search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிஸ்தான்"

    • இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்த தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் காலின் ப்ரூம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காலிஸ்தான் குழுக்கள், இங்கிலாந்தில் அதிகாரத்தை விரும்புகின்றன. இதனால் சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன. அவர்கள் ஒரு பெரிய பிளவை உருவாக்க விரும்புகிறார்கள். இதனால் அதிக பதற்றம் உருவாக்கப்படுகிறது. இது இறுதியில் அதிகார போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    • இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வாகனத்தில் துரத்திச் சென்றபோது அவர் தப்பிவிட்டதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அம்ரித்பாலை விடுதலை செய்ய வேண்டும் என கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பெயிண்டால் எழுதி உள்ளனர். தூதரகத்தை ஒரு கும்பல் தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதலையும், அமெரிக்காவிற்குள் உள்ள தூதரக அலுவலகங்கள் மீதான தாக்குதலையும் அமெரிக்கா கண்டிக்கிறது. தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பாதுகாப்போம் என உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    • அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதால் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
    • வதந்திகள் பரவாமல் இருக்க நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வலியுறுத்தல் இல்லாத நிலையில், சமீப காலமாக காலிஸ்தான் பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.

    காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்த சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங்கை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அம்ரித்பால் சிங் ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு இன்று வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றபோது, போலீசார் சினிமா பாணியில் அவரை விரட்டி மேஹத்பூர் கிராமத்தில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தால் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வதந்திகள் பரவாமல் இருக்க நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது.

    நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட ‛வாரிஸ் பஞ்சாப் தே'' என்ற அமைப்பின் தலைமை பொறுப்பில் அம்ரித்பால் சிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாபை தனி நாடாக்க கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இது தொடர்பாக வரும் 2020-ம் ஆண்டிற்குள் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி லண்டன் நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    லண்டன் :

    பஞ்சாப் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டன் நாட்டில் உள்ள பல சீக்கிய அமைப்புகள் இன்று லண்டனில் பெரும் பேரணி நடத்தின. ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (Sikhs For Justice) என்ற சீக்கிய அமைப்புகளின் கூட்டணி சார்பில் லண்டன் நகரில் உள்ள டிராஃபால்கர் சதுக்கத்தில் இந்த பேரணி  நடைபெற்றது.

    இந்த பேரணியில் பஞ்சாப் தனி நாடாக உருவாவது குறித்து வரும் 2020-ம் ஆண்டுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த பேரணி குறித்து  ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் சட்ட ஆலோசகரான குர்பத்வந்த் சிங் பனுன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘சுதந்திர பஞ்சாப் 2020ம் ஆண்டு வாக்கெடுப்புக்கான லண்டன் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது’’.

    ‘‘வரலாற்றில் முன்பு இருந்தது போல் பஞ்சாப் மீண்டும் தனி நாடாக உருவாக்கப்படும் என்பதை உலக நாடுகளுக்கு அறிவிக்க அந்த தீர்மானம் ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்படும்’’ எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்த, பேரணியில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த பேரணி குறித்து இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பிரிவினைவாதிகளின் சதி வேலை இது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சமூக வலைதளங்களிலும் இந்த பேரணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சில வெளிநாட்டு அமைப்புகளின் சதியே இந்த பேரணி என சீக்கியர்கள் உட்பட பலர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.  



    இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறுகையில், ’இந்தியாவில் பிரிவினை வாதத்தை தூண்டி பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானில் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தூண்டுதலின் பேரில் லண்டனில் காலிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

    இவ்வாறான செயல்களின் மூலம் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க அவர்கள் முயன்றார்கள் எனில் நிட்சயம் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்’ என தெரிவித்துள்ளார்.

    சிரோன்மனி அகாலிதள மூத்த தலைவர் என்.குஜ்ரால் கூறுகையில், காஷ்மீரில் தோல்வியை தழுவிய ஐஎஸ்ஐ பஞ்சாபை பகடைகாயாக்கி குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் குடியேறிவிட்ட மிக சொற்பமான சீக்கியர்களே காலிஸ்தான் பேரணியில் பங்கேற்றுள்ளனர். 

    அவர்களுக்கு ஐஎஸ்ஐ நிதியுதவி செய்கிறது, மற்ற சமூகங்களை காட்டிலும்  சீக்கியர்கள் இந்தியாவிற்கு அதிக தியாகங்களை செய்துள்ளனர். சீக்கியர்கள் அனைவரும் ஒருங்கினைந்த இந்தியாவையே  விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், லண்டனில் உள்ள இந்தியர்கள் பெரும்பாலானர்வர்கள் இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கினைந்த இந்தியாவிற்கு ஆதரவான போட்டிப் பேரணியை லண்டன் நகரில் இன்று நடத்தினர்.
    ×