என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 182857"
- கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
- தமிழக கவர்னரை திரும்பப்பெறக்கோரி மனு அளிக்க உள்ளனர்.
சென்னை :
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது ஏன் என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் 6 அம்சங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக அரசு சார்பில் 6 பக்க தகவல் வெளியானது.
இதற்கிடையே சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து அவர் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிக்க தி.மு.க. எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தி.மு.க. எம்.பி.க்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 11.45 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. எம்.பி.க்களுடன் ஜனாதிபதியை சந்திப்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இந்த சந்திப்பில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் ஜனாதிபதியிடம், தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதம் குறித்தும், அவரை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளனர்.
- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
- ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தார்.
இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அவர் தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்த போது கவர்னர் ஆர்.என். ரவி அவையைவிட்டு வெளியேறினார்.
தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடைவதற்குள் கவர்னர் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட சபை மீறிய செயலை ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க தி.மு.க. எம்.பி.க்.கள் முடிவு செய்தனர். அதற்காக நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க நேற்று இரவு அவர்கள் டெல்லி சென்றனர். கூட்டணி கட்சி எம்.பி.க்களும் உடன் உள்ளனர்.
இதற்கிடையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க. எம்.பி.க்கள்., ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை.
ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு திரிணாமுல் கண்டனம் தெரிவித்தது.
- திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.
மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரியும் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, பா.ஜ.க. போராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அகில் செய்தது தவறு. அத்தகைய கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர் எனது கட்சி சகா என்பதால் எனது கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கட்சி ஏற்கனவே அகில் கிரியை எச்சரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
- திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.
இதற்கிடையே, மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. போராட்டம் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரியின் அந்தக் கருத்து பொறுப்பற்ற தன்மையில் உள்ளது. அது திரிணமுல்லின் கருத்து இல்லை. ஜனாதிபதி மீது எப்போதும் தங்கள் கட்சி மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது என தெரிவித்தது.
- பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
- கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வருகை தந்தார். மைசூரு தரசா விழாவை தொடங்கி வைத்த அவர், பின்னர் உப்பள்ளி சென்று ஐ.ஐ.டி. வளாகத்தை திறந்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், உப்பள்ளி நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர் பின்பு ஓய்வு எடுத்தார்.
இன்று மாலையில் பெங்களூரு விதானசவுதாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கர்நாடக அரசு சாா்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் இந்த பாராட்டு விழா நடக்கிறது.
ஜனாதிபதி விதானசவுதாவுக்கு வருவதையொட்டி, பாதுகாப்பு கருதி அங்கு பணியாற்றும் அனைத்து அரசு ஊரியர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுக்க கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து இருந்தது.
இதையடுத்து இந்த ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை ரூ.208 கோடி செலவில் கட்டி முடிக்க கடந்த 2016-ம் ஆண்டு இஸ்ரோ-எச்.ஏ.எல். இடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருந்தது. இந்தநிலையில் பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்க உள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கின. 2014-ம் ஆண்டு இந்தியா விண்ணில் ஏவிய ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.
இதன்மூலம் கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரிக்க ரூ.860 கோடி ஒப்பந்தத்தை புதிய விண்வெளி இந்திய நிறுவனத்திடம் இருந்து எச்.ஏ.எல்.எல் அன்ட் டி நிறுவனங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- நேர்மை, பாரபட்சமின்மை போன்ற உயர்ந்த பண்புகளுடன் திகழ வேண்டும்.
- நலிந்த பிரிவினருக்கு சேவை செய்யுங்கள்.
புதுடெல்லி :
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2020-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 175 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.
அப்போது அவர்களிடையே ஜனாதிபதி பேசியதாவது:-
நீங்கள் பணியாற்றும் இடங்களில் சமூகத்தின் கடைசி நபரையும் கவனித்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை உங்களிடம் எதிர்பார்க்கிறோம். நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை பற்றி அறியாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்டங்களின் பலன்கள் கிடைத்தால்தான் அந்த திட்டம் வெற்றி பெற்றதாக கருதப்படும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும். நீங்கள் பணியாற்றும் பகுதியை மனிதவள குறியீடு அடிப்படையில் 'நம்பர் ஒன்' பகுதியாக உயர்த்த வேண்டும் என்ற வேட்கையுடன் செயல்பட வேண்டும்.
நீங்கள் யாருக்கு பணியாற்ற கடமைப்பட்டு இருக்கிறீர்களோ, அவர்களிடம் அக்கறையாக இருக்க வேண்டும். நலிந்த பிரிவினரின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதில் பெருமைப்பட வேண்டும். 'உலகமே ஒரு குடும்பம்', 'ஒட்டுமொத்த இந்தியாவும் என் குடும்பம்' என்ற குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும்.
தற்போதைய உள்கட்டமைப்பு வளர்ச்சியால், எந்த உட்புற பகுதியையும் எளிதில் சென்றடைந்து விடலாம். அப்படி சென்று நலிந்த பிரிவினருக்கு சேவை செய்யுங்கள். நேர்மை, பாரபட்சமின்மை போன்ற உயர்ந்த பண்புகளுடன் திகழ வேண்டும்.
2047-ம் ஆண்டு நடக்கும்போது, முடிவு எடுக்கும் உயர் அதிகாரிகளில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். அந்த ஆண்டு, இந்தியா மிகவும் வளமாகவும், வலிமையாகவும், திகழ்வதை உறுதி செய்யும்வகையில் வேட்கையுடன் பணியாற்றுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஜென்மாஷ்டமியின் புனிதமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
- கிருஷ்ணரின் வாழ்வில் இருந்து, மக்கள் நலனுக்காக தன்னலமற்ற செயல்களைச் செய்வதன் மூலம் கல்வியை வழங்கும் பண்புகளை நாம் பெறலாம்.
கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு, பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து கோவில்களில் பிரார்த்தனை செய்து ஜென்மாஷ்டமி அனுசரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜென்மாஷ்டமியின் இனிய நல்வாழ்த்துக்கள். கிருஷ்ணரின் வாழ்வில் இருந்து, மக்கள் நலனுக்காக தன்னலமற்ற செயல்களைச் செய்வதன் மூலம் கல்வியை வழங்கும் பண்புகளை நாம் பெறலாம். இந்த புனித திருவிழா அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்க விரும்புகிறேன். எண்ணம், சொல் மற்றும் செயலால் அனைவரின் நலனுக்கும் முன்னுரிமை அளிப்போம்" என்று பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " ஜென்மாஷ்டமியின் புனிதமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்த பக்தி மற்றும் மகிழ்ச்சியின் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். ஸ்ரீ கிருஷ்ணா வாழ்க" என்று குறிப்பிட்டிருந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து புதிதாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மலர் கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன் பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.
அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சுமார் 20 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் பதவி ஏற்ற பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பிரதாயமாக இப்போது தான் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- ராஷ்டிரபத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்ததை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த கருத்தை தெரிவித்தார்.
ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்தார்.
இருப்பினும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சயை கிளப்பியது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், " ராஷ்டிரபத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்ததை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
- பாஜ.க. இதை பிரச்சினை ஆக்குகிறது.
புதுடெல்லி :
விலைவாசி உயர்வு, அத்தியாசிய பொருட்கள் மீது சரக்கு சேவை வரி விதிப்பு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் விஜய் சவுக்கில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தி, அணிவகுத்து செல்ல முற்பட்டனர்.
அவர்கள் எங்கே அணி வகுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ஜனாதிபதி மாளிகையைக் குறிக்கும் 'ராஷ்டிரபதி பவன்' என்பதற்கு பதிலாக 'ராஷ்டிரபட்னி' என்ற வார்த்தையை பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தவறாக பயன்படுத்தினார். ஜனாதிபதியை அவமதிக்கும் இந்த வார்த்தையால், பெரும் சர்ச்சை உருவானது.
இதில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், விவசாய ராஜாங்க மந்திரி ஷோபா கரண்ட்லஜே உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நேற்று போர்க்கொடி உயர்த்தினர்.
அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் கோரிக்கை வாசகங்கள் கொண்ட அட்டைகளை ஏந்தி நின்று, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டனர்.
பாராளுமன்றத்துக்கு வெளியே இந்த விவகாரம் குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கவனக்குறைவாக ராஷ்டிர பட்னி என்ற வார்த்தையை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி விட்டேன். நாக்கு பிறண்டதால் அவ்வாறு கூறி விட்டேன். ஒருபோதும் ஜனாதிபதியை மரியாதைக்குறைவாக பேசவில்லை.
நான் என்ன செய்ய வேண்டும்? நான் அதைக்கூறி விட்டேன், தவறாக அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். அதில் கவனம் செலுத்தி விடாதீர்கள் என்று கூற பத்திரிகையாளர்களை கூட தேடினேன். ஆனால் அவர்களை பார்க்க முடியாமல் போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், "நான் ஓரு வங்காளி. இந்தியில் பேசி பழக்கம் இல்லை. இந்தி எனது தாய்மொழியும் இல்லை. நான் ஒரு தவறு செய்து விட்டேன். நான் ஒப்புக்கொள்கிறேன். நான் ஜனாதிபதியிடம் நேரம் ஒதுக்கி கேட்டிருக்கிறேன். நான் அவரிடம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் இந்த பகந்திகளிடம் (பா.ஜ.க.வினரிடம்) அல்ல" என கூறினார்.
சில பா.ஜ.க.வினர் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே மலையாக்கப் பார்க்கிறார்கள் என சாடினார்.
வீடியோ வெளியீடு
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் எந்த சூழ்நிலையில் தான் ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை பயன்படுத்த நேர்ந்தது என்பதை எடுத்துக்கூறி உள்ளார். மேலும், பாஜ.க. இதை பிரச்சினை ஆக்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு.
- இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தல்.
நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
- நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
புதுடெல்லி:
நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். தான் ஒருபோதும் இந்திய ஜனாதிபதியை அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும், ஊடகங்களிடம் பேசும்போது கவனக்குறைவாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆளும் பாஜக இந்த விஷயத்தை பெரிதாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
எனினும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே இவ்வாறு ஜனாதிபதியை அவமதித்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுதியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மதியம்வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 12 மணிக்கு பிறகும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியில் ஜனாதிபதி "ராஷ்டிரபதி" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்