search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • உறையூர் சீனிவாச நகரில் இலங்கையைச் சேர்ந்தவர் திடீர் மரணம்
    • உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தன

    திருச்சி

    இலங்கை கொழும்பு கிராண்ட் பாத் வீதியைச் சேர்ந்தவர் ராஜா ரத்தினம் (வயது 54 ).இவர் நோய்வாய்ப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருச்சி உறையூர் சீனிவாச நகரில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்தார். இங்கு வந்த இடத்தில் உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனோரஞ்சிதம் கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராசிபுரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணியளவில் நாமக்கல் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த இளங்கோவன் (49) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் மற்றொரு டிரைவராக சிவக்குமார் என்பவரும் இருந்தார்.

    விழுப்புரம் வரை இளங்கோவன் பஸ்சை ஓட்டி வந்த நிலையில் சோர்வாக இருந்ததால் பஸ்சின் பின் சீட்டில் உறங்க சென்று விட்டார். இதையடுத்து சிவக்குமார் பஸ்சை ஓட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு அருகே பஸ் வந்தபோது, இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கல்குவாரியில் வேலை செய்வதற்காக கடந்த 15ந்தேதி புறப்பட்டு வந்தனர்.
    • பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

    சென்னை:

    ஈரோட்டில் இருந்து சென்னை வந்த ரெயிலில் பாதுகாப்புக்காக கட்டி போடப்பட்ட வெளி மாநில வாலிபர் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் இந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(25), இவர் உட்பட 10 பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் வேலை செய்வதற்காக கடந்த 15ந்தேதி புறப்பட்டு வந்தனர். பின்னர் அனைவரும் ஈரோடு கல்குவாரிக்கு சென்று வேலை செய்து வந்தனர்.

    அப்போது பிரகாசுக்கு திடீரென மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுடன் பிரகாஷ் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து சத்தீஸ்கரில் உள்ள பிரகாசின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.

    இதைதொடர்ந்து பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

    இதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் நேற்று பிரகாசை அழைத்துக் கொண்டு சத்தீஸ்கர் செல்வதற்காக ரப்திகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி புறப்பட்டனர்.

    அப்போது பிரகாஷ் பயங்கரமாக கூச்சலிட்டு பயணிகளுக்கு நொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதனால் ராம்குமாரும் சிறுவனும் சேர்ந்து பிரகாஷின் கை கால்களை கயிற்றால் கட்டி போட்டுள்ளனர். அப்போதும் பிரகாஷ் கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தார். இதனால் பிரகாசை இருக்கையின் கீழே படுக்க வைத்துள்ளனர்.

    பின்னர் அவர் சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கழுத்தை துணியால் கட்டியுள்ளனர். பின்னர் இருக்கையுடன் சேர்த்து கம்பியால் கட்டிபோட்டனர். அப்போது பிரகாசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு போராடினார். இருக்கைக்கு கீழே தள்ளி படுக்க வைத்திருந்ததால் அது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சத்தமில்லாமலேயே பிரகாசின் மூச்சு அடங்கியது. அவர் கழுத்து இறுகி மூச்சு திணறல் ஏற்பட்டு ஓடும் ரெயிலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதன் பிறகே ரெயில் பயணிகள் பிரகாஷ் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது தொடர்பாக ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைத்ததும் ரெயில்வே போலீசிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சென்ட்ரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிரகாசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிரகாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்தனர். சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பிரகாசின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

    பாதுகாப்பு என கருதி கழுத்தில் கட்டப்பட்ட துணியே வாலிபருக்கு எமனாக மாறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சுப்பிரமணியத்தின் உடலை போலீசார் மீட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65).இவர் கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சுப்பிரமணி பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டனர். சுப்பிரமணி கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா? அல்லது விஷவாயு தாக்கியதா? என்பது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்தின் போது, காரில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காரஜ்மாவில் கிண்னெடும் கட்டில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் (வயது 35).

    இவர் மாவேலிக்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இன்டர்நெட் கபே (கணினி மையம்) நடத்தி வந்தார். திருமணமாகாத இவர், தற்போது புளிமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தினமும் தனது காரில் இண்டர்நெட் கபேக்கு சென்று வந்தார்.

    நேற்று தனது நிறுவனத்திற்கு சென்ற அவர் நள்ளிரவு வரை அங்கேயே இருந்து வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு காரில் அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் முன்பு காரை நிறுத்தினார். அப்போது திடீரென கார் தீப்பிடித்தது.

    இதனால் காருக்குள் இருந்த கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் உடனடியாக இறங்க முயன்றார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. கண்ணன் தீயில் கருகியபடி அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் தீப்பிடித்தது எப்படி என்பது தெரியவில்லை. தீவிபத்தின் போது, காரில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே காரில் வெடிபொருட்கள் ஏதும் இருந்ததா? அல்லது தொழில் நுட்ப கோளாறு காரணமாக கார் தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மல்லீஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
    • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லீஸ்வரன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர், மண்கரடு, செல்வநகரை சேர்ந்தவர் மல்லீஸ்வரன். இவர் கடந்த ஒரு வருடமாக ஈரோடு மாவட்டம் மைனாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

    இதற்காக மல்லீஸ்வரன் தாளவாடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தினமும் காலை வேலைக்கு சென்று மாலை வீட்டுக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தாளவாடி வட்டத்தில் உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாம் நடைபெறு வதையொட்டி முகாம் பொறுப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனரா என்று தெரிந்து கொள்வதற்காக தாளவாடி வருவாய் அலுவலர் மதிவாணன் கிராம நிர்வாக அலுவலர் மல்லீஸ்வரனை போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.

    ஆனால் மல்லீஸ்வரன் போனை எடுக்கவில்லை. உடனடியாக மதிவாணன் இது குறித்து தாளவாடி தாசில்தார் ரவிசங்கரிடம் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து மதிவாணன், துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மல்லீஸ்வரன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றனர். வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் பதில் ஏதும் வராததால் இது குறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மல்லீஸ்வரன் ஒரு அறையில் வாந்தி எடுத்தவாறு மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மல்லீஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லீஸ்வரன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் கிராம நிர்வாக அலுவலர் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மரணத்திற்கு வேறு எதுவும் காரணமா? என்பது மர்மமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள நிரவில்புழா பகுதியில் கீச்சேரி பழங்குடியினர் குடியிருப்பு இருக்கிறது. இங்குள்ள ஒரு வீட்டில் பத்திரி மண்டபம் பகுதியை சேர்ந்த மணிக் கூத்தன்(வயது22), பிலக்காவு பகுதியை சேர்ந்த வினிதா(22) ஆகியோர் வசித்து வந்தனர்.

    பழங்குடியின வகுப்பை சேர்ந்த அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு கீச்சேரி பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் அடித்துள்ளது.

    இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், மணிக்கூத்தனின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மணிக்கூத்தன் மற்றும் அவரது மனைவி வினிதா ஆகிய இருவரும் வீட்டின் கூரையில் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்களது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதுகுறித்து தொண்டர் நாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்பு இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்தார்களா? அல்லது அவர்களது சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என்பது மர்மமாக உள்ளது. இது பற்றி அக்கம்பக்கதத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது மணிக்கூத்தன் மற்றும் அவரது மனைவியை கடந்த ஒருவாரமாக அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அவர்கள் இறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் வினிதா கர்ப்பமாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர்களை பற்றி அவர்களது உறவினர்களி டம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வீட்டை விட்டு வெளியேறிய மணிக்கூத்தன் மற்றும் வினிதா ஆகிய இருவரும் கீச்சேரியில் இருப்பது தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

    வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து வாழந்துவந்த பழங்குடியின ஜோடி மர்மமான முறையில் இறந்திருப்பது வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உயிரிழந்த நபரின் உடலிலோ அல்லது கட்டிடத்திலோ பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் காணப்படவில்லை.
    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கட்டிடம் கட்டுபவரான ஹரீஷ் என்பவரை கைது செய்தனர்.

    தெற்கு டெல்லியின் மாளவியா நகரின் நில் பிளாக்கில்ரில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து 41 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், நபர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்ததை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில், பீகார் மாநிலம் கதிகாரைச் சேர்ந்த ஷேக் ஷா ஆலம் என்பவர் தவறி விழுந்து இறந்ததாகவும், அப்போது கட்டிடத்தில் பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்ததாகவும் காவல்துறை துணை ஆணையர் சந்தன் சௌத்ரி தெரிவித்தார்.

    மேலும், உயிரிழந்த நபரின் உடலிலோ அல்லது கட்டிடத்திலோ பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் கூறினார்.

    இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கட்டிடம் கட்டுபவரான ஹரீஷ் என்பவரை கைது செய்தனர்.

    • திருச்சி மத்திய ஜெயில் கைதி திடீர் மரணமடைந்தார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி,

    திருச்சி உய்ய க்கொண்டான் திருமலை சண்முகா 9-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 77 )இவர் ஒரு வழக்கில் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் தண்டி க்கப்பட்டு திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்க ப்பட்டி ருந்தார். கடந்த 19ம் தேதி அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயில் அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் ராமச்சந்தி ரன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஜெயில் அதிகாரி சண்முகசுந்தரம் கேகே நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர்.
    • தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் ஒரு சிலர் வீடுகளில் படுத்தபடுக்கையில் தொடர் சிகிச்சையிலும், மருத்துவ கண்காணப்பிலும் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த முத்து (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது குடும்பத்தார், அவரை மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்த சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே, விஷ சாராயம் குடித்ததால் தான் முத்து இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர். இதன் பேரில் மரக்காணம் வருவாய்த்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எதனால் இறந்தார் என தெரிய வரும் என்று போலீசார் கூறி, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களை அனுப்பி வைத்தனர்.

    • போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து அஷரப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • காசர்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பரப்பூரை சேர்ந்தவர் அஷ்ரப்(வயது55). பதிவுத்துறையின் மாவட்ட அதிகாரியான இவர் காசர்ஜகோடு நுள்ளிப்பாடியில் உள்ள தங்கும் விடுதியில் அடிக்கடி தங்குவாராம். அதன்படி சம்பவத்தன்று அங்கு தங்கியிருந்த அவர், மறுநாள் வெகுநேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது குளியலறையில் அஷ்ரப் இறந்துகிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து அஷரப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காசர்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டல் அறையில் பதிவுத்துறை அதிகாரி மர்மமாக இறந்துகிடந்த சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • அரசின் அறிவிப்பை மருத்துவக் கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்சு விமானம் மூம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு இடங்களில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்பு இறுதிச்சடங்குக்காக திருவனந்தபுரத்தில் இருந்து அவரது செந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு அரசு போக்குவரத்து கழக பேரூந்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டுநின்று உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    உம்மன்சர்ண்டியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் கடந்த 18 மற்றும் 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் துக்க நாளாக கேரள அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து அந்த இருநாட்களிலும் நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் உம்மன்சாண்டி மறைந்த 18-ந்தேதியன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கலைநிகழச்சி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம், முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், உம்மன் சாண்டி மறைவையடுத்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த துக்க நாளில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

    மது விருந்தும் நடந்துள்ளது. இது குறித்து காவல் மற்றும் கலால் துறைக்கு தகவல் தெரிவித்தேன். அரசின் அறிவிப்பை மருத்து வக்கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது. இதனால் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ×