search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசோதா"

    • முதல்வர் கொண்டு வந்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி தொடர் போராட்டம் நடத்துவோம்.
    • ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் ரமேஷ் கண்ணன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி தியாகி இமானு வேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இமானுவேல் சேகரனின் குடும்பத்தினருடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி வரவேற்பதுடன் கவர்ன ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், தியாகி இமானு வேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9-ந் தேதியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    பரமக்குடி 5 முனை சந்திப்பில் இமானுவேல் சேகரனுக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.தமிழகத்தில் சாதி, மத பாகு பாடின்றி அனைத்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்ட சபையில் கிறிஸ்த வர்களாக மதம் மாறியோரை பட்டியல் இனத்தில் சேர்த்து பட்டியல் இன மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்காக இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானத்தை ராம நாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி கண்டிக்கிறது. தமிழகத்தில் இரு பிரிவினரிடையே சாதி, மத மோதலை தூண்டும் தி.மு.க. அரசு தொடர்ந்து பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டி ருப்பதை அந்த மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். ஓட்டு அரசியலுக்காக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி வரும் தி.மு.க. அரசு தனி சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

    இல்லாவிட்டால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அனுமதியுடனும், பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி ஒப்புதலுடனும், ராமநாத புரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகே சனின் வழிகாட்டல்படி ராமநாதபுரம் மாவட்டம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும்.
    • உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு

    நாகர்கோவில்:

    கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்கம் குமரி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவநலத் துறை சார்பில் உலக மீனவர் தின வெள்ளிவிழா கொண்டாட்டம் முட்டத்தில் நடந்தது.

    பொதுக்கூட்டத்திற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சகாயராஜ் தி.மு.க. மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். முட்டம் பங்கு தந்தை அமல்ராஜ் வரவேற்று பேசினார்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் டன்ஸ்டன் தொடக்க உரையாற்றினார். தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய உங்களோடு இந்த மீனவர் தின விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாதி மீனவர்கள் வசிக்கின்றனர். மெரினா கடற்கரை பாதி தொகுதியில் வருகிறது. என் எம்.எல்.ஏ. அலுவலகம் மீனவ பகுதியில் தான் உள்ளது. அவர்களின் செல்ல பிள்ளையாக அவர்கள் வீட்டில் ஒருவராக நான் உள்ளேன். இங்கே உங்களை அன்போடு பார்க்கிறேன்.

    கலைஞர் அரசு தான் கை ரிக்‌ஷாவை ஒழித்தது. படகுகளுக்கு இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் தந்தது, மீனவர் நல வாரியம், மீன்பிடி தடை கால நிவாரணம், டீசல் மானியம் உயர்வு போன்றவற்றை தந்தது கலைஞர் அரசுதான்.

    சிறு படகுகளுக்கு மண்எண்ணெய், காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் முனைப்பு காட்டியது வெளிநாடுகளில் சிறையில் வாடிய 170 மீனவர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்து வந்தது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.ரூ.320 கோடி மீனவர்களுக்கு நிவாரணம் ரூ.743 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்ட ஒதுக்கீடு செய்தது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணெய் மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து 6000 ஆக உயர்த்தியது மு க ஸ்டாலின் அரசு தான். விரைவில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ.8000 ஆக உயர்த்தப்பட உள்ளது.

    14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும். கடலில் காணாமல் போன மீனவர்களில் இறந்தவர்க ளாக அறிவிக்க 7 ஆண்டுகள் என்பது அதிகம்.இதை குறைக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.

    கணவரை இழந்து வாடும் பெண்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் கிடைக்க பரிசீலனை செய்யப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். கடல் ஆம்புலன்ஸ் சர்வதேச அடையாள அட்டை அரசின் கவனத்தில் உள்ளது. நிதி நிலையை பொறுத்து அவற்றை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தருவார் என உறுதி அளிக்கிறேன். பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். வீடுகள் காலி செய்ய வேண்டும் தி.மு.க. இதனை ஏற்காது. மீனவர்களின் கோரிக்கைகளை முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்.

    மத்திய அரசு மீனவர்க ளுக்கு எதிராக எந்த மசோதாவை கொண்டு வந்தாலும் மீனவர்கள் பக்கம் தான் திமுக அரசு இருக்கும் அதனால் உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.

    13 கோரிக்கைகள் இங்கு தந்துள்ளீர்கள். மீன வர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணும் பணியில் திராவிட மாடல் அரசு ஈடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மீன் துறை ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில தலைமை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சேவியர் மனோகரன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான் கலந்து கொண்டனர்.

    • இந்தியப் போட்டி ஆணையத்தின் அனுமதிக்கும் வகையில் கணிசமான விதிகளைக் கோரும் மசோதா.
    • புதுடெல்லி சர்வதேச நடுவர் மையம் (திருத்தம்) மசோதாவும் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் அறிமுகம்.

    இந்தியப் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கோரும் போட்டி (திருத்தம்) மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், புதிய சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியப் போட்டி ஆணையத்தின் அனுமதிக்கும் வகையில் கணிசமான விதிகளைக் கோரும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

    இந்தியப் போட்டி ஆணையம் சமீபத்திய காலங்களில், வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தையில் நியாயமற்ற வணிக நடைமுறைகள் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    புதுடெல்லி சர்வதேச நடுவர் மையம் (திருத்தம்) மசோதாவும் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்க்குமாறு அதிமுக எம்.பி.க்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர். #MansoonSession #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களோடு பல்கலைக்கழக மானியக்குழுவை கலத்து புதிய அமைப்பை ஏற்படுத்தும் யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், எம்.பி.க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    மேலும், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா ஆகியவற்றை எதிர்க்குமாறு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த இரண்டு மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×