search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • கலெக்டர் ரவிச்சந்திரன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, தாசில்தார் முருகுசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின் 137-வது பிறந்த தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷணன் பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, தாசில்தார் முருகுசெல்வி, முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்எம். ரஹீம், நகர்மன்ற உறுப்பினா்கள் முருகையா, மேரி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் குட்டிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • விவசாயிகள் கார்,பிசான சாகுபடி காலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவார்கள்.
    • பூ மகசூல் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்ட விவசாயிகள் தயங்கி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான செங்கோட்டை சுற்று வட்டார பகுதிக்கே உரிய சிறப்பு பூ மகசூல் ஆகும். ஆண்டுக்கு முப்போகம் விளையக்கூடிய அளவுக்கு பசுமை நிறைந்த பகுதியாக காட்சியளிக்கும் இந்த சுற்றுவட்டாரத்தில், விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்களை பயிரிடுவார்கள்.

    ஏனைய காலங்களில் பூ மகசூலான அத்தியாவசிய தேவையான காய்கறிகள், உளுந்து, சோளம், பயிறு உள்ளிட்ட கோடைகால பயிர்களும், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என அனைத்தும் பயிரிடப்படு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் வடகரை, அச்சன்புதூர், இலத்தூர், சிவராமபேட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோளம், மொச்சை, மல்லி உள்ளிட்டவை பயிரிடப்பட்டு நல்ல மகசூல் கிடைக்கும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் மோட்டை, ஸ்ரீமூலப்பேரி, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளும் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதால் ஆறுகள், கால்வாய்கள் ஓடைகள் அனைத்திலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    இதனால் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பூ மகசூல் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்ட விவசாயிகள் தயங்கி வருகின்றனர். தற்போது காய்கறிகள் விலை உச்சத்தை தொட்ட நிலையில், காலநிலை மாற்றத்தால் நிலத்தினை உழுது பக்குவப்படுத்தி எதிர்ப்புடன் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

    • சுவாமி, நந்தி பெருமானுக்கு 36 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் 6 வகை அருள் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்ப கலச பூஜை, ருத்ர ஜெபம், வருண ஜெபம், தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, நந்தி பெருமானுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் போன்ற 36 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கணேஷ பட்டர் செய்தார். விழாவில் கேசரி, பொங்கல், தேங்காய் சாதம், லெமன் சாதம், பஞ்சாமிர்தம், சுண்டல் என 6 வகை அருள் பிரசாதம் வங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • செங்கோட்டை அருகே உள்ள தனியார் ரப்பர் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் தீத்தடுப்பு பயிற்சி நடந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சியினை அளித்தனர்.

    செங்கோட்டை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவுப்படி, செங்கோட்டை அருகே உள்ள தனியார் ரப்பர் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் தீத்தடுப்பு பயிற்சி நடந்தது.

    செங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் செல்வன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளித்தனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கொடைவிழா கடந்த 7 -ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • சாமகொடை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகில் கச்சேரி காம்பவுண்ட் வளாகத்தில் மருத்துவ சமுதா யத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டை மாடன், கோட்டை மாடத்தி மற்றும் கோட்டை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு கொடைவிழா கடந்த 7 -ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று கணபதிஹோமம், பால்குடம் ஊர்வலம், பிற்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் மதியம் அன்ன தானம், மாலையில் பொங்க லிடுதல் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் தலைமையில், தலைவர் கருப்பையா, செயலாளர் செல்வா, பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • செந்தூர்பாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அவரது மகன்கள் முன்னிலையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அ.தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி செங்கோட்டை அருகே கற்குடி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செந்தூர்பாண்டியன் மூத்த மகனும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான செ.அய்யப்பராஜ், இளைமகன் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முன்னிலையில் நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.

    • ஒரு சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது நமது இலக்காக உள்ளது.
    • மக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

    செங்கோட்டை:

    அ.தி.மு.க. மாநில மாநாடு அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பது குறித்து செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை மற்றும் மதுரையில் நடை பெற உள்ள மாநாட்டுக்கு நிர்வாகிகள், உறுப்பினா்களை அழைத்து செல்வ தற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

    கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதிய உறுப்பினா்கள் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் பணி செய்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது நமது இலக்காக உள்ளது. இதுவரையில் புதிய உறுப்பினா்களை சேர்த்த நிர்வாகிகள் மேலும் கூடுதலாக உறுப்பினா்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

    உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நேரடியாக மக்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய அடையாள சான்று பெற்று உறுப்பினராக சேர்க்க வேண்டும். இரட்டை பதிவு இல்லாமல் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் அதிகளவில் புதிய உறுப்பினா்களாக இளைஞர்களை சேர்க்க வேண்டும். அதேபோல் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி மதுரை மாநகரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பி னா்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த மாநாடு நமது உறுப்பினா்களின் குடும்ப விழா வாக எடுத்துக்கொண்டு அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துபாண்டியன், மகாராஜன், செல்லப்பன், ஜெயகுமார், துரை பாண்டி யன், ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், வாசுதேவன், ராமசந்திரன், நகர செயலா ளர்கள் முருகன், ஆறுமுகம், பரமேஸ்வரபாண்டியன், கணேசன், பேரூர் செயலா ளர்கள் டாக்டர் சுசீகரன் சேவகபாண்டியன், கார்த்திக் ரவி, நல்லமுத்து, அலியார், முத்துகுட்டி, மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், தொழிற்சங்க, சார்பு அணி நிர்வாகிகள், உறுப்பி னா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • குற்றாலம் அருவிகளில் குளிக்க சீசன் காலத்தின்போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.
    • பாலருவியானது செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் கடந்து ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது.

    செங்கோட்டை:

    தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இதில் இருந்து உற்பத்தியாகும் குற்றாலம் அருவிகளில் குளிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு சீசன் காலத்தின்போதும் குடும்பத்துடன் வருவார்கள்.

    சீசன் குறையும் போது தமிழக -கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் படை யெடுக்கும். இந்த பாலருவி யானது செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் கடந்து ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 300 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் தொடர் மழை யால் காய்ச்சிய வெள்ளி யை உருக்கியது போல் விழும் நீர், பார்போரை பிரமிக்க வைக்கும்.

    செங்கோட்டையில் இருந்து பாலருவிக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ளது. தற்போது தென்மேற்கு பருவ மழை காலதாமதம் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த மாத இறுதியில் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட வேண்டிய பாலருவி இதுவரை திறக்கப்பட வில்லை. இந்நிலையில் தற்போது பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு கேரளா அரசு அனுமதியளி வழங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சாலையில் தண்ணீர் வீணாகி செல்கிறது.
    • குழாய் உடைப்பால் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமங்கள் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் மேலபஜார் சாலையையொட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சாலையில் தண்ணீர் வீணாகி செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    அதேபோல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாகவும், இதனால் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெரும் கிராமங்கள், நகர்புற பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன்.

    ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் தற்போது பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாகவும், எனவே சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் குழாயினை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முகாமில் மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே புளியரை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்குட்பட்ட தெற்குமேடு ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வளாகத்தில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பி.ஆர்.முரளி சங்கர் அறிவுறு த்தலின்படி தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமலைச்செல்வி மற்றும் தெற்குமேடு ஊராட்சி மன்ற தலைவர் அனு கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பி னா்கள் முருகன் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகள் நலமருத்துவம் காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல்மருத்துவம், தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநல மருத்துவம், கண் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    மேலும் ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோ தனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், பரிசோதனை மற்றும் இ.சி.ஜி. போன்ற ஆய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முகாமில் புளியரை மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிபிரசாத் மற்றும் ஏனைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்து வமல்லா மேற் பார்வையாளர் சீதாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

    சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன்,ராஜேந்திரன், வெங்கடேசன், செந்தில்குமார்,கல்யாண சுந்தரம் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். தெற்குமேடு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் நன்றி கூறினார்.இந்த மருத்துவ முகாமில் தெற்குமேடு மற்றும் புளியரை அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் பெற்று சென்றனர்.

    • பிரேமலதாவின் சேவையை பாராட்டி ரோட்டரி கிளப் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    • மருத்துவர்கள் தினவிழாவிற்கு மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு மருத்து வமனை மற்றும் செங்கோட்டை ரோட்டரி கிளப் இணைந்து செங்கோட்டை அரசு மருத்துவ மனை வளாகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார்.

    உதவி ஆளுநர் சித்தன் ரமேஷ், செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளா் சீதாராமன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கலந்து கொண்டார். தென்காசி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமலதாவின் சேவையை பாராட்டி ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னா் அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளா் சீதாராமன், , முன்னாள் செயலா் அபு அண்ணாவி மற்றும் உறுப்பினா்கள் சரவணன், தேன்ராஜ், சீனிவாசன் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மருந்தாளுநர் அப்பாஸ் மீரான் நன்றி கூறினார்.

    • செங்கோட்டை நகராட்சிக்கு நாள்தோறும் 19 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது.
    • வறட்சியை காரணம் காட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகப்படுகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர், குண்டாறு அணை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகிக்கபடுகிறது.

    நீர்வரத்து குறைந்தது

    இந்நிலையில் பருவ மாற்றத்தால் குண்டாறு அணையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் செங்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 19 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதன் அளவு குறைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் லிட்டர் நீர் தான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    கடந்த கோடை காலம் முதல் தற்போது வரை வறட்சியை காரணம் காட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகப்படுகிறது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது வழங்கப்படும் குடிநீரானது முறையான நேரத்திற்கு வராததால் கடும் அவதி அடைவதாகவும் கூறினர்.

    தண்ணீர் விநியோகம்

    இந்த குடிநீர் தட்டுபாட்டை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட அதிகாரிகள் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 19 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்த தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் தற்போது செங்கோட்டை 3, 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சுடரொளி ராமதாஸ், சரஸ்வதி ஆகியோர் தனது சொந்த செலவில் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு டிராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்தனர். அவர்களது செயலை அப்பகுதி பொது மக்கள் பாராட்டினர்.

    ×