search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற் பார்வையில் 7 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கண் காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரணியல் அருகே நெட்டாங்கோடு பகுதியில் வீடு ஒன்றில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது வீட்டில் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ போதைப் பொருட் கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் விலை உயர்ந்த போதை பொருட்கள் என்று கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்த 3 பேரும் சிக்கினார்கள். பிடிபட்ட மூன்று பேரி டமும் போலீசார் விசா ரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள் நரைன் (வயது 34), விமல் (21), அசாருதீன் (29) என்பது தெரிய வந்தது. இவர்களை இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற் கொண்ட னர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.இந்த கஞ்சா மற்றும் போதை பொருட்கள் சப்ளையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா மற்றும் 2 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியாக நின்ற மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 450 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பள்ளி மாண வர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வடக்கு சூரங்குடியைச் சேர்ந்த சிவன், வாழை யத்துவயலை சேர்ந்த ஆதிஸ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தெற்குச் சூரங்கு டியைச் சேர்ந்த அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பறக்கை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் போலீசார் பறக்கைப் பகுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பறக்கை அருகே உள்ள மாவிளை காலனி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் பறக்கை மாவிளை காலணியை சேர்ந்த அர்ஜூன் (வயது 18) என்பதும், மற்றொருவன் பறக்கை செட்டி தெருவை சேர்ந்த சத்தியா (18) என்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த 70 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்

    கரூர்:

    கரூர் பெரிய ஆண்டாங்கோவில் அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு டிராக்டரை போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அப்போது அதில் விற்பனைக்காக 23 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கஞ்சா விற்றதாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சென்ராயன் (வயது 42), மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜீவானந்தம் (21), போடிநாயக்கனூர் அருகே உள்ள குப்பு நாயக்கன்பட்டியை சேர்ந்த கவாஸ்கர் (20) மற்றும் கஸ்தூரி (43) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய பிரதீப் குமார் (23) என்பவரை தேடி வருகின்றனர்.

    தொடர்ந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 23 கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய டிராக்டர், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து 44 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • சிறையில் அடைக்கப்பட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்குமாதவி ஏரிக்கரை அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார்(வயது 25) என்ற வாலிபரை பிடித்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் போலீசார் அஜித்குமாரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிராம், 20 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். கைதான அஜித்குமார் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மதுரையில் கஞ்சா விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஜெய்ஹிந்த்புரம் போலீசார் நேற்று காலை சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி பூங்கா அருகில் ரோந்து சென்றனர்.

    மதுரை

    தெப்பக்குளம் போலீசார் நேற்று மாலை கேட்லாக் ரோடு சந்திப்பில் வாகன தண்க்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது கீரைத்துறை மூக்கன் சந்து பொன்னுசாமி மகன் தனுஷ்கோடி (வயது 18) என்பவரை 1.100 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

    ஜெய்ஹிந்த்புரம் போலீசார் நேற்று காலை சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி பூங்கா அருகில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற நரிக்குடி பிள்ளையார் கோவில் தெரு, முனீஸ்வரன் மகன் முத்துக்குமார் (24), வில்லாபுரம், மீனாட்சி நகர், முத்துராமலிங்கம் தெரு, ரவிராஜன் மகன் சிவகுமார் (23), மீனாம்பிகை நகர் மாரி மகன் கண்ணன் (23), ஜெய்ஹிந்த்புரம் பிள்ளையார் கோவில் தெரு வெங்கடேசன் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை திடீர் நகர் போலீசார் நேற்று மாலை ஹீராநகர் தண்டவாளம் அருகே ரோந்து சென்றனர்.

    அங்கு 1.100 கிலோ கஞ்சாவுடன் எழுமலை, பழைய அரண்மனை தெரு சிவன் பாண்டியன் (35), நேதாஜி ரோடு சதீஷ் குமார் (24), குருவித்துறை, நடுத்தெரு அருண் குமார் (25), எம். புதுப்பட்டி பிள்ளையார் கோவில் தெரு, சசிகுமார் மகன் அபினேஷ் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா இருந்தது
    • போலீசார் இருவ ரையும் கைது செய்தனர்.

    நாகர்கோவில் :

    ஆசாரிபள்ளம் சப்- இன்ஸ்பெக்டர் மேரி மெரினா தலைமையிலான போலீசார் மேல பெருவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மேல பெருவிளையைச் சேர்ந்த கிறிஸ்து ஜெனின் (வயது 31), கார்த்திக் (23) இருவரை பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முர ணான தகவல்களை தெரிவித்த னர்.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    • மதுபானம்-கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டார்.
    • தேங்கிப்பட்டி மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து சென்ற னர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்ட 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்களை சோதனை செய்து பார்த்தனர். இதில் 2 பேரிடமும் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் பிடிபட்ட நபர்கள் ஆரப்பாளையம் முருகன் மகன் விஸ்வநாதன் (வயது 19), புட்டுத்தோப்பு, செக்கடி தெரு தங்கராமன் மகன் கிஷோர் (19) என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குமாரம் வினோத், ஆனந்த் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    மேலும் போலீசார் சோதனையில் நாகமலை புதுக்கோட்டை பள்ளிக்கூடம் அருகே மோட்டார் சைக்கிளில் குட்டி சாக்குடன் வந்த 2 பேர் சிக்கினர்.

    பிடிபட்ட நபர்களிடம் சோதனை செய்தபோது கர்நாடக மதுபாட்டில்கள் 96 இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மேலக்குயில்குடி, ஆதிசிவன் நகர் சிவபாண்டி (27), கிழக்கு தெரு பசும்பொன் (27) என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தேங்கிப்பட்டி மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் அதிரடி நடவடிக்கை
    • கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தனிகவனம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தனிகவனம் செலுத்தி வருகிறார்கள்.

    போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரின் அதிரடி சோதனையின் காரணமாக தற்பொழுது கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது.

    சமீபகாலமாக சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா  ரெயில் மற்றும் பஸ்களில் வாங்கி வரப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் பஸ் நிலை யங்களிலும் ரெயில் நிலை யங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புனேயில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலை மையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பேக் ஒன்று இருந்தது.

    அந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.ஆனால் யாரும் சிக்க வில்லை. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் அனாதையாக கிடந்த 12.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருந்தனர்.

    மாவட்டம் முழுவதும் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 25 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் அந்த ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார்கள்.அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 2.100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பணக்குடியை சேர்ந்த இராமையா (வயது 38) என்பதும் ராதாபுரம் லட்சுமிநகர் பகுதியில் சேர்ந்த ஆண்டனி சுரேஷ் (54) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ராஜபாளையத்தில் செல்போன் கடையில் கஞ்சா விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன்ரங்க மூப்பனார் தெருவில் செயல்பட்டு வரும் ஒரு செல்போன் கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஜபா ளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் ராம்ஜி (வயது 24), அங்கு வேலை பார்த்த சூர்யா (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ராஜபாளை யத்தை அடுத்த சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார். அதில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் மதுரை பேரையூரை அடுத்த பெரியகடை பகுதியைச் சேர்ந்த கணேசன் (34) என்பது தெரியவந்தது.

    • கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீசார் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படு ம்படியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்த னர். இதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வகுரணி கணவாய்பட்டியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (வயது38), ராம்குமார் (21), காளப்பன்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீராம் (18) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, அவர்கள் வந்த 2 இருசக்கர வாகனங்கள், அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்கள் மற்றும் ரூ.1475 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசாருக்கு, கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் மசினகுடி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மசினகுடி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்து, அதன்பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறியும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் வசந்த்(21) என்பதும், கர்நாடகாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சென்னையில் இருந்து வாங்கி வந்து சப்ளை செய்தது அம்பலம்
    • கைது செய்யப்பட்ட 5 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்க போலீசார் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை யிலான போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும் கஞ்சாக்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சிக்கியது.

    மேலும் மாவட்டம் முழு வதும் கஞ்சா விற்பனை செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கோட்டார் போலீசார் ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தே கப்படும்படியாக நின்ற 5 பேரை பிடித்து விசாரித்த னர். விசாரணையில் அவர் கள் இடலாக்குடியைச் சேர்ந்த இர்பான் (வயது 20), சாபிக் (21), ஆஸ்லாம் (25), முகமது முசரப் (20) வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த விமல் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது கஞ்சாவை சென்னையிலிருந்து வாங்கி வந்து குமரி மாவட்டத்தில் சிறு சிறு பொட்டலங்களாக சப்ளை செய்வதாக கூறினார்கள்.

    கைது செய்யப்பட்ட 5 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    ×