search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர்"

    • இன்று காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அவரது சிலைக்கு கலெக்டர்மா, அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விருதுநகர்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், கல்வி கண் திறந்த கர்மவீரருமான பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த விருதுநகரில் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விருதுநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற அவர் அங்குள்ள சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

    பிறந்தநாளையொட்டி நினைவு இல்லத்தில் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்புவேள்வி நடந்தது.

    விருதுநகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகிே்யார் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நினைவு இல்லத்தில் நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் காமராஜர் சிலை முன்பு நோட்டு, புத்தகங்கள் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    விருதுநகரில் 4000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் காமராஜர் வேடமணிந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    விருதுநகர் நகராட்சியில் நகரசபை தலைவர் மாதவன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி சி. பி. போஸ் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
    • காமராஜர் பாகுபாடு இன்றி கிராம் மாணவர்களும் மேன்மைப்பட கிராமங்கள்தோறும் 5000 தொடக்கப்பள்ளிகளை தொடங்கியவர்.

    மதுக்கூர்:

    முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனா காவி புலிப்படை, தமிழக இந்து பரிவார் சார்பாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் தென்னங்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு அவருடைய ்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி சி பி போஸ் தென்னங்கன்றுகளை வழங்கினார். காமராஜர் பாகுபாடு இன்றி கிராம் மாணவர்களும் மேன்மைப்பட கிராமங்கள்தோறும் 5000 தொடக்கப்பள்ளிகளை தொடங்கியவர். அவருடைய அரசியல் பொது வாழ்க்கையில் தூய்மையாக இருந்தவர்.

    அவருடைய காலகட்டங்களிலே இலவசமாக கல்வியை மட்டும் கொடுக்காமல் மதிய உணவு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி கல்வியை கற்க சொன்னவர்.

    இன்று கல்வி வியாபாரம் ரீதியாக செயல்படுகிறது உடனடியாக தனியார் பள்ளிகளில் வசூல் செய்யக்கூடிய அதிக அளவு தொகை குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜாதி அடிப்படையில் கணக்கெடுக்காமல் இந்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் காமராஜரின் புகழ் என்றும் எப்போதும் அவருடைய கல்வி, ஏழை எளிய மக்களுடைய சார்ந்து அவருடைய நினைவினை போற்றுகிறோம் வணங்குகிறோம்

    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
    • விஜய்வசந்த் எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து நாகர் கோவில் வேப்பமூட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளரும், மேயருமான மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம் மற்றும் நிர்வாகிகள் சதாசிவம், இ.என். சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்கள்.

    முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கவுன்சிலர் அக்‌ஷயாகண்ணன் மற்றும் நிர்வாகிகள் சுகுமாரன், சாந்தினி பகவதியப்பன், ஜெயசீலன், பொன். சுந்தர்நாத், சகாயராஜ், சந்துரு, ெரயிலடி மாதவன், கலாசெல்வன், வடிவை மாதவன், ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், வக்கீல்கள் சுந்தரம், முருகேஷ்வரன், ஜெயகோபால் உள்பட கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அகில இந்திய போலிங் பூத் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், காங கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    பொருளாளர் டாக்டர் சிவகுமார், நிர்வாகிகள் செந்தூர்பாண்டியன், பொன் மாதவன், தினேஷ் முருகன், லீனஸ், சிம்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிர் அணி மாநில தலைவர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்ட துணைத்தலைவர் தேவ் மற்றும் நிர்வாகிகள் அஜித்குமார் கவுன்சிலர்கள் ஐயப்பன், ரமேஷ், தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர், கிழக்கு மாநகர் தலைவர் ராஜன் உட்பட கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிர்வாகிகள் செல்வக் குமார், மைக்கேல்ராஜ், செண்பகவள்ளி, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
    • சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்டத்தில் காமராஜரின் பங்களிப்பு மறக்க முடியாதது. அவர் கனிவும், அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். ஏழ்மையை ஒழிக்கவும், பொதுமக்களின் துயரை போக்கவும் அவர் கடினமாக உழைத்தார். சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.

    காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன் .

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேக விழா நாளை நடக்கிறது.
    • விழாவில் நாடார் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளான கலந்து கொள்ள வேண்டும் என ஆர்.வி.டி.ராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. அதன்படி காலை 10 மணிக்கு மதுரை சிம்மக்கல் தமிழ்சங்கம் ரோட்டில் இருந்து தொடங்கி விளக்குத்தூண் காமராஜர் சிலையை வந்தடைகிறது.

    நிகழ்ச்சிக்கு சிம்மக்கல்நாடார் உறவின்முறை பொதுச்செய லாளர் ஆர்.வி.டி.ராமையா தலைமை தாங்குகிறார். ஓம் சேர்மபிரபு, ேஜாசப் வாசுதேவன், பெருந்தலை வர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், கணேசன், ச.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் புறா மோகன், ராஜசேகர், மதன், வணிகர் பேரைமைப்பு மாவட்ட துணை தலை வர் பாண்டியன், ஜான்கி றிஸ்டோபர், காமராஜ், கார்த்திக், தமிழ்நாடு நாடார் பேரவை தாைழக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிம்மக்கல்நாடார் உறவின்முறை தலைவர் திலகர், பொருளாளர் வன்னியராஜன், துணை செயலாளர் செல்வராஜன், துணைத்தலைவர்கள் செல்வமோகன், தங்கையா ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகின்றனர்.

    பி.டி.ஆர். குழுமங்களின் சேர்மன் நிர்வாக இயக்குநர் தானியல் தங்கராஜ், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ராஜா, குமரி கன்சல்டன்சி அப்பாசுவாமி, பெனிட் அன்ட் கோ பெனிட்கரன், கே.ஏ.எஸ்.சேகர் டிரஸ்ட் ராணி அருள் மார்ட்டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியம், அ.இ.நா.இ. பேரவை பொதுச்செயலாளர் பால்பாண்டி, கூடல்நகர் அரிசி டிப்போ பால முருகன், கே.ஆர். மெட்டல் செல்வராஜ், கே.ஆர்.மெட்டல் ராஜவேல், அ.இ.நா.இ.பேரவை அறிவுச்சுடர் காமராஜ், மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் அகஸ்டின், பெரியசாமி, கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.

    நாடார் மகாஜன சங்க தவைலர் முத்துசாமி, நாடார்கள் முன்னேற்ற சங்க செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் ஆகியோர் காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்கிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பாளர் வெற்றி ராஜன் வில்லாபுரம் உற வின்முறை துணைத்தலை வர் மாயாண்டி, மதி வாணன், பாஸ்கரன், சஞ்சீவி மலையான், அருஞ்சுனை, சத்தியமூர்த்தி, ஜோதிபாசு, வேல்முருகன், பவுன்ராஜ், சங்கையா, வேல்முருகன், யோவான், ராதாகிருஷ்ணன், ராம்குமார், அய்யனார், உலகநாதன், பூவராகவன், வெற்றிக்குமார், தமிழ்நாடு நாடார் பேரவை வெங்கடேஷ்ராஜா, அருணா கமராஜ், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சிவபாலன், தங்கராஜ், கருப்பையா, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் முட்டை செல்வன், ராஜ பாண்டி, ஆலங்குளம் நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள், ஆலங்குளம் மேலக்கால், கரும்பாலை, தெற்குவாசல், கோச்சடை பகுதி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில்சிம்மக்கல் நாடார் உறவின்முறை துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறுகிறார்.

    இந்த விழாவில் நாடார் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளான கலந்து கொள்ள வேண்டும் என ஆர்.வி.டி.ராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பெருந்தலைவர் காமராஜர் புகழ்பாடிட குடும்பமாக திரளுவோம் என்று சிலுவை கூறி உள்ளார்.
    • தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்த வேண்டும்.

    மதுரை

    தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் மற்றும் விருதுநகர், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ஐ. சிலுவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

    தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜ ரின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலர செய்ய அடித்தளமாகவும், காமராஜரின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு விளக்கிடவும் த.மா.கா. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மதுரை பழங்கா நத்தத்தில் நடைபெறுகிறது.

    இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    விழாவில் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக பங்கேற்கிறார்கள்.

    தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் மதுரை மக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை புரிந்து பெருந்தலைவர் காமராஜர் புகழ் பாடிட ஒன்று சேர வேண்டும்.

    தமிழகத்தில் நல்ல மாற்றத்திற்கான அரசியலை விதைத்து வரும் மக்கள் தலைவர் ஜி.கே.வாசனின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் மதுரை பொதுக்கூட்டத்தை வெற்றி மாநாடாக நடத்தி காட்டுவோம், அனைவரும் வாருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் போட்டிகள் நடந்தன.
    • காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். பெருந்தலைவர் காமராஜர் திருவுடப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளித்தலைவர் மற்றும் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

    பள்ளித் துணைத்தலைவர் பாஸ்கரன் பள்ளி பள்ளி துணைச்செயலாளர் செந்தில்குமார், பள்ளி விடுதிக்குழுச் செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியர்-விழா அமைப்பாளர் முத்துசெல்வம் காமராஜ பிறந்த நாள் விழா போட்டிகள் குறித்து அறிமுகவுரையாற்றினார்.

    இந்த விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, நாடகப்போட்டி, குழு நடனம் மற்றும் ரங்கோலிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 46 பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பொது அறிவு வினா கேட்கப்பட்டு உடன் பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தினை உணர்த்தும் வண்ணம் மதிய உணவு வழங்கப்பட்டது.

    • மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
    • பேச்சு போட்டியானது 6 முதல் 8-ம் வகுப்புகள் மற்றும் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    பெருந்தலைவர் காம ராஜரின் பிறந்தநாளை நாடார் மகாஜன சங்கம் (என்.எம்.எஸ்) மற்றும் ராஜா கே.எஸ்.பி.கணேசன் அகாடமி கல்வித் திருவிழா வாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது. இவ்விழாவின் மூலமாக பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான பேச்சு, கட்டுரைப்போட்டி வரும் 15-ந் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது.

    மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தூத்துக்குடி காரப் பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    பேச்சு போட்டி

    மாவட்ட அளவிலான இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 40 பள்ளிகளில் இருந்து 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவி களுக்கான பேச்சு போட்டியானது 6 முதல் 8-ம் வகுப்புகள் மற்றும் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி மட்டும் நடத்தப்பட்டது.

    போட்டியின் முடிவில், முதல் பிரிவில் ஸ்ரீதர்ஷினி, மேபெல் டென்னிஸ், விஸ்வநிகந்தர்யா ஆகியோரும், 2வது பிரிவில் ஸ்பெனா, ஜனனிஸ்ரீ, வினோதினி, ஜோதிஸ்ரீ ஆகியோரும், 3-வது பிரிவில் சகுந்தலா, பத்மா, சேவிமஹிகா, காளீஸ்வரி ஆகியோரும் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு என்.எம்.எஸ் மற்றும் ராஜா கே.எஸ்.பி.கணேசன் அகாடமி மாநில ஒருங்கிணைப்பாளர் அவனிமாடசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் விவே கானந்தன், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் மதன் சுப்பிரமணியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    இதில், தூத்துக்குடி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் சதீஷ், காரப் பேட்டை நாடார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செய லாளர் செல்வராஜ், தலை மை யாசிரியர் நடராஜன், பேராசிரியர் ஜாகீர் உசேன் மற்றும் ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தண்டுபத்தில் உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
    • காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று அமைச்சர் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    அறக்கட்டளை செயலர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் நடராஜன், செந்தில்குமார், வேல்ராமகிருஷ்ணன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற 15-ந்தேதி காமராஜர் பிறந்தநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடுங்கள். கிராமங்களில் உள்ளவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் நிறுவி மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. அரசு தான் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று பேசினார்.

    நலத்திட்ட உதவிகள்

    பின்பு அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதன்படி வருகிற 15- ந்தேதி உடன்குடி மேல பஜாரில் நண்பகல் 12 மணி அளவில் 4 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்துடன் உணவு வழங்குதல், மாலை 6 மணிக்கு 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உட்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தின் முதல்-அமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்.
    • படிக்காத காமராஜர், அனைவரையும் படிக்க வைத்து புரட்சி செய்தார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத்திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. அதனால் தான் காமராஜர் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து பாராட்டுகிறார்கள்.

    சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் 1954 முதல் 1964 வரை முதல்-அமைச்சராக இருந்து ஆண்டுக்கு ரூபாய் 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட் சமர்ப்பித்து, இன்றைய நவீன தமிழகத்திற்கு அடித்தளம் அமைக்கிற வகையில் காமராஜரின் ஆட்சிமுறை இருந்தது. அவரது ஆட்சி முறையின் காரணமாகத் தான் தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது.

    எனவே, பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அன்றைய தினத்தில் 'காமராஜர் ஆட்சி முறை' என்கிற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல, பாராளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் முன்னின்று இத்தகைய கருத்தரங்குகளை நடத்த இருக்கிறார்கள்.

    ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முந்தைய காமராஜர் ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய அணுகுமுறைகளையும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்கிற வகையில் அந்தக் கருத்தரங்கம் அமைய இருக்கிறது. மேலும், காமராஜரின் பிறந்தநாளன்று ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குகிற வகையிலும் நிகழ்ச்சிகள் அமைய உள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காமராஜர் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • காட்டுச் செடிகள் படர்ந்து மணல்மேடாகி கிடக்கும் குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், ரெக்ஸ் பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பெரியசாமி, இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், மாணவரணி செயலாளர் அகஸ்டின், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், விவசாய அணி செயலாளர் சரவணன், மீனவர் அணி செயலாளர் விக்ரம், தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார் மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாநகரச் செயலாளர் உதயசூரியன் அவைத்தலைவர் மதியழகன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி முத்துக்குமரன் ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் பொன்மணி, ஜேசு செல்வி, சுந்தர், காமராஜ், சசிகுமார், வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 30-ந்தேதி தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் மரணம் அடைந்த இளைஞர் சாம்ராஜ் மரணத்திற்கு காரணமான தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய, மாநில அரசுகள் ரூ.2 கோடி இழப்பீடு பெற்று மரணம் அடைந்த சாம்ராஜ் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அந்த நிறுவனங்கள் மீது நேரடி விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சாம்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வருகின்ற ஜூலை 15-ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தூத்துக்குடிக்கு வருகை தரும் சமத்துவ தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கி பாராட்டு விழா நடத்துவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்கள் அனைத்தும் அமலைச் செடிகள் ஆக்கிரமித்து காட்டுச் செடிகள் படர்ந்து மணல்மேடாகி கிடக்கும் குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என கடந்த ஒரு வருடமாக மாவட்ட கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வருகின்ற மழைக்காலத்திற்கு முன்பாக குளங்களில் உள்ள அமலை செடிகள், காட்டுச் செடிகளை அப்புறப்படுத்தி குளங்களை தூய்மைப்படுத்த வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தனது 15 வயதில் தீரர் சத்திய மூர்த்தியை குருவாக ஏற்றுக்கொண்ட கர்மவீரர் காமராஜர் தனது வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் உண்மை அவருக்கு சிஷியனாக வாழ்ந்தே மறைந்தார். #HBDKamarajar

    மதுரையில் தீரர் சத்தியமூர்த்தி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் சத்தியமூர்த்தி அவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். அவனை மேடைக்கு அழைத்த அவர் உனது பெயர் என்ன என்று கேட்க, அச்சிறுவன் தனது பெயர் காமராஜர் என்று பணிவுடன் கூறினான். அதற்கு சத்தியமூர்த்தி அவர்கள் அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார் என்று கூறி விட்டு பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். 

    சில காலம் கழித்து சென்னை வந்த காமராஜரை தீரருக்கு மிகவும் பிடித்துவிட்டது. காமராஜரின் பணிவு சத்தியமூர்த்தியை வெகுவாக கவர்ந்தது. காமராஜர் அவரை குருநாதராகவும், தன்னை சீடராகவும் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் தீரருக்கு மிகவும் பிடித்ததால் அவரது நம்பிக்கைக்கு உரியவராக காமராஜர் தேர்வானார். 

    1940-ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். தீரர் தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார். 

    இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக தீரரிடம் கேட்டார். உடனே தீரர் அவரிடம், நாட்டின் நன்மையை கருதி நீங்கள் தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காமராஜரிடம் திட்டவட்டமாக கூறினார். 

    தீரர் கூறியதை தட்ட முடியாத காமராஜர் தேர்தலில் போட்டியிட்டார். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் தேர்தல் நடந்தது. இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் தீரர் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, "நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

    தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். தீரர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த தீரரின் தியாகத்தை அரசியல் வரலாற்றில் இது வரை யாரும் செய்ததில்லை. 

    காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தீரர் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55-வது வயதில் இறந்து விட்டார். தீரரின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார். 

    காமராஜர் தன்னைப் பற்றியோ, தனது வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக கூற முடியும். காமராஜர் முதல்-அமைச்சர் ஆன பிறகு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தீரரின் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டுக்கு அடிக்கடி வருவார். காமராஜர் அவர்களிடம் ‘என்னை பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்' என்று கூறுவார். 

    ஒரு நாள் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் தீரரின் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தார். அவர் தீரரின் மனைவி பாலசுந்தரத்திடம் விருதுநகரில் உள்ள வீட்டு சுற்று சுவர் இடிந்து உள்ளது. அதை தம்பி (காமராஜர்)யிடம் கட்டச் சொல்லுங்க என்று சிவகாமி அம்மையார் உருக்கமாக சொன்னார். தீரரின் மனைவி இவ்விஷயத்தை காமராஜர் வீட்டுக்கு வந்தபோது கூறினார்.   

    உடனே காமராஜர், முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த உடன் அவன் தன்னுடைய வீட்டு சுற்றுச் சுவரை கட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு கூறுவார்கள்' என்று தீரரின் மனைவியிடம் கூறினார். இதை கேட்ட அவர் மவுனம் ஆகிவிட்டார். 

    இன்னொரு நாள் சிவகாமி அம்மையார் தீரரின் மனைவியிடம் எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்' என்று கூறினார். 

    இம்முறையும் காமராஜர் தீரர் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தபோது அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தீரரின் மனைவி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக சென்று விட்டார். 

    காமராஜரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். புவனேஸ்வரில் அவர் பதவி ஏற்பு விழா நடந்தது. தீரரின் குடும்பத்தை அவர் அந்த விழாவுக்கு அழைத்தார். அவர்கள் குடும்பத்துடன் ரெயிலில் சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர் பதவி ஏற்ற விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த விழாவை தீரரின் குடும்பத்தினர் காமராசரின் திருமண விழாவாக நினைத்துக்கொண்டனர். அந்த அளவுக்கு நன்றி விசுவாசத்துடன் காமராஜர் தீரர் குடும்பத்தாரின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார்.

    முதல்-அமைச்சராக இருந்தபோது காமராஜரும், தீரரின் குடும்பத்தாரும் திருப்பதி கோவிலுக்கு சென்றார்கள். ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலில் தீரரின் பேரன்களான கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோருக்கு மொட்டை போட செய்தார். 

    திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதை மணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்-அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது தீரரின் குடும்பத்தாருக்கு ஆச்சரியம் அளித்தது. 

    தீரர் மீது காமராஜர் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது கோட்டையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுப்பதற்காக அழைத்தது. அவர் பூண்டி நீர்தேக்கத்துக்கு தன்னுடைய குருநாதர் சத்தியமூர்த்தியின் பெயரை சூட்டினால் தான் வரவேற்பு பத்திரத்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டபடி சென்னை மாநகராட்சி பூண்டி நேர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை சூட்டியது.

    மாநகராட்சி வளாகத்தில் தீரரின் திரு உருவச் சிலையை பிரதமராக இருந்த நேருவை அழைத்து வந்து காமராஜர் திறக்க வைத்தார். பின்னர் இந்திராவை தீரரின் வீட்டுக்கு அழைத்து வந்து தீரரின் மனைவிக்கு அறிமுகப்படுத்தினார். தீரரை குருவாக மதித்து, அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார். 
    ×