என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.
    • தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிறது.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காளீஸ்வரி கடந்த 3-ந் தேதி பிரசவத்திற்காக உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் காளீஸ்வரி வழக்கம்போல் பால் கொடுத்துவிட்டு குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கினார். இன்று அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.

    இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் உடனே குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தை எப்படி இறந்தது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பால்கனி திடீரென சரிந்து கீழே விழுந்தது. பால்கனியில் பேசிக் கொண்டிருந்த 2 பேரும் கீழே விழுந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், பார்சுரு பஜார் தெருவில் 5 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. குடியிருப்பில் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் ஆங்காங்கே சேதம் அடைந்து இருந்தது. சேதம் அடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணி நடந்து வந்தது.

    பூவுல பாலத்தை சேர்ந்த மதுமோகன் தனது மனைவி ஸ்ரீவித்யாவுடன் (வயது 36), 2-வது மாடியில் குடியிருந்து வந்தார். முதல் மாடியில் அனுராதா (56) என்பவர் குடியிருந்து வந்தார். நேற்று மாலை ஸ்ரீவித்யாவும், அனுராதாவும் 2-வது மாடியில் உள்ள பால்கனியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது பால்கனி திடீரென சரிந்து கீழே விழுந்தது. பால்கனியில் பேசிக் கொண்டிருந்த 2 பேரும் கீழே விழுந்தனர்.

    இதில் ஸ்ரீவித்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்தவர்கள் அனுராதாவை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விரைந்து சென்று ஜேம்ஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை வடபழனி, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது63) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் இன்று காலை 8 மணி அளவில் அதே பகுதி பெரியார் பாதையில் உள்ள ஒரு அலுமினியம் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜேம்ஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலையில் அடிபட்டு காயங்களுடன் இறந்து கிடந்த ஜேம்சை மது போதையில் ஏற்பட்ட தகராறில் யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் மனோஜ் குமார்.
    • கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னேரி:

    பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் மனோஜ் குமார்(36) எம்பிஏ, பிஎச்டி படித்த இவர் சென்னை வேர் ஹவுஸ்ல் வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொன்னேரி அடுத்த கம்மார் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அதே மாவட்டத்தில் உள்ள வடசேரி பள்ளப்படியை சேர்ந்தவர்.

    ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டி வலது கண் பார்வையை சிவக்குமார் இழந்தார்.

    இதைதொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

    பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    • தள்ளாத வயதிலும் மூதாட்டி எல்லம்மாள் வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.
    • வேகமாக வந்த மாடு ஒன்று கோலம் போட்டுக்கொண்டு இருந்த எல்லம்மாளை முட்டி தள்ளியது.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வட மாவந்தல், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 100).

    தள்ளாத வயதிலும் மூதாட்டி எல்லம்மாள் வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் எல்லம்மாள் வீட்டு முன்பு தெருவில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்பகுதியில் பொதுமக்கள் தங்களது மாடுகளை அலங்காரம் செய்து தெருவில் மாடுகளை விரட்டி வந்தனர்.

    அப்போது வேகமாக வந்த மாடு ஒன்று கோலம் போட்டுக்கொண்டு இருந்த எல்லம்மாளை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மூதாட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு முட்டி 100 வயது மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரிகா மர்மமான முறையில் குரிசிலாபட்டு கிராமத்தில் இறந்து கிடந்தார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரிகா (வயது 19) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.

    இந்த நிலையில் திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சந்திரிகா சென்றார். அங்கு சந்திரிகா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரிகா மர்மமான முறையில் குரிசிலாபட்டு கிராமத்தில் இறந்து கிடந்தார்.

    சந்திரிகா இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சந்திரிகா இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விரைந்து வந்த போலீசார் சந்திரிகாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்திரிகா இறந்த தகவல் அறிந்த 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சந்திரிகாவின் உறவினர்களை சூழ்ந்து முற்றுகையிட்டனர்.

    சந்திரிகாவின் சாவிற்கு நீங்கள் தான் காரணம் உங்கள் வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார் என சரமாரியாக கேள்வி கேட்டு சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குரிசிலாப்பட்டு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மகேந்திரனுக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது.
    • பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் (வயது 57) சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்தார். இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வழக்கம் போல சிதம்பரம் மேல ரதவீதி, கீழ ரத வீதிகளில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக போலீஸ் நிலையம் திரும்பினார். அங்கிருந்த காவலர்களிடம் சம்பவத்தை கூறும் பொழுதே மயங்கிய நிலையில் போலீஸ் நிலையத்தில் உள்ள பெஞ்சில் சாய்ந்து விட்டார்.

    பணியில் இருந்த போலீசார் அவரை சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பணியில் இருக்கும் போதே இறந்து போன சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு ஒரு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ், உதவி சுப்பிரண்டு ரகுபதி, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் உட்கோட்ட போலீசார்கள் உயிரிழந்த மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    • விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேற்று இரவு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கினர்.
    • மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

    ஆலந்தூர்:

    அசாம் மாநிலம் கவு காத்தியில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு 134 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.

    அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தில் வந்த கவுகாத்தியை சேர்ந்த சஜித் அலி (46) என்ற பயணிக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு விமானத்திற்குள் அவதிப்பட்டார். அவருடன் வந்த அவருடைய சகோதரர் ராஜேஷ் அலி, இதுபற்றி விமான பணிப்பெண்களுக்கு தெரிவித்தார்.

    உடனடியாக அவர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேற்று இரவு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கினர்.

    சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

    இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சஜித் அலி ஏற்கனவே, கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மேல் சிகிச்சை பெறுவதற்காக, விமானத்தில் தனது சகோதரர் ராஜேஷ் அலியுடன் வந்தபோது திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதற்கிடையே வழக்கமாக, இந்த விமானம் இரவு 9.40 மணிக்கு கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் இரவு 10.15 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த விமானத்திற்குள், பயணி ஒருவர் உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின் இரண்டு மணி நேரம் கழித்து நள்ளிரவு 12.30 மணிக்கு 106 பயணிகளுடன் பெங்களூர் புறப்பட்டு சென்றது.

    • தூர்வாரும் பணியின்போது தொழிலாளி நாராயணன் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
    • 1 மணிநேரம் போராடி சேற்றில் சிக்கிய உடலை மீட்டனர்.

    சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் கோயில் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இருவர் ஈடுபட்டு வந்தனர். பணி நடந்து கொண்டிருக்கும் போது நாராயணன் என்பவர் குளத்தில் முழ்கியுள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக வண்ணாராப்பேட்டை தீயணைப்பு துறை மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து குளத்தினுள் இறங்கி நாராயணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் போராடி சேற்றினுள் சிக்கிய நாராயணின் உடலை மீட்டனர். கோயில் குளத்தை சுத்தப்படுத்த சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    நாராயணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.
    • வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆர்.கே.நகர்:

    வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக்(38) ஆர்.டி.ஓ.அலுவலக ஏஜெண்டாக வேலை பாத்து வந்தார்.

    வீட்டில் இருந்த போது குடும்பத்தினர் கார்த்திக்கிற்கு புரோட்டா வாங்கி கொடுத்தனர். அதனை கார்த்திக் சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடல் நிலை மோசம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பலியானார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    புரோட்டா சாப்பிட்டதால் கார்த்திக் பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்று மர்மமாக உள்ளது. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் இன்று காலையில் பாபு பிணமாக கிடந்தார்.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு (65). மது பழக்கம் உடையவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தார். ஆட்டோவிலேயே படுத்து தூங்கி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் இன்று காலையில் பாபு பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன. மர்மமான முறையில் பாபு இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உதவி கமிஷனர் சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் தாம்சன் ஜார்ஜ் சேவியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபு மது போதையில் தவறி விழுந்து அடிபட்டு இறந்தாரா? தகராறு காரணமாக அவரை யாரும் அடித்ததில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

    அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×