search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    • இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
    • ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

     

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

    அந்த அறிக்கையில், அனுமதிக்கபட்டத்தை விட அதிகம் பேர் கலந்துகொண்டதே இந்த கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி முடியும் தருவாயில் போலே பாபா ஏறிச் சென்ற காரில் இருந்து கிளம்பிய புழுதியை எடுப்பதற்காக மக்கள் நெறுக்கிப்பிடித்துள்ளனர்.

    அவ்வாறு முன்னேறியவர்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிடித்துத் தள்ளியுள்ளனர். இதனால் பலர் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் ஹத்ராஸ் விபத்து குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு, வரும் ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

     

    • அவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலான காட்ச்சிகளும் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது என்று வழக்கு தொடரப்பட்டது
    • இந்த வழக்கு இன்று[ஜூலை 8] உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    சினிமா உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் மாற்றுத் திறனாளிகளை சித்தரிப்பதற்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள ஆங் மிச்சோலி [Aankh Micholi] என்ற படத்தில் மாற்றுத் திறனாளிகளை தவறாக சித்தரித்து அவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலான காட்ச்சிகளும் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் நிபுன் மல்ஹோத்ரா என்று சமூக நல ஆர்வலர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று[ஜூலை 8] உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்  தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்சி ஊடகங்களிலும் சினிமாவிலும் தவறான சமூகப் புரிதலுக்கு வழிவகுக்கும் வகையில் மற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையிலான 'ஊனம்' முதலான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

    அவர்கள் படும் சிரமங்களை மட்டுமே காட்சிப் படுத்தாமல், அவர்களின் முன்னேற்றம், திறமைகள், சமூகத்துக்கு அவர்கள் அளிக்கும் பங்கு ஆகியவற்றையும்  காட்சிப் படுத்தவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பான  விஷயங்களை சென்சார் வாரியம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஏராளமான முறைகேடுகள் நீட் தேர்வு மீதான நம்பிக்கையை குறைத்தன.
    • தேசிய தேர்வு முகமை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடந்தது.

    இந்த தேர்வுக்கான முடிவுகள், கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதவிர வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது என ஏராளமான முறைகேடுகள் நீட் தேர்வு மீதான நம்பிக்கையை குறைத்தது.

    இத்தனை சர்ச்சைகள் அடங்கிய நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசு மற்றும், தேசிய தேர்வு முகமை சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த விவகாரத்தில், நீட் தேர்வு தொடர்பாக மொத்தம் 38 மனுக்களும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. 

    • அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை முதலவர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.
    • முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல்.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.

    இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரனையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.

    இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது.

    ஆனால் கட்சியின் இந்த முடிவில் முதலமைச்சர் சாம்பை சோரனுக்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

    • ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான ரூ.31.07 கோடி மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலம் அவரால் மோசடியாக பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.
    • தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதை நீதிமன்றம் நிராகரித்தது.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த வழக்கின் விசாரணை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் நில மோசடி மற்றும் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான ரூ.31.07 கோடி மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலம் அவரால் மோசடியாக பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.

     

    இதற்கிடையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் புதிய மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவர்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டதில் இருந்து ஜாமீனுக்காக தொடர்து ஹேமந்த் சோரன் போராடி வந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் அவரது ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமால் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால்.
    • சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தடையை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் நீதிமன்றத்தில் தனது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் விஷயத்தில் அடுத்தடுத்து பரபரப்பான வகையில் காட்சிகள் மாறி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.  மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
    • அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகனப் பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீதமுள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.

    இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கின் விசாரணையில், "தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று மனுதாரர்கள் வாதம் முன்வைத்தனர்.

    இதனையடுத்து, "தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது" என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும் இந்த ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

    ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

    டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து.

    • 12 மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்தது பற்றி விசாரிக்க மத்திய அரசு 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.

    மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், மோசடி, ஓ.எம்.ஆர். தாளை சேதப்படுத்துதல் போன்ற நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்ட 63 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்கள் மீதான புகார்களை விசாரிக்க கல்வி மற்றும் தேர்வுகளில் நிபுணர்களான 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், 12 மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளும், 2 மாணவர்களுக்கு தலா ஓராண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதி 40 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்தது பற்றி விசாரிக்க மத்திய அரசு 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. அக்குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதன் பரிந்துரை அடிப்படையில், 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் அல்லது எந்த மாணவரும் பாதிக்கப்படாதவகையில் மாற்று வழிமுறை உருவாக்கப்படும்.

    முழு மதிப்பெண் பெற்ற 67 பேரில், 44 பேருக்கு இயற்பியல் தேர்வு விடைத்தாள் மாற்றம் காரணமாகவும், 6 பேருக்கு நேர விரயம் காரணமாகவும் கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குனர் சுபோத்குமார் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது,

    நீட் நுழைவுத்தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந்தேதி வெளியானது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதேர்வு நடத்த கோரி தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஆனால் முறையான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை. தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, நீதிபதிகள், தேர்வை நடத்தக்கோருவது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • டெல்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
    • குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    தலைநகர் டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இச்சூழலில் அம்மாநில அரசு அரியானாவில் இருந்து கூடுதல் தண்ணீர் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது.

    இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று டி.கே.சர்மா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இமாச்சல் வழங்கும் நீர் டெல்லிக்கு தடையின்றி சென்று சேர வேண்டும் என்று அரியானா அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    டெல்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    • ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
    • ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல்.

    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

    இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி நெருங்குவதால் தனது உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார்.

    அவரது மனுவில், "தனது உடல் எடை இயல்புக்கு மாறாக அதிக அளவில் குறைந்துள்ளது, சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசியமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள தனக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த நிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்தது.

    இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    ×