search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 202715"

    • வட சென்னை மேற்கு மாவட்டச்செயலாளராக துரைசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி துணைச்செயலாளர்களாக சேலம் மாவட்டத்தை சார்ந்த தனலட்சுமி, சென்னை மாவட்டத்தை சார்ந்த ஷீபா ஆகியோரும், வட சென்னை மேற்கு மாவட்டச்செயலாளராக துரைசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக யுவராஜும் நியமிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெல்லியில் டெல்லி தமிழ்க்கல்விக்கழகம் சார்பில் 7 பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன
    • சரத்குமார் தனது வாழ்க்கைப்பயணத்தின் முழு விவரத்தையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் டெல்லி தமிழ்க்கல்விக்கழகம் சார்பில் 7 பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழ் மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். இதில் முதல் பள்ளிக்கூடம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. இதனைத்தொடர்ந்து நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளி நிர்வாகமும், முன்னாள் மாணவர்களும் இணைந்து டெல்லி இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்திய இவ்விழாவில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளையும், பிற விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளையும் வழங்கி பேசினார்.

    அப்போது, தானும் டெல்லி தமிழ் பள்ளியில் படித்ததாக தெரிவித்தார். அதற்கு சான்றாக தனது மாணவர் முன்னேற்ற அறிக்கையை காண்பித்தார். டெல்லி தமிழ்க்கழகம் சார்பில் கல்லூரி தொடங்கவேண்டும் என விருப்பம் தெரிவித்த அவர், அதற்கு முதல் பங்களிப்பாக ரூ.25 லட்சம் வழங்குவதாகவும் கூறினார். தனது வாழ்க்கைப்பயணத்தின் முழு விவரத்தையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிவஞான குருநாதன் நியமிக்கப்படுகிறார்.
    • பாலமுருகன் சிவகங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக செயலாற்றி வந்த பன்னீர்செல்வம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ராமநாத புரம் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிவஞான குருநாதன் நியமிக்கப்படுகிறார்.

    நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி நெல்லை மாநகர மாவட்ட பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அழகேசன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த மலைக்கண்ணன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பாலமுருகன் சிவகங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    • அறிமுக இயக்குனர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கிரிமினல்'.
    • இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர்.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


    கிரிமினல் படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. 'கிரிமினல்'படம் குறித்து பார்சா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் பி.ஆர். மீனாக்ஷி சுந்தரம் பேசும்போது, "எங்களுடைய புதிய புராஜெக்ட்டான 'கிரிமினல்' வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கவுதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையளர்களுத் தெரிவார்".

    பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறியதாவது, "கிரிமினல்' படத்தின் கதையும், தக்ஷிண மூர்த்தி ராம்குமார் அதைத் திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் விதமாக அமையும். அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குனர் சொல்வது போல இருந்தது. கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். 

    • விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் வெளியான ஏழு நாட்களில் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

    ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய சரத்குமார்

    இப்படத்தில் விவேக் வரிகளில் விஜய் மற்றும் மானசி பாடிய 'ரஞ்சிதமே' பாடல் தற்போது வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து யூ டியூபில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், 'ரஞ்சிதமே' பாடலுக்கு நடிகர் சரத்குமார் குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை.
    • இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'தமிழ்நாடு' என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், தியாகிகளின் போராட்டம் மற்றும் உயிர்த்தியாகத்தால் தான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் பெற்றது. முக்கியமாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அதன் காரணமாக 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி, சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு'என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது. தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14-ல் கொண்டாடும் அதே தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதல் சிறப்பாக இருக்கும். மேலும், தமிழ்நாடு பெயர் உருவாக காரணமாக அமைந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு மெரீனாவில் சிலை வைத்தும், அவர் தியாகத்தை கவுரவிக்கும் விதமாக, தியாகி சங்கரலிங்கனார் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். இனி எந்தவொரு காலக்கட்டத்திலும் தமிழ்நாடு, 'தமிழ்நாடு' என்றே அழைக்கப்படும். ஜனவரி 14 தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து, சென்னை டிபிஐ வளாகத்தில் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள்.
    • இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேசி, சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க பரிசீலித்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    7- வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே பெரிய அளவில் இருக்கின்ற ஊதிய முரண் பாடுகளை களையவும், "சம வேலைக்கு சம ஊதியம்" என்கின்ற கொள்கையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து, சென்னை டிபிஐ வளாகத்தில் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள்.

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், உண்ணாவிரத போராட்டத்தின் தீவிரத்தையும் உணர்ந்து, முதல்-அமைச்சர் சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேசி, "சம வேலைக்கு, சம ஊதியம்" என்ற அடிப்படையில் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க பரிசீலித்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
    • மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

    வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.


    வாரிசு இசை வெளியீட்டு விழா

    மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மறைமுகமாக வெளிப்படுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.


    வாரிசு இசை வெளியீட்டு விழா

    இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் கூறியதாவது, "விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று நான் 'சூர்யவம்சம்' திரைப்படத்தின் 175-வது நாள் விழாவில் கூறினேன். தற்போது அது நடந்து விட்டது. விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். நான் அப்போது இதை சொன்ன போது கலைஞர் கருணாநிதி கூட ஆச்சர்யப்பட்டார்" என்று கூறினார்.

    • வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரெட்ரோஸ் முருகேசபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
    • தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஜி.ராஜாவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.ஜெ.எஸ்.பாஸ்கரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வேல்ராஜனும் நியமிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சி பணிகளை திறன்பட செயல்படுத்தாத காரணத்தால், தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.வி.சிவராஜூ, தென் சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜ்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சந்தனக்குமார் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதிநிதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

    மேலும், வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரெட்ரோஸ் முருகேசபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஜி.ராஜாவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.ஜெ.எஸ்.பாஸ்கரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வேல்ராஜனும் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தை கட்சியின் சென்னை மண்டல நிலையச் செயலாளர் புரசை டி.நாகப்பனும், வட சென்னை மேற்கு மாவட்டத்தை கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலாளர் கிஷோரும், தென் சென்னை மத்திய மாவட்டத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் டி.மகாலிங்கமும் மேற்பார்வை செய்வார்கள்.

    புதிய நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்.
    • 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.

    சென்னை:

    மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராகவும், பூரண மது விலக்கை அமல்படுத்த கோரியும் சென்னை எழும்பூரில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.

    துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். தலைமை நிலைய துணை செயலாளர் அந்தோணி ராஜ் உறுதிமொழியை வாசித்தார்.

    ஆந்திர மாநில தென் மண்டல செயலாளர் லோகநாதன், மாணவர் அணி துணை செயலாளர் கிஷோர், வர்த்தகர் அணி செயலாளர் பெருமாள், இளைஞர் அணி செயலாளர் கிச்சா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருவதாக கூறுகிறார்கள்.

    இதனை தடுக்க தற்போதுள்ள 1 லட்சம் போலீசார் போதாது. இதற்காக தனிப்படை அமைக்க வேண்டும். 36 ஆயிரம் கோடி வருவாய் மதுவால் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

    அதனை ஈடுகட்ட தொழில் வளத்தை மேம்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.

    அப்போது எப்படி சமாளித்தார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தார்.
    • இதுகுறித்து அவர் தற்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ரம்மி விளையாட்டு விளம்பத்திரத்தில் நடித்திருந்தது பல விவாதத்தை கிளப்பியது. அவர் சூதாட்டத்தை ஆதரிப்பதாகவும் இதனால் பல குடும்பங்களில் வாழ்கை சீரழியும் அவலம் உள்ளது எனவும் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

     

    சரத்குமார் நடித்த ரம்மி விளம்பர காட்சி

    சரத்குமார் நடித்த ரம்மி விளம்பர காட்சி

    இந்நிலையில் இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன் ஆனால், யாரும் ஓட்டுப் போடுவதில்லை; சரத்குமார் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள் என காட்டமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    ×