search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்"

    இலங்கை கடற்படை கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 3-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen
    ராமேசுவரம்:

    தூத்துக்குடி திரேஷ் புரத்தைச் சேர்ந்த வில்பிரட், அந்தோணி, விஜய், ரமேஷ், ஆரோக்கியம் உள்பட 8 மீனவர்கள் மரிய பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் தூத்துக்குடியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

    கைதான 8 மீனவர்களும் இலங்கையில் உள்ள புத்தளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இந்திர ரஜீத் புத்தள ஜெயா, குற்றம் சாட்டப்பட்ட 8 மீனவர்களையும் வருகிற 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து மீனவர்கள் 8 பேரும் நீர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். #ThoothukudiFishermen
    கோவையில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டன் புனிதாவை ஆகஸ்ட் 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கோவை:

    கோவையை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் பீளமேடு பகுதியில் விடுதி நடத்தி வந்தார். இதில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்த விடுதியில் புனிதா(32) என்பவர் வார்டனாக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக புனிதா மீது புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிகள், பெண்களின் பெற்றோர் கடந்த 23-ந்தேதி விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததும் பீளமேடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதன், வார்டன் புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் தலைமறைவானார்கள். போலீசார் தேடுவதை அறிந்த ஜெகநாதன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தொடர்ந்து புனிதா தலைமறைவாக இருந்து வந்தார்.

    தனிப்படை போலீசார் புனிதாவை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பெண் வார்டன் புனிதா கோவை ஜே.எம்.6 குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.  சரணடைந்த வார்டன் புனிதாவை வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் புனிதாவை மாதர் சங்கத்தினர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளி பரமதுரையை 15 நாள் காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கும்பகோணம்:

    நெல்லை மாவட்டம் பழவூரில் பிரசித்தி பெற்ற நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் சந்திரகபூர், வல்லப பிரகாஷ், ஆதித்யா பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் கூட்டாளியான தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பரமதேவன்பட்டியை சேர்ந்த பரமதுரை (வயது 42), கடந்த 13 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரமதுரை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சென்னைக்கு சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்ற பரமதுரையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரையை போலீசார் நேற்று கும்பகோணத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அவரை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பரமதுரையை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் கொள்ளை போன பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளில் ஆடல் நடராஜர், சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திர தேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது. கைது செய்யப்பட்ட பரமதுரை மீது சிலை கடத்தல் வழக்கு மட்டுமின்றி பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    டெல்லியில் ராணுவ மேஜர் மனைவியை கொன்ற ராணுவ மேஜர் நிகில் ஹன்டாவை 14 நாள் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ArmyMajorwifekilled #MajorArrested
    புதுடெல்லி:

    டெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்கம் சாலையில் கடந்த 23-ம் தேதி கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிரேதத்தை போலீசார் கண்டெடுத்தனர்.

    இந்த மர்ம கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க சைலஜா விவேடி, இந்திய ராணுவத்தில் மேஜர் ஆக பணியாற்றி வரும் அதிகாரியின் மனைவி என்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் கொலையாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், நிகில் ஹன்டா என்ற சக ராணுவ மேஜர் உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் கைது செய்யப்பட்டார். 

    அவரிடம் விசாரணை நடத்திவந்த போலீசார் இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். நிகில் ஹன்டாவை 14 நாள் காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #ArmyMajorwifekilled #MajorArrested
    ×