search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது
    • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை 2-வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துஉள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இத னால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் காலை 10மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.இதைத்தொடர்ந்து2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத் துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்த ளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்கப் படாமல் இருந்தது. இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழமணக் குடி, மணக்குடி, பள் ளம் போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாக வும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தினருடன் திரண்டு வந்தனர்
    • சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு சுற்றுலாவாக ஆயிரக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் இங்கு மக்கள் வந்த வண்ணமாக உள்ளனர்.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர்.

    கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற் கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது.

    இதை யொட்டி நேற்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15மணிக்கு கணபதி ஹோமமும் நடந்தது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும் 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. அதன் பின்னர் 9.30 மணிக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, சந்தனம், விபூதி, நெய், தேன், பஞ்சாமிர்தம், மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடந்தது. அதன்பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து, ரோஸ் உள்ளிட்ட பலவகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெற்றது.

    பின்னர் அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • ஆடி அமாவாசை நாளில் நீராடும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு
    • காசி, ராமேஸ்வரத்துக்கு இணையான புண்ணிய தளம் கன்னியாகுமரி.

    கன்னியாகுமரி:

    காசி, ராமேஸ்வரத்துக்கு இணையான புண்ணிய தளம் கன்னியாகுமரி. இங்கு இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக் கடல் ஆகிய முக்கடலும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. இந்த முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் விநாயகர் தீர்த்தம், அனுமன் தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், கன்னியா தீர்த்தம், தனுஷ்கோடி தீர்த்தம், விசாக தீர்த்தம், மாதிரு தீர்த்தம், தனு தீர்த்தம்உள்பட 16 விசேஷ தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

    இதனால் இந்துக்கள் தங்களது முக்கிய விசேஷ நாட்களான ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை போன்ற சர்வ அமாவாசை நாட்களில் இந்த முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலிகர்மபூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் இந்த முக்கடல் சங்கமத்தில் வயதான முதியவர்கள் புனித நீராடும் போது அவர்களின் பாதுகாப்புக்காக முன்பு 4 புறமும் இரும்பு சங்கிலியினால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் இந்த முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிக்கு சங்கிலித்துறை கடற்கரைபகுதி என்று ெபயர் வர க்காரணமாயிற்று. காலப்போக்கில் கடல் அலை சீற்றத்தின் காரணமாகவும் கடல் உப்புக்காற்றினால் அந்த இரும்பு சங்கிலி சேதம்அடைந்து காணாமல் போய்விட்டது. தற்போது சங்கிலித்துறை கடற்கரை என்று பெயர் இருக்கிறதே தவிர அந்த பகுதியில் சங்கிலியை காணவில்லை. இதனால் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தக் குளியல் போடும் போது ராட்சத அலையில் சிக்கி அடிக்கடி உயிர்ப்பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது.

    எனவே இந்த உயிர் பலியை தடுக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இரும்பு சங்கிலிகள் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசையையொட்டி லட்சக்கணக்கான புத்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பார் கள்.

    இதைத்தொடர்ந்து ஆடி அமாவாசைஅன்று புனித நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும் வயதான முதியவர்களின் பாதுகாப்புக்காகவும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 4 புறமும் இரும்பு சங்கிலியினால் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேவசம் போர்டு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    • பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகபட்சமாக பஸ், வேன், கார், ஜீப் மற்றும் டிரக்கர் போன்ற வாகனங்களில் சுற்றுலா வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்க ளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஆண்டுதோறும் கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பதிலாக கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்களது ஊழியர்களை வைத்து சுற்றுலா வாகன ங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த ஏலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் நடந்தது.

    இந்த ஏலம் மற்றும் டெண்டரில் மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை கன்னியாகுமரி மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 111க்கு ஏலம் எடுத்துள்ளார்.

    • மலைப் பாம்பினை லாவகமாக மீட்டனர்.
    • மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுசீந்திரம் அக்கரையில் உள்ள குடியிருப்பு பகுதியில் ராட்சதமலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இந்தராட்சதமலைப்பாம்பு ஊருக்குள் புகுந்ததை பார்த்த காசி என்பவர் உடனடியாக இது பற்றி வனத்துறையினரு க்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் உத்தரவின் படி வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த அந்த மலைப் பாம்பினை லாவகமாக மீட்டனர். அந்த ராட்சத மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த ராட்சத மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    • பெருந்தலைவர் காமராஜரின் 120 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 120 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு அரசு மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், தமிழ்நாடு பனைப் பொருள் வாரிய முன்னாள் தலைவர் குமரி அனந்தன், விஜய் வசந்த் எம். பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின்,

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் விஜய்வசந்த்எம்.பி., மாவட்டத் தலைவர் கே டி உதயம், , அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதே போல மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தம்பித்தங்கம், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • வனத்துறையினர் மீட்டுகாட்டில் விட்டனர்
    • விஷ பாம்பை காட்டுப்பகுதியில பத்திரமாக கொண்டு விட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் நேற்று கொம்பேறி மூக்கன் என்ற கொடிய விஷ பாம்பு புகுந்தது. உடனே இது பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் உத்தரவுபடி பிரிவு வனவர் தலைமையில் வனக்காப்பாளர் அசோக் வனக்காவலர் ஜோயல் வேட்டை தடுப்புகாவலர் பிரவின் ஆகியோர் இணைந்து விஷ பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    பின்னர் காட்டுப்பகுதியில பத்திரமாக கொண்டு விட்டனர்.

    • படகு போக்குவரத்து 1மணி நேரம் தாமதம்
    • குறைந்த அளவு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரில் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்ப ட்டது. வங்க கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி யது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்து உள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதி கொந்தளிப்பாக இருந்தது.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவ ளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாவும் கொந்தளி ப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்ட பத்துக்கு இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அதிகாலை முதலே படகுத் துறையில் வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமா ற்றம் அடைந்தனர்.

    அவர்கள் கடற்கரையில் நின்றபடியே விவேகா னந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து சென்றனர். இந்த நிலை யில் கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது.

    • விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெற்றது.
    • விழாவில் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் (டைப்ரைட்டிங்) பள்ளிகள் சங்கத்தின் 108-வது பரிசளிப்பு விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெற்றது.

    விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத் தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் அறிக்கை சமர்ப்பித்தார் மற்றும் சங்க இணைச் செயலாளர் வேலாயுதம்பிள்ளை சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தார்.

    சிறப்பு விருந்தினராக கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டு சங்க தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். முன்னதாக சிறப்பு விருந்தினரை சங்க செயற்குழு உறுப்பினர் கண்ணன் அறிமுகப்படுத்தினார்.

    கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் ராஜரெத்தினம், சங்க போட்டி தேர்வுக்குழு தலைவர் விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக சங்க துணைத் தலைவர் பட்டேல் என்.ஆர்.சுந்தரம் பிள்ளை நன்றி கூறினார்.

    விழாவில் குமரி மாவட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் தட்டச்சு பள்ளி உரிமையாளர்கள், ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல கூட்டம் அலைமோதியது
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமானோர் குவிந்திருந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போதும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ×