search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்பழிப்பு"

    தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியபோது, அங்குள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது.
    ஜெனிவா:

    தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த சண்டையின்போது போர் விதிமீறல்கள் நடைபெறுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    அந்த அறிக்கையில், தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அரசுப் படைகள் மற்றும் அதன் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தியதில் 232 பேர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலின்போது 120 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் கற்பழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யூனைட்டி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை நடைபெற்ற இந்த அட்டூழியங்களுக்கு மூன்று ராணுவ கமாண்டர்களே பொறுப்பாளிகள் என ஐ.நா. விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×