search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • கடந்த 25 நாட்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
    • கிரிலால் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து சென்னை வழியாக களியக்காவிளைக்கு கொண்டு வந்ததாக கூறினார்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத் தப்பட்டு வருகிறது.

    கடந்த 25 நாட்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.மேலும் வெளி மாநிலங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கொண்டு வந்த 12 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோட்டார் பகுதியில் கஞ்சா வைத் திருந்த 4 பேரை நேற்றிரவு போலீசார் பிடித்தனர்.பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து 850 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கேரளா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமையிலான போலீசார் களியக்காவிளை அருகே இஞ்சிவிளை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரள மாநிலம் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த கிரி லால் (வயது 37) என்பது தெரியவந்தது. அவர்கையில் இருந்த பேக்கை போலீசார் சோதனை செய்தபோது 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட கிரிலாலை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிரிலால் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து சென்னை வழியாக களியக்காவிளைக்கு கொண்டு வந்ததாக கூறினார். களியக்காவிளைலிருந்து இஞ்சிவிளை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் கிரிலாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கஞ்சா கடத்தல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ணமூர்த்தி (43). எடைமலைப்பட்டி புதூர் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்தார்.
    • கிருஷ்ணமூர்த்தி (43). எடைமலைப்பட்டி புதூர் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்தார்.

    திருச்சி,

    திருச்சி ராம்ஜி நகரை அடுத்த பெரிய கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (43). இவர் எடைமலைப்பட்டி புதூர் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்தார். தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை கைது செய்து, கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதே போன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை கலிங்கப்பட்டியை சேர்ந்த மன்சூர் அலிகான் (23) கஞ்சா விற்பனை செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் (21). இவர் தில்லைநகர் அம்மையப்பன் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரிச்சந்திரனை கைது செய்து அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    • தாதகாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.500 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கு லைன்மேடு, வேலு புதுத் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ஜபர்லால் (வயது 19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.500 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா கொண்டுவரப்பட்டு குமரி மாவட்டத்தில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
    • ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி உள்ளனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் கஞ்சாக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா கொண்டுவரப்பட்டு குமரி மாவட்டத்தில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இதனால் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். டெல்லியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று அதிகாலை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் அனாதையாக பேக் கிடந்தது. அந்த பேக்கை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மூன்று பொட்டலங்கள் இருந்தது.

    அவற்றை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரிய வந்தது.பேக்கிலிருந்த 6 கிலோ 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2 வாரத்துக்கு முன்புதான் குமரி மாவட்டத் திற்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • பழைய குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தொடர் கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது குறித்து சோதனை மேற்கொண்டதில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1,25,640 மதிப்புள்ள 184.660 கிலோ கிராம் குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கடந்த 9 நாட்களில் 77.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டதாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 பேர் சிக்கி உள்ளனர்.

    பழைய குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • ஆந்திர மாநிலம் துணி பகுதியில் இருந்து 6 கிலோ கஞ்சா வாங்கி கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் இரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் முத்துவேல், கண்ணன், சக்திவேல், பாரதிராஜா ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது எஸ்.9 கோச்சில் பயணம் செய்த கேரளா மாநிலம் பாலகோட்டை சேர்ந்த அருண்குமார் (வயது32) என்பவரின் சொல்டர் பேக்கை சோதனை செய்தபோது அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அருண்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் துணி பகுதியில் இருந்து 6 கிலோ கஞ்சா வாங்கி கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை
    • மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தனிப்படை போலீசாரும் கஞ்சா விற்பனையை கண்காணித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் புத்தேரி மேம்பா லத்தின் கீழ் ரோந்து பணி யில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    பிடிப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் அவர்கள் கலுங்கடி பகுதியைச் சேர்ந்த ரெக்ஸ்பெரின் (வயது 21), ஆல்பன் செல்வா (24) என்பது தெரிய வந்தது.தப்பி ஓடியவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஆறுமுகம் என்பதும் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட ரெக்ஸ் பெரின், ஆல்பன் செல்வா இவர்களது வங்கி கணக்குகளை போலீசார் முடக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் ஆல்பன் செல்வா தாயாரின் வங்கி கணக்கையும் போலீசார் முடக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட ரெக்ஸ்பெரின் நர்சிங் மாணவர், ஆல்பன் செல்வா என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்கள். தலை மறைவான ஆறுமுகத்தை பிடிக்க போலீசார் நடவ டிக்கை மேற்கொண்டு உள்ள னர். அவர் மீது ஏற்க னவே கோட்டார், அஞ்சு கிராமம் போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்ளது.

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சேகர் தலைமையில் அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தேங்காப்பட்டணம் பழைய பள்ளிக்கூடம் தெருவில் சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனத்துடன் நின்ற ஒருவர் போலீசை கண்டதும் ஓட முயற்சி செய்துள்ளார். போலீசார் தடுத்து, அவரை பிடித்து விசாரித்தனர்.

    அவரிடம் எடை தராசு மற்றும், 100 கிராம் கஞ்சா, கஞ்சா பார்சல் செய்ய பயன்படுத்தும் பாலிதீன் பைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையம் கொண்டு விசாரித்தனர். விசாரணையில் சம்மந் தப்பட்டவர் கீழ்குளம் பகுதி மரகதம் மகன் ஜெரோம் மேக்ஸ் (27) என தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • அதிராம்பட்டினம் ரெயில்வே கேட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாகனம் வருவதைக் கண்டுவாகன த்தை போலீசார்பின்தொடர்ந்து வந்தனர்.
    • போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்தனர்.

    மதுக்கூர்:

    சென்னையில் இருந்து கஞ்சா போன்றபோதைப் பொருள் திருத்துறைப்பூண்டிக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அதிராம்பட்டினம் நகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அதிராம்ப ட்டினம் ரெயில்வே கேட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாகனம் வருவதைக் கண்டுவாகன த்தை போலீசார்பின் தொடர்ந்து வந்தனர் அப்போது திடீரென போலீசார்வாக னத்தை மடக்கி சோதனை யிட்டனர்.

    இதில் அதிராம்ப ட்டினம் மேலத் தெரு தமிழ்அன்சாரி (35), கடற்கரை தெரு இன்செத்துல்லா (30), திருத்துறைப்பூண்டி முகமது தாவித் (27) ஆகியோர் கஞ்சா போன்ற போதை பொருட்கள் 3 கிலோ கடத்தி வந்தது தெரிய வந்தது.

    ‌ ‌இதனையடுத்து போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்ற வாலிபர் கைதானார்.
    • ராஜபாளையம் அருேக கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருேக கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையம் அருகில் ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த 50 கிராம் கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை கஞ்சா விற்றது தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேச்சு
    • ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சார்பில் மாதாந் திர குற்ற தடுப்பு கூட்டம் நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு குற்ற வழக்கறிஞர்கள், மருத்துவ அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகா ரிகள், சிறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண் டனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேசியதா வது:-

    கஞ்சா, குட்கா புழக்கம் மாவட்டத்தில் அறவே இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபரின் வங்கி கணக்குகள், மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட நபரின் வீடு சோதனையிடப்பட்டு வழக்குக்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட வேண்டும். கஞ்சா, குட்கா எங்கிருந்து பெற்றனர் போன்ற விவரங்கள் சேக ரிக்கப்பட வேண்டும்.

    ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த விதமான பாரபட்சமும் இருக்கக் கூடாது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபருக்கு சரித்திரபதிவேடு தொடங்கப்பட வேண்டும், ரவுடிகளுக்கு நன்னடத்தை பிணை வாங்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

    போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.கந்து வட்டிதொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகள் பதிவிடு பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன் லைன் மற்றும் சைபர் மோசடி களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அந்தந்த போலீஸ் நிலை யங்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அலுவல் செய்வதற்கு அனைத்து முன்னேற்பாடு களையும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த ஆண்டு இதுவரை 52 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பி.டி. செல்லப்பன். அ.தி. மு.க. பிரமுகர். இவரது மகனை கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு காமராஜபுரத்தை சேர்ந்த ஜோஸ்பெ வின் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து இருந்தனர்.

    இவர் மீது ஏற்கனவே கன்னியாகுமரி,வடசேரி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருந்தது. இதையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஜோஸ்பெ வின் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து உள்ளது.

    • திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
    • கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 24), பாலக்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது

    திருச்சி:

    தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருச்சி மாநகர போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் இரண்டு வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வரைந்து சென்று அந்த வாலிபர்களை மடக்கி விசாரித்தனர்.

    பின்னர் அவர்கள் வசம் இருந்து 3 கிலோ கஞ்சா செய்யப்பட்டது. பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 24), பாலக்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் கஞ்சா கடத்தி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


    ×