search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளி"

    • சிவகாசி அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • திருத்தங்கல் ேபாலீசார் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ் கரித்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இளையமகன் பொன்னு பாண்டி (23). கூலி வேலைக்கு சென்ற இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக வசித்து வந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு பொன்னுபாண்டி தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் காளீஸ்வரி என்பவர் தனது மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். பட்டாசு வெடி சத்தத்தில் அந்த மாடுகள் மிரண்டன.

    உடனே காளீஸ்வரி வீரபாண்டியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதையடுத்து அங்கு வந்த பொன்னு பாண்டியின் சகோதரர் முனிராஜ் இருவரையும் சமாதானம் செய்துவைத் தார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த வீரபாண்டி முனிரா ஜிடம், இந்த பிரச்சினை யில் நீ தலையிடாதே என்று எச்சரித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    பின்னர் வீரபாண்டி தனது தோட்டத்திற்கு சென்றார். வடமலாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவ ருக்கு சொந்தமன இந்த தோட்டத்தை வீரபாண்டி குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்கிடையே பொன்னு பாண்டி, முனிராஜ் ஆகி யோரை பத்திரமாக பார்த் துக்கொள்ளுமாறும், பிரச்சி னைகளுக்கு செல்லவேண் டாம் என்று அறிவுரை கூறு மாறும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வத்தி டம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு பொன்னுபாண்டி தனது இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியின் தோட்டத் திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதுபற்றி அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் செல்வம் அங்கு சென்றுபார்த்தபோது, பொன்னுபாண்டி அரிவா ளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந் தார்.

    அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பொன்னுபாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார், வடமலாபுரம் கார்த்திக், வீரபாண்டி, அசோக் என்ற அய்யாதுரை உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகி றார்கள்.

    • பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி.
    • நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தியில் இருந்து வேலூர் நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, இவரது பின்னால் நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    கார் மோதியதில் பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலை மறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • முருகேசன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார்.
    • டிராக்டர் திடீரென முருகேசன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மொபட்டுடன் முருகேசன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கபிலர்மலையில் வேலை செய்துவிட்டு மாலையில் மொபட்டில் வீடு திரும்பினார். எட்டிக்கம்பாளையத்தில் உள்ள சூரம்பாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னால் அதிவேகமாக டிராக்டர் வந்தது. இந்த டிராக்டர் திடீரென முருகேசன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மொபட்டுடன் முருகேசன் தார் சாலையில் கீழே விழுந்தார். அ

    தில் முருகேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முருகேசனின் மகன் கனகராஜ் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சித்தம்பூண்டி பகுதியை சேர்ந்த நல்லமுத்து (50) என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மூத்த மகன் சரவணனுக்கு சிறு வயதிலிருந்து இருதயத்தில் ஓட்டை இருந்ததாக கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்தனர்.
    • தமிழக அரசு தங்கள் மகனை காப்பாற்ற மருத்துவ உதவி மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சம்பன்குளம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு சரவணன் (வயது 14), சக்திவேல் (வயது 12), ஆகிய 2 மகன்களும், முத்துமாரி (வயது 8) என்ற ஒரு மகளும் உள்ளனர். முருகன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில், இவரது மூத்த மகன் சரவணனுக்கு சிறு வயதிலிருந்து இருதயத்தில் ஓட்டை இருந்ததாக கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது சரவணனுக்கு மாற்று இருதயம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மாற்று இருதய அறுவை சிகிச்சைக்காக பல லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், கூலி தொழிலாளியான முருகன் தனது மகனின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்.

    2010-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து தனது வருமானத்திற்கும் மீறி இதுவரை சுமார் ரூ.10 லட்சம் வரை செலவு செய்தும் தற்போது மாதம் ரூ.6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை மருத்துவ செலவிற்கு செலவு செய்து வருகிறார்.

    இந்த நிலையில், தற்போது மாற்று இருதய அறுவை சிகிச்சைக்கு வழி இல்லாமல் பரிதவித்து வருகிறார். தனது மகனை காப்பாற்ற கோரி தமிழக அரசிற்கு அவரது குடும்பத்தினர் உருக்கத்துடன் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருதய நோயால் அவதிப்பட்டு வரும் தனது மகன் மூச்சுத்திணறல் காரணமாக பள்ளிக்குச் செல்ல இயலவில்லை என்றும், தற்போது மாற்று இருதயம் அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது என்றும் மேல் சிகிச்சை செய்வதற்கு போதிய வசதி இல்லாததால், தமிழக அரசு தங்கள் மகனை காப்பாற்ற மருத்துவ உதவி மேற்கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்கள புரம் அருகே உள்ள உரம்பு பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை, நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை பரிதாபமாக இறந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்கள புரம் அருகே உள்ள உரம்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன்

    தங்கதுரை (வயது46). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி (41). கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கதுரை, வீட்டில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை,

    நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • அரிவாளுடன் பால் பிள்ளை வீட்டில் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது அரிவாளால் பால்பிள்ளையை தாக்கினார்,
    • இதுகுறித்து பால்பிள்ளை கருங்கல் போலீசில் புகார் செய்தார்.புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பிள்ளையை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பிகளான கிருஷ்ண குமார், விஜிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கருங்கல், அக்.20-

    கருங்கல் அருகே பருத்திவிளை மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்பிள்ளை (வயது 35) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சிவலிங்கம் மகன்கள் கிருஷ்ணகுமார், விஜி குமார் ஆகியோருக்கும் குடும்ப கோவில் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.

    கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ணகுமார் மற்றும் விஜிகுமார் ஆகியோர் அரிவாளால் தாக்கியதில் பால்பிள்ளை காயமடைந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர்.

    இந்நிலையில் நேற்று அவர்கள் அரிவாளுடன் பால் பிள்ளை வீட்டில் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது அரிவாளால் பால்பிள்ளையை தாக்கினார்,

    இதுகுறித்து பால்பிள்ளை கருங்கல் போலீசில் புகார் செய்தார்.புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பிள்ளையை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பிகளான கிருஷ்ண குமார், விஜிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.
    • 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    கோவை 

    கோவை சிறுமுகையை சேர்ந்தவர் 17 வயது மாணவி.இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கவுதம்(வயது19).கூலித்தொழிலாளி. பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவியை கவுதம் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். மாணவியும் அங்கு சென்றார். அப்போது அவரை அழைத்து கொண்டு கவுதம் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு வைத்து மாணவியை திருமணம் செய்தார். பின்னர் தனது பெற்றோரிடம் சிறுமியை மேஜர் என கூறி அங்கு வசித்தார்.

    அப்போது பல முறை மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் மாணவி மைனர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர் சம்பவம் குறித்து சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கவுதம் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    போலீசார் கவுதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தி. கொடல வாடி பகுதியைச் சேர்ந்த வர் முத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு ஏரி வேலைக்கு சென்றார். மீண்டும் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.  இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசாருதீன் வழப்பதிவு செய்து கூலித் தொழிலாளி வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே தலையில் கல்லை போட்டு கூலித்தொழிலாளியை கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் எதிரே, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவதாக ராஜகம்பீரம் கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கத்திற்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

    அதன் பிறகு படுகாயம் அடைந்தவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் படுகாயம் அடைந்தவர், பொள்ளாச்சியை சேர்ந்த பழனி (வயது 45) என்பது தெரியவந்தது. இவர் மதுரை ஒத்தக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு கஞ்சா, மது பழக்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பழனியுடன் சுற்றித் திரிந்ததாக, வாலிபர் ஒருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சதீஷ்குமார் கூறுகையில், "நான் மதுபானம் வாங்குவதற்காக பழனியிடம் பணம் கேட்டேன். அவர் தர மறுத்தார். எனவே ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு விட்டு தப்பி சென்று விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பழனியை கொல்ல முயன்றதாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • மோகனூர் தாலுகா லத்துவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி பலி.
    • நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றவர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா லத்துவாடி ஊராட்சி நல்லையகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் ராஜ் (வயது 55) . இவரது மனைவி பாவாயி (வயது 50) . நேற்று முன்தினம் இரவு பாவாயி மாரியம்மன் கோவில் அருகில் கழிப்பிடம் சென்றுவிட்டு நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் (வயது 26) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாவாயி மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள், மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே பாவாயி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சுரேஷ்குமார் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாவாயி கணவர் ராஜ் மோகனூர் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம் அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி பலியானர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பாப்பம்பாடி சந்தை பேட்டை அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே நேற்று மாலை 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து குடிமகன்கள் தாரமங்கலம் போலீசாறுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு சென்று தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் (48) என்பதும், அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. ஆறுமுகம் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • கருங்கல் அருகே கப்பியறை கருக்குப்பனை கூடல்விளையை சேர்ந்த கூலி தொழிலாளி தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
    • கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    கருங்கல் அருகே கப்பியறை கருக்குப்பனை கூடல்விளையை சேர்ந்தவர் கேசரி (வயது 56). இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.


    மாலையில் அவரது மனைவி பத்மாவிற்கு கேசரி தோட்டத்தில் இறந்து கிடப்பதாகவும், மரத்தில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் அங்கு சென்று பார்த்த போது கேசரியின் தோள்ப ட்டையில் சிராய்ப்பு காயம் இருந்துள்ளது.


    இது குறித்து கேசரியின் மனைவி பத்மா கருங்கல் போலீசில் புகார் தெரிவித்தார். இப்புகாரி ன்பேரில் கருங்கல் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×