என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை திருட்டு"

    • ராஜபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டது.
    • பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு தப்பினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் காஸ்ட்ரோ (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று தூங்கினார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    காலையில் எழுந்த மோகன் காஸ்ட்ரோ மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ராஜ பாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகள் மீட்டக்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. குற்றவாளிகளை பிடிக்க ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர ரோந்து சுற்றி வந்தனர்.

    சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

    அவர்க ளிடம் விசாரணை நடத்திய போது பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பாண்டி மகன் தங்கராஜ் (வயது 33), கருமலையான் மகன் செல்லமுத்து (24) என தெரியவந்தது. இவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    பரமக்குடி அருகே நயினார்கோ விலை அடுத்துள்ள மும்முடி சாத்தானை சேர்ந்த ரோஜா என்பவரது வீட்டில் கடந்த வாரம் 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு திருடு போனது. இது தொடர்பாக நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அந்த பெண்ணை கைது செய்து 8 பவுன் நகையை மீட்டனர்.

    • 7 பவுன் நகைகள், 1 பைக் பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த கோணாமேடு அருகே டவுன் போலீசார் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்த விசாரணை நடத்தினர்.

    3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார் வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 24) சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த காமேஷ் (23), வினோத் (26) என்பதும், 3 பேரும் சேர்ந்து வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு, வீடுகளில் புகுந்து நகை திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.

    மேலும் அவர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    பாலப்பள்ளம் அருகே உள்ள வழுதலம்பள்ளம் ஒப்பிவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி பகவதி (வயது 65). இவர் நேற்று திங்கள்நகர் பஸ் நிலையத்திலிருந்து பேருந்தில் மணவாளக்குறிச்சிக்கு சென்றார்.

    அப்போது மாங்குழி பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும்போது பகவதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பஸ்சில் தேடி பார்த்தார். எனினும் செயின் கிடைக்கவில்லை. பகவதியிடம் இருந்து யாரோ மர்ம நபர் செயினை திருடி சென்று விட்டனர். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூசாரி வேல்முருகன் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து வீட்டிற்கு சென்று உள்ளார்.
    • கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு சாமி நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தினந்தோறும் பூஜை நடப்பது வழக்கம்.

    நேற்று கோவில் பூசாரி வேல்முருகன் பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு சென்று உள்ளார். இன்று காலை கோவில் வாசல் உள்ள கதவை திறந்து கோவிலை பார்த்தபோது கோவிலில் கதவுகள் உடைக்கப்பட்டு சாமி நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் மேலும் சங்க நிர்வாகிகள், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பார்வை யிட்டு மர்ம ஆசாமியை தேடி வருகி ன்றனர்.

    • சண்முகநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து தங்க நகை, ரொக்க பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • திருட்டு தொடர்பாக சண்முகநாதன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகள் பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்து இருந்தார். குழந்தை பிறந்து மகளை செய்யாறில் உள்ள மருமகன் வீட்டில் அழைத்து சென்று விடுவதற்கு நேற்று முன் தினம் சண்முகநாதன் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.

    நேற்று சண்முகநாதனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    சண்முகநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் தங்க நகை, ரொக்க பணம் ரூ.1 லட்சம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சண்முகநாதன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • திருமங்கலம் அருகே பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அமர்நாத். இவரது மனைவி காயத்ரி (வயது 30) சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் உறவினர் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரி திருமங்கலத்திற்கு வந்தார். அவர் கள்ளிக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்று விட்டு, மீண்டும் திருமங்க லத்திற்கு அரசு டவுன் பஸ்சில் திரும்பி வந்தார்.

    தான் அணிந்திருந்த நகை களை பாதுகாப்புக்காக கழற்றி பைக்குள் வைத்தி ருந்தார். இந்தநிலையில் திருமங்கலம் பஸ் நிலை யத்தில் இறங்கியபோது அவரது பை திறந்திருந்தது. உள்ளே பார்த்தபோது, பையில் வைத்திருந்த 7½ பவுன் தங்கச்செயினை காணவில்லை.

    யாரோ மர்ம நபர்கள் ஓடும் பஸ்சிலேயே காயத் ரியின் பையில் இருந்த தங்கச்செயினை நைசாக திருடிச்சென்று 

    • மாட்டுத்தாவணியில் ஜவுளி கடையில் நகை திருடிய தாய்- மகள் கைது செய்யப்பட்டனர்.
    • கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. அங்கு ஊழியர்கள் நேற்று மாலை பணியில் இருந்தனர். அப்போது அங்கு ரூ.2.10 லட்சம் மதிப்புடைய 5 பவுன் நகை திருடு போனது.

    இதுகுறித்து மாட்டுத்தா வணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் பர்தா அணிந்த 2 பெண்கள், ஜவுளிக்கடையில் நகை திருடியது தெரியவந்தது. இருவரும் செக்கானூரணி, பன்னியான் ரோடு ராமகிருஷ்ணன் மனைவி சுமதி (50), சரவணன் மனைவி பிரியதர்ஷினி (28) என்பது தெரிய வந்தது. இருவரும் தாய்-மகள் ஆவார்கள்.

    மாட்டுத்தாவணி ஜவுளிக்கடையில் கவரிங் செயினை வாங்கிய அவர்கள், ஒரிஜினல் நகைக்கடை பிரிவுக்கு வந்தனர். அப்போது அவர்கள் பார்வையிடுவது போல், கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பத்மாராணி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
    • 5 பவுன் தங்க செயினை கழற்றி வீட்டில் வைத்தார்.

    கோவை

    கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பத்மாராணி (வயது 37). இவர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது 5 பவுன் தங்க செயினை கழற்றி வீட்டில் வைத்தார். பின்னர் தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து தான் நகை வைத்திருந்த இடத்தில் பார்த்தார்.

    அப்போது நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீடு முழுவதும் அவர் நகையை தேடி பார்த்தார். ஆனால் நகை கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பத்மாராணி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்றது யார்? மர்ம நபர்கள் யாராது வீடு புகுந்து நகையை திருடி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 நாட்கள் முன்பு அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 2 வாலிபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அருமை கண்ணு வயது 90 வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
    • 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது தாயார் அருமை கண்ணு (வயது 90). சம்பவத்தன்று இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்க அன்பழகன் ஏற்பாடு செய்தார். அதன்படி குளிர்சாதன பெட்டியை கொண்டு வந்த, திருநள்ளாறு தென்னங்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (32), அவரது நண்பர் ராஜபாண்டியன் (37) ஆகிய 2 பேர், மூதாட்டியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை திருடியதாக கூறப்படுகிறது.

    மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, அன்பழகன் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார், சந்தேகத்தின் பேரில் குளிர்சாதன பெட்டி வைக்க வந்த ரஞ்சித் மற்றும் ராஜபாண்டியை பிடித்து விசாரித்தனர். அப்போது, மூதாட்டி உடலில் இருந்த தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    • சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகின்றனர்.
    • உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

    இதற்கிடையே தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகின்றனர். அதேபோல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து மாரியம்மனை தரிசிக்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தங்க நாணயங்களை மறைத்து எடுத்து சென்றதாக புகார் எழுந்தது. இது பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது.

    இன்று சமயபுரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் கோவிலுக்கு விரைந்தனர். உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இதில் மேற்கண்ட அதிகாரி கைவரிசை காட்டி இருந்தால் உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    அழகான புகைப்ப டங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகி றேன் என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கும் தாமோதரன் என்கின்ற ரவிக்குமார் (வயது 25) இன்ஜினியர் பட்டதாரி என்பவருடன் முகநூல் மூலமாக அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்கள் ஆன பின்னர் செல் நம்பரை பகிர்ந்து கொண்டு நட்பாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் தாமோ தரன் கூறியுள்ளார். உன்னு டைய அழகான புகைப்ப டங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகி றேன் என்று கூறியுள்ளார்.

    அந்த இளம் பெண் தன்னிடம் போட்டோ எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் எனக்கு போட்டோகிராபி தெரியும் என்றும் நான் நேரில் வந்து உன்னை அழகாக படம் பிடித்து இயக்குனருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு சம்மதம் தெரி வித்த அந்தப் பெண்ணிடம் வீட்டின் முகவரியை கேட்ட றிந்தார். கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து உன் வீட்டருகே அருகே தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    பின்னர் அந்தப் பெண் தாமோதரனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பெண்ணிடம் போட்டோ எடுக்க வேண்டும் உன்னிடம் இருக்கும் உடையிலே அழ கான உடையை உடுத்திக் கொண்டுவா என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் சினிமா ஆசை உச்சத்திற்கு ஏற போட்டி ருந்த நகைகள் எல்லாம் கழட்டி வைத்து விட்டு அறையினுள் சென்றார். இதனை எதிர்பார்த்திருந்த தாமோதரன் நகைகள் மற்றும் செல்போனை எடுத்து க்கொண்டு அங்கி ருந்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளார்.

    துணி மாற்றிக் கொண்ட இளம்பெண் வெளியில் வந்து பார்த்த பொழுது நகை, செல்போனை காண வில்லை. அங்கிருந்த தாமோ தரனையும் காண வில்லை. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்தில் இது குறித்து புகாரளி த்தார். வழக்கு பதிவு செய்த போலீ சார் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் தனிப்படை அமைத்து தாமோதரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் செல் போன் நம்பரை வைத்து தாமோதரன் காரைக்கு டியில் இருப்பதை போலீ சார் கண்டுபிடித்தனர். காரைக்குடிக்கு விரைந்த சின்னசேலம் போலீசார் தாமோத ரனை மடக்கிப் பிடித்தனர். சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு இன்று அழைத்து வந்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சின்ன சேலம் சிறையில் அடைத்த னர்.

    ×