என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியர்கள்"
- கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக இந்தியர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.
- 11 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தனிநபர் வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-23ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த முடிவு இந்திய குடும்பங்களின் செலவு முறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிக்கிறது.
சுமார் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தனி நபர் மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
சராசரி வீட்டுச் செலவினங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கின்றன.
பெரும்பாலான இந்தியர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், பெட்ரோலுக்கான செலவு பயணக் கட்டணத்தில் செலவழிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தது.
நகர்ப்புற குடும்பங்களின் மொத்த மாதாந்திர செலவில் 11.2 சதவீதம் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கிராமப்புற இந்தியாவில் 9.5 சதவீதம் ஆக உள்ளது என தெரிய வந்துள்ளது.
- இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கொல்லத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.
- இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
புதுடெல்லி:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இதுவரை போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் 3 பேருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
- வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
- 8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றிய ஓய்வுபெற்ற 8 பேர் மேற்கு ஆசிய நாடான கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வேறு நாட்டுக்காக தங்களது நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக 8 பேரையும் கத்தார் கடற்படை கைது செய்தது.
இந்த வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. அதற்கு எதிராக அவர்களுடைய குடும்பத்தினர், கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில், மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்து, மேல்முறையீட்டு கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கத்தார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 8 இந்தியர்களின் வக்கீல்கள் குழுவுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
- வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரத்து 330 இந்திய கைதிகள் உள்ளனர்.
- அதிகபட்சமாக வளைகுடா நாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் பதிலளித்தார். அப்போது அவர், மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,330 இந்திய கைதிகள் உள்ளனர். அதிகபட்சமாக 4,630 பேர் வளைகுடா நாடுகளின் சிறைகளில் உள்ளனர்.
நேபாளத்தில் 1222, பாகிஸ்தானில் 308, சீனா 178, வங்காளதேசத்தில் 60, இலங்கையில் 20 இந்தியர்கள் சிறைகளில் உள்ளனர்.
பல நாடுகளில் அமலில் உள்ள வலுவான தனியுரிமை சட்டங்களின் காரணமாக, சிறைக்கைதிகள் விருப்பப்பட்டால் அன்றி, அவர்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் அளிப்பதில்லை என தெரிவித்தார்.
- ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையே அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 55 ஆயிரத்து 38 பேரும் (12.5 சதவீதம்), கனடாவை சேர்ந்த 4 ஆயிரத்து 235 பேரும் (ஒரு சதவீதம்) எச்-1பி விசா பெற்றுள்ளனர்.
இதில் ஆரம்ப வேலைக்கான எச்-1பி விசாக்கள் மற்றும் விசா நீட்டிப்புகள் ஆகியவை அடங்கும். ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-ம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்.1பி விசா பெற்றனர். கடந்த நிதியாண்டில் 3.20 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பெறுவது உயர்ந்தபடி இருக்கிறது.
அதேவேளையில் சீனர்கள் எச்-1பி பெறுவது 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது.
- சுற்றுலா, தொழிலுக்காக வழங்கும் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கு காத்திருப்பு காலம் 999 நாட்களாக உயர்ந்து உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்து உள்ளது.
- இந்தியாவில் விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
புதுடெல்லி:
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்.பி. விசா வழங்கப்படுகிறது. அதே போல் தொழிலுக்காக பி1 விசாவும், சுற்றுலாவுக்காக பி2 விசாவும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அமெரிக்காவுக்கு சென்று படிக்கவும் மாணவர்களுக்கு விசா வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் வழங்கப்படுவதற்கு முன்பு விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்படும்.
இந்த நிலையில் சுற்றுலா, தொழிலுக்காக வழங்கும் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கு காத்திருப்பு காலம் 999 நாட்களாக உயர்ந்து உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்து உள்ளது.
சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களில் விசாவுக்காக நேர்காணலுக்கு சுமார் 2½ ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
சுற்றுலா மற்றும் தொழில் பிரிவில் விசா விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் குறைவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியாவில் விசா நடைமுறைகளை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவிலான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்க டிராப் பாக்ஸ் விண்ணப்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தீர்ப்பு வழங்குதல், தற்காலிக பணியாளர்களை அமர்த்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்றார்.
விசா விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட கொரோனா காலத்திற்கு முன்பு இருந்து நிலையை எட்டி விட்டதாலும் அதை செயல்படுத்த இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் போதுமான பணியாளர்கள் இல்லை.
இந்தியாவில் விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 2023-ம் நிதியாண்டில் கொரோனா காலத்துக்கு முந்தைய விசா செயலாக்க நிலைகளை எட்டுவோம் என்றும் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு 2022-ம் நிதியாண்டில் அதிக மாணவர் விசாக்களை வழங்கி உள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்