search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 185432"

    • ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பிளஸ்-2 மாணவன் பலியானார்.
    • இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ஹரி பாஸ்கர் (வயது 18). பிளஸ் 2 முடித்துள்ளார். நேற்று இரவு ஹரி பாஸ்கர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோடீஸ்வரன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பட்டணம் வழியாக ராசிபரத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஹரிபாஸ்கர் ஓட்டிச் சென்றார்.

    அவருக்கு பின்னால் கோடீஸ்வரன் உட்கார்ந்து சென்றார். பட்டணம் சக்தி நகர் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து பட்டணத்தை நோக்கிச் சென்ற செல்வராஜ் (65) என்பவரது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கோடீஸ்வரனும், செல்வராஜும் காயமடைந்தனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    காயமடைந்த செல்வராஜ் பட்டணம் பள்ளிக்கூடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் அடித்ததாக கூறப்படுகிறது
    • மாணவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதனை சிலர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந் தேதி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் அடித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர் சரியாக படிக்காததால் ஆசிரியர் அவரை அடித்ததாக தெரிகிறது.

    இதில் மாணவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதனை சிலர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டது. எனவே மாணவரை தாக்கிய சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கணித ஆசிரியர் மோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி பிறப்பித்துள்ளார்.

    • பரமக்குடி மாணவனுக்கு பாலியல் தொல்லை விடுதி வார்டனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை கோரிக்கை.
    • மாணவன் உடன்படாததால் அவர், மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கி கடித்து வைத்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் ஜெபஸ்டியனுக்கு அங்கு விடுதி வார்டனாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார் என்பவர் இரவு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதற்கு மாணவன் உடன்படாததால் அவர், மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கி கடித்து வைத்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றி மாணவனின் தந்தை பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறியதாவது:-

    எனது மகன் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் விடுதி வார்டன் ராஜ்குமார், மது மற்றும் கஞ்சா போதையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த எனது மகன் தற்போது பள்ளி செல்ல மறுத்து வீட்டில் உள்ளார்.

    எனவே எனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும். அவர் மீது பள்ளி நிர்வாகமும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுவாமிமலை அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்கு கும்பகோணம் சென்று கல்லூரியில் விண்ணப்பம் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • கார்த்திகேயன் எங்கே சென்றார்? யாராவது மர்ம நபர்கள் அவரை கடத்தி உள்ளார்களா? என பல்வேறு கோணங்களை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கபிஸ்தலம்

    கபிஸ்தலம் அருகே உள்ள தியாக சமுத்திரம் வடக்கு தெருவில் வசிப்பவர் காமராஜ் மகன் கார்த்திகேயன் வயது 17,இவர் சுவாமிமலை அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்கு கும்பகோணம் சென்று கல்லூரியில் விண்ணப்பம் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை.

    உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாலிபர் கார்த்திகேயனை தேடியும் கிடைக்காதால் மனம் உடைந்து அவரது தந்தை காமராஜ் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து வாலிபர் கார்த்திகேயன் எங்கே சென்றார்? யாராவது மர்ம நபர்கள் அவரை கடத்தி உள்ளார்களா? என பல்வேறு கோணங்களை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் நான்கு நாட்கள் சாகச முகாம் நாளை முதல் 16.7.22 வரை நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகத்திலிருந்து 150 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளகிறார்கள்.

    திருப்பூர் :

    மாநில நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பெரியார் பல்கலை கழகம் இணைந்து சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் நான்கு நாட்கள் சாகச முகாம் நாளை முதல் 16.7.22 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகத்திலிருந்து மொத்தம் 150 மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    கோவை பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து 12 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சாகச முகாமிற்கு செல்கிறார்கள். இதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் ரத்தினகணேஷ் தேர்வாகி உள்ளார். இவர் இளங்கலை வேதியியல் துறை இறுதியாண்டு படிக்கிறார். இவருக்கு பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் என்ற பெருமை உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்வான ஒரே மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இம் முகாமில் மாணவ மாணவிகளுக்கு சாகச பயிற்சி, நெகிலி விழிப்புணர்வு மற்றும் சுத்தம் செய்தல், மலையேற்ற பயிற்சி, காய்கறி தோட்டம் அமைத்தல், கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவனை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

    கல்லூரி முதல்வர் கூறுகையில் இது அரசு கல்லூரிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். மேலும் மாணவனை தேர்வு செய்த மண்டல மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலை கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பெரியார் பல்கலை கழக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    • கள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார் சூர்யா.
    • சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் சூர்யா (வயது 16 ). இவன் கள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவின் அண்ணன் சிவகிரி (18) எழுந்து பார்த்தபோது சூர்யா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சூர்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் பலியானார்
    • சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் இறந்தார்.

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அருகே உள்ள கரும்புலி காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 12). இவர் இலைகடி விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அவரது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு சூரக்காட்டிற்கு சென்றார்.

    சூரக்காடு வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திக்கு வாய் என்பதால் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை அதனால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
    • பிளஸ் 1 பொதுத்தேர்வில் விமல்ராஜ் 293 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் 2-வது ரயில்வேகேட் அருகே தண்டவாளத்தில் 17-வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரயில் அடிப்பட்டு சடலமாக கிடப்பதாக, ரயில்வே போலீஸாருக்கு கடந்த 14-ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று ரயில்வே போலீஸார், சடலத்தை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் பழவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் மகன் விமல்ராஜ் (17) என்பதும், பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர் என்பதும் தெரியவந்தது.

    விமல்ராஜூக்கு திக்குவாய் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    முன்னதாக விமல்ராஜ் வீட்டில் எழுதி வைத்த கடிதத்தில், 'எனக்கு திக்கு வாய் என்பதால், நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, எனது அப்பா, அம்மாவுக்கும்

    எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. அதனால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ள கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.

    இந்நிலையில், நேற்று முன் தினம் வெளியான பிளஸ் 1 பொதுத்தே–ர்வில் விமல்ராஜ் 293 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, "விமல்ராஜ் தேர்ச்சி பெற்றும், தேர்வு முடிவு வெளியாவதற்குள் அவர் உயிரிழந்தது, சக மாணவர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. வாழ்க்கையில் படிப்பு ஒன்றே எதிர்காலத்துக்கு கைகொடுக்கும்.

    ஆனால் இதனை உணராமல், உடல்ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்திருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைக்கு பிளஸ் 1பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அந்த வெற்றியை அந்த குடும்பத்தால் மகிழ்ச்சிகரமாக கடக்கமுடியவில்லை" என்றனர். மாணவர் விமல்ராஜ் பெற்ற மதிப்பெண்: தமிழ்- 50, ஆங்கிலம்-54, பொருளியல்-57, வணிகவியல்- 49, கணக்கு பதிவியல்-38 மற்றும் கணினி பயன்பாட்டியல்- 45 ஆகும்.

    • தியாகதுருகம் அருகே நண்பர்களுடன் கோவிலுக்கு சென்ற மாணவன் மரணம் அடைந்தார்.
    • ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (வயது 17), 10- ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான குமார் மகன் சந்தோஷ் (17), சங்கர் மகன் கார்த்திக் (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர்

    கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். நண்பர்கள் இருவரும் பின்னால் அமர்ந்து வந்தனர். இந்நிலையில் கலைநல்லூர் அருகே சென்றபோது தனக்கு முன்னால் சென்ற காரை மணிகண்டன் முந்திச் செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் காரின் மீது மோதியதில் கீழே விழுந்ததாகவும் அப்போது எதிர்திசையில் வந்த மினி பேருந்து இவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணிகண்டன் இறந்து போனார். சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இதுகுறித்து மணிகண்டன் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேக்காள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • சேலத்தில் பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • ஜீவானந்தம் மது குடித்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகன் ஜீவானந்தம் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜீவானந்தம் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். அதனால் மனமுடைந்த மாணவன் வீட்டுக்குள் சென்று தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை பெற்றோர் காப்பாற்றி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் பரிதாபமாக இறந்தார். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்தார்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பொத்தனூர் அரசு பள்ளி மாணவன் சாதனை செய்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    பிளஸ்-2 பொது தேர்வில் பொத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் வைரப்பெருமாள் 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்தார். அதேபோல்10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி சுபஸ்ரீ பள்ளி யில் முதலிடம் பிடித்தார்.

    மாணவன் வைரப்பெரு–மாள் மற்றும் மாணவி சுபஸ்ரீக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் ஆர். கருணாநிதி சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் தலைமை ஆசிரியர் குமார், விவசாயிகள் சங்க தலைவர் என் . வி .எஸ். செந்தில்நாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுப்பிரமணியம், டி.பி. ஏ. அன்பழகன், கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அலுவலக பணியாளர்களும் வாழ்த்தினார்கள்.

    • ஆற்றில் குளித்தபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.
    • தீயணைப்பு படை வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் குதித்து பாலமுருகனை தேடி வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறை வடக்குமட வளாகத்தை சேர்ந்த பிச்சை செல்வம் மகன் பாலமுரளி (வயது16). இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் தன் தாயார் மகாதேவியுடன் திருப்பாலத்துறை குடமுருட்டி ஆற்றில் பாலமுரளி குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் குளித்தபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

    தகவல் அறிந்து பாபநாசம் தீயணைப்புத் நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் குதித்து பாலமுருகனை தேடி வருகின்றனர். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×