search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 33). போலீஸ்காரரான இவர் ஊத்துக்கோட்டையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மதியழகி. இவர்களுக்கு தனுஸ்ரீ, மிதுனா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த போலீஸ்காரர் ஏகாம்பரத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே போலீஸ்காரர் ஏகாம்பரம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதனை கேட்டு அவரது மனைவி கதறி துடித்தார்.

    33 வயதான போலீஸ்காரர் மாரடைப்பால் இறந்து போன சம்பவம் உடன் பணியாற்றும் மற்ற போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதித்த டாக்டர்கள் அஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டலை சேர்ந்தவர் தம்பிராஜா. இவரது மகன் அஜித் (வயது 20). இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    அஜித், நேற்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டின் வெளியில் உள்ள கழிவறைக்கு சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்குள் திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு அஜித் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே மகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அஜித் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிரஞ்சீவியை ஜெயிலில் அடைக்காததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், செகந்திராபாத், எஸ்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரை துக்காராம் கேட் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

    போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சிரஞ்சீவியை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிரஞ்சீவி உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரை காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி பரிதாபமாக இறந்தார்.

    சிரஞ்சீவி இறந்த தகவலை போலீசார் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை. அவரது சாவை ரகசியமாக வைத்திருந்தனர். சிரஞ்சீவியை ஜெயிலில் அடைக்காததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து சிரஞ்சீவி குறித்து விசாரித்தனர்.

    அப்போது போலீசார் உடல்நிலை குறைவு காரணமாக சிரஞ்சீவி ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டதுதம் சிரஞ்சீவியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிரஞ்சீவியை போலீசார் அடித்து கொன்று விட்டதாகவும், சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    சிரஞ்சீவி உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு அவர் எப்படி இறந்தார் என அறிக்கை கிடைக்கும் அதன் பிறகு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • போலீசார் ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொடைக்கானல்:

    சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வர் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்சர்வேட்டரி வனப்பகுதியில் உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் அப்பகுதியில் விறகு எடுக்க சென்ற பெண்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெகதீஸ்வரின் பெற்றோர் கொடைக்கானலுக்கு வந்தனர். போலீசார் விசாரணையில் ஜெகதீஸ்வரின் பெற்றோர் தங்கள் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தனர். அந்த கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

    கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்ததால் ஜெகதீஸ்வர் மன வேதனையில் இருந்துள்ளார். தனக்கும் நல்ல வேலை இல்லாததால் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். எனவே யாருக்கும் தெரியாமல் கொடைக்கானலில் வந்து மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்த அவர் அப்சர்வேட்டரியில் தனது பைக்கில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆனால் அதற்குள் அங்கிருந்த பெண்கள் பார்த்து விடவே போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளார்.

    • கீழ்நல்லாத்தூர் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து குமார் கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் குமார் (38) எலக்ட்ரிசியன். இவர் கீழ்நல்லாத்தூர் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் மின் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்தார்.

    வெயிலின் தாக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து குமார் கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மணவாளநகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரண்டு மாதத்திற்கு முன் காதல் திருமணம் ெசய்து கொண்டவர் சாவு
    • சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி,

    திருச்சி காம நெய்க்கண்பாளையம் அண்ணாவியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மகள் சுஜித்ரா(வயது 21), உக்கரையை சேர்ந்த பெரியசாமி என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் காதல் கணவரும், மாமியாரும் கொடுமை செய்வதாக கூறியதால் பழனியப்பன் தனது மகள் சுஜித்ராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இந்நிலையில் பழனியப்பன் , அவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது சுஜித்ரா உடலில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த இருவரும் இது குறித்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து உள்ளனர். திருமணமாகி இரண்டே மாதங்களில் சம்பவம் நடைபெற்று உள்ளதால், இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மின்னல் தாக்கி 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தன.
    • லதா, தான் ஆசையாய் பராமரித்து வந்து ஆடுகள் இறந்து விட்டதே என்ற அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்தவர் வீரையன். இவரது மனைவி லதா (வயது 40).

    இவர்கள் சொந்தமாக 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று இரவு ஆடுகளை வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தன.

    இதனை பார்த்த லதா, தான் ஆசையாய் பராமரித்து வந்து ஆடுகள் இறந்து விட்டதே என்ற அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராதாகிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராதாகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    செங்குன்றம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஏரிக்கரை பாக்கம், மேல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது66). இவர் கடந்த 2001-ம் ஆண்டில் ஒரு பாலியல் வழக்கில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற ராதாகிருஷ்ணன் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராதாகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இறந்து போன வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அஜய்குமார் சிங்கின் மர்ம மரணம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர், நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் அருகே காரை நிறுத்தி இருந்தார்.

    நேற்று இரவு நிறுத்தப்பட்ட காரில் இருந்து திடீரென விளக்குகள் எரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காரின் மீது போடப்பட்டு இருந்த கவரை நீக்கி பார்த்த போது காருக்குள் டிரைவர் இருக்கையில் வாலிபர் ஒருவர் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து போன வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இறந்து போன வாலிபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய்குமார் சிங்(வயது 20) என்பது தெரிந்தது. அவர் தனது அக்காளின் குடும்பத்துடன் கடந்த 8 மாதமாக திருமுடி வாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் கடந்த வாரம் வேலையில் இருந்து நிர்வாகத்தினர் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. பின்னர் அதே பகுதியில் வேறு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். அங்கும் அஜய்குமார் சிங்கின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால் நேற்று காலை 9 மணியளவில் வேலையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இதன் பின்னர் அவர் நிறுத்தப்பட்டு இருந்த காரில் மர்மமாக இறந்து உள்ளார்.

    பூட்டப்பட்ட காருக்குள் அஜய்குமார் சிங் எதற்காக வந்தார். டிரைவர் இருக்கையில் இருந்த போது அவர் சீட்பெல்ட்டும் போட்டு உள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜய்குமார் சிங்கின் மர்ம மரணம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணத்திற்கு கட்சியினர்-முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • இன்று மாலை நல்லடக்கம் நடக்கிறது.

    சிவகாசி

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை கே.தவசிலிங்க ஆசாரி (வயது93). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி யின் வீட்டில் வைக்கப் பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    • தந்தை கண்டித்ததால் மகனும், மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த சிந்தாமணிப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது வரவணை கிராமம் சுண்டுகுழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். லாரி டிரைவாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 43). இவர் தினக்கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் செல்வராஜ் (23), கரூர் அய்யர்மலையில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. படித்துவிட்டு தகுந்த வேலை தேடிக்கொண்டு இருந்தார். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை. இதனை அவரது தந்தையான கோவிந்தராஜ் அடிக்கடி குறையாக கூறி வந்துள்ளார். அதேபோல் அடிக்கடி செல்போன் பார்ப்பதையும் அவர் கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த செல்வராஜ் செல்போனில் மூழ்கியிருந்தார்.

    இதைப்பார்த்த அவரது தந்தை கோவிந்தராஜ் வேலைக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றி வருவதோடு, செல்போனை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார்.

    இதில் மனமுடைந்த செல்வராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது தாய் சுமதி, மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அலறித்துடித்தார்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மகனை இழந்த துக்கம் தாளாமல் விடிய, விடிய அழுது புலம்பிய அவரது தாய் சுமதி நள்ளிரவில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சுமதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்துகொண்டு இறந்த தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை கண்டித்ததால் மகனும், மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இறைவன். இவரது மகன் சூர்யா என்கிற எட்வட் (வயது23). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9 மாத குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் எட்வட் அரூர்-மோபிரிப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் ஓட்டல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு எட்வட் வேலையை முடித்து விட்டு தனது நண்பர் தளித்சேட்டு மகன் அம்பேத்கர் செல்வன் (18) என்பவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×