search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்"

    • அசையும், அசையா சொத்து விபரங்களை முழுமையாக, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.
    • 10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற விபரம் கேட்கப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க, கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து, அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:- அசையும், அசையா சொத்து விபரங்களை முழுமையாக, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர். அதற்கான காரணங்கள் ஏதும் தெளிவாக கூறவில்லை. கருவூலத்துறையில் இதற்கான பிரத்யேக படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அந்தந்த கல்லூரி முதல்வர்கள், மண்டல கல்லரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற விபரம் கேட்கப்பட்டது. அதன் பின் இவ்விபரங்கள் கேட்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சிவகங்கையில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பயிற்சி முகாம் நடந்தது.
    • 10 மாவட்டங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வட்டார கல்வி மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் தெற்கு மண்டலம் மற்றும் தென் மத்திய மண்டல இயக்க நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வரவேற்றார். பயிற்சி முகாமை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் சங்கர் தொடக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சி தம்பி நன்றி கூறினார்.

    இந்த முகாமில் 10 மாவட்டங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வட்டார கல்வி மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆபாசமாக படம், வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக படம், வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், நாமக்கல் தாசில்தார் சக்திவேல், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பாலசுப்பிரமணி மற்றும் திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர் செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்த தலைமை ஆசிரியர் ஷர்மிளாவை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மீது புகார் அளித்த மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மாதம் ஒரு முறை பெற்றோர்களை அழைத்து பள்ளியில் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். 

    • ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பள்ளி ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தினை தமிழ்நாடு அரசு விரைந்து நிறை வேற்றிட வலியுறுத்தி, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆசிரியர்கள் தாக்கப்படு வதும், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் ,

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களு க்கான ஊதிய முரண்பாடு களை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் , மத்திய அரசு அறிவித்த அகவிலை ப்படியினை நிலுவையின்றி அறிவித்த தேதியிலிருந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமை ப்பினர் உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷ ங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
    • தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்கள், 7023 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 114 பேர் 53 மையங்களில் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி அரசு மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இதுபற்றி மாணவி அப்போது மற்ற ஆசிரியர்களிடம் தெரிவிக்கவில்லை.

    தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி பள்ளியில் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு ஆசிரியர் ஜெகன்நாத் தேர்வு எழுத உதவியபோது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆசிரியர் ஜெகன்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • எண்ணறிவு பயிற்றுவிக்க18 ஆயிரத்து 142 கற்போர் கண்டறியப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
    • 'வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பேச்சுப் போட்டி கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவருக்கு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க, மாவட்டத்தில் 18 ஆயிரத்து 142 கற்போர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அண்ணாதுரை போட்டிகளை துவக்கி வைத்தார். வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, பயிற்றுநர்கள் பங்கேற்று, தங்கள் பேச்சுத்திறனைக் காட்டினர்.

    • கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார்.
    • கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கமலம் சின்னசாமி. இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இவர் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை ஆற்றியதற்காக அவ்வையார் விருது வழங்கப்பட்டது.

    சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதினை, கமலம் சின்னசாமிக்கு வழங்கினார்.

    கமலம் சின்னசாமியின் சொந்த ஊர் ஊட்டி ஆகும். இவரது பெற்றோர் ராமசாமி-மாரியம்மாள். இவர் எம்.காம். எப்.ஐ.ஏ. சி.ஏ படித்தவர். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. இதுதவிர தமிழ் புலவர், மதுரை தமிழ் சங்க புலவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

    இவரது கணவர் சின்னசாமி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார்.

    கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். மேலும் 7 ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

    இவர் ஆசிரியர் பணி மட்டுமின்றி எழுத்தாளராகவும், கவிதையாளராகவும் அறியப்படுகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார்.

    இதுதவிர சிறந்த ஓவியம் தீட்டுபவர், வண்ணக் கோலங்கள், உல்லன் வேலைப்பாடுகள், பனியன், மப்ளர், ஸ்கார், குரோஷா, பூ வேலைகள், ஆன்மிக பாடல்கள் இசைப்பதில் ஆர்வம், தையல் கலையிலும் ஆர்வமுடையவராகவும் உள்ளார்.

    இவர் இணையில்லா எமது தமிழ், தாயும் தனயனும், என் தெய்வம் ஸ்ரீ சத்ய ஸாயி, எனக்கு பிடித்த சமுதாயம், கொங்கு நாட்டு தங்கம் எமது சமுதாயம், இவளா என் மனைவி, நலந்தரும் நாட்டு வைத்தியம் பாகம்-1, கருமியின் காசு, சங்ககால பெண்மணிகள், இன்றைய மாணவ, மாணவிகள், மணமக்கள், வங்கம் கண்ட தங்கம், ஊட்டி அவ்வையின் ஆத்திசூடி, சிறுவர் பாடல்கள் உள்பட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

    சிறந்த பணி, நூல்களுக்காக எண்ணற்ற விருதுகளும் வாங்கியுள்ளார். சாரண சாரணியர் அரசு விருது, கவியருவி, சைவச் சித்தாந்த செம்மல், மலைச்சாரல், மகுடம், காரைக்கால் அம்மையார் விருது, கராத்தே விருது, கூடலூர் தமிழ்சங்க விருது, 2 முறை உலக சாதனையாளர் விருது, சேவா ரத்னா விருது, சிங்கப்பெண் விருது, பாரதி விருது, பாரதிதாசன் விருது, ஈரோடு தமிழ்சங்கம் விருது, நெய்வேலி தமிழ்சங்க விருது, காங்கயம் அளித்த அவ்வை விருது, ஊட்டி மலைச்சாரல் அளித்த ஊட்டி அவ்வை விருதுகள் என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    அவ்வையார் விருது வாங்கிய கமலம் சின்னசாமிக்கு அவரது உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • முதியோர் நலன் பராமரிப்பு சட்டம் -2007 மற்றும் முதியோர் உதவி எண் வழங்கும் சேவைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
    • உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றி தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக செயல்முறை வாயிலாக புதிய பார்த எழுத்தறிவுத் திட்டத்திற்காக கண்டறியப்பட்டுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை வலுவூட்டும் வகையில் வாழ்வியல் திறன் பயிற்சி திருப்பூர் தெற்கு வட்டார வள மைய பயிற்சி அரங்கில் இன்று நடைபெற்றது.

    பயிற்சியில் சைபர் கிரைம் துணை ஆய்வாளர் சையது சிக்கந்தர், சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வு பற்றி விளக்கமளித்தார். சமூக நலத்துறை மாவட்ட களப் பொறுப்பு அலுவலர் மைதிலி கணேசன் , முதியோர் நலன் பராமரிப்பு சட்டம் -2007 மற்றும் முதியோர் உதவி எண் வழங்கும் சேவைகள் குறித்தும் விளக்கமளித்தார். வக்கீல் கே. ஆர். ராஜசேகரன் மற்றும் வக்கீல் திங்களவள் ஆகியோர் சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகளை வழங்கினர். மேலும் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை ஆசிரியர்கள் மூலமாக உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை திருப்பூர் தெற்கு வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் அலிமா பீவி மற்றும் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    • வீட்டில் இருந்த கமலா வீட்டைப் பூட்டிவிட்டு திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • 16 கிராம் தங்க நகைகள், 525 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரை சேர்ந்தவர் மலர்வண்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 37). இவர் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த இவரது மாமியார் கமலாவும் வீட்டைப் பூட்டிவிட்டு திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்.

    இந்த நிலையில் கமலா நிகழ்ச்சி முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 கிராம் தங்க நகைகள், 525 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.

    இது பற்றி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.
    • காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.

    மானாமதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன், ஓவிய ஆசிரியர். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டியுள்ளார்.

    64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் தொலை தொடர்பு சாதனமாக அஞ்சல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்களும் அஞ்சல் அட்டைகள் மூலம் தகவல்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களது படைப்புகளை அஞ்சல் அட்டைகளில் அனுப்பும் வழக்கமும் இருந்து வந்தது.

    தற்போது நவீன தொழில் நுட்பம் காரணமாக அனைத்தும் கணினி மயமாகி விட்டது. காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. தற்போதும் தபால் நிலையங்களில் அஞ்சல் அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முன்பு போல் மக்கள் அதனை பயன்படுத்துவதில்லை.

    எனவே மக்கள் மீண்டும் அஞ்சல் அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக அஞ்சல் அட்டைகளில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் படங்களை வரைந்துள்ளேன்.

    தொடர்ந்து பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள அரிய கருத்துக்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் அட்டையில் ஓவியமாக வரைய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்சோ பிரிவில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • ரூ. 6 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் (வயது 72).

    இவர் கோட்டயம் அருகே உள்ள கடுந்துருத்தியில் செயல்படும் அரபி பாட சாலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அவர், மத்ரசாவுக்கு வந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தததாக புகார் கூறப்பட்டது.

    இதுகுறித்து தலையோ லப்பரம்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியல் யூசுப், மாணவிகளை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இது தொடர்பான வழக்கு கடுந்துருத்தி கோர்ட்டில் நடைபெற்றது.வழக்கை நீதிபதி விசாரித்து யூசுப்புக்கு 5 வழக்குகளில் மொத்தம் 169 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும் ரூ. 6 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    ×