search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • வில்லுக்குறி போலீசார் 180 கிராம் கஞ்சா பறிமுதல்
    • சுசீந்திரம் போலீசார் 50 கிராம் கஞ்சா பறிமுதல்

    கன்னியாகுமரி:

    தக்கலை மதுவிலக்கு அமல் பிரிவு (பொறுப்பு) உதவி ஆய்வாளர் ஜெயசேகர் தலைமையிலான போலீசார் நேற்று வில்லுக்குறி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வில்லுக்குறி அரசு தொடக்கப் பள்ளி முன்பு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது 180 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பைக்குடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர், திருவிடைக்கோடை சேர்ந்த விஷ்ணுகுமார் (வயது 19) என தெரிய வந்தது. மேலும் இவர் கள்ளியங்காடு அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

    சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் சொத்தவிளை பீச்சில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப் படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் எறும்புகாடு பக்தன்காடு பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பது தெரிய வந்தது.

    அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது இந்த கஞ்சா அதிக லாப நோக்கோடு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே மணிகண்ட பிரபு மீது ராஜாக்க மங்கலம், கோட்டார் போன்ற போலீஸ் நிலையங்களில் இது போன்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர்.
    • 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து மேலக்காட்டை சேர்ந்தவர்சரபோஜி ராஜன் (வயது 52), வெளிப்பாளையத்தை சேர்ந்தவர்இளமாறன் (46) .

    இவர்கள் சிலருடன் சேர்ந்து இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்தநெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு சொகுசு கார், சுமார் 147கிலோ கஞ்சா பிடிபட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரபோஜிராஜன், இளமாறன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி சரபோஜிராஜன் ,இளமாறன் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கஞ்சா குற்றவாளிகள் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டதன்படி 35 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
    • கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு கஞ்சா மற்றும் கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கஞ்சா குற்றவாளிகள் வங்கி கணக்குகளை முடக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன்படி (2021 - 2022) ஆண்டுகளில் 35 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    மீதமுள்ள கஞ்சா 9 குற்றவாளிகளின் வங்கி கணக்கினை விரைவில் முடக்கம் செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதுபோன்று கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பெருந்துறை போலீசாருக்கு பீடா கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    ஒடிசா மாநிலம் பத்ரா மாவட்டம் திகிடி தாலுகா வருணை பகுதியை சேர்ந்தவர் அபய்குமார் பகரா (வயது 30). இவர் தற்பொழுது பெருந்துறையை அடுத்துள்ள மலைச்சீனாபுரம் பகுதியில் குடியிருந்து பீடா கடை வைத்து நடத்தி வருகிறார்.

    பெருந்துறை போலீசாருக்கு இவரது கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

    இதில் கடையில் 80 கிராம் கஞ்சா மற்றும் 10 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 11 ஆயிரம் இருக்கும் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அபய்குமார் பகராவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா விற்ற ரவுடிகளிடம் இருந்து பிணைய பத்திரம் பெறப்பட்டு அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
    • தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.

    மதுரை

    கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில், குற்றவாளிகளிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 31 வீடுகள், 19 மனைகள், 5 கடைகள், 8 வாகனங்கள் மற்றும் 18 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. இதற்கான பணிகளில் 4 டி.ஐ.ஜி.க்கள், 10 போலீஸ் சூப்பிரண்டுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கஞ்சா வியாபாரிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு வருகிறது. ரவுடி மற்றும் சந்தேக குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய–பத்திரம் பெறப்படும். இது கஞ்சா குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் தென்மாவட்டங்களில் 1000 பேரிடம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நீதிபதி முன்னிலையில் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டது.

    அதன்படி மதுரையில்-142, விருதுநகர்-81, திண்டுக்கல்- 186, தேனி-271, ராமநாதபுரம்- 87, சிவகங்கை- 30, நெல்லை- 43, தென்காசி- 32, தூத்துக்குடி-104, கன்னியாகுமாரி-24 பேரிடம் பிணைய பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

    இந்த காலகட்டத்தில் பிணைய பத்திரம் அளித்தவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால், விதிமுறைகளை மீறியதாக கருதி அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ராகார்க் தெரிவித்தார்.

    • கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை குண்டா சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்
    • கஞ்சா பொட்டலங்களை சிறிய சிறிய பொட்டலங்களாக பிரித்து மாணவர்கள் வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை குண்டா சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள். கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. போலீசார் சோதனை தீவிர படுத்தப்பட்டதையடுத்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தற்பொழுது கொரியர் மூலமாக கஞ்சா பொட்ட லங்களை வரவழைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் கொரியர் நிறுவனங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு பஸ் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வடசேரி போலீசார் நேற்று இரவு வடசேரி பஸ் நிலையத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது வெளியூரில் இருந்து வந்த பஸ் ஒன்றில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் பேக்குடன் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் லெபான் அமராவதி பகுதி யைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் கஞ்சா பொட்டலங்களை அங்கிருந்து கொண்டு வந்து குமரி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் இருவரையும் போலீசார் பிடித்தனர். அருகு விளை யைச் சேர்ந்த சிவக்குமார், பெரிய விளையைச் சேர்ந்த நந்தகுமார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    வெளியூர்களிலிருந்து கொண்டுவரும் கஞ்சா பொட்டலங்களை சிறிய சிறிய பொட்டலங்களாக பிரித்து மாணவர்கள் வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை 

    கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


    வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கும்பல்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.


    அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, ஒரு மெபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்த அஜித் (வயது 25), கருணாநிதி நகரை சேர்ந்த ஷர்மிளா பேகம் (41) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.


    இதேபோல சரவண ம்பட்டி போலீசார் சங்கனூர் ரோடு டாஸ்மாக் கடை அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற உடையாம்பாளையத்தை சேர்ந்த சிவா என்ற சிவபிரசாத் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.  

    • கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி வருகிறார்கள்‌.
    • அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் விடுத்தல் கஞ்சா விற்பனை செய்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவ தும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி வருகிறார்கள்‌.

    இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் வடசேரி அறுகுவிளை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாகநின்ற இரண்டு வாலிபர்களை பிடித்தனர்.

    பிடிபட்டவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் பிடிபட்ட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் போலீசை தகாத வார்த்தையால் பேசியதுடன் தாக்க முயன்றனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை வடசேரி போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்து விசாரித்த போது பிடிப ட்டவர்கள் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 21) என்பதும் மற்றொருவர் அறுகுவிளை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் விடுத்தல் கஞ்சா விற்பனை செய்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தில்லை நகரில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தாந்தோணிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூர் ராயனூர் பகுதியில் உள்ள தில்லை நகரில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தாந்தோணிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினா்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தேவராஜ் (வயது 48), ராணி (47) ஆகிய 2 பேரையும்போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • 3 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 2.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கருமத்தம்பட்டி:

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் நால்ரோடு பகுதியில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சப் -இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமை யிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வாகராயம்பாளையத்தை சேர்ந்த தீபக்குமார்(20) சந்தோஷ்(24) மற்றும் சதீஷ்குமார் (32) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 2.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவர்கள் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

    • தப்பி ஓட முயன்றதை சுதாரித்து கொண்ட போலீசார் சுற்றி வளைத்து இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அதற்குள் சுதாரித்து கொண்ட போலீசார் சுற்றி வளைத்து 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் தஞ்சை சிங்கபெருமாள் கோவில் குளம் வடகரை ரெட்டிபாளையம் ரோடு சூரியபிரகாஷ் (வயது 24), காந்திபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (25) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியபிரகாஷ், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, மொடக்குறிச்சி, வரப்பாளையம் காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த 25 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பவானி ரோடு, நெரிகல்மேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×