search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 205975"

    • டி.டி.வி.தினகரன் கரத்தை வலுப்படுத்த அனைவரும் திரண்டு வரவேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டார்.
    • பின்னர் கோச்சடை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கும் டி.டி.வி.தினகரன் மறுநாள் காலை தேனி புறப்பட்டு செல்கிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளர் பேராசிரி யர் மா.ஜெயபால் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங்ரோடு வேலம்மாள் திருமண மண்டபத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார். மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பேசுகிறார்கள்.

    இந்த கூட்டத்தில் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அம்மாவின் வழித்தோன்றலான டி.டி.வி. தினகரனின் விசுவாசிகள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் செல்வர் டி.டி.வி. தினகரனின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

    இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் பேராசிரியர் ஜெயபால், ராஜலிங்கம், மேலூர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் இன்று மாலை மதுரை வருகிறார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஓட்டலில் தங்கும் அவர் நாளை காலை அங்கிருந்து ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    பின்னர் கோச்சடை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கும் டி.டி.வி.தினகரன் மறுநாள் காலை தேனி புறப்பட்டு செல்கிறார்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • உடற்கல்வி இயக்குநர் ரகு வருடாந்திர விளையாட்டு அறிக்கை வாசித்தார்.


    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. உதவி பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்று பேசினார். கல்லூரி நிறுவனர் சேது குமணன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

    இதில் சென்னை காவல்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் (ஐ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் தலைவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான முகமது ரியாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    ராமகிருஷ்ணன் (ஐ.பி.எஸ்.) பேசுகையில், தமிழ்நாட்டின் இரு முக்கிய நிர்வாக பதவிகளான காவல்துறை தலைவர் மற்றும் தலைமை செயலாளர் பதவிகளை வகித்துவரும் இருவருமே விவசாய கல்வி கற்றவர்கள் தான். மாணவர்கள் எதற்காகவும் கவலைப்படக் கூடாது.இந்த உலகம் திறமை வாய்ந்தவர்களுக்காக காத்திருக்கிறது. இந்த கல்லூரி எதிர்காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக வளர வாழ்த்துகிறேன் என்றார்.

    உடற்கல்வி இயக்குநர் ரகு வருடாந்திர விளையாட்டு அறிக்கை வாசித்தார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுத்துறை செயலாளர் கவிதாஞ்சலி நன்றி கூறினார்.

    • மாநாட்டில் செயற்குழு அறிக்கை, வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது.
    • இரண்டாவது நாளாக நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    காப்பீட்டு கழக ஊழியர் சங்க வைர விழா ஆண்டு மாநாடு தஞ்சையில் இன்று தொடங்கியது. இதற்கு தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேதுராமன் வரவேற்றார். ஏ.ஐ.ஐ.இ.யூ. பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா தொடக்க உரையாற்றினார். முன்னதாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் செயற்குழு அறிக்கை, வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மாநாடு நடைபெற்று வருகிறது. நாளை இரண்டாவது நாளாக மாநாடு நடைபெற உள்ளது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் இணை செயலாளர் கிரிஜா, முதுநிலை கோட்ட மேலாளர் சுஜீத், எல்.ஐ.சி. முதல் நிலை அதிகாரிகள் சங்க தலைவர் சோழ சுந்தர பாண்டியன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொருளாளர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
    • காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகின்ற 28-ந் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி,மேல்மலையனூர், வட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சப்-கலெக்டர் அறிவித்து உள்ளார். 

    சேலம் மாவட்டத்தில் 26-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை நீதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி வெளி–யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி–யிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் நீதிமன்றங்களிலும் வருகிற 26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

    நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு–களை நீதிமன்றம் முன் வழக்கு–களையும் விரைவாகவும் சமரசம் மூலம் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதே இதன் நோக்கமாகும்.

    மேலும் மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணமுடியும்.

    அதன்படி சமரசம் செய்துகொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் ஆகியவை குறித்து தீர்வு காணலாம்.

    இந்த வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால் யார் வென்றவர், தோற்றவர் என்ற பாகுபாடு இல்லாமல் உறவுமுறைகள் தொடர்ந்து நீடிக்கவும் மக்கள் நீதிமன்றம் வழி வகை செய்கிறது.

    இதற்கு பதிலாக மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் 26-ந் தேதி நடைபெற உள்ள மக்கள் நீதி மன்றத்தை பயன்படுத்தி தங்கள் வழக்குகளுக்கு விரைவாகவும் சமரசம் மூலம் தீர்வு காண வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி–உள்ளார்.

    உலகம் முழுவதும் 100 கோடி துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாகவும், இவற்றில் 84 சதவிகிதம் பொதுமக்கள் கைகளிலும் மீதமுள்ளவை ராணுவம் மற்றும் போலீசார் கைகளில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    உலகம் முழுவதுமுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே என்ற அமைப்பு, உலகில் உள்ள 230 நாடுகளில் உள்ள கைத்துப்பாக்கிகள் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி அது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்கள், ராணுவம் மற்றும் காவல்துறை போன்று சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புகள் ஆகியவை வைத்திருக்கும் பல்வேறு ரக துப்பாக்கிகள் போன்று உலகில் மொத்தமாக 100 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 17% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், அதிர்ச்சி தரும் தகவலாக 85 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் தனியார், தனியாரால் நடத்தப்படும் பாதுகாப்பு நிறுவனங்கள், திருட்டு, கொள்ளை கும்பல்கள் ஆகியவையும் அடங்கும்.

    உலக மக்கள் தொகையில் 4% அளவிற்கே பங்களிப்பை அளிக்கும் அமெரிக்காவில் உலக துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் 40% அளவுக்கு குவிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அங்கு 40 கோடி துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது.

    அதாவது அங்கு வசிக்கும் 100 பேருக்கு 121 துப்பாக்கிகள் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் 100 பேருக்கு 90 என்ற அளவிற்கே அங்கு துப்பாக்கிகளின் எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அங்கு வசிக்கும் மக்களை விட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சம் யாதெனில் பொதுமக்களிடம் குவிந்து கிடக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா இருப்பதே. இந்தியாவில் பொதுமக்கள் கைவசம் சுமார் 7 கோடி துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

    இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் 5 கோடி துப்பாக்கிகளை கொண்டுள்ள சீனா 3வது இடத்தையும் பெற்றுள்ளன. எனினும் சராசரியாக மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 100 நபர்களுக்கு 52 துப்பாக்கிகள் கொண்டுள்ள ஏமன் 2 வது இடத்திலும் 39 துப்பாக்கிகளுடன் மாண்ரினெகரோ மற்றும் செர்பியா நாடுகள் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

    இந்த புள்ளிவிவரங்களுக்கு நேர்மாறாக மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சமும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் மாலாவி ஆகிய நாடுகளில் வசிப்போரில் 100 நபர்களுக்கு ஒன்றுக்கும் குறைவான துப்பாக்கியே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறை இதே போன்றதொரு ஆய்வை இதே அமைப்பானது, 2007ஆம் நடத்தியிருந்தது. அப்போது உலகில் மொத்தமே 87 கோடி துப்பாக்கிகளே இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 65 கோடி பொதுமக்களிடம் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×