search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு லோடு ஆட்டோ வந்து கொண்டிருந்தது.
    • லோடு ஆட்டோ திடீர் என மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    நெல்லை அருகே உள்ள பாளையங்கோட்டை, திருமலை தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது48).

    இவர் தனது மனைவி மலையரசியுடன் (42) மோட்டார் சைக்கிளில் ஏர்வாடியில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.

    இதே போல் நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு லோடு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. லோடு ஆட்டோவை கருங்குளத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) ஓட்டி வந்தார். ஏர்வாடி அருகே ஆலங்குளம் ரோட்டில் வந்த போது, லோடு ஆட்டோ திடீர் என மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் இசக்கிமுத்தும், அவரது மனைவி மலையரசியும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சை க்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோவை ஓட்டி வந்த ரஞ்சித்குமார் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர்.
    • இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த சினுவாச்சாரி (30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதி காலை சிதம்பரம் வண்டி கேட் பகுதிக்கு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.   அப்பகுதியில் இருந்த வர்கள் காரில் இருந்தவர் களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது,
    • இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது  இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4 பேரும் முந்திரிக் கொட்டை பொறுக்கும் வேலைக்கு சென்றனர்.

    இந்த முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர். இதில் கண்ணிவெடி வெடித்து 4 பேரும் தனித்தனியே தூக்கி வீசப்பட்டனர். இதில் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானது. பலத்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பிற தொழி லாளர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் விருத்தா சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரங்க நாதன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கும், மதுரை பாண்டியன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் விசாரணைதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமை யிலான போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாய நிலத்தின் உரிமை யாளருக்கு தெரியாமல் முந்திரிதோப்பில் கண்ணி வெடி புதைத்து வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றது.முந்திரி தோப்பில் கண்ணிவெடி வெடித்து ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

    • முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர்.
    • மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரிதோப்பு உள்ளது.

    இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4 பேரும் முந்திரிக்கொட்டை பொறுக்கும் வேலைக்கு சென்றனர்.

    இந்த முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர். இதில் கண்ணிவெடி வெடித்து 4 பேரும் தனித்தனியே தூக்கி வீசப்பட்டனர். இதில் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானது.

    பலத்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பிற தொழிலாளர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரங்கநாதன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், மதுரை பாண்டியன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாய நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் முந்திரிதோப்பில் கண்ணி வெடி புதைத்து வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    முந்திரி தோப்பில் கண்ணிவெடி வெடித்து ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

    • உ.ளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர்.
    • இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார்.

     கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 30-க்கும் மேற்பட்ட பயணி களுடன் சென்னைக்குச் புறப்பட்டு வந்தது. இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலைநடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது.  இதில் பஸ்சில் பயணம் செய்த 8-க்கும் மேற்பட்ட பணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டசமாக உயிர்த்தப்பினர். போலீஸ் நிலையம் எதிரே நடந்த இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை விட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்கிசை கிரேன் மூலம் அப்புற ப்படு த்தும் பணியில்ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் எதிரே ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படு த்தியது. 

    • சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை கனுவாய் சாலை, இடையர்பாளையம் மற்றும் வேலாண்டிபாளையம் ஆகிய பகுதி வழியாக தார் சாலையில் பில்லூர் 3 என்ற திட்டத்தின் கீழ் சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. வேலாண்டிபாளையம், புளியமரம், திலகர், கோவில் மேடு உள்ளிட்ட பகுதி வழியில் வாகனங்கள் செல்கின்றன.

    இந்நிலையில் திலகர் வீதி பள்ளி அருகே அருண்குமார் என்பவர் 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் பள்ளியில் விட சென்று உள்ளார். அப்போது திலகர் நகர் பகுதியில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவரது மகள் படுகாயம் அடைந்தார். இதனைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தந்தை-மகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுவதாவது:- இந்த பகுதியில் வேகத்தடை இருப்பது சரியாக தெரிவதில்லை. வெள்ளை பெயிண்ட் அடிக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்தப் பாதையில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. பல முறை வார்டு உறுப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி இப்பகுதியில் மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.
    • 2 பேர் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தச்சூர் கிராமத்தில் திட்டக்குடியிலிருந்து சின்னசேலம் நோக்கி சென்ற அரசு பஸ் இன்று காலை குறைந்த அளவிலான பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. தச்சூர் கிராமத்தின் உள்ளே செல்லும் பொழுது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.

    மோதிய வேகத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து வீட்டின் முன்பு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 59), அவரது மனைவி லட்சுமி (52) ஆகிய 2 பேர் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர். 2 பேரையும் கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் செல்வகுமார் தலையில் பலத்த காயமிருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் வீட்டின் சுவற்றில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • திடீரென லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை பகுதியை ேசர்ந்தவர் சஜின், டிரைவர்.

    இவர் நேற்று இரவு குழித்துறையில் இருந்து களியக்காவிளை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.படந்தாலுமூடு பகுதியில் சென்ற போது. எதிரே ஒரு லாரி வந்தது.

    அந்த லாரியை அருமனையை சேர்ந்த அனில் ஓட்டி வந்துள்ளார். திடீரென லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில், சஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சஜின் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கோவிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது.
    • சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாலபூர் தேசில் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபுஜி மகராஜ் மந்திர் சன்ஸ்தான் உள்ளது.

    இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வழிபாடுக்கு வருவது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை நேர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

    இக்கோவிலின் முன்பு தகர கொட்டகை ஒன்று போடப்பட்டு உள்ளது. அதன் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டு நேரத்தில் தகர கொட்டகையில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம்.

    நேற்று வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் கோவிலுக்கு முன்பு நின்ற வேப்ப மரம் பேயாட்டம் ஆடியது. இதை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் தகர கொட்டகையில் ஒதுங்கினர்.

    100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தகர கொட்டகைக்குள் நெருக்கியடித்த படி நின்றனர். அப்போது வீசிய சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

    இதில் தகர கொட்டகை இடிந்து விழுந்தது. அதனுள் நின்ற மக்கள் அனைவரும் தகர கொட்டகைக்குள்ளும், மரத்தின் அடியிலும் சிக்கி கொண்டனர். இதனை கண்டு கோவிலுக்கு உள்ளே இருந்த பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட பக்தர்களை மீட்க முயன்றனர்.

    மேலும் இதுபற்றி தீயணைப்பு நிலையத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். விடிய, விடிய இந்த மீட்பு பணி நடந்தது.

    இந்த விபத்தில் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அகோலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் பற்றி தெரியவந்ததும் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அகோலா மாவட்ட நிர்வாகத்தை அழைத்து விபரம் கேட்டார். பின்னர் மீட்பு பணிகளை முடுக்கி விடும்படி அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

    இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், பக்தர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க முதல் மந்திரி ஏக்நாத் சின்டே நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினார்.

    • மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்
    • இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை

    இலுப்பூர் அருகே உள்ள குறிச்சிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 60). இவர் இலுப்பூர் தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பொன்னையா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏலக்காய் தோட்டத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • புதர் மறைவில் இருந்த காட்டுப்பன்றி திடீரென சுந்தரமூர்த்தியை தாக்கியது.

    கூடலூர்

    நீலகிரி கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட அள்ளூர்வயல் தனியார் எஸ்டேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் சிக்மாயாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் நேற்று வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்த காட்டுப்பன்றி திடீரென சுந்தரமூர்த்தியை தாக்கியது. இதில் அவருக்கு இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் வனத்துறையினரும், பொதுமக்களும் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதிவிட்டு நிற்காமல் 50 மீட்டர் தூரத்தில் மின் கம்பத்தில் மோதி நின்றது.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே பருத்திவிளையை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் அனீஷ் (வயது 36).கொத்தனார்.அனீஷ் பருத்திவிளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அவர் அங்கு ஒரு சர்ச் முன்பு செல்லும்போது எதிரே மண்டைக்காடு - லட்சுமிபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த ஜாக்சன் டைமன் கிட்டு (16) மற்றும் கோடிமுனையை சேர்ந்த ஜாஸ்பன் (17) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அனீஷ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதிவிட்டு நிற்காமல் 50 மீட்டர் தூரத்தில் மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் மின் கம்பம் உடைந்து சாய்ந்தது. இந்த சம்பவத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக அனீஷ் மற்றும் ஜாக்சன் டைமன் கிட்டு ஆகிய இருவரும் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×