search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டர்"

    • முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.
    • பிற துறைகளில் பணிபுரியும் அமெரிக்காவை தளமாக கொண்ட மற்றும் உலகளாவிய ஊழியர்களை இது பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழில் அதிபர் எலான் மஸ்க் ரூ.3.50 லட்சம் கோடிக்கு சமீபத்தில் கையகப்படுத்தினார்.

    திவாலாகி கொண்டு இருக்கும் நிறுவனத்தை சீரமைக்க அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

    முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அடுத்தப்படியாக 50 சதவீத பணியாளர்களை வேறு வழியில்லாமல் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதன் காரணமாக 3,788 பேர் வேலை இழந்தனர்.

    இந்த நிலையில் மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங், பொறியியல் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் அமெரிக்காவை தளமாக கொண்ட மற்றும் உலகளாவிய ஊழியர்களை இது பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவன பங்குகளில் சுமார் 3.95 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்பனை.
    • பங்கு விற்பனை குறித்த தகவலை அமெரிக்க பங்கு பரிவர்த்தனை மையம் தெரிவித்தது.

    உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான இவர், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பொறுப்பை ஏற்று கொண்டதும் டுவிட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார்.

    முக்கிய நிர்வாகிகளை நீக்கியதோடு, வாடிக்கையாளர்களின் கணக்குகளை சரிபார்க்கும் புளூ டிக் பயன்பாட்டிற்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவன பங்குகளில் சுமார் 3.95 பில்லியன் டாலர் மதிப்பிலான 19.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்தார்.

    இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.22 லட்சம் கோடியாகும். இந்த பங்கு விற்பனை குறித்த தகவலை அமெரிக்க பங்கு பரிவர்த்தனை மையம் தெரிவித்தது.

    • டுவிட்டரில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் எலான் மஸ்க்
    • சமூக ஊடக தளங்களில் வெளியாகும் தவறான தகவல்களை குறைக்க ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை

    வாஷிங்டன்:

    உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கி உள்ளார். டுவிட்டரில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதனால் கடந்த சில தினங்களாக எலான் மஸ்க் பற்றியே இணையதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

    இந்த நிலையில், உலகம் முழுவதும் பொய்களை பரப்பும் டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ பைடன் பேசும்போது, "நாம் அனைவரும் இப்போது எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை பற்றியே கவலைப்படுகிறோம். அவர் வாங்கியிருக்கும் டுவிட்டர் உலகம் முழுவதும் பொய்களை அனுப்புகிறது, பொய்களை வேகமாக பரப்புகிறது. டுவிட்டரில் இனி எடிட்டர்கள் இல்லை. ஆபத்தில் இருப்பதை குழந்தைகள் எப்படி புரிந்துகொள்ள முடியும்" என்றார்.

    வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், ஜோ பைடன் நிர்வாகம் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் "வெறுக்கத்தக்க பேச்சு" மற்றும் "தவறான தகவல்கள்" ஆகியவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

    • டுவிட்டரை வாங்கிய உடனேயே அந்த நிறுவனத்தை எலன் மஸ்க் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
    • ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய இழப்பீடு பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.

    புதுடெல்லி :

    'டுவிட்டர்' சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய அமெரிக்க தொழில் அதிபர் எலன் மஸ்க், அதில் அதிரடி பணி நீக்கங்களை செய்து வருகிறார்.

    அந்த வகையில், டுவிட்டரின் இந்தியா பிரிவில் பணியாற்றி வந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை அந்த நிறுவனம் நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    என்ஜினீயரிங், விற்பனை, சந்தையிடல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் உள்ள ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய இழப்பீடு பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.

    இந்தியாவில் ஒட்டுமொத்த சந்தையிடல் மற்றும் தகவல் தொடர்பு துறை பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது. இது டுவிட்டர் பணியாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

    ஊழியர்கள் பணி நீக்கம் என்ற எலன் மஸ்கின் அதிரடியை அடுத்து, இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் மீது சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக 'புளூம்பெர்க்' ஏடு தெரிவித்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • கலெக்டரின் பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில், இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.

    இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணியாளர்கள் நீக்கம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நியூயார்க்:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் வாங்கினார். அதைத்தொடர்ந்து அந்நிறுவனத்தில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த வாரம் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மொத்தம் உள்ள 7,500 பணியாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

    அதன்படி பணியாளர்கள் நீக்க நடவடிக்கையை எலான் மஸ்க் தொடங்கி உள்ளார். இதுதொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டுவிட்டரை வாங்கிய நாள் முதல் எலான் மஸ்க் அடுத்தடுத்த அதிரடியை செயல்படுத்தி உள்ளார்.
    • பணி நீக்க நடவடிக்கைகளால் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சான்பிரான்சிஸ்கோ:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் தன் வசப்படுத்தி உள்ளார். அந்நிறுவனத்தை வாங்கிய உடனே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் ஆகிய நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் வரும் ஆண்டுகளில் டுவிட்டரில் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செலவுகளை குறைக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாட்கள் மதிப்புள்ள பணி நீக்க ஊதியம் வழங்கப்படும். டுவிட்டரில் தற்போது 7,500 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் சுமார் 3,700 ஊழியர்களை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுவிட்டரை வாங்கிய நாள் முதல் எலான் மஸ்க் அடுத்தடுத்த அதிரடியை செயல்படுத்தி உள்ளார். பணி நீக்க நடவடிக்கைகளால் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.
    • இக்கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்துக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர், நிர்வாக குழுவையும் கூண்டோடு கலைத்தார்.

    டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.

    இதன் மூலம் அந்த பயனாளர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த புளூ டிக் பயனாளர்களிடம் மாதந்தோறும் 19.99 அமெரிக்க டாலர் (ரூ.1600) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்தநிலையில் டுவிட்டரில் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

    இக்கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்துக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டுவிட்டரில் விளம்பரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின், உயர் அதிகாரிகள் பதவி விலகி உள்ளனர்.

    • ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார்.
    • இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.

    நியூயார்க் :

    ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ளார்.

    அவர் டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டர் நிறுவனம் தனது கைக்கு வந்த உடனே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க். இவர்களில் பராக் அக்ரவால் இந்தியர் ஆவார்.

    இந்த நிலையில் டுவிட்டரில் எலான் மஸ்குக்கு இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார். அவர் சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்.

    எலான் மஸ்குக்கு தான் உதவி வருவதை ஸ்ரீராம் கிருஷ்ணன் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "டுவிட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்குக்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாத்தியம் செய்வார் என்றும் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இளங்கலை தொழில்நுட்பம் பயின்று பட்டம் பெற்றார். படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அமெரிக்கா சென்ற ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் பேஸ்புக், ஸ்னாப் சாட், டுவிட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு விதமான முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    தற்போது அவர் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.

    கிரிப்டோகரன்சி குறித்து தான் அறிந்ததை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் சேர்ந்து, 'தி குட் டைம் ஷோ' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் தொடர்பான கண்டுபிடிப்பாளர்களை அவர்கள் நேர்காணல் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே ஸ்ரீராம் கிருஷ்ணன் எலான் மஸ்குக்கு அறிமுகமானதாக கூறப்படுகிறது.

    • டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள 9 பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கி அவர் அதிரடி காட்டியுள்ளார்.
    • டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தார்.

    உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரையும் அவர் கடந்த வாரம் தன் வசப்படுத்தினார்.

    எலான் மஸ்க் டுவிட்ட உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது டுவிட்டர் இயக்குநர் குழுவை அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார்.

    டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள 9 பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கி அவர் அதிரடி காட்டியுள்ளார்.

    டுவிட்டர் இயக்குநர் குழுவில் தற்போது தான் மட்டுமே இருப்பதாகவும், டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

    முன்னதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது.
    • அது உண்மையான கணக்குதானா என்பதை டுவிட்டர் நிறுவனம் சரிபார்த்து புளு டிக் வழங்கும்.

    உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்துக்குள் சென்ற எலான் மஸ்க் ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை பணி நீக்கம் செய்தார்.

    மேலும் அவர் ஆள் குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கினார்கள். பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், 3 ஆண்டுகளில் வருவாயை இரட்டைப்பாக்கவும் முயற்சி எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமான மற்றும் அதிக செயல்பாட்டில் இருந்த கணக்குகளுக்கு புளு டிக் வழங்கி வந்தது. 2017-ம் ஆண்டு இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் புளு டிக் வழங்கப்பட்டு வருகிறது.

    டுவிட்டர் கணக்குகளை சரிபார்ப்பதற்காக ஒரு புதிய செயலியை உருவாக்கி உள்ளது. புளு டிக் வேண்டும் என்று விரும்புபவர்கள் அந்த செயலி மூலம் விண்ணப்பித்து தனது முழு விவரங்களையும் தெரிவித்து சில ஆவணங்களை சமப்பிக்க வேண்டும். அது உண்மையான கணக்குதானா என்பதை டுவிட்டர் நிறுவனம் சரிபார்த்து புளு டிக் வழங்கும்.

    டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் புளு டிக் கணக்குகளுக்கு மாத கட்டணத்தை ரூ.1600ஆக உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். விரைவில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
    • புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த டுவிட்டரின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி திட்டமிட்டுள்ளார்.

    டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கினார். அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

    இந்தநிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். அவர் ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளார்.

    வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டிய பணியாளர்கள் பட்டியலை அளிக்க மேலதிகாரிகளுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

    வருகிற 1ம் தேதிக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவுக்கு குறைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த எண்ணிக்கை ஆள்குறைப்பு நடவடிக்கை மூலம் 2 ஆயிரமாக குறைக்கப்படும்.

    இதற்கிடையே டுவிட்டருக்கு மாற்றாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த டுவிட்டரின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி திட்டமிட்டுள்ளார். புளூஸ்கை என்ற பெயரில் ஒரு சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார்.

    ×