search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    குஜராத் மாநிலம், கேதா மாவட்டத்தில் ஆயுர்வேத சிரப் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களைத் தவிர, மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேதா மாவட்டத்தில் உள்ள நடியாட் டவுன் அருகே பிலோதரா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் "கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா" என்கிற பெயரில் ஆயுர்வேத சிரப் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    இந்த சிரப் குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சிரப்பில் மிகவும் விஷத்தன்மை கொண்ட "மெத்தில் அல்கோஹால்" என்கிற வேதியியல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சிரப்பை உட்கொண்ட கிராமவாசி ஒருவரின் ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. அதில், மெத்தில் ஆல்கோஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணைக்காக கடைக்காரர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனவும் கூறினார்.

    • மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.
    • முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

    மும்பை:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர், மும்பை நகருக்குள் கடல் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 18 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.

    மும்பை தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதற்கு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறும்போது, மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.

    துணிச்சலான ஆன்மாக்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரம் மிக்க பாது காப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்ந்து, எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பிப்போம் என்று கூறியுள்ளார்.

    • பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

    வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் இன்று 4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    வடமேற்கு பாகிஸ்தானில் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான், தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் பஜவுர் பழங்குடியின மாவட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது.

    இதில், வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா என்கிற பகுதியில், பழங்குடியின முதியவர் அஸ்லாம் நூர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர் ஒருடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

    பஜவுர் பழங்குடியினர் மாவட்டத்தில், இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உள்ளூர் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவரின் தந்தை உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதில், பெரும்பாலும் பொதுமக்களும் அவர்களின் இலக்குகளாக மாறியுள்ளனர்.

    • சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.
    • பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.

    இந்த நகரை மீட்க உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் சாப்சின்கா வேலை வாய்ப்பு மையத்தில் உக்ரைன் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 6 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் செந்தில் பிரசாத் என்பவர் உயிரிழந்துள்ளார்.
    • வீட்டின் பால்கனி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே கணபதிபுரம் பகுதியில் வீட்டில் மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் செந்தில் பிரசாத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

    வீட்டின் பால்கனி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் செந்தில் பிரசாத் பலி என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவம் நடந்த துர்கா விழா பந்தலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது.
    • போதிய அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை.

    கோபால் கஞ்ச்:

    பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் துர்கா பூஜை விழா நேற்று களை கட்டியது. இதற்காக பல இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. அங்குள்ள ஒரு பந்தலில் நடந்த துர்கா விழா கொண்டாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அந்த பந்தலின் நுழைவு வாயிலில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் சிலர் கீழே விழுந்தனர். இதில் ஒரு குழந்தையும் சிக்கி கொண்டது. தரையில் விழுந்த அந்த குழந்தையை காப்பாற்ற 2 பெண்கள் முயன்றனர். அப்போது அவர்கள் கீழே விழுந்தனர். அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. அவர்கள் மீது பலர் ஏறி மிதித்து ஓடினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் மற்றும் குழந்தை பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சாதர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் நடந்த துர்கா விழா பந்தலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. ஆனால் போதிய அளவு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் நெரிசல் ஏற்பட்டபோது பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக 3 பேர் பலியானதாகவும், பலர் காயம் அடைந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • ஆற்றில் தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர்.
    • சுற்றுலா வந்த மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    சோலையாறு சுங்கம் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில், மாணவர்கள் 5 பேரையும் சடலமாக மீட்டுள்ளனர்.

    உயிரிழந்த 5 பேரும் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுலா வந்த மாணவர்கள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

    • மழையில் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பிகள் கீழே அறுந்து கிடப்பது தெரியாமல் 3 கறவை மாடுகளும் கம்பியில் உரசின.
    • இறந்து போன கறவை மாடு தலா 75 ஆயிரம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கூத்தைப்பாரை சேர்ந்த விவசாயி சேகர் ( வயது 53). இவர் சொந்தமாக பால் கறந்து வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 சீமை கறவை மாடுகளும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கறவைமாடும் மேய்ச்சலுக்கு சென்றன.

    இந்த நிலையில் மாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையில் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பிகள் கீழே அறுந்து கிடப்பது தெரியாமல் 3 கறவை மாடுகளும் கம்பியில் உரசின. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

    இன்று காலை மாட்டை தேடி மாட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்த பொழுது தான் மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. இறந்த மாடுகளை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண்ணீர்விட்டனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்வாரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் சம்பா ஒருபோக நடவு பயிருக்காக நாற்றங்கால்கள் உளவு ஒட்டி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது விவசாயப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் சென்று வரும் வருகின்றனர். அதிர்ஷ்ட வசமாக இந்த மின்கம்பி அருந்து விழுந்ததில் விவசாயிகள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தப்பி உள்ளனர். இறந்து போன கறவை மாடு தலா 75 ஆயிரம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. 

    • ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது.
    • தீ மளமளவென அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது. வார இறுதியை முன்னிட்டு இங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது அந்த விடுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    • இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

    செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.

    விநாயகர் சிலை கரைப்பதற்காக காவிரியில் இறங்கியபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள வேப்பம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் நவீன் (வயது 21) என்பவர் தனது தாய் சவுந்தரம் (45) என்பவரை தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

    இதில் தாயும் மகனும் ரோட்டில் விழுந்தனர். தாய் சவுந்திரத்திற்கு தலையில் பலத்த அடிபட்டு விட்டது. உடனே அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள்.
    • கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, ஓ.சி.எப். பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள். இது தொடர்பாக தேசிய தூய்மைபணியாளர்கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அவர்கள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    ×