என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 213649"
- ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார்.
- திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது.
ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். வெயில் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு திருடன் அவரிடம் இருந்த பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு விரட்டினான்.
வெயிலில் மிகவும் சிரமப்பட்டு அவர் நடந்து சென்றார். அதைப்பார்த்த திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. கிழிந்துபோன செருப்பு மற்றும் ஒரு பழைய குடையை கொடுத்தான். பின் அவன் தன் வழியே திரும்பியபோது ஒரு புலி அவனைத் அடித்து கொன்றது.
அப்போது எமதூதர்கள் அந்த வேடனின் உயிரைக் கொண்டு போக வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எமதூதர்களைத் தடுத்து, இந்த வேடன் வைகாசி மாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்கிறான். அதனால் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகிவிட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அந்த திருடனின் உயிரைக்கொண்டு சென்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்தது வைகாசி மாத தானம். எனவே தானம் செய்யுங்கள்.
- ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன.
- வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன.
ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.
நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.
நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று நீங்களும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து ஒரு குடம் தண்ணீர் யாருக்காவது தானமாக கொடுங்களேன்.
- விவசாயி தானமாக கொடுத்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
- 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலாஸ்பூர்:
இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார், மற்றொரு மகன் டாக்சி டிரைவராக உள்ளார்.
இந்நிலையில், அவரது கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வருவாய்த் துறையின் கணக்காளர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது. நிலம் வாங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த விவசாயி பாகீரத் சர்மா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வருவாய்த்துறைக்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
அந்த அலுவலகம் கட்டப்பட்டால் 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாதாரன நிலத் தகராறுகளால் சண்டை ஏற்பட்டு சில நிமிடங்களில் உறவுகள் முறியும் இந்த காலகட்டத்தில், பாகீரத் சர்மா, ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
- 20-05-2023 முதல் 18-06-2023 வரை ஸ்ரீ மகா விஷ்ணுவை பூஜை செய்து வழிபட வேண்டும்.
- ஒரு குடம் அல்லது சொம்பு நிறைய தண்ணீரை தானமாக கொடுக்கலாம்.
வைகாசி மாத வளர்பிறை பிரதமை முதல் ஆனி மாதம் அமாவாசை வரை (20-05-2023 முதல் 18-06-2023 வரை) ஸ்ரீ மகா விஷ்ணுவை திரிவிக்ரம மூர்த்தியாக பூஜை செய்து வழிபட வேண்டும்.
இந்த நாட்களில் தினமும் தானங்கள் செய்ய வேண்டும். அதாவது ஒரு குடம் அல்லது சொம்பு நிறைய தண்ணீரை தானமாக கொடுக்கலாம்.
சற்று வசதி இருப்பவர்கள் பனை ஓலையால் செய்த விசிறி, வாசனை உள்ள சந்தனம் ஆகியவற்றை இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளிலும் அல்லது கடைசி 3 நாள் அல்லது ஏதாவது ஒரு நாளாவது தானம் செய்யலாம்.
இதனால் திரிவிக்ரம சுவரூப மகாவிஷ்ணு மகிழ்ச்சி அடைவார்.
இதனால் ஸ்ரீ மகாபலிக்கு அருளியதைப்போல் நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் பகவான் ஏற்றுக்கொண்டு அருள் புரிவார்.
- மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
- அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மதுரை
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 40). இவர் கடந்த 21-ந்தேதி, அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்த்த னர். அங்கு உடல்நிலை மோச மானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜெய ராமன் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் 24-ந் தேதி ெஜயராமன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது உடல் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் குடும்பத்தினரிடம் விளக்கினர்.
இதையடுத்து அவர்கள் ெஜயராமனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து டீன் ரத்தினவேல் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு குழுவினர் மூலம் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன.
இதில் கல்லீரல், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவ மனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- 22.4.23 முதல் 19.5.23 வரை தண்ணீர் தானம் செய்யுங்கள்.
- தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.
கோடை வெயில் மிக கடுமையான உக்கிரமாக உள்ளது. இதை அறிந்தே நம் முன்னோர்கள் இந்த சீசனில் தண்ணீர் தானம் செய்ய வேண்டும் என்று வரையறுத்து வைத்துள்ளனர்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஆனால் அதைவிடச் சிறந்தது உதகதானம் என்னும் தண்ணீர் தானம். அதுவும் வெயில் நாட்களான சித்திரை, வைகாசி மாதங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தாகத்திற்கு தண்ணீர் தருவது மிகப்பெரும் புண்ணியம் தரும்.
22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 19-ந்தேதி வரை அல்லது ஏதாவது 3 நாளாவது வசதியிருக்கும் அனைவரும் அவரவர் வசிக்கும் தெருவிலோ அல்லது தன் வீட்டு வாசலிலோ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொண்டு தெருவில் நடந்து செல்லும் மக்களுக்கு குடிக்க தண்ணீர் தர வேண்டும். இது அனைத்து பாபத்தையும் போக்கி குழந்தைகளுக்கும் நன்மையை தம்.ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்துமாறு தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.
இந்த தானம் செய்பவர்களின் தந்தை, தாத்தா, அம்மா, பாட்டி முதலிய முன்னோர்கள் சந்தோஷம் அடைவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் அமைக்க முடியாதவர்கள் ஒரு குடம் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு ருத்ரர்களை நினைத்து தானம் செய்ய வேண்டும். இதனால் நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும்.
இவ்வாறு கோடை காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு குடம் தண்ணீர் தானம் செய்யலாம் அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று ஒரு நாளாவது 12, 6, 3 என்ற எண்ணிக்கையில் குடம் தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.
- இந்தப் பொருளை தானம் கொடுப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை
- உங்களுடைய கர்மாவும், பாவமும் இரட்டிப்பாக உயரத்தான் செய்யும்.
இந்த காலத்தில் தானம் கொடுப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. யார் வேண்டுமென்றாலும், யாருக்கு வேண்டுமென்றாலும் எந்த பொருளை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் தானம் செய்கிறார்கள். தானத்திற்கு எந்த ஒரு வரையறையும் இல்லாமல் போய்விட்டது. அந்த காலத்திலெல்லாம் தானம் என்றால் சுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள். அசுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள் என்று வரையறையோடு தானம் செய்யப்பட்டது. தானத்தினை முறையாக எப்படி செய்யவேண்டும். எப்படி செய்யக்கூடாது. தவறான தானத்தின் மூலம் நமக்கு பாவம் வந்து சேருமா? எப்படிப்பட்ட தானங்கள் தவறான தானங்களாக சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றிய பார்க்கலாம்.
முதலில் முறை தவறிய தவறான தானம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். எடுத்துக்காட்டிற்கு ஒரு பசு மாட்டை வாங்கி தானமாக கொடுக்கின்றோம். அந்த பசு மாட்டை நாம் யார் கையில் தானமாக கொடுக்கின்றோம் என்பதை முதலில் பார்க்க வேண்டும். பசு மாடு வளர்க்க தெரியாதவனுக்கு இந்த பசு மாட்டை வாங்கி தானமாக கொடுத்தால், அவன் என்ன செய்வான்? இந்த கையில் வாங்கிய பசு மாட்டை, அந்த கையில் வேறு ஒருவனுக்கு விற்று விட்டு சென்று விடுவான். போக கூடாதவர் கையில் பசுமாடு சென்று, அந்த பசு மாட்டிற்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டு விட்டால், அந்தப் பாவம் நம்மை தான் வந்து சேரும். நீங்கள் தவறான ஒருவரிடம் பசு மாட்டைப் தானம் பிடித்துக் கொடுத்ததால் தானே, பசுமாட்டிற்கு இந்த நிலைமை. பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பதை நம்முடைய முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்துள்ளார்கள்.
நீங்கள் ஒரு தானத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்றால், அந்த தானத்தின் மூலம் தானம் பெற்றவர் முழுமையாக பயனை அடையவேண்டும். அதன் மூலமே நம்முடைய பாவங்கள் குறைக்கப்படும். நம்முடைய கர்ம வினைகள் குறைக்கப்படும். தானத்தை செய்த உடன் நம்முடைய கடமை முடிந்து விடவில்லை. நான் கொடுத்த தானம் சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
ஒரு பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர். பெண்ணை கன்னிகா தானம் செய்து விட்டோம் என்பதற்காக அந்தப் பெண்ணின் நல்லது கெட்டதை நாம் பார்க்காமலேயே இருக்கின்றோம். கடைசிவரை அந்த பெண் புகுந்த வீட்டில் எப்படி இருக்கிறாள் என்பதை கன்னிகாதானம் செய்து கொடுத்த பெற்றவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். முறையான தானமும் இப்படித்தான் இருக்க வேண்டும்.
சரி, அடுத்த விஷயத்திற்கு வருவோம். நமக்கு உபயோகமில்லாத நாம் பயன்படுத்தாத சில பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்கின்றோம். எடுத்துக்காட்டிற்கு நீங்கள் உடுத்திய துணி, நல்ல துணியாக இருக்கிறது என்றால் அதை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். எப்படி? அந்த துணிகளை நன்றாக துவைத்து, வெயிலில் உலர வைத்து, மடித்து கொஞ்சமாக மஞ்சள் வைத்து அந்தத் துணியை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
பழைய துணிகளை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுக்கும்போது அது தானத்தின் வரிசையில் வராது. இதை தானம் என்று சொல்ல வேண்டாம். உங்கள் கையால் அந்த பழைய துணிகளை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டாம். சுத்தப்படுத்திய பழைய துணியை பையில் போட்டு, அந்த பையை கீழே வைத்து விட வேண்டும். அதை கஷ்டப்படும் அந்த குறிப்பிட்ட நபர் எடுத்துக் கொள்ளட்டும். இது நீங்கள் கஷ்டப்படுபவர்களுக்கு செய்யக் கூடிய சிறிய உதவி.
ஒருவேளை நீங்கள் உடுத்திய துணியை துவைக்காமலோ, அல்லது கிழிந்து இருக்கக்கூடிய துணிகளையோ தானம் செய்தால், அதன் மூலம் உங்களுக்கு பாவம் தான் வந்துசேரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புதியதாக வாங்கிய குடை, செருப்பு, கம்பளி, புதிய ஆடைகள், அரிசி, பருப்பு, எண்ணெய், பூசணிக்காய், பாய், நல்ல சாப்பாடு இவைகளை புதியதாக வாங்கி தானமாக கொடுங்கள். முக்கியமாக நாம் கொடுக்கப்படும் தானம் அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமக்கு பயன்பட வில்லை என்பதற்காக, நாம் பயன்படாத பொருட்களை அடுத்தவர்களுக்கு தூக்கி தானமாக கொடுப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. இப்படிப்பட்ட பொருட்களை தானம் செய்வதன்மூலம் நமக்கு பலனும் கிடைக்காது.
ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்து தான் இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் தானம் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருக்கின்றோம். ஆனால் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உண்மையான மனதோடு அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அடுத்தவர்களுக்கு பயன்படக்கூடிய பொருட்களை கொடுக்கும் தானமே சிறந்த தானம் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
- கோவில் நிர்வாகம் ஏற்பாடு
- கோவிலுக்கு தினமும்ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும்ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்களின் தரிசனத்துக்காக இந்த கோவில் நடைதினமும் அதிகாலை4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது.
அதேபோலமாலை4மணிக்குநடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்குஅடைக்கப்படுகிறது.தற்போது கோடைகாலம்என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசாமி கும்பிட வரும் பக்தர்கள் வெயில் வெப்பத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதனைகருத்தில் கொண்டுகன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காககோடைகாலம்முடியும்வரை தினமும்பக்தர்களுக்குமோர்தானம்வழங்க தமிழகஅரசின்இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை உத்தரவிட்டுஉ ள்ளது.
இதைத்தொடர்ந்துகுமரி மாவட்ட திருக்கோவில்களின்இணைஆணையர்ஞான சேகர்அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவில்மேலாளர் ஆனந்த்ஏற்பாட்டின்பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குபகல் நேரங்களில்சாமிகும்பிட வரும்பக்தர்களுக்குமோர் தானம்வழங்கப்பட்டுவருகிறது.
இதைத்தொடர்ந்து தினமும்இந்த கோவிலுக்கு சாமிகும்பிடவரும்ஏராளமா ன பக்தர்கள் மோர்வாங்கி அருந்திவிட்டு செல்கி றார்கள்.
இத ற்காகதினமும்10 லிட்டர்மோர்பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஏப்ரல், மே ஆகிய2மாதகாலங்களும் இந்த மோர்தான ம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
- உடல் நல பிரச்சினைகள் குறித்து பில்சுமியேல் கார் டிரைவருடன் உரையாடி உள்ளார்.
- அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சம்பவங்களை பார்க்கும் போதும், படிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த டிம் லெட்ஸ் என்ற ஊபர் டிரைவர் ஒருவர் தனது காரில் பயணித்த பில்சுமியேல் என்ற பயணிக்கு சிறுநீரக தானம் செய்தது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பில்சுமியேல் ஒருமுறை டயாலிசிஸ் மையத்திற்கு டிம்லெட்ஸ்சின் காரில் சென்றுள்ளார்.
அப்போது தனது உடல் நல பிரச்சினைகள் குறித்து அவர் டிரைவருடன் உரையாடி உள்ளார். அதை கேட்ட டிம்லெட்ஸ் மனமுருகி தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன் வந்துள்ளார்.
அதன்படி அவர் சுமியலுக்கு சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். இதற்கான அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார். அவர் டிரைவர் டிம்லெட்சுடன் ஆஸ்பத்திரியில் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது வாழ்க்கை கதையை கூறி இருந்தார். அவரது இந்த பதிவு 1 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
- சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை.
- ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும்.
நவகிரகங்கள் ஆகாயக் கோட்டையில் நின்றாடும் நர்த்தனமே மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும். ஜாதகத்தில் உள்ள நவகிரகங்கள் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் படி சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. அவரவர் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் நின்ற நிலைக்கு ஏற்ப அதன் தசா புக்திக்கு காலங்களில் சுப, அசுப பலன்கள் ஏற்படுகின்றன.
நவகிரக தோஷங்களில் இருந்து விடுபட கோவிலை நோக்கி புறப்படுகிறார்கள். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை. அதனால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மனிதன் உட்பட சகல ஜீவராசிகளையும் தனது கதிர்வீச்சால் வழி நடத்தும் நவகிரகங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட எளிய சில பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சூரியன் தோஷம்
சூரியன் தோஷத்தில் இருந்து விடுபட சூரிய காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.ஞாயிறு காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் கோதுமை தானம் செய்ய வேண்டும் . கோதுமை உணவு சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய இருதயம் பாராயணம் செய்ய வேண்டும். சிவ வழிபாடு சூரியனை சுப வலுப்பெறச் செய்யும். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாணிக்க மோதிரம் அணிய வேண்டும்.
சந்திர தோஷம்
சந்திர தோஷம் விலக சந்திர காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். திங்கட்கிழமைகளில் (சோமவார) விரதம் இருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்க வேண்டும். திங்கட்கிழமை தோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும் பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும்.
வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.
வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.
திருப்பதி சென்று வெங்கடா சலபதியை தரிசிக்கலாம்.
பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.
முத்து மோதிரம் அணிய வேண்டும்.
செவ்வாய் தோஷம் செவ்வாய் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
துர்கா கவசம் படிக்க வேண்டும்.
வெள்ளி, தாமிரம் கலந்த வளையல் அல்லது மோதிரம் அணிய வேண்டும்.
செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷம் நீங்க சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி முருகனை வழிபட வேண்டும். செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும் தினமும் கந்தர் சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும். சிவப்பு நிற பசு தானம் செய்ய வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவள மோதிரம் அணிய வேண்டும்.
புதன் தோஷம்
புதன்தோஷம் நீங்க புதன் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். புதன் கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து பச்சைப் பயிறு தானம் தர வேண்டும். பச்சைப் பயிறு சாப்பிட வேண்டும். விஷ்ணு சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அவல், பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் மரகதப் பச்சை மோதிரம் அணிய வேண்டும்.
குரு தோஷம்
இத்தோஷம் விலக குரு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். குருவின் தலமான ஆலங்குடி சென்று குரு வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும் யானைக்கு கரும்பை உணவாக தர வேண்டும்.
வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கி ழமைகளில் கொண்டைக்கடலை சாப்பிட வேண்டும். கனக புஷ்பராக கல்லில் மோதிரம் அணியலாம் சுக்கிரன் தோஷம் வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி லலிதா சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும் வெள்ளை மொச்சையை வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். இளம் பெண்களுக்கு ஆடை தானம் தர வேண்டும். வைர மோதிரம் அணிய வேண்டும்.
சனி தோஷம்
சனி தோஷம் விலக சனி காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். சனி தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள்,தொழிலாளிகள், துப்புரவுதொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமீத்தில் ஹோமம் செய்து வழிபடலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு. நீலக்கல் மோதிரம் அணிய வேண்டும்.
ராகு தோஷம்
இத்தோஷம் நீங்க ராகு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். கும்பகோணம் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி வழிபாடு துர்க்கை, காளி, வழிபாடு சிறப்பு. வளரும் புற்றிற்கு சென்று வழிபாடு செய்யலாம். கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம்.
கேது தோஷம்
தோஷம் விலக கேது காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். விநாயகர் ,ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும் அத்துடன் விழுதுள்ள ஆலமரம் கேதுவின் அம்சம் .எனவே ஆலமரத்தை வழிபட வேண்டும். மேலும் சடைமுடியும், தாடியும் வைத்து இருக்கும் சாது, சன்னியாசிகள் வழிபாடு சிறப்பைத் தரும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சென்று வழிபட்டால் இன்னல் தீரும்.
- பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
- இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.
முருக பக்தர்கள் திருவிழாக்களில் பழனிக்கு வேண்டுதலை மட்டும் முருகனிடம் வைக்காமல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் முருகனை கண்டு வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.
காணிக்கைகளை அளிப்பதால் செல்வம் பெருகும். சேவல், புறா போன்ற பறவைகளை காணிக்கையாக செலுத்துவதால் நோய்கள், பில்லி, சூனியம், தரித்திரம் உள்ளிட்ட தீய வினைகள் நீங்கும், ஆயுள் பெருகும். விவசாயிகள் தங்கள் உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக பசு, எருது போன்றவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். வேளாண்மை செழிப்பதோடு, குடும்ப கஷ்டங்கள் விலகி தொழிலில் உற்பத்தி பெருகும்.
அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் செய்வதால் ஆயுள் பெருகும், குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண்குழந்தையாகி பிறப்பான் என்பது ஐதீகம். பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதற்கான கல்வெட்டுகள் பல விளக்குகின்றன. நிலங்களை காணிக்கை போன்று தானம் செய்வதால் தலைமுறைகள் சிறக்கும்.
வேலின் மகத்துவம்
முருகனின் கரத்தில் இருக்கும் வேல், அநீதி அழிக்கும் ஆயுதம். முருகப்பெருமானை நாடுகிற மனிதர்களின் மனத்துணிவு வேலை விட உறுதியாக இருந்தால் வாழ்வின் துன்ப கணைகளை தகர்க்க முடியும். முருகனை வழிபடுபவர்கள் அக அழகோடு சென்றால், அவர்கள் வாழ்வை பொருளுடையதாக மாற்றி கருணை வழங்குபவன் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
- கோவிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது.
- புண்ணிய தீர்த்தங்களை காலில் தேய்க்ககூடாது.
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட சாமி கும்பிடும் முன்பாக தானம் செய்வதால் புண்ணியம் அதிகரிக்கும். கோவிலுக்கு எப்போதும் வெறும் கையுடன் கோவிலுக்கு செல்ல கூடாது. பழம், பூ, எண்ணெய், காணிக்கை இதில் எதாவது ஒன்றை வலது கையில் கொண்டு செல்ல வேண்டும்.உடல், ஆடை,மனம் எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும்.
பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும் மூடியிருக்கும் கோவிலில் வெளியில் இருந்து சாமி கும்பிடக் கூடாது. வாகனங்களில் சென்றபடியே கடவுளை வணங்கக் கூடாது. அது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கோபுரத்தினை ஆண்கள் தலைக்குமேல் இரு கைகளையும் குவித்தும். பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்கவேண்டும். பலி பீடத்திற்கு அருகில் சென்று வணங்கி நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியம் என்னும் ஆறு தீய குணங்களை பலி கொடுத்ததாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
பலி பீடத்தில் சிறிது உப்பு, மிளகைக் கொட்டி பிரார்த்தனை செய்தால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம். பலி பீடத்தை குறைந்தது மூன்று முறை அல்லது ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும், எதிரில் உள்ள நந்திக்கும் இடையில் விழுந்து வணங்குவதோ, குறுக்கே செல்வதோ கூடாது.
தெய்வ வாகனங்களில் மூக்கில் இருந்து வரும் காற்று மூலவருக்கும் போய் உயிர்நிலை தருவதாக ஐதீகம். தெய்வ வாகன ங்களின் வாலை பக்தி யுடன் தொட்டு கண்க ளில் ஒற்றிக்கொள்ள வேண்டும்.கோவிலில் பிரகாரங்களை வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. மெல்ல நடக்க வேண்டும். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கினாலே நவக்கிரகங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.
கோவில்களில் செய்யக் கூடாதவை:
எச்சில் துப்பக்கூடாது, தூங்கக் கூடாது, நம்மைவிட சிறியவர் கையில் இருந்து விபூதியை எடுத்து நாம் வைக்கக் கூடாது. கோவிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது. சத்தமாக சிரிக்க கூடாது, மொபைலில் பேசவும் கூடாது.
பெருமாள் கோவிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் சென்றால் லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம். கொடி மரத்திற்கு எதிரில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வெளியில் வர வேண்டும்.கோவிலில் தூங்க கூடாது. கொடிமரம்,நந்தி,பலிபீடம் , இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது.
குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது. கோவிலில் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது. மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது. படிகளில் உட்கார கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக்கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோவிலில் வைத்து பேசக்கூடாது.
வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது. மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது. கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
புண்ணிய தீர்த்தங்களை காலில் தேய்க்ககூடாது. கோவிலுக்கு போய்விட்டு வந்தால் நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும், வேறு எங்கும் போக கூடாது. வீட்டிற்குள் அப்படியே செல்ல வேண்டும்.அப்போது தான் கடவுளி டம் நாம் கோவிலில் பெற்ற வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும்.'
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்