search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    குளச்சல் மதனாவிளையை சேர்ந்தவர் வில்சன் (வயது 62). மண்டைக்காடு காரியாவிளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (51). நண்பர்களான இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று மதியம் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் - தோட்டியோடு ரோட்டில் கண்டன்விளை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரணியல் ஆமத்தன்பொத்தை வளைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் வில்சனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஸ்டாலினுக்கும் முகத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வில்சன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வில்சன் கொடுத்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக ஸ்டாலின் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம்-கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்தார்.
    • அப்போது, கோவை பக்க மிருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் பரத், (வயது 22). எலக்ட்ரிசியன். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தன் தாயார் ஜோதிமணி(56), என்பவருடன் சேலம்-கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்தார். அப்போது, கோவை பக்க மிருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த தாய், மகன் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த பொன்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவர் தாக்கப்பட்டதாக கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த சாமு வேல் (வயது 25), தனது மனைவி அபிதா(20) வுடன் மார்த்தாண்டம் மார்க்கெ ட்டுக்கு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அப்பகுதி யில் சென்ற அரசு பஸ் சாமுவேலின் இருசக்கர வாகனத்தில் மோதியது.இந்த விபத்தில் சாமு வேலின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைய டுத்து சாமுவேல், பஸ் டிரைவருடன் வாக்கு வாதம் செய்தார். அப்போது சாமுவேல் மற்றும் அவரது மனைவிக்கு பஸ் டிரைவர் கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் படுகாய மடைந்த சாமுவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு அணுகோடு பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் டிரைவர் ஏசுதாஸ், தான் தாக்கப்பட்டதாகவும், இதனால், குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் டிரைவர் ஏசுதாசுக்கு ஆதரவாக குழித்துறை பணிமனை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பணி யாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    • நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். சடையன்குழி சந்திப்பில் இருந்து ஐரேனிபுரம் நோக்கி சென்றார்
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி : 

    புதுக்கடை பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சல் பிரேம்நாத் (வயது 43).

    இவர் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். சடையன்குழி சந்திப்பில் இருந்து ஐரேனிபுரம் நோக்கி செல்லும்போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.

    எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ஏஞ்சல் பிரேம்நாத் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கிள்ளியூர் வேங்கோடு பகுதியைச் சேர்ந்த அருளப்பன் மகன் ஆஷிக் லால் (22) காயத்துடன் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதி வலியவிளை யைச் சேர்ந்தவர் தேவகுமார் (40), தொழிலாளி. இவர் புதுக்கடை சாலையில் நடந்து சென்ற போது அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவகுமார் பலத்த காயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது தொடர்பான புகா ரின் பேரில் புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேங்காப்பட்டணம் அம்சி பகுதியை சேர்ந்த ஜெகன் (39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக கார் சக்கரங்களுக்கு அருகே விழுந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பொன்மணி ( வயது 27). இவரது வீடு அருகே வசிப்பவர் சேகர் மகன் தேவேந்திரன்(28). இருவரும் பணிக்கம்பட்டி அடுத்து உள்ள க.அய்யம்பாளையம் பகுதியில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக தேவேந்திரன் மோட்டார்சைக்கிளில், பின்புறம் பொன்மணி அமர்ந்து கொள்ள இருவரும் சின்னியகவுண்டம்பாளையம் நோக்கி வந்தனர். பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில், சின்னிய கவுண்டம்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக கார் சக்கரங்களுக்கு அருகே விழுந்தனர். காயங்களுடன் தப்பிய அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் கண்காணிப்பு கேமரா விபத்து காட்சிகள் பல்லடம் பகுதியில் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

    • சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்பு காட்டு பகுதியில் இன்றுகாலை வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
    • விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி சாந்தி என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 19 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20 பேர் கீழ் குப்பத்தில் உள்ள முருகன் கோவிலில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்பு காட்டு பகுதியில் இன்றுகாலை வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி சாந்தி (வயது45) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 19 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்தை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான சாந்தியின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    • திருவள்ளூரை சேர்ந்த காளிமுத்து பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 30 தொழிலாளர்கள் இருந்தனர்.
    • கடை மூடப்பட்டு இருந்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் தொழிற் சாலையில் பணிபுரியும் 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று இன்று காலை திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    திருவள்ளூரை சேர்ந்த காளிமுத்து பஸ்சை ஓட்டி னார். பஸ்சில் 30 தொழிலாளர்கள் இருந்தனர். திருவள்ளூரை அடுத்த தொடுகாடு தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக இடதுபுறமாக பஸ்சை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலை ஓரத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.

    கடை மூடப்பட்டு இருந்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியதால் டிரைவர் காளிமுத்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்சில் இருந்த 30 பணியாளர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
    • சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அரியப்பம் பாளையம் நோக்கி மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி நேற்று இரவு புறப்பட்டது.

    அப்போது சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஜெயசக்தி மேடு என்ற பகுதியில் சென்ற போது ஒரு வளைவில் திரும்ப டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.

    இதில் நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் மினி லாரியில் இருந்த 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலாளி செல்வம் சம்பவத்தன்று மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த லாரி செல்வம் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள வல்லம்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த லாரி செல்வம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்தார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • சாத்தூர் அருகே சரக்கு வாகனம் மீது பஸ் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாத்தூர்

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் இருக்கும் சகோதரி வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் அருேக வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மாரீஸ்வரி (40), அவரது மகன்கள் மாரி ரமேஷ் (20), மாரி பாபு (19), தாய் கங்கா தேவி, டிரைவர் சுரேந்திரன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயமடைந்த மாரீஸ்வரி, கங்காதேவி இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • மாணவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை திவண்டாக்கோட்டையை சேர்ந்தவர் ரெத்னகுமார்.

    இவரது மகன் டெனி (வயது 19). 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பொறி யியல் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்துள் ளார்.

    சம்பவத்தன்று டெனி தனது மோட்டார் சைக்கி ளில் மணவாளக்குறிச்சி - நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். பின்னால் அதே பகுதி யைச் சேர்ந்த ஆசீர் அமர்ந்திருந்தார்.

    மோட்டார் சைக்கிள் வெள்ளமோடி பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது அங்கு குறுக்கே சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் டெனி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்த டெனி அருகில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • குமரேசன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.
    • இதில் ஆத்திரம் அடைந்த ரவி கட்டையால் தந்தையை தாக்கினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55).

    இவருடைய மகன் குமரேசன் (35).

    ரவி மனைவிக்கும், குமரேசன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.

    நேற்று இரவு மாமியார் மருமகள் சண்டை மீண்டும் நடந்தது.

    அப்போது அங்கு வந்த ரவி, தனது மகனை பார்த்து ஏன் உன் மனைவி திட்டுகிறார் என்று கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரவி கட்டையால் தந்தையை தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த ரவி மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்குகொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பரவா க்கோ ட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசனை தேடி வருகின்றனர்.

    ×