search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • கார் மோதி பைக்கில் சென்றவர் பலியானார்.
    • இதில் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயமும் மனைவி மணிமேகலைக்கு கால் முறிவும் ஏற்ப–ட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அருகே பரியாமருதுபட்டி என்ற இடத்தில் பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒலுகமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது45) அவரது மனைவி மணிமேகலை (40) ஆகியோர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர் திசையில் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி தூக்கி வீசப்பட்டனர். இதில் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயமும் மனைவி மணிமேகலைக்கு கால் முறிவும் ஏற்ப–ட்டது.

    அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் மனைவி மணிமேகலை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து நெற்குப்பை காவல்நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கார் மோதி பால் வியாபாரி காயம் ஏற்பட்டது
    • வியபாரம் முடித்துவிட்டு வரும் போது விபரீதம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் குப்பையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சந்திரன் (வயது 54). பால் வியாபாரியான இவர், தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கூழையான்விடுதி ஏடி-காலனி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கும்பகோணம் கொற்கை முகமது உசேன் மகன் கனி ( வயது 35) ஓட்டிவந்த கார், இவர் மீது மோதியது. இதில் சந்திரன் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
    • தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 32,), அன்புச்செல்வன் (35) கூலித் தொழிலாளியான இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இடைக்கட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சின்னவளையம் கிராம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அவர்களை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • இவர் களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • பின்னர் வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடாசலம்.இவர் களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.அவர் தனது வீட்டிலிருந்து திருமக்கோட்டை சாலை வழியாக இன்று களப்பால் நோக்கி சென்றபோது மறவக்காடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த பனைமரம் ஒன்று திடீரென முறிந்து வெங்கடாசலம் மீது விழுந்தது.இதில் காயமடைந்த வெங்கடாஜலத்தை பொதுமக்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பனைமரம் விழுந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

    • பஸ் மரத்தில் மோதியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நன்னிலம் லயன் கரைத் தெருவில் திடீர் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    நன்னிலம்:

    நன்னிலத்தில் அரசு பஸ் மரத்தில் மோதியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் நன்னிலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். இந்நிலையில் அவர்களை ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் விபத்துக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதே ப்போல் நன்னிலம்லயன் கரைத் தெருவில்திடீர் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு குடும்ப த்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால், அ.தி.மு.க நகர செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சாலையில் தூக்கி வீசப்பட்ட உண்ணி கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
    • சஜின் என்பவரும் காயம் அடைந்து அதே ஆஸ்பத்திரியில் வெளிநோயாளியாக அனுமதிக்கப்பட்டார்

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் உண்ணி கிருஷ்ணன் (வயது 71). இவர் மோட்டார் சைக்கிளில் மார்த்தண்டம் - தேங்கா பட்டணம் சாலையில் சென்ற போது உதச்சி கோட்டை பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட உண்ணி கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த காஞ்ஞாம்புறம் பகுதி சரல் முக்கு என்ற இடத்தை சேர்ந்த சஜின் (22) என்பவரும் காயம் அடைந்து அதே ஆஸ்பத்திரியில் வெளிநோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • சாமி கும்பிடுவதற்காக வந்தவர்களை அரிவாளால் வெட்டியதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • ராஜதுரை என்பவரை போலீசார் அழைக்க சென்ற போது தப்பி ஓடிய அவர் தவறி விழுந்து காயமடைந்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் வீரனார் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக முத்துப்பேட்டை மங்களூர் பகுதியை சேர்ந்த 5 நபர்கள் வந்துள்ளனர். அவர்களை சிலர் அரிவாளால் வெட்டி யதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இற ந்தார். இது குறித்து விசாரிக்க ராஜதுரை என்பவரை போலீசார் அழைக்க சென்றனர்.

    ஆனால் அவர் தப்பி ஓடினார். அப்போது தவறி விழுந்ததில் ராஜ துரை காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • இருவரும் பணி நிமித்தமாக கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சென்று வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.
    • பின்தொடர்ந்து வந்த 4 பேரும் திடீரென பொன்குணசேகரன், சுதாகர் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மன்னார்குடி சரகத்தில் கள மேலாளராக பணிபுரிபவர் பொன் குணசேகரன் (வயது 59). இந்நிலையில் இவர் மற்றும் மேற்பார்வையாளர் சுதாகர் இருவரும் பணி நிமித்தமாக கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சென்று வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மர்ம நபர்கள் வந்தனர்.

    வடுவூர் அருகே தற்காசு எனும் இடத்தில் வந்தபோது பொன்குணசேகரன் வாகனத்தை நிறுத்தினார். அப்போது பின்தொடர்ந்து வந்த 4 பேரும் திடீரென பொன்குணசேகரன், சுதாகர் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த தாக்குதலில் காயமடைந்த பொன்குணசேகரன், சுதாகர் ஆகிய 2 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து பொன்குணசேகரன் வடுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் பைங்கானாடு தொடக்க கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் செயலாளர் மலர்வேந்தன் தூண்டுதல் பெயரில் தான் எங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. எனவே அவர் மற்றும் எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ், கியாஸ் சிலிண்டர்வெடித்து விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டார்
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி அறிவித்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதி புரத்தில் டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது கியாஸ் சிலிண்டர் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் அரவிந்த் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் டாக்டரிடம் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ், கியாஸ் சிலிண்டர்வெடித்து விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டார்.பின்னர் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். டாக்டர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களிடம் தொலை பேசியில் நலம் விசாரித்தார். விஜய்வசந்த் எம்.பி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி அறிவித்தார்.

    இதையடுத்து கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்கள். ஆர்.டி.ஓ.சேதுராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், தாசில்தார் சேகர், தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம், மண்டல தலைவர் ஜவகர் ஆகியோர் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்த 8 பேருக்கு முதலமைச்சர் ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அறிவித்தார். உடனடியாக அந்த நிவாரணங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டு உள்ளது.படுகாயம் அடைந்த 8 பேருக்கும் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 2 சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகரில் சாலை ஓரங்களில் உள்ள டீக்கடைகளை ஒழுங்குபடுத்த நட வடிக்கை எடுக்கப்படும்.மேலும் எந்த ஒரு கட்டிடங்களும் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்தால் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தில்லையம்பலம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை மெயி ன்ரோடைச் சார்ந்தவர் தில்லையம்பலம்(62). பெட்டிக்கடை நடத்திவந்தார். இவர் சம்பவத்தன்று இரவு விளாங்குடி ரோடில் கஸ்தூரிபாய் நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தார். உடன் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் தில்லையம்பலம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மகன் வினோத்குமார் (32) கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்இன்ஸ்பெக்டர் அப்பர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறா ர்கள்.

    • மகேஷ் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பத்ரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 50). அ.தி.மு.க உறுப்பினர்.

    இவர் தனது நண்பர்களுடன் விளங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்அ ப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் பத்ரசாமி (35) என்பவர் அங்கு வந்தார்.

    அவரிடம் மகேஷ் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த பத்ரசாமி பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரை தகாத வார்த்தைகள் திட்டி குத்தினார்.

    பலத்த காயம் அடைந்த மகேஷ் குமாருக்கு ரத்தம் கொட்டியது. இதனை கண்ட அவரது நண்பர்கள் மகேஷ் குமாரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மகேஷ் குமார் காரமடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பத்ரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சேலம் கருப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நான்கு கால் காலம் பகுதியில் ெரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது.

    இதற்காக சேலம் கருப்பூர் பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய ஒரு டிராக்டர் புறப்பட்டது. இந்த டிராக்டரை முருகேசன் (வயது 24)என்பவர் ஓட்டி சென்றார்.

    கருப்பூர் கோகுல் கிரானைட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் டிராக்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சிமெண்ட் மூடிகளுக்குள் சிக்கிய முருகேசன் பலத்த காயமடைந்தார் .அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×