search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.
    • ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை:

    மதுரை மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக சிறை நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

    அவர்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களை விற்க சிறை வளாகத்தில் அங்காடி உருவாக்கப்பட்டு உள்ளது. மதுரை மத்திய ஜெயிலுக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய ஜெயிலிலும் கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து 1 லட்சம் புத்தகங்களை பெறுவது என்று ஜெயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.

    சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு புத்தகங்களை சேகரித்து வருகின்றனர். 'புத்தக திருவிழா முடிவதற்குள் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

    இந்தநிலையில் மதுரை கூடல்நகர், ரெயிலார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 92) என்பவர் மதுரை மத்திய ஜெயிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "தன்னிடம் உள்ள 300 புத்தகங்களை, ஜெயில் நூலகத்திற்கு இலவசமாக வழங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேலும் வயது முதிர்வு காரணமாக தன்னால் நேரில் வர முடியாது. அதனை நேரில் வந்து பெற்றுச்செல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மத்திய ஜெயிலில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்து 300 புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

    ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுபற்றி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, ஏராளமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கி, வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்து வந்தேன். எனக்கு புத்தகங்களே சொத்து, பொழுதுபோக்கு, வெளியில் யாரை பார்க்கச் சென்றாலும், என்னை பார்க்க வருவோருக்கும் புத்தகமே பரிசாக அளிப்பேன்.

    என்னிடம் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன. அவற்றை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் மதுரை சிறைச்சாலையில் நூலகம் அமைப்பது தெரியவந்தது. அதனால் என்னிடம் இருந்த 300 புத்தகங்களை வழங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சுண்டப்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (58). இவரு க்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் சுப்பிரமணி யத்துக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் சுப்பிர மணியம் தொடர்ந்து மது அருந்தி வந்தார்.

    இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்து உள்ளார். ஆனால், நோய் குணமாகாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அவரது மகன் நாகராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது மகன் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    தஞ்சாவூர் பூதலூர் காங்கேயர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 70). இவர், வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து முத்துகிருஷ்ணனின் மகன் செந்தில்குமார் (43) பூதலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே மங்காட்டுவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 72). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் டயாலிஸ் செய்துவந்தார் இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் ராஜேந்திரன் கிடந்தார். இதை அவரது இளைய மகன் பார்த்து உடனே ஆற்றூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு 2 நாள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இவரது மூத்தமகன் ஷாஜி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகரை பெற்றுக்கொண்டு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    • கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அந்த முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.
    • இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, நசியனூர் ரோடு, காந்திஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (77). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதால் மனம் உடைந்த தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.

    அதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே தண்டபாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை
    • விசாரணையில் பலியான முதியவர் தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடலில் இன்று ஏராளமானோர் புனித நீராட குவிந்திருந்தனர்.

    அந்த பகுதியில் காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கரை ஒதுங்கினார். இது குறித்து கன்னியா குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு இறந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பலியான முதியவர் தோவாளை பகுதியைச் சேர்ந்த லெட்சு மணன் (வயது 61) என்பதும், வெள்ளமடம் பகுதி யில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் இன்று அதிகாலை தை அமாவாசையையொட்டி புனித நீராடுவதற்காக கன்னியாகுமரிக்கு சென்றார்.

    பின்னர் அவர் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கடலில் முழ்கி பலியாகி உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
    • நாமக்கல் செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ராமசாமி மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 7-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ராமசாமி மீது மோதியது.

    இதில் ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய திருமலைப்பட்டியைச் சேர்ந்த சங்கித்ராம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை.
    • பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி

    கோத்தகிரி அருகே தொட்டனி கிராமத்தில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது67). கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என செல்வமணி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தொட்டனிலிருந்து கனகாம்பை செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்ட முட்புதரில் காணாமல் போன பால்ராஜ் சடலமாக உடல் அழுகிய நிலையில் காணப்பட்டு கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ராமதேவம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஞானராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ராமதேவம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 63). கூலித் தொழிலாளி.

    இவர் தனது வீட்டில் இருந்து செட்டியாம்பாளையம் கருப்பனார் கோவில் வரை தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். வழக்கம்போல் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து ராமதேவம் வக்கீல் சதாசிவம் என்பவர் வீடு அருகே நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஞானராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் தள்ளாத வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம்.
    • கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டேனீஸ்பேட்டை பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 90). இவருடைய மனைவி பொன்னம்மாள் ( 82).

    இவர், தன்னுடைய மகள் கமலா (60) என்பவருடன் கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பழனியப்பனுக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டாார்.

    எனது கணவர் ஏற்கனவே குப்பாயி (70) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த தொடர்பை கைவிடுமாறு நாங்கள் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

    தற்போது 3-வதாக பழனியம்மாள் (70) என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். எங்களுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை கணவர், ஆசைநாயகி பழனியம்மாளுக்கு எழுதி வைத்துள்ளார்.

    மேலும், நாங்கள் பேரனுடன் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு எங்களை மிரட்டுகிறார்.

    கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் இந்த வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம். கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் அதில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 98 வயது முதியவரை சிறையில் வைத்திருப்பது நியாயமும் இல்லை.
    • முதியவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து பிரியா விடை கொடுத்து அனுப்பினர்

    புதுடெல்லி:

    உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 98 வயதான ராம்சுரத் என்ற முதியவர் ஒரு வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அயோத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    தண்டனை முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் விடுதலை ஆக இருந்தார். ஆனால் மே மாத இறுதியிலேயே ராம் சுரத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து 90 நாட்கள் பரோலில் சென்றார்.

    அதன்பிறகு தொற்று குணமாகி மீண்டும் சிறைக்கு சென்ற அவர் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனார். விடுதலை ஆனதும் ஜெயில் ஊழியர்கள் அந்த முதியவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து பிரியா விடை கொடுத்து அனுப்பினர். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சிறைத்துறை டி.ஜி.பி.யின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், அயோத்தி சிறையில் மாவட்ட கண்காணிப்பாளர் சசிகாந்த் மிஸ்ரா புத்ரவாத், முதியவர் ராம் சுரத்தை காரில் அழைத்து செல்லும் காட்சிகள் இருந்தன.

    மேலும் அந்த வீடியோவில் மொழி பெயர்க்கப்பட்ட வாசகத்தில், 98 வயதான சகோதரர் ராம்சுரத்ஜியை அழைத்து செல்ல யாரும் வரவில்லை. எனவே அயோத்தி சிறை கண்காணிப்பாளர் அவருடைய காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புகிறார் என கூறப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ டுவிட்டரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், பல கருத்துக்களையும் பெற்றுள்ளது. அதில் ஒருவர், ராம்சுரத் எந்த வழக்கில், ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்?, விடுதலை ஆகும் போது அவர் கோவிலுக்கு செல்வார் என்று கூறுகிறார்கள். எனவே அவர் கோவில் பூசாரியாக இருக்கலாம். ஒருவேளை சனாதன தர்மத்திற்காக உறுதியாக நின்றிருக்க வேண்டும். அதற்காக அவர் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என கூறி உள்ளார்.

    மற்றொரு பயனரின் பதிவில், 98 வயது முதியவரை சிறையில் வைத்திருப்பது நியாயமும் இல்லை, மனிதமும் அல்ல என கூறி உள்ளார். மேலும் ஒரு பதிவில், எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இது ஒரு அற்புதமான தருணம் என கூறப்பட்டுள்ளது.

    ×