.ஆரும் இலங்கை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான களத்தில் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
    • இந்திரா காந்தி ஆதரவு இல்லை என்றால் இந்த இயக்கங்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்காது.

    நாகர்கோவில்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குறித்து விரிவாக பேசாமல் கடந்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ம.தி.மு.க.வினர் வருத்தம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை மாநாட்டில் பங்கேற்க வந்த திருமாவளவனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொருவரும் அவரவர் வலிமைக்கேற்ப ஈழத்தமிழர் பிரச்சனையில் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

    திராவிட கழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் அவரவர் வலிமைக்கேற்ப பங்களிப்பை செய்துள்ளார்கள். ஒத்துழைப்பை தந்துள்ளார்கள்.

    அண்ணன் பிரபாகரன் அவர்களுடன் நான் பேசும்போது, இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தமிழக தலைவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பு குறித்து கருத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அதில் நான் ஒன்றிரண்டு கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறேன். இதில் தனித்து ம.தி.மு.க. பற்றி மட்டும் கூற நான் விரும்பவில்லை. ஈழ தமிழர்களுக்காக போராடியதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவின் பங்களிப்பு மகத்தானது.

    எம்.ஜி.ஆரும் இலங்கை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான களத்தில் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை எல்லா கட்சிகளும் ஆதரித்தது. இந்திய அரசும் ஆதரித்தது.

    இந்திரா காந்தி ஆதரவு இல்லை என்றால் இந்த இயக்கங்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்காது. இந்திரா காந்தி தான் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தவர். தமிழகம் முழுக்க இருந்தவர்களுக்கு பயிற்சி அளித்தவர். இதில் விடுதலைப் புலிகளும் அடக்கம்.

    ஆயுதங்களை கீழே போடுங்கள் என ராஜீவ் காந்தி காலத்தில் கூறியதில் தான் முரண்பாடு வந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காகவும் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
    • இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தான் அதிகம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    'பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள்' என்கிற பொய்யான செய்தியை வேண்டும் என்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள்மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காகவும் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்த அரசில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற தோற்றத்தை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள். அத்துடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்திய அளவில் அவப்பெயரை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள்.


    ஒருபுறம் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது, இன்னொரு புறம் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரைப் படுகொலை செய்கிறார்கள் என்று வதந்தி பரப்புவது என இரண்டு வகையில் சனாதன சக்திகள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரங்களைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இலட்சக் கணக்கானவர்கள் பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 19 (1) (டி) அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் தடையின்றிச் செல்வதற்கும் உரிமை வழங்கியுள்ளது. 19(1) (இ) இந்திய குடிமக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சென்று குடியிருப்பதற்கு உரிமை வழங்குகிறது. இவை இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இந்த அடிப்படை உரிமை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தான் அதிகம். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கிறவர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4% மட்டுமே ஆவர். உலக நாடுகளை ஒப்பிடும்போது மாநிலம்விட்டு மாநிலம் புலம்பெயர்வோர் இந்தியாவில் மிகவும் குறைவு என உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக 1979 ஆம் ஆண்டு 'மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர் சட்டம்' இயற்றப்பட்டது.

    வெளிமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும். அவர்களை அழைத்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அந்த சட்டத்தின் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு நியாயமான கூலி மற்றும் சுகாதார வசதிகளையும், அந்தத் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி வசதியையும் அந்த ஒப்பந்ததாரர் செய்து தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

    வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்படும் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் மிக குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுடைய வேலை நேரமும் வரம்பற்றதாக உள்ளது. அவர்கள் கால்நடைகளைப் பட்டியில் அடைத்து வைப்பதுபோல சுகாதாரமற்ற சூழலில் வைத்து வேலை வாங்குகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய கொத்தடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சட்டப்படி அவர்களுக்குள்ள பிற உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான்.
    • அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அதிக அக்கறை இருக்கிறது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க.வை வரும் பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்த வியூகம் வகுத்து உள்ளார்.

    மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் விழா என்று மட்டும் இல்லாமல் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரப்புரையின் தொடக்கவுரையாகவும் பேசி உள்ளார்.

    அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உள்ள அணிகளை இணைக்கும் பணியில் முதலமைச்சர் ஈடுபடவேண்டும். நாடு முழுவதும் சுற்றுப்பயணமாக சென்று மாநில அரசியல் தலைவர்களை அவர் சந்திக்க வேண்டும்.

    அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். தி.மு.க. அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். பா.ஜ.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திடிரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகுத்துவிட்டார்.

    காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு கார்ப்ரேட்டுகளுக்கு ஆனது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

    அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அதிக அக்கறை இருக்கிறது. மக்களின் நலன் மீது இல்லை. இந்திய ஒன்றிய அரசு சமையல் விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
    • காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, ரவிக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், வி.கோ.ஆதவன், ந.செல்லத்துரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.ஐ. (எம்.எல்.) மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன.

    தி.மு.க. ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.

    அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் (கூட்டணியில்) நாங்கள் (வி.சி.க.) இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தி.மு.க. ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறோம். தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.

    அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரும் போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போன்று தமிழகத்திலும் தேர்தல் நெருங்க நெருங்க என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. காரணம், அது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில் இருந்து தான் முடிவு செய்யப்படும்.

    இந்த ஆபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டத் தான் நாங்கள் இங்கு (வள்ளுவர்கோட்டம்) கூடி உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×