search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • மாங்கனி திருவிழா13-ந் தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சிவபெருமானால் புனிதவதி என்று அழைக்கப் பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன் மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக் காலில் தனி சன்னதி உண்டு. அதேபோல கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலிலும் காரைக்கால் அம்மையருக்கு என்று தனி சன்னதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் மாங்கனி அளித்ததை நினைவூட்டும் விதமாக மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதேபோல இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா ஆனி மாத பவுர்ணமி யான வருகிற 13-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 5.30 மணிக்கு மூலவரான 5½ அடி உயரமுள்ள குகநாதீஸ்வ ரருக்கு சிறப்புஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் 6.45 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாங்கனி திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி சிவபெரு மான் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றிபவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது திரளான பக்தர்கள்கூடை கூடையாக மாம்பழங்களை காரைக்கால் அம்மையாருக்கு படைத்து வழிபடுகின்றனர். அதன் பிறகு மாங்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற் கான ஏற்பாடுகளை கன்னி யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேர வையினர் செய்து வருகிறார் கள்.

    • அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
    • சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரம் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 68). இவர் டிரைவர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் வாடகை கார் ஓட்டி வந்தார்.

    இவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முருகன் மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மகன் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த முருகன் சம்பவத்தன்று நள்ளிரவு தனது வீட்டில் ஒரு அறையில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். சிறிது நேரத்தில் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றுஅவர்பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
    • தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட கோவில்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில்ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாகும்.

    தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே இந்த கோவிலை கட்டி உள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இங்கு குகன் என்ற முருகக் கடவுள் ஈஸ்வரன் என்றசிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணம் ஆயிற்று.

    இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் அமைந்துஉள்ள சிவலிங்கசிலை 5½ அடி உயரம் கொண்டதாகும். இந்த கோவிலில் மாணிக்கவாச கர்குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு நடராஜபெருமான், சிவகாமி அம்பாள், காரைக்கால்அம்மையார் மற்றும் மாணிக்க வாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    எண்ணெய், பால், தயிர், நெய், களபம், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் புனித நீரால் இந்த சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் 10.45 மணிக்கு அலங்கார தீபாரதனை நடந்தது. அதன் பிறகு மாணிக்கவாசகர் உற்சவர் சிலையை தாம்பாள தட்டில் மலர்களால் அலங்கரித்து வைத்து கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் கையில் ஏந்தி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 11 மணிக்கு பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    • மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது
    • மின்வாரிய செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

    நாகர்கோவில்:

    மின்வாரிய செயற் பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டம் முழு வதும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத் தப்படுகிறது. இதையொட்டி நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை காவல்கிணறு மின் நிலையத்தில் இருந்து கண்ணுபொத்தை காலணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வருகிற 11-ந் தேதி கன்னியாகுமரி மின் வினியோகத்தில் இருந்து கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை யும், பார்வதி புரத்தில் சிவபுரம், களியங்காடு, ஆரம்பாறை, கணியாகுளம், இலந்தையடி, பாறையடி, பண்டாரதோப்பு, உழ வன்கோணம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வல்லன்குமாரன்விளை மின்வினியோக நிலை யத்தில, இருந்து வருகிற 12-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்காரன் கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் மற்றும் நாகர்கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரி பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்ச குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    பார்வதிபுரம் மின் நிலையத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வதிபுரம் சானல்கரை ரோடு, எஸ்.எஸ்.நகர், கிறிஸ்டோபர் நகர், பெருவிளை, கே.பி.ரோடு, அருள்மாதா தெரு, கோட்டவிளை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வருகிற 14-ந் தேதி வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் பாக்யாதெரு, ராஜா தெரு, ஆன்றனி தெரு, வாட்டர் டேங்க் ரோடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    • பிரதமர் மோடி, அண்ணா, கருணாநிதி உருவங்களை வரைந்து அசத்தல்
    • நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் வை. கோபால கிருஷ்ணன் என்ற கோபால் (வயது 67), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்.

    இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் போது மாணவர்களை வைத்து ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சிகளை நடத்தி வந்து உள்ளார்.

    நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ள வை. கோபாலகிருஷ்ணன் ஓய்வுக்கு பிறகு வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என்று ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார்.

    சாதாரணமாக வரையும் ஓவிய படைப்புகளில் இருந்து மாறுபட்டு வண்ண மணலைக் கொண்டு மணல் ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    தான் வரையும் மணல் ஓவிய படைப்புகளை கண்காட்சிபடுத்தியும் வருகிறார். இந்த மணல் ஓவியங்களை உருவாக்குவ தற்காக கன்னியாகுமரி கடற்கரையில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு, ரோஸ், வெள்ளை போன்ற பல வண்ண கலர் மணல்களை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்த பல வண்ண மணல்களைக் கொண்டு மகாத்மாகாந்தி, பாரதியார், பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முகதோற்ற உருவங்களை மணல் ஒட்டோவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரசியல் தலைவர்களின் மணல் ஓவியங்களை வரை வதற்கு முன்பு பென்சில் மூலம் அட்டையில் "ஸ்கெட்ச்" போட்டு முன் வரைவு செய்து அதன் மேல் பலவண்ண மணல் களை ஒட்டி இந்த மணல் ஓவியத்தை வரைந்து உள்ளேன்.

    நான் படைத்த மணல் ஓவியங்கள் மற்றும் செய்தித்தாள் காகித ஒட்டோ வியங்களை காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந்தேதிஅன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சிய கத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சி யில் இடம் பெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்தசினிமா படப்பிடிப்புக்கு வந்த நடிகர் சூர்யாவிடம் அவரது தந்தை நடிகர் சிவகுமாரின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக வரைந்து அவரிடம் நேரில் சென்று கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடல் சீற்றம் மற்றும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் மற்றும் மழை காரணமாக நேற்று ஒரே நாளில் 3 முறை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    காலையில் 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் சீற்றம் காரணமாக 9.30 மணிக்கு தொடங்கியது. பின்னர் மீண்டும் சூறாவளி காற்று வீசியதால் 10.30 மணிக்கு நிறுத்தபபட்டது.

    பின்னர் 12 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அதன்பின்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக 3 மணிக்கு மீண்டும் நிறுத்தப்பட்டது.

    இப்படி ஒரே நாளில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து 3 முறை நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    • சிற்றார்2-ல் 23.6 மி.மீ. மழை
    • திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு சாரல் மழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.

    சிற்றார்-2ல் அதிகபட்சமாக 23.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றார் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    • 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது
    • கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இன்று காலை 4-வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துஉள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்றுதாழ்ந்துஉள்வாங்கி காணப்பட்டது.

    அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப் பட்டது.

    இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விவேகானந்தர் மண்ட பத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்த ளிப்பாகவும் காணப்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் கடல் சீற்றம் சீரானதை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது.

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்குமுந்தைய பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளதாக வரலாற்றுச் சான்றுகள்கூறுகின்றன.

    குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை இங்கு வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணம் ஆயிற்று.

    இங்கு உள்ள மூலவரான குகநாதீஸ்வரர் மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று ஆனி திருமஞ்சன விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடக்கி றது.

    இதையொட்டி நாளை மறுநாள் காலை 9 மணிக்கு நடராஜபெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும்சி றப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர்9-45மணிக்கு வாகன பவனிநடக்கிறது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி மேளதாளங்கள்முழங்க கோவிலை சுற்றிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன் பின்னர் பகல் 12மணிக்கு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை யினர் செய்து வருகிறார்கள்.

    • விவேகானந்தர் நினைவு தினமான 4-ந் தேதி நடக்கிறது
    • அன்ன பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கன்னியா குமரியில் 5 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அன்ன பூஜை நடக்கிறது.

    "வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121-வது மகா சமாதி அடைந்த தினம் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) கடை பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் சபாகிரக அரங்கத்தில் நாளை மறுநாள் காலை அன்ன பூஜை நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 5 டன்அரிசியை மலைபோல் குவித்து வைத்து அதன் மேலே அன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடக்கிறது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது.

    இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்குகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். விவேகானந்தகேந்திர அகில இந்திய கேந்திர துணைத்தலைவர் நிவேதிதா குத்துவிளக்கு ஏற்றி அன்னபூஜையைத் தொடங்கி வைக்கிறார்.

    கேந்திர ஆயுள் கால ஊழியர்கள் ஐக்கிய மந்திரம் பாடுகிறார்கள். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வரவேற்று பேசுகிறார். கேந்திர பெண் தொண்டர்கள் அன்னபூர்ண ஸ்தோத்திரம் பாடுகிறார்கள். கேந்திர சகோதரிகள் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பகவத்கீதை மற்றும் விசுவரூப தரிசனம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

    அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டு இருக்கும் அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்படுகிறது. பின்னர் விவேகானந்தா கேந்திர அகில பாரத பொதுச்செயலாளர் பானுதாஸ், இணை பொதுச் செயலாளர் ரேகா தவேஆகியோர் வாழ்த்துரை வழங்கிறார்கள். விவேகானந்த கேந்திர முழு நேர ஆயுட்கால தொண்டர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆசியுரை வழங்குகிறார்.

    விவேகானந்த கேந்திர ஊழியர்கள் மற்றும் விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத்திட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது அனுபவங்களை பகிர்கின்றனர். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட ராமநாதபுரம் மாவட்டபொறுப்பாளர் கள்கேந்திர பிரார்த்தனை பாடல்களை பாடுகின்றனர். முடிவில் விவேகானந்த கேந்திர ஊழியர் நன்றி கூறுகிறார்.

    இந்த அன்ன பூஜை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

    • சூறாவளி காற்றுக்கு இடையே மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது சிக்கியது.
    • ரூ.1 லட்சத்து10ஆயிரத்துக்கு ஏலம் போனது

    கன்னியாகுமரி:

    சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று சூறாளி காற்று வீசியதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து குறைந்த அளவு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    இந்த சூறாவளி காற்றுக்கிடையே கன்னியா குமரியைச்சேர்ந்த விசை ப்படகு மீன வர்கள்வீசிய வலையில் 300 கிலோ எடைகொண்ட ராட்சத சுறாமீன் ஒன்று சிக்கியது.

    அதேபோல 200 கிலோ எடை கொண்ட இன்னொரு சுறா மீனும் சிக்கியது. உடனே அவர்கள் அவசர அவசரமாக சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கரைதிரும்பினர்.

    அதன் பிறகு அந்த 2 ராட்சத சுறா மீனை அவர்கள் படகில் இருந்து ராட்சத கிரேன் மூலம் இறக்கினர்.

    அந்த ராட்சத மீனை மீன் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ.60 ஆயிரத்துக்கும் 200கிலோ எடை கொண்ட சுறாமீன்ரூ.50ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

    பின்னர் அந்த 2 ராட்சத சுறா மீனையும் கிரேன் மூலம் தூக்கி லாரியில் வைத்து எடுத்து சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய ராட்சத சுறாமீன் சிக்கி உள்ளது என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினர்
    • மீன் சந்தைகள் மீன் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பி டிக்கச் சென்றனர்.

    நடுக்கடலில் அவர்கள் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மதியம் சுமார் 2மணி அளவில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் கடல் கொந்தளிப்புடன் காணப்ப ட்டதாக மீனவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    இதேபோல் ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்து றை, கோவளம் கீழம ணக்குடி மணக்குடி பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் வள்ளங்கள் கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இதனால் மீன் சந்தைகள் மீன் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மீன் விலை யும் கடுமையாக உயர்ந்தது.

    கடல்சீற்றம் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு 3 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.

    ×