search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212363"

    • 40 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.
    • தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    நிழல் தரும் மரக்கன்றுகளை இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம் வழங்கினார்.

    மரக்கன்றுகளை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் எம்.ராம்குமார், வாகீஸ்வரன் ஆகியோர் நடவு செய்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், தலைமை காவலர் பாலமுருகன், மகளிர் காவலர் சண்முகப்பிரியா, அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், இயற்கை ஆர்வலர் ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம் சுமார் 40 ஆண்டுகளாக மரக்கன்று களை உற்பத்தி செய்து பொது இடங்களில் நட்டு பராமரித்து வருகிறார்.

    • 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
    • “பசுமை ராமநாதபுரம்” உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியம் தேவிபட்டினம் ஊராட்சியில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். அவர் நாற்றங்கால் பண்ணையில் தென்னை மற்றும் பல்வேறு வகை மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டு பேசியதாவது:-

    வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தேவையான தென்னங்கன்று களை வாங்கி பயன்பெற வேண்டும். தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்து "பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படையில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

    ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25லட்சம் கன்றுகளும், பள்ளி கல்வித்துறையின் மூலம் 10லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப் பாண்டில் 1 கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன. நடவு செய்வது மட்டுமின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் பராமரித்தல், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு "பசுமை ராமநாதபுரம்" உருவாக செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தோட்ட கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சுமார் 200 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மரக்கன்று நட்டு கொடுத்துள்ளனர்.
    • மரங்களை நன்றாக வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக வனநாளை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வீரராசு, பொருளாளர் கனகராஜ், துணைத்தலைவர் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், சக்திவேல், ஆசிரியர்கள் முருகானந்தம், மாணிக்கம் மற்றும் சுமார் 200 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மரக்கன்று நட்டு கொடுத்துள்ளனர். பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-

    மரங்களை வளர்த்து நன்றாக காய்க்கும் நிலைக்கு கொண்டு வரும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

    மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மாணவர்களிடையே மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இப்பணியை செய்வதாகவும், இப்பணி தன் வாழ்நாளில் நிறைவான பணியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

    • கரூரில் அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து அய்யர்மலை பகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டது
    • சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி பிச்சை மரக் கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    குளித்தலை:

    குளித்தலை அருகே சத் தியமங்கலம் ஊராட்சிக்குட் பட்ட அய்யர்மலை பகுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் 70-வது பிறந்த–நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெ–ரும் இயக்கம் தொடங்கப் பட்டது.இதனை கரூரில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழி–காட்டுதலின்படி அய்யர் மலை பகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி பிச்சை மரக் கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். விழாவில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நீல–கண்டன், மேலாளர் சுரேஷ்,குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், சமூக ஆர்வ–லர் குமார் மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை வனச்சரக அலுவலர் செல்வகுமார், வனவர் கோபாலகிருஷ்ணன் மற் றும் வனத்துறையினர், சுகாதாரத்துறை சார்பாக டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்துவத்துறையினர் மற்றும் 500-க்கும் மேற் பட்ட பொதுமக்கள் மரக்கன்று–களை நட்டு வைத்தனர்.

    • தஞ்சையில் வருகின்ற 11-ந் தேதி நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
    • கருத்தடை முடிந்து 3 நாட்களுக்கு பின்னரே அவற்றை வெளியில் விடுகிறோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள விலங்குகள் வதை தடுப்பு சங்க அலுவலக வளாகத்தில் (எஸ்.பி.சி.ஏ) இன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சையில் வருகின்ற 11-ந் தேதி நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

    கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு விலையின்றி வெறிநோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பாரம்பரிய நாய் வகைகளை பராமரித்து அவற்றின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்து கூற வேண்டும், நாய் இனங்களை பாதுகாக்க வேண்டும், எஸ்.பி.சி.ஏ பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

    எஸ்.பி.சி.ஏ.வில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சுகாதாரமான முறையில் ஒரு ஆபரேஷன் தியேட்டரில் வைத்து இந்த பணி நடக்கிறது . கருத்தடை முடிந்து 3 நாட்களுக்கு நாய்களுக்கு தேவையான உணவு கொடுத்து பராமரித்த பின்னரே அவற்றை வெளியில் விடுகிறோம்.

    எத்தனை நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் பணி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனை கல்லூரி டீன் நர்மதா, தாசில்தார் சக்திவேல், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், டாக்டர் ராதிகா மைக்கேல், பேராசிரியர் சுகுமார், லயன்ஸ் கிளப் முகமது ரபிக், பொறியாளர் முத்துக்குமார் , எஸ்.பி.சி.ஏ உறுப்பினர் சதீஷ், தஞ்சை ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்று வளர்ப்பு திட்டப்பணிகள் மந்தம் தண்ணீர் ஊற்றாததால் கருகி வருகின்றன
    • 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உள்பட்ட அபிராமம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் மரக்கன்று வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டபோதி லும், சில நூறு மரக்கன்றுகள் கூட இப்போது இல்லை. இதனால் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கபடுகின்றனவா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஒடைகள், வரத்துக்கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வாங்கப்பட்டு நடப்படுகின்றன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் பசுமை பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஊரகப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக மரக்கன்றுகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் வேம்பு, அரசு மா, பலா, புளி, தேக்கு புங்கன் போன்ற 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.

    மொத்தமாக மரக்கன்று கள் நடப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர்தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் சில 100 குழிகளில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை வைத்து பெயரளவில் தண்ணீர் ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறும்போது, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பல குழிகளில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஆனாலும் அதிகாரிகள் உத்தரவின்படி 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும் பல கிராமங்களில் 100 நாள் திட்டம் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதாக கணக்கு எழுதப்படுகிறது. ஆனால் எங்குமே மரக்கன்றுகள் இல்லை.

    பணியாளர்கள் எண் ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டவுடன் ஒருசில குழிகளில் மட்டுமே தண்ணீர் ஊற்றப்படுகிறது. பிறகு பணியாளர்கள் ஓய்வு எடுக்க சென்று விடுகின்றனர். தண்ணீர் ஊற்றியும் மரக்கன்றுகள் வளராததற்கு என்ன காரணம்? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.

    எனவே அரசு மரக்கன்று கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் ஊற்றுவது பெயரளவில் மட்டுமே நடக்கிறது. இதனால் முறையாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவும் 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுபற்றி 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கொண்டு வரப் பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் அரசு நிலங்கள், சாலையோரங்கள், கண்மாய், குளம், ஊரணி கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் அக்டோ பர் மாதம் முதல் டிசம்பர் வரை மட்டும் தான் பரவ லாக மழை இருக்கிறது. மற்ற 9 மாதங்களில் 55 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலன கிராமங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை யில், மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்றுவது சிரம மாக உள்ளது.

    இருந்தபோதிலும் ஊராட்சிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் இருப்பு உள்ள இடங்களில் அடி பம்பு பொருத்தி தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு தண்ணிர் ஊற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • மரக்கன்றுகளை நன்றாக வளர்க்க வேண்டும்.
    • பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவில் நந்தவனத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்று வரும் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்களுக்கு மஞ்சப்பை மரக்கன்றுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது: முதல்-அமைச்சர் உங்களை போன்ற பள்ளிக் குழந்தைகளுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பள்ளி குழந்தையாகிய நீங்கள் இன்று வாங்கிச் செல்லும் மரக்கன்றை நன்றாக வளர்க்க வேண்டும். பூமித்தாயை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும். உலக வெப்பமயமாதலில் நம்மை பாதுகாத்து கொள்ள மரங்கள் நடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • கல்லூரி மாணவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது என எடுத்துரைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி மாணவர்கள் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் உள்ள தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்து வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது எனவும் குப்பைத்தொட்டியில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.

    பின்னர் அதே பகுதியில் புவி வெப்பமயமாதலை தடுக்க ஒரே நேரத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துணைத் தலைவர் சபிதா பாபு ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    • மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 53 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
    • 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலை வைத்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் லலிதா, எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாதம், மாதம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நட த்தப்படுகிறது. இம்முகாம் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை இங்கு கண்காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது. குறிப்பாக வேளாண்மை த்துறையின் மூலம் செயல்படு த்தப்படும் திட்டங்கள் பற்றி செயலி அறிமுக ப்படுத்த ப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்ச ரின் உயரிய நோக்கம் அனைவ ருக்கு ம் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான். முதலமைச்சர் பொறுப்பே ற்றவுடன் 4 முறை நடத்த ப்பட்ட கிராம சபைக்கூட்டம் தற்போது 6 முறையாக மாற்றி நடத்தப்படு கிறது. கிராம சபைக் கூட்டத்தில் வாசிக்கின்ற வரவு, செலவு திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்க ளுக்கு ஏற்படும் சந்தே கங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் நேற்று 53 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள 72 மனுக்கள் பரிசீலனைக்கு வைக்க ப்பட்டுள்ளன.மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், ஆதிதி ராவிடர்நலத்துறை யின் சார்பில் 9 பயனாளி களுக்கு பட்டாவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களும் வழங்க ப்பட்டன.

    இதில் வேளா ண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, சமூக நலத்துறை தாசில்தார் சுந்தரி, சீர்காழி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனை த்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வல்லம்:

    தஞ்சை அருகே வல்லம் பஸ்ஸ்டாண்டில் விவசாயிகளுக்கு தேவையான திடக்கழிவு மேலாண்மை திட்ட இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

    வல்லம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விற்பனை செய்வதற்காக இந்த விற்பனை மையம் தொடங்கப்படம்டுள்ளது. இதை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    முதல்வர் உத்தரவுக்கிணங்க வல்லம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது தினமும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் மொத்த குப்பைகள் 4.230 டன்னில் மக்கும் குப்பை 2.540 டன் மற்றும் மக்காத குப்பை 1.040 டன் சேகரம் செய்யப்படுகிறது.

    இந்த குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளொன்றுக்கு சராசரி சுமார் 200 கிலோ உரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த உரம் 2021-22 ம் நிதியாண்டில் ரூ 33500க்கும், 2022-23 ம் நிதியாண்டில் ரூ.37000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட அளவில் உரங்களை வளம் மீட்பு பூங்காவில் உள்ள மரக்கன்றுகளுக்கு இடப்பட்டு அதன் மூலம் விளையும் காய், கனிகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. மேற்படி உரங்களை மரம் வளர்ப்பு மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தினால் அதிகமாக மகசூல் கிடைக்கும் வளம் மீட்பு பூங்காவில் நர்சரி மூலம் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் தயார் செய்யப்படுகிறது.

    உற்பத்தி செய்யப்படும் உரங்களை பற்றி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், பயன்பெறும் வகையிலும் வல்லம் பஸ்ஸ்டாண்டில் பேரூராட்சி மூலம் இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த விற்பனை மையத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவைத் தந்து இயற்கை விவசாயத்தை ஊக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் பிரகந்தநாயகி, துணை தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகேகதிராம ங்கலம் கண்ணன் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திருவேங்கடம் 33-ம் ஆண்டு நினைவாக பள்ளி வளாகம் மற்றும் கதிராமங்கலம், தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்று கள் நடப்பட்டது.

    விழாவை கதிராமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    சீர்காழி வட்டா ரக்கல்வி அலுவலர்கள் பொன்.பூங்குழலி, நாகராஜன் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

    • தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது.
    • 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது. அதனை அதிகப்படுத்தும் வகையில் பசுமை தமிழகம் திட்டத்தை முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் 2032 ம் ஆண்டுக்குள் வனப்பரப்பை 33 சதமாக உயர்த்தும் வகையில், இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 15 கோடி மரக்கன்று நடப்படும் .அதற்கு அடுத்த ஆண்டு 25 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்(பல்லடம்), அசோகன் (பொங்கலூர்), பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×