search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கன்னியாகுமரி ;

    தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் கோழிப் போர்விளை பகுதி யில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசி னர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கோடியூரை சேர்ந்த மணி கண்டன், முகமாற்றூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 22), பள்ளியாடி அருவிதோட்டம் பகுதியை சேர்ந்த வினித் (22) என தெரியவந்தது.

    மேலும் எங்கிருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது? எனவும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி கே.டி.சி.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வாலிபரின் மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் 10 பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.டி.சி.நகர் கொத்தனார் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கொத்தனார் காலனியில் இருசக்கர வாகனத்துடன் சந்தே கப்படும்படி நின்ற வாலி பரை பிடித்து விசாரித்தனர்.

    அந்த வாலிபர் தூத்துக்குடி மீளவிட்டான்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்( வயது 21) என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்ததை தொடர்ந்து அவரையும், அவரது மோட்டார் சைக்கிளையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் 10 பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த வேட்டுவன்புதூர் மாதேஸ்வரன் கோவில் அருகே கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கொங்கர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த சந்திரன் (47) என்பதும், சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சந்திரனை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் தக்கலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
    • 70 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை டி.எஸ்பி. கணேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்பட போலீசார் நேற்று மாலை தக்கலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது 4 பேர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் 70 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை செய்தபோது கல்லூரி மாணவர் உள்பட திருவிதாங்கோட்டை சேர்ந்த ஷிபான்( வயது22) வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த முகம்மது ரியாஸ் (22) திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த இம்ரான் (33) மற்றும் பயாஸ் (21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து 4 பேைரயும் கைது செய்தனர்.

    • கஞ்சா வழக்கில் கைதான 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.
    • கடந்த ஜனவரி முதல் இதுவரை 516 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகா்க் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்ற 157 பேரின் பெயா்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் 53 கஞ்சா வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 85 போ் கைது செய்யப்பட்டனா்.

    கைதான 72 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்றதாக கடந்த ஜனவரி முதல் இதுவரை 516 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ.25.33 லட்சம் மதிப்புள்ள 2,598 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    கஞ்சா, குட்கா போன்றவை விற்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் 7603846847 அல்லது ஹலோ போலீஸ் மொபைல் எண் 8300031100 ஆகியவற்றிக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர் பெயர் மற்றும் தகவல்களில் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கஞ்சா விற்ற 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.

    மதுரை

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, நாகமலை புதுக்கோட்டை, சேடப்பட்டி, ஆஸ்டின்பட்டி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றதாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களில் 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகளின் ரூ.7 கோடியே 3 லட்சத்து 51ஆயிரத்து 922 மதிப்பு உள்ள அசையா சொத்துக்கள், ரூ.8லட்சத்து 49 ஆயிரத்து 981 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்பட ரூ.7 கோடியே 12 லட்சத்து 1903 மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் தொடர்பு உடைய 205 பேரில், 109 பேரிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. இதில் ஒப்பந்த விதிகளை மீறியதாக 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கஞ்சா வியாபாரிகள் மட்டுமின்றி அவர்களின் 41 உறவினர்களுக்கு சொந்தமான 15 வீடுகள், இடம் மற்றும் 21 நிலங்கள், 5 கடைகள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய சொத்துக்களும் முடக்கப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மற்றும் உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்களும் முடக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தெரிவித்தார்.

    • ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்து ரெயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுகிறது.
    • மோப்ப நாய் ஆகாஷ் மூலம் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என சோதனை செய்து வந்தனர்.

    சேலம்:

    ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்து ரெயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுகிறது. இதனால் போலீசார் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் புதிதாக வாங்கப்பட்ட ஆகாஷ் என்ற மோப்பநாய்-க்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார் சத்தியமூர்த்தி, முத்துவேல், சக்திவேல் ஆகியோர் இன்று காலை மோப்ப நாய் ஆகாஷ் மூலம் ெரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என சோதனை செய்து வந்தனர்.

    அப்போது யஷ்வந்பூர் ரெயலில் மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்பட்டது. அப்போது பொதுெபட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை மோப்பநாய் கவ்வி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது.

    இந்த பையில் சுமார் 5 கிலோ கஞ்சா மற்றும் 3 பண்டல்களில் 6 கிலோ என மொத்தம் 11 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோப்பநாய் கஞ்சா பிடிப்பதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கஞ்சாவிற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

    திருச்சி:

    திருச்சி மாநகரம் மில் காலனி மாரியம்மன் கோயிலின் பின்புறம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு துளசி(வயது73) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரியமங்கலம் போலீசார் அவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் திருச்சி மாநகரம் சிந்தாமணி பஜார் பூசாரி தெருவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டை போலீசார் சிந்தாமணி காந்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்(22), சதீஷ்குமார்(21) என்ற மேலும் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் மீது ஏற்கனவே 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சதீஷ்குமார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் 1.250 கிலோகிராம் கஞ்சா, 3 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

     மதுரை

    கோரிப்பாளையம், ஜம்புேராபுரம் மார்க்கெட், பெயிண்ட் கடை அருகே 3 பேர் கஞ்சா விற்பதாக தல்லாகுளம் போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு 3 பேர் பிடிபட்டனர்.

    அவர்களிடம் 1.250 கிலோகிராம் கஞ்சா, 3 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் ஜம்புேராபுரம் இளங்கோ மகன் கிஷோர் (20), தெற்கு வாசல் எப்.எப். ரோடு, அண்ணாதுரை மகன் மணிகண்டன் (19), தெற்கு வாசல், செட்டியூரணிசந்து மணிகண்டன் மகன் சந்தோஷ்குமார் (19) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை
    • கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வடசேரி சப்- இன்ஸ் பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகப்படியாக நின்ற கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த அஜித்ராஜ் (வயது 20) ஏன்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அஜித்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயில்1-வது நடைமேடையில் வந்து நின்றது.
    • ரெயில் நிலையத்தில் மின்தூக்கி அருகே பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, போலீசார் அசோக்குமார், கோபால் ஆகியோர் திருப்பூர் ரெயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயில்1-வது நடைமேடையில் வந்து நின்றது.ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர், ரெயில் நிலையத்தில் மின்தூக்கிஅருகே பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார். உடனடியாக அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனைசெய்தனர்.

    அந்த பைக்குள் 7 பொட்டலங்களில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவைகடத்தி திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார்.விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம் பாலங்கிர் பகுதியை சேர்ந்தஆனந்த்குமார் சாகு (வயது 34) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த்குமார் சாகுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

    • தச்சநல்லூரை சேர்ந்த சீதாராமன் , ராக்கேஷ் என்பதும் அவர்களிடம் 1 கிலோ 960 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் நடந்திய விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு நான்கு வழிச்சாலை பகுதியில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் தச்சநல்லூரை சேர்ந்த சீதாராமன் (வயது25), ராக்கேஷ் (19) என்பதும் அவர்களிடம் 1 கிலோ 960 கிராம் கஞ்சா இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.  

    ×