search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீப்பற்றியது.
    • 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் சூழலில் அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகிறது.

    2-வது நாளாக தீ

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேக்கரையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பற்றி 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியது.

    இந்தநிலையில் நேற்று மீண்டும் மேக்கரையை ஒட்டி உள்ள எருமை சாவடி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தற்போது தீ தொடர்ந்து பரவி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. அவை ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், வன உயிரினங்கள் எதுவும் தீ விபத்தில் சிக்காமல் இருக்கவும் அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மழை இன்றி வனப்பகுதிகள் காய்ந்த நிலையில் காணப்படுவதால் அங்கு செல்வோர் தீ எளிமையாக பற்றும் வகையில் எந்த பொருளையும் எடுத்து ெசல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதிகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுவாமி, அம்பாள், நந்திக்கு 36 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி சுவாமியை வழிபட்டனர்.

    செங்கோட்டை:

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் சுவாமி, அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகார உலா வந்தார்.

    மகா சனி பிரதோசமான நேற்று செங்கோட்டை சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.இதனை போன்று ஆறுமுகசாமி ஒடுக்கம், மாலையான் சாமி கோவில், புளியரை கோவில், இலத்தூர் மதுநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனி பிரதோச வழிபாடுகள் நடைபெற்றது.

    • கேசி ரோடு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது.
    • பஸ் வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செங்கோட்டை கிளை மேலாளாரிடம் செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலை பள்ளியின் சார்பில் கோரிக்கை மனுவினை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் அளித்து உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மேலச் செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான பிரானுார், பார்டர், சிலுவைமுக்கு, கதிரவன் காலனி, மூன்றுவாய்க்கால், ரெட்டைக்குளம், காடுவெட்டி, மோட்டை, கண்ணுப்புள்ளிமெட்டு, விசுவநாதபுரம், பெரிய பிள்ளைவலசை, மாவடிக் கால்தோப்பு, தேன் பொத்தை, ராஜபுரம்காலனி, மீனாட்சிபுரம், பண்பொழி, வடகரை, வாவாநகரம், அச்சன்புதுார், இலத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனா்.

    மேலும் மேற்குதொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனா். இப்பள்ளியானது செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மேற்கே செல்லுகின்ற கேசி ரோடு சாலையில் சுமார் 1கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது.

    இந்த சாலையில் மேலச்செங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி, மூன்று வாய்க்கால், கண்ணுப்புள்ளி மெட்டு ஆகிய பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளி கள் அமைந்துள்ளது.

    இந்த கேசி ரோடு சாலை யில் சுற்றுலா முக்கி யத்துவம் வாய்ந்த குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ள தனியார் எஸ்டேட்களுக்கு இங்கிருந்து கூலித் தொழிலாளா்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனா்.

    இந்த கேசி ரோடு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பஸ்கள் இயக்கப்படவில்லை. மேற்கு தொடா்ச்சிமலை அடிவார பகுதியிலிருந்து வருகை தரும் மாணவ, மாணவிகள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

    எனவே கேசி.ரோடு சாலை வழியாக மேலச் செங்கோட்டை வழியாக காலை 8 மணிக்கு கண்ணுப் புள்ளிமெட்டுக்கு செல்லும் வகையிலும், 8.30மணிக்கு திரும்பி வரும் வகையிலும், அதேபோல் மாலை 4.15 மணிக்கு கண்ணுப்புள்ளி மெட்டுக்கு சென்று 4.45 மணிக்கு திரும்பி வரும் வகையிலும் பஸ் வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இதன்மூலம் மேற்கண்ட வாறு மாணாக்கர்களுக்கு வசதிகள் கிடைப்பதோடு கூடுதலாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தது.

    • செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
    • வாகன ஓட்டிகளுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நீதிபதி சுனில்ராஜா விளக்கி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்டப்பபணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல் சங்க துணைத்தலை வா் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். வட்டசட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அபாரதம் செலுத்த வந்த வாகன ஓட்டிகளுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து நீதிபதி சுனில்ராஜா, விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் வக்கீல்கள் சக்திவேல், வெங்கடேஷ், ஜெயகணேஷ், சிதம்பரம், சாமி, ஆசாத், நித்யானந்தன். பைரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மூத்த வக்கீல் பழனிக்குமார் நன்றி கூறினார்.

    • ஆனந்த விநாயகர் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியருளினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக வருஷாபிஷேகம் அன்று காலை 9.05க்கு கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்ச கவ்ய பூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பபூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியருளினார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.

    • உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கீழத்தெரு வீரகேரள விநாயகா் கோவிலில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் உலக நன்மை வேண்டி பரிகார ஹோமம் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டச்செயலாளா் ராமநாத் தலைமை தாங்கினார். திருவாசக கமிட்டி கவுரவத்தலைவா் இசக்கி, செயலாளா் முத்துசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் குருசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு இலஞ்சி சிவசுப்பிரமணியன் தலைமையில் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. பின்னா் வீரகேரளவிநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவா பஞ்சவாத்திய குழுவினரின் பஞ்சவாத்திய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. அதனைதொடா்ந்து திருவாசகி சிவபகவதி தலைமையிலான குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விழா கமிட்டி நிர்வாகிகள் ஆடிட்டர்சங்கரநாராயணன், பிரபு, மாரியப்பன், வேல்முருகன், வேலு, சிவன், சேகர், அருண்குமார் மற்றும் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

    • செங்கோட்டை அப்பாமாடசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 8 நாட்கள் தொடர்ந்து நடக்கும்.
    • கொடைவிழாவை முன்னிட்டு கோவிலில் நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள மிகபிரசித்தி பெற்று விளங்கும் அப்பாமாடசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 8 நாட்கள் திருவிழா நடக்கும். இந்த திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி திருக்கால் நாட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அப்பாமாடசாமிக்கு ஒவ்வொரு நாளும் விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜை, அருள் பிரசாதங்களையும் மண்டகப்படிதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கொடைவிழா முன்னிட்டு 22-ந்தேதி இரவு குடியழைப்பு, குற்றாலம் தீர்த்தம் எடுத்தல் மற்றும் விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கொடை நாட்களில் மதியம் உச்சிகால பூஜையும், சாஸ்தா புறப்பாடு, சிறப்பு பூஜை மற்றும் மாலை மணிகண்டன், சரவணன் குழுவினரின் மகுடம் ஆட்டம், மாரியம்மாள் தங்கராஜ் வில்லிசையும் நடைபெற்றது. நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது. பக்தர்கள் தங்களது நேமிசங்களை செலுத்தினர். செங்கோட்டை, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) மதியம் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

    • செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் வரப்பில் உளுந்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • வேளாண்மை உழவர் நலத்துறை 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்குகிறது.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் வரப்பு பயிராக உளுந்து சாகுபடியை விவசாயிகளிடம் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின் படி செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் குண்டாறு அணைக்கு செல்லும் பகுதியில் மோட்டை அணைக்கட்டு பகுதிகளில் வரப்பில் உளுந்துதிட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தற்போது வரப்பில் உளுந்து என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் நெல் பரப்பில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதற்கு 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதால் நன்மை செய்யும் பூச்சிகள் பெருகி நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சி அழிக்கப்படுகிறது. மண்வளம் பெருகுகிறது. கூடுதலாக ஒரு பயறு வருவாய் கிடைக்கின்றது. எனவே செங்கோட்டை வட்டார விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் கேட்டுக்கொண்டார். செயல் விளக்கத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் குமார் செய்திருந்தார்.

    • செங்கோட்டை நூலகத்தில் நடைபெற்ற கவிதை போட்டியில் 78 பேர் கலந்து கொண்டனர்.
    • நகராட்சி தலைவர் ராமலட்சுமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் நூலக வார விழா நிறைவு நாளில் கவிதை போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் 78 பேர் கலந்து கொண்டனர்.

    வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணை செய லாளர் செண்பக குற்றாலம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் ராமலட்சுமி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்த்தி பேசினார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி கலந்துகொண்டு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட அறிவுறுத்தினார்.

    பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் பற்றிய சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

    • சனி பிரதோஷத்தை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    செங்கோட்டை:

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் சுவாமி, அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தார்.

    மகா சனி பிரதோசமான நேற்று செங்கோட்டை சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.இதனைப் போன்று ஆறுமுகசாமி ஒடுக்கம், மாலையான் சாமி கோவில், புளியரை கோவில், இலத்தூர் மதுநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றது.

    • செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு முப்புடாதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஆரியநல்லுார் தெருவில் யாதவா் (கரையாளா்) சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது. விழாவில் முப்புடாதி அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    திருவிழாவின் 10-ம் நாளான நேற்று இரவு, வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் முப்புடாதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சப்பரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. இதனைதொடா்ந்து அம்மனுக்கு வண்ண மலா்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    ×