search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 189952"

    • கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்குக்னு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைய டுத்து அவரது உத்தரவின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கஞ்சா விற்ற வேதாரண்யம் அடுத்த கீழ ஆறுமுக கட்டளையைச் சேர்ந்த கபிலன் (வயது 26), உச்சகட் ( 24), ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நெடுமாறன் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கரூரில் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யபட்டது
    • போலீசாரை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    கரூர்:

    குளித்தலை அடுத்த, பொருந்தலுார் பஞ்சாயத்து கண்ணல் வடநாயக்கன்பட்டியில் கிராவல் மண் கடத்துவதாக, குளித்தலை டி.எஸ்.பி., ஸ்ரீதருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, தோகைமலை போலீசார் அங்கு சென்றனர். அப்போது டிப்பர் லாரியில், கிராவல் மண் கடத்தப்படுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து தப்பி ஓடிய பாலசமுத்திரடபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் குரு (35), விராலிமலை அடுத்த கோடாலிகுடியை சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் (39) ஆகிய இருவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
    • இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி-அரிமளம் விளக்கு சாலையில் மாவட்ட தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து ேசாதனை நடத்தினர். சோதனையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது அறந்தாங்கி அருகே உள்ள எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த சேக் தாவுது மகன் சதாம் உசேன் (வயது 28), கல்லாலங்குடி பாரதி நகரை சேர்ந்த சம்சுதீன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, 120 கிலோ புகையிலை பொருட்கள், கார், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
    • அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகள் கனிம வளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமை யாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை தனிப்பிரிவு போலீ சார் களியக்காவிளை பகுதி யில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 6 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது வாகனங்களில் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது.

    இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் களியக்காவிளை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினார்.
    • தப்பி ஓடிய குற்றவாளியை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை செய்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக வாஞ்சூர் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாஞ்சூர் சோதனை சாவடி வழியே புதுச்சேரி மாநிலம், காரைக்காலிருந்து வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் 180 மில்லி அளவுள்ள 197 கோட்டர் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுகடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    மேலும், அவரிடமிருந்து 197 மதுபாட்டில்களும் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைய போலீசார் கைப்பற்றினார்.

    இதேபோல் நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் சைக்கிளை மறித்த போது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.

    இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 100 புதுச்சேரி சாராய பாட்டில்களையும் கைப்பற்றப்பட்டன.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    • கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர்.
    • அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது.

    ஓசூர்,

    ஓசூர் டவுன் போலீசார் ஓசூர் - ராயக்கோட்டை சாலை ஒன்னல்வாடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 6 லாரிகள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது பானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 180 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும் இதுகுறித்து புகார் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகருக்குள் வந்து செல்லும் தனியார் பஸ்கள் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவிலான ஹாரன்களை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பயணிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

    இந்த புகாரின் அடிப்படையில் மேலூர் மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் ஆகியோர் மேலூர் பஸ் நிலையம் முன்பாக சுமார் 10 தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர். அப்போது 6 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஹாரன்களை அப்புறபடுத்தினர்.

    மேலும் நகருக்குள் அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பஸ்களை இயக்ககூடாது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க அனுமதிக்ககூடாது, போக்கு வரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பனவற்றை பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரி டம் எடுத்து கூறினர்.

    இருந்தபோதிலும் மேலூர் நகர பகுதிக்குள் காலையில் இருந்து இரவு வரை குடிநீர் வினியோகம் செய்ய வரும் மினி லாரிகள், தெருக்களுக்குள் வரும்போது அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை ஒரே இடத்தில் நின்று கொண்டு தொடர்ந்து அடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.

    அதுபோன்ற வாகனங்களையும் சோதனை செய்து அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹா ரன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
    • உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அனுமதியின்றி தயாரித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி தெய்வானை நகர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    அப்போது அங்குள்ள பட்டாசு கடையின் பின்புறம் உள்ள இடத்தில் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் பட்டாசுகள் இருந்தன. மொத்தம் 60 பெட்டிகளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அந்த பட்டாசுகளை தயாரிக்க ஆர்டர் கொடுத்த சித்துராஜபுரம் பால்பாண்டி, சாமிபுரம் காலனி விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
    • ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்அருகே வீட்டு தோட்டத்தில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்க்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு போலீசார் நாகை அருகே நரிமணம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நரிமணம் சுல்லாங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) என்பவரது வீட்டின் தோட்டத்தில்

    கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்து நாகூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராகுலின் அண்ணன் பிரகாஷ் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் ஈரோட்டில் இருந்து கஞ்சா விதையினை எடுத்து வந்து தோட்டத்தில் விதைத்து வளர்த்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும் பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகூர் அருகே கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டாசுகள்-கருந்திரிகள் பறிமுதல் செய்தனர்.
    • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சாத்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் சேர்மசங்கர்(வயது37). இவர் மதுரை-சிவகாசி ரோட்டில் உள்ள கொங்கலாபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கீழத்திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த கணேசன்(34) என்பவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி டி.கே.எஸ். ஆறுமுகம் ரோட்டை சேர்ந்தவர் முருகன்(48). இவர் சட்டவிரோதமாக கருந்திரிகளை பதுக்கி வைத்ததாக மாரனேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவரிடம் இருந்து 80 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×