search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநடப்பு"

    • பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
    • டெல்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

    இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

    அந்த வகையில் இன்றும் இந்த குழுவின் கூட்டம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அசாதுதின் ஒவைசி, ஆம் ஆத்மி பிரதிநிதி சஞ்சய் சிங், திமுகவின் முகமது அப்துல்லா, காங்கிரஸின் நசீர் உசேன், முகமது ஜாவேத், சமாஜ்வாதி கட்சியின் மொஹிபுல்லா நட்வி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்..

    இந்த கூட்டத்தில் டெல்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இது மற்ற உறுப்பினர்களுக்கு பகிரப்பட்ட நிலையில் அதை படித்தவுடன் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதுதொடர்பாக வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், அஸ்வினி குமார் தாக்கல் செய்த அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பல்வேறு அம்சங்கள் இதில் இல்லை. டெல்லி அரசுக்குத் தெரியாமல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதைக் கண்டித்தே வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
    • அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் 160 பேர் வரை பலியானார்கள். கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய வன்முறை இதுவரை ஓய்ந்தபாடில்லை. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும், விவாதம் நடத்த கோரியும் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதன் உச்சகட்டமாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அனைத்து கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார்.

    மசோதா மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    • கூட்டத்தில் 45 திட்டபணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • முறையான செலவு கணக்குகளை ஆராயாமல் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள் என வாக்குவாதம் ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நகர்மன்றம் அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமையில் இன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களும், அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 45 திட்டபணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குறுக்கிட்டு பேசியதாவது:

    தருமபுரி நகராட்சியில் முன்னாள் ஆணையர் சித்ரா என்பவர் பதவி வகித்தபோது அவர் வசித்து வந்த அரசு கட்டிடத்தை நன்றாக பாதுகாத்து வந்தார். அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றபிறகு தற்போது உள்ள ஆணையர் அண்ணாமலை அந்த கட்டித்தை பராமரிப்பு செய்வதாக கூறி ரூ.9 லட்சம் வரை கணக்கு காட்டியுள்ளார். நன்றாக உள்ள கட்டிடத்திற்கு எதற்காக இவ்வளவு தொகையில் பராமரிப்பு செலவு செய்ய வேண்டும். இதுகுறித்து முறையான செலவு கணக்குகளை ஆராயமால் கூட்டத்தில் அதற்கு ஒப்பதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்.

    இதேபோன்று 45 திட்டப்பணிகளில் 35 திட்டப்பணிகள் நகர்மன்றத்தில் எந்தவித அனுமதிபெறாமல் ஏற்கனவே பணிகள் முடித்துவிட்டு அதற்காக தற்போது தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள். எனவே முதலில் அனுமதி பெற்றுவிட்டு அதன்பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

    13 அ.தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களை வைத்து நீங்களாகவே தீர்மானங்களை நிறைவேற்றி கொண்டு உள்ளீர்கள். இந்த செயல் கண்டனத்துக்குரியதாகும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள், அனுமதி பெற்ற பிறகே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

    மேலும், அ.தி.மு.க உறுப்பினர்கள் கூறும்போது:-

    6-வது வார்டில் மயான சாலையில் சிலர் அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை கட்டி வருகின்றனர். இதனை உடனே சர்வேயர்களை கொண்டு அளந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    அதனை தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறும்போது:

    இதேபோல், நகராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூல் செய்து வருகின்றனர் என்று உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதற்காக சென்னையில் உள்ள அதிகாரிகளிடமும், கலெக்டரிடமும் ஒப்புதல் பெற்றபிறகே நகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. உறுப்பினர்களாக உள்ள 2 வார்டுகளில் மட்டும் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. மற்ற 31 வார்டுகளிலும் திட்டப்பணிகள் எதுவும் தொடங்கவில்லை. அதுவும் அ.தி.மு.க. கவுன்சிலர்களாக உள்ள வார்டுகளிலும் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது என்றும், இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிப்போம் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    அப்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கல்குறிச்சி ஊராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத் துக்கு உட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவி பானுவனிதா உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பெரும் பாலான உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவி யாஸ்மின் உறுப்பி னர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை என்றும், குடிநீர் பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றும், கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் ஊராட்சி மன்றகூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் மீது கையெழுத்து போடமல் அவர்கள் வெளியேறினர்.

    பின்னர் துணைத்தலைவி பானுவனிதா கூறியதாவது:-

    தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றும் வரை தொடர்ந்து கூட்ட த்தைப் புறக்கணிப்போம். இவரது நிதி முறைகேடு குறித்தும், அவரை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.ஏற்கெனவே நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களின் படி, எந்த ஒரு திட்டப் பணியும் நடைபெறவில்லை. அடிப்படை வசதி செய்யாததால் வார்டு மக்களிடம் எங்களால் பதில் கூற இயலவில்லை என்றார்.

    துணைத்தலைவி பானு வனிதா, உறுப்பினர்கள் சத்தி, வாணி முத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா, பாண்டியம்மாள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    • சமயபுரம் பேரூராட்சி கூட்டத்திலிருந்து வார்டு கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்
    • வார்டுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5-வது வார்டு கவுன்சிலர் சாந்தி பேசும் போது, 5 - வது வார்டு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த பணியும் நடைபெறவில்லை. காமாட்சி அம்மன் கோயில் தெருவில் இருபுறமும் சாக்கடை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ேமட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதர், ஆணையாளர் (பொறுப்பு) சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டம் தொடங்கிய வுடன், அ.தி.மு.க.வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பி னர்கள் கிருஷ்ணன், லாவண்யா, கலா, செல்வ ராணி உட்பட 5 பேரும் மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொத்து வரி வசூலிப்பு நடவடிக்கை யில் வரி மேல்முறையீட்டுக் குழுவினரின் நடவடிக் கையால் நகராட்சிக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.

    • தஞ்சாவூர் ஆம்னி பஸ் நிலையத்துக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பஸ் நிலையம் என பெயர் சூட்டப்படும்.
    • தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையத்துக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பஸ் நிலையம் என பெயர் சூட்டப்படும் என்றார்.

    மண்டல குழு தலைவர் எஸ்.சி. மேத்தா : ஆற்றில் தண்ணீர் வந்துள்ளதால் அய்யங்குளம், சமந்தான்குளம், அகழி ஆகியவற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் காந்திமதி : தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோயில் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஆனந்த் : காமராஜர் சந்தையில் சரியான செயல்பாடு இல்லாததால் 100 கடைகளைத் திரும்ப ஒப்படைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    கோபால் : எனது வார்டில் 90 சந்துகள் உள்ளன. ஆனால் தூய்மை பணிக்கு 3 பணியாளர்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றனர். சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை தூர் வருவதற்கு 2 பணியாளர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் : மாநகராட்சியில் தூய்மைப்பணி ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை ஒப்பந்ததாரர்தான் செலுத்த வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி தூய்மை பணியாளிடம் 30 சதவீதம் பிடித்தம் செய்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

    ஆணையர்: இத்திட்டத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளலாம்.

    மேயர்: இது தொடர்பாக 7 நாட்களுக்குள் தங்களுக்கு முழு விவரங்கள் அளிக்கப்படும் என்றார்.இருந்தாலும் இதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதால் வெளிநடப்பு செய்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் கூறினார். இதையடுத்து மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க, பா.ஜ.க உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்களே வஞ்சிக்காதே என முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் நிருபர்களுக்கு மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தூய்மை பணியை ஒப்பந்த அடிப்படையில் விடுவது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடப்பட்டுள்ளது. இப்பணி ஒரு மாதம் நிறைவடைந்து, இரண்டாவது மாதம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே வேலையே தொடங்கவில்லை எனக் கூறுவது தவறு. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில், வி.சி.க கவுன்சிலர் சாமுராய்குரு பேசுகையில், தேர்தலுக்கு முன்பு தனி அதிகாரியாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தற்போது பணம் எடுக்கப்படுகிறது.

    காடையாம்பட்டி மட்டுமல்ல ஓமலூர், மேச்சேரி என அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் போதுமான நிதி இல்லாத நிலையில், பொது நிதியிலிருந்து தேவையான பணிகளுக்கு தீர்மானங்கள் வைக்கப்படுகின்றன.

    பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படாத நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர் வெங்கடேசனும் இதே கேள்வியை எழுப்பினார். இதனை தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • கல்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • தீர்மானங்களை ஊராட்சி செயலர் வாசித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமை யில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவி பானு வனிதா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை ஊராட்சி செயலர் வாசித் தார்.

    கூட்டத்தில் துணைத்தலைவி பானுவனிதா, வார்டு உறுப்பினர்கள் மகாலட்சுமி, மலைச்சாமி ஆகியோர் பேசியதாவது:-

    கல்குறிச்சி ஊராட்சியில் வள ர்ச்சி திட்டப்ப ணிகள் நடைபெற வில்லை. எங்கள் பகுதியில் அடிப்படைவசதி இல்லை. குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே நடை பெற்ற கூட்டங்களில் நிறை வேற்றிய தீர்மானங்களின் படி வளர்ச்சி திட்டப்பணி கள் மேற்கொள்ள உறுப்பி னர்கள் ஒப்புதல் தெரி வித்தும் எந்தப்பணியும் நடைபெறாமல் உள்ளது.

    கல்குறிச்சி ஊராட்சியில் நிதி முறைகேடு நடத் துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். முறைகேடு ெதாடர்பாக தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர். இதற்கு ஊராட்சிச் செயலர் மறுத்து விட்டார். இதையடுத்து துணைத்தலைவர் பானுசித்ரா, வார்டு உறுப்பினர்கள் சத்திய வாணிமுத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவி யாஸ்மின் கூறுகையில், சிலரது தூண்டுதலின் பேரில், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்கின்றனர். கல்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்களுக்கான அனைத்து திட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

    • மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • வார்டில் இது நாள்வரையிலும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ஒரே பணி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன் , செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருமுருகநாதன் (11-வது வார்டு):-

    11- வது வார்டு ஈ.வெ.ரா.வீதியில் வடிகால் வசதி கேட்டு 6 மாதம் ஆகியும் பணி நடைபெற எந்த நடவடிக்கையுமில்லை. பேரூராட்சி ஊழியர் யாராவது இறந்துவிட்டால் அதற்கு இரங்கல் தீர்மானம் போட வேண்டும்.

    ஸ்ரீதேவி (18- வது வார்டு):-

    ஒவ்வொரு முறையும் மன்ற கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றுவதுடன் சரி, எந்த வேலையும் நடைபெறுவதில்லை. வார்டில் இது நாள்வரையிலும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ஒரே பணி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்.

    இதேபோல் சித்ரா ( வார்டு 14), பத்மாவதி (9), சாந்தி (12), எஸ்.தேவி (10) கவிதா (2) ஆகியோரும் எங்கள் வார்டுபகுதியில் எந்த வேலையும் நடைபெறவில்லை. எதை சொன்னாலும் பிறகு பார்க்கலாம் பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடுகிறார்கள் .இதனால் பொதுமக்களிடம் நாங்கள் பதில் சொல்ல முடியவில்லை .எனவே மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களும் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • சிவகிரி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
    • கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஏற்கனவே கவுன்சிலர்கள் அளித்த தீர்மானங்கள் நிறை வேற்றவில்லை என்றும் புதிய தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்புதல் இன்றி நிறை வேற்றப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதை கண்டித்தும், மேலும் கவுன்சிலர்களின் வார்டு பணிகள் புறக்கணிக்கப்படு வதாகவும் கூறியும் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலு வலரிடம் கவுன்சிலர்களின் எதிர்ப்பை மன்றத் தீர்மான புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதில் தி.மு.க. கவுன்சி லர்கள் 7 பேர், அ.தி.மு.க. னவுன்சிலர் ஒருவர், பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர் ஒருவர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் அனைத்து தீர்மானங்களு க்கும் எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளனர்.

    கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் சிவகிரி பேரூராட்சி பர பரப்புடன் காணப்பட்டது.

    • பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
    • 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை பேரூராட்சி யில் மொத்தம் 15 கவுன்சி லர்கள் உள்ளனர். இதில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 1 காங்கிரஸ் கவுன்சிலர் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதை நிறை வேற்றி தரும்படி பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி.ராஜேந்திரன் கூறினார்.

    கடந்த 15 மாதங்களாக பேரூராட்சி பகுதியில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதர கோரியும், சென்னிமலை ரோட்டில் அமைந்துள்ள விக்னேஸ் நகர், கவின் நகர், காந்தி நகர் பகுதியில் மொத்தம் 600 வீடுகள் உள்ள நிலையில் 600 வீடுகளின் கழிவு நீரானது தார் சாலைக்கு வருவ தாகவும், அதற்கு சாக்கடை கால்வாய் அமைக்க கூறியும், போதிய வாகன வசதி இல்லாததை சுட்டிகாட்டிய கவுன்சி லர்கள் தீர்மா னங்களை புறக்கணித்தனர்.

    இதனையடுத்து தி.மு.க.வை சார்ந்த சுப்பிர மணியன், நந்தகோபால், சித்திக் அலி, புஸ்பா, பிரபாவதி, சரண்யா ஆகிய 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம், வளர்மதி கே.செல்வ ராஜ், கோமதி, புனிதமதி ஆகிய 4 பேர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

    பேரூராட்சி தலைவர் உள்பட 5 பேர் மட்டுமே தீர்மானங்களை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலர் கூட்டத்தில் எந்தவொரு தீர்மானவும் நிறைவே ற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    ×