search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான்"

    • எனது காசிலிருந்தும் தான் சம்பளம் பெறுகிறாய். ஒழுங்காக ஐபிஎஸ் வேலையை பார்க்கட்டும்.
    • திருச்சி, புதுக்கோட்டையில் அருகருகே கணவன், மனைவிக்கு யார் சிபாரிசில் பதவி கிடைத்தது.

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பிச்சை எடுத்தது அல்ல ஐபிஎஸ் பதவி என்ற வருண்குமாரின் ஸ்டேட்மெண்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * என்னிடம் காசு இல்லை. மக்களிடம் கையேந்தி தான் கட்சியை நடத்துகிறேன். பிச்சை எடுத்து, திரள் நிதி திரட்டி கட்சி நடத்துகிறேன்.

    * எனது காசிலிருந்தும் தான் சம்பளம் பெறுகிறாய். ஒழுங்காக ஐபிஎஸ் வேலையை பார்க்கட்டும்.

    * கன்னியாகுமரியில் பேசிய துரைமுருகனை திருவள்ளூரில் கைது செய்தததற்கான காரணம் என்ன?

    * சாட்டை துரைமுருகனை கைது செய்த பின்னர் அவரது செல்போன் உரையாடலை வெளியே கசியவிட்டதற்கான காரணம் என்ன?

    * யாருக்கு வேலை செய்கிறீர்கள், ஆடியோ வெளியிடுவதற்கு ஐடி விங்கில் வேலை செய்ய வேண்டியது தானே.

    * ஆடியோவை எடுத்து வெட்டி ஒட்டி வெளியிடுவதால் எத்தனை பேரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

    * வருண்குமார் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து விடலாம்.

    * நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக எழுத மாட்டார்கள்.

    * விருதுநகரில் எழுதியவனை திருச்சிக்கு தூக்கி வந்து கண்ணை கட்டி அடித்தது ஏன்?

    * திருச்சி, புதுக்கோட்டையில் அருகருகே கணவன், மனைவிக்கு யார் சிபாரிசில் பதவி கிடைத்தது.

    * என் குடும்பத்தை பற்றியும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

    * எங்கே குற்றம் நடந்தாலும், திருச்சிக்கு அழைத்து வந்து விசாரிப்பது ஏன்?

    * செல்போனை ஆய்வு செய்ய வேண்டிய வேலை போலீசாருடையது அல்ல. நாங்கள் செல்போனில் பேசுவது எப்படி பொதுவெளியில் கசிகிறது?

    * கட்சிக்காரர்களுடன் ஆயிரம் பேசுவோம், அதை எப்படி பொதுவெளியில் வெளியிடுவீர்கள்? என்று கூறினார்.

    • மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது.
    • தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல.

    அரியலூர்:

    நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல. 2 கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தங்கள் கட்சியில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். தி.மு.க.வில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    எனவே, இரண்டுக்கும் 10 சதவீதம்தான் வித்தி யாசம். விஜய் தனது கட்சி மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார். அழைக்கவும் கூடாது. அவரது கட்சியின் தொடக்க விழாவுக்கு, மற்றவர்களை அழைக்க மாட்டார்.

    நாம் தமிழர் கட்சி எப்போதும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று நான் முடிவெடுத்து இருக்கிறேன். ஆனால், தேர்தல் காலத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கூட்டணி குறித்து யோசிப்பேன்.

    2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 50 தொகுதி களில் வேட்பாளர்களை தேர்வு செய்துவைத்து உள்ளேன். ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து இதுவரை நான் தெரிவிக்கவில்லை.

    இவ்வாறூ அவர் கூறினார்.

    • சிவராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அதிமுக, பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • நான் சாகப்போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என வருத்த கடிதம் எழுதியிருந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலி பயிற்சியாளர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, அவரது தந்தையும் மதுபோதையில் கீழே விழுந்து இறந்தார்.

    சிவராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அதிமுக, பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி சிவராமன் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    சிவராமன் குற்ற உணர்வில் தற்கொலை செய்து இறந்துபோனார். இந்த மனவேதனையில் அவரது அப்பா மது அருந்தி சாலையில் விழுந்து இறந்துவிட்டார்.

    சிவராமன் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிந்ததும் அவரை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள்தான். நான் சாகப்போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என வருத்த கடிதம் எழுதியிருந்தார்.

    அதைக் கட்சி தம்பிகளிடம் கொடுத்து விசாரிக்க சொன்னேன். தான் செய்தது தவறு என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.இதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இது தற்கொலைதான். இதற்கு பின்னால் யாரும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

    • தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பு.
    • இறையன்புக்கு பிறகு தமிழர் ஒருவரை தலைமைச் செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாடு அரசிற்கு உள்ளப்பூர்வமான பாராட்டுகள்.

    தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய ஐயா முருகானந்தம் இ.ஆ.ப. அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    ஐயா முருகானந்தம் அவர்களின் உண்மையும், நேர்மையுமான, அர்ப்பணிப்பு மிகுந்த பணித்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இந்நியமனத்தைக் கருதுகிறேன்.

    தமிழர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்களை உணர்வுப்பூர்வமாக அணுகி உரிய தீர்வினைக் காண, தமிழ்நாட்டின் அதியுயர் ஆட்சிமை பதவிகளில் மண்ணின் மொழியும், மக்களின் வலியும் புரிந்த மாட்சிமை பொருந்திய தமிழர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் விதமான தற்போதைய நியமனம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தலைமைச்செயலாளராக ஐயா முருகானந்தம் அவர்களின் நியமனம் தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பாகும்.

    தத்துவ அறிஞர் ஐயா இறையன்பு அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவரைத் தலைமைச்செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாட்டு அரசிற்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.

    சென்னை:

    சென்னையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    சொந்த ஊரில் பணி, கேங்மேன்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் கேங்மேன்கள் நடத்தும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:

    * போராட்டம் தான் ஒருவனின் இருத்தலை உறுதி செய்யும்.

    * ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.

    * எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    * போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் போராட்டம்.

    * கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள். ஆனால் மீனவர் ஒருவர் உயிரிழப்பது குறித்து எந்த அமைச்சரும் பேசக்கூட இல்லை.

    * குறையை தவிர எதையும் செய்ய முடியாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    * முதலில் கரண்டை கொடுங்கள், அதன் பின்னர் இலவச மின்சாரத்தை அளிக்கலாம் என்று கூறினார்.

    • விஜய் செப்டம்பர் மாதம் கட்சி பணிகளை ஆரம்பிக்கிறார்.
    • கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது தம்பி விஜய் செப்டம்பர் மாதம் கட்சி பணிகளை ஆரம்பிக்கிறார். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அவரது கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அந்த நேரத்தில் தான் பார்க்க வேண்டும்.

    தேர்தல் கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். அதை அப்போது பேசுவோம். எனவே அதுபற்றி இப்போது பேசி பயனில்லை.

    திருச்சி போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. என்னையும், என் குடும்பத்தாரையும், எனது கட்சியில் உள்ள பெண்களையும், தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். வருண்குமார், அவரது ஆதரவாளர்கள் தான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
    • சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "துணை முதல்வராக உதயநிதி வந்தால், வரவேற்போம், வாழ்த்துவோம். வேறு என்ன செய்ய முடியும்? அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

    என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    தலித்துகள் முதலமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன். ஆனால், திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை எதிர்க்கிறேன்.

    விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? இது சர்வாதிகாரம் என்று கூடச் சொல்ல முடியாது, கொடுங்கோன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

    சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல். கேவலமான, அசிங்கமான அரசியல் பழிவாங்கல்" என்று தெரிவித்தார்.

    • தங்கலான் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக உள்ளது.
    • தங்கலான் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

    இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், தங்களின் படக்குழுவை வாழ்த்தி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

    ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களுக்கும், பறிக்கப்பட்ட அவர்களது உரிமை மீட்புக்கும், நல்வாழ்விற்கும் என தனது ஒப்பற்ற கலைத்திறனை அர்ப்பணித்துள்ள அன்புத்தம்பி பா.ரஞ்சித் அவர்களுக்கும்,

    நடிப்புக்கலையில் தான் கொண்டுள்ள அளவற்ற காதலாலும், தனித்திறனாலும் தான் ஏற்ற பாத்திரத்திற்கும், கதைக்களத்திற்கும் ஏற்ப தனது உடலை வருத்தி, திருத்தி வெளிப்படுத்தியுள்ள அசாத்திய நடிப்பாற்றலால் காட்சிகளில் நம்மை ஒன்றச் செய்துள்ள பெருங்கலைஞன் அன்புத்தம்பி விக்ரம் அவர்களுக்கும்,

    வரலாற்றுப்பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மண் மனம் மாறாத மக்களிசையாலும், வீரம் தெறிக்கும் போர்ப்பறையிசையாலும் காட்சிகளுக்கு வலிமைசேர்த்துள்ள என் ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும்,

    குருதி தோய்ந்த தங்கச்சுரங்கங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றை உணர்வுச்சூடேற்றும் திரைக்கதை மற்றும் உரையாடல்களாக வார்த்துள்ள அன்பிற்கினிய எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், தமிழ் பிரபா ஆகியோருக்கும், வரலாற்றுக்காலத்தை அதன் விழுமியங்களோடு கண் முன்னே கொண்டு வந்துள்ள கலைஇயக்குநர் தம்பி மூர்த்தி அவர்களுக்கும், அதனை உலகத்தரத்தில் ஒளிஓவியமாக வடித்துள்ள ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி கிஷோர்குமார் அவர்களுக்கும், படத்தொகுப்பாளர் தம்பி செல்வா அவர்களுக்கும், தங்கலான் திரைப்படத்திற்கு கடின உழைப்பையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள அனைத்து திரைக்கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்எனது அன்பும், பாராட்டுகளும்.

    வருகின்ற 15-08-2024 அன்று வெளியாகவிருக்கும் தங்கலான் திரைப்படத்தை உலகெங்கும் பரவி வாழும் என் உயிர்க்கினிய அன்னைத்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் திரையரங்கங்களுக்குச் சென்று கண்டு களித்து, மாபெரும் வெற்றியடையச் செய்து, மேலும் இதுபோன்ற ஆகச்சிறந்த படைப்புகள் தமிழில் உருவாகத் துணை நிற்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" ஏன்னு சீமான் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருச்சி மாவட்ட எஸ்.பி. குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
    • நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அண்மையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அந்த சமயத்தில் சீமானின் பேச்சுக்கு, திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், திருச்சி எஸ்.பி. வருண்குமார் குடும்பத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கண்ணன் தனது பதிவில், "சாரே! நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்னரே! தயவு செய்து இறந்து விடுங்கள்.. எங்கள் அண்ணா சொன்னாலும் கேட்க மாட்டோம்... நீங்கள் தவறினாலும்? அதன் பலனை சந்ததிகள் சந்திக்கும்... உலகின் எந்த மூலையில் இருந்தாலும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ் புதல்வன் திட்டம் என குற்றம் சாட்டினார்.
    • தமிழ்ப் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி கேட்டுயுள்ளார்.

    தருமபுரி:

    கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து, நேற்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்தினை தெரிவித்தார்.

    உலக பழங்குடியினர் தினத்தை ஒட்டி, தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம் என குற்றம்சாட்டிய சீமான், தமிழ்ப்புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

    திராவிட கட்சிகள் காசே இல்லாமல் கூட்டத்தை கூட்டினால் கட்சியை கலைத்துவிட்டு செல்வதாக சவால் விட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாதக, பாஜகவின் B டீம் அல்ல என்றும் திமுக தான் பாஜகவின் மெயின் டீம் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான், காவல்துறை பொறுப்பு வகிக்கும் பதவிகளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட எஸ்.பி., தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். சீமானின் பொய்யான அபிப்பிராயங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் வழக்கு தொடர்வேன்.

    பொது மேடையில் பேசினாலும், கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.
    • தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, மின் கட்டண உயரவை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

    ×