search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217482"

    • கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
    • உடனிருந்த சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.

    தாமம்:

    மத்திய பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நாற்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

    தாமோ மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூடி போடப்பட்டிருந்த தரைக்கிணறு சரியாக மூடப்படாததால் அதில் சிறுவன் தவறி விழுந்தான். உடனே உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர். 

    • கீழசெவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள ஆவிணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜ கேசரி (வயது 68). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது மகன் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றில் தியாகராஜ கேசரியின் உடல் கிடப்பதை பார்த்துள்ளார். உடனடியாக சுப்பிர மணியன் திருப்பத் தூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பெரி.கணேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த தியாகராஜ கேசரியின் உடலை மீட்டு கீழச் செவல் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டி உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டியை சேர்ந்த கந்தசாமி மனைவி சவுந்தரம் (வயது 75).இவர் உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சவுந்திரம் வெள்ளகோவில் அருகே உள்ள மோளகவுண்டன்வலசில் உள்ள மகன் சிவசாமி (47), வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவசாமி திடீரென்று எழுந்து பார்த்த போது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. அத்துடன் தாய் சவுந்திரத்தை வீட்டில் காணவில்லை. இதனால் தாயாரை பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றின் அருகில் சிவசாமி வீட்டு போர்வை, சவுந்தரத்தின் செருப்பு கிடந்துள்ளது. உடனே கிணற்றுக்குள் பார்க்கும்போது சவுந்தரம் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சவுந்தரத்தின் உடமலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பெருமாள் (வயது 27). இவர் தனியார் பெயிண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரூபா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது‌.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியுடன் தந்தை பெரியார் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பெருமாள் அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மிதந்த பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
    • தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது80). இவருக்கு இப்பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலை தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது மகன் பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகே அவரது ஆடைகள் இருந்தது.

    தந்தை குளிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என நினைத்து தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தார். அதிக அளவு தண்ணீர் இருந்ததால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று மதியம் முதியவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முருங்ககாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா்.
    • காலி தண்ணீா் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பா்களுடன் குளித்துள்ளாா்.

    காங்கயம்:

    திருப்பூா் நல்லூா்-சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் மகன் தீபக்பிரசாத் (வயது20). இவா் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தாா்.

    இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று உடன் படிக்கும் கதிா் (19), நவீன் (19), பிரவீன் (19), தீபன் (22) ஆகியோருடன் நத்தக்காடையூா்-நஞ்சப்பகவுண்டன் வலசு, முருங்ககாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா்.

    தீபக் பிரசாத்துக்கு நீச்சல் தெரியாது என்பதால், காலி தண்ணீா் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பா்களுடன் குளித்துள்ளாா். குளித்து முடித்துவிட்டு தண்ணீா் கேனை அவிழ்த்துவிட்டு கிணற்றில் இருந்து மேலே ஏறியபோது, நிலைத்தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளாா்.

    இதையடுத்து உடன் இருந்த சக நண்பா்கள் காப்பாற்ற முயன்றுள்ளனா். ஆனால், அவா் அதற்குள் நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீபக் பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.இச்சம்பவம் தொடா்பாக காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • தீயணைப்புத்துறையினர் மீட்டனர்
    • நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி அமுதா (வயது 50).

    இவர் மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அமுதா வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவு வீட்டி லிருந்த அமுதாவை காண வில்லை. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அமுதா வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அமுதாவை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கயிறு மூலமாக தீயணைப்பு வீரர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்த ளித்த அமுதாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

    பின்னர் அவருக்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அமுதா ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அமுதா கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாயமானவர்கள் பட்டியலை தயாரித்து போலீஸ் விசாரணை
    • எலும்புக்கூடு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டி.வி.டி. காலனி செந்தூரான் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.

    இவர் தற்போது பெங்களூரில் குடும்பத்து டன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு தற்போது பாழடைந்து காணப்படுகிறது. இந்த கிணற்றில் எலும்புக்கூடு ஒன்று கிடந்ததை பார்த்த பொதுமக்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி கிணற்றில் கிடந்த எலும்புக்கூட்டை ஒரு சாக்கில் கட்டி மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் எலும்புக்கூடு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்தப் பகுதியில் மர்மநபர் ஒருவர் கிணற்றின் மீது இருந்து மது அருந்தியதாகவும், அவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை என்றும் தெரிவித்தனர்.

    எனவே மது குடித்துக் கொண்டிருந்த மர்மநபர் தான் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.மேலும் அவரை யாராவது கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மாயமானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்களது பட்டியலை தயாரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் பொது கிணறு ஒன்று உள்ளது.
    • கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்காரம் பாளையம் ஊராட்சி உள்ளது.

    இந்த ஊராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் தெக்கலூர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இந்த கிணறு இருந்து வந்துள்ளது.

    கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த கிணற்றில் இருந்து பல ஆண்டுகளாக மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் கயிற்றால் வாளி மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். பிற்காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுத்தனர்.

    இதன்மூலம் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழை காலங்களில் கனமழை காரணமாக இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் கிராமத்தின் நடுவில் உள்ள கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் வருவோர் தவறி கிணற்றினுள் விழும் நிலை உள்ளதாகவும் அதேபோல் குழந்தைகள், சிறுவர்கள் யாரேனும் இந்த கிணற்றில் விழும் அபாயம் நிலையில் உள்ளது.

    எனவே இதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படும் முன் கிணற்றின் பக்கவாட்டு சுவரை அமைத்து தர வேண்டும் என மாவட்ட, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். இதன்படி ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன், வார்டு உறுப்பினர் அமாவாசை ஆகியோர் இது குறித்து பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

    • ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கோவில்பாளையம் போலீ–சாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட–னர்.

    சரவணம்பட்டி:

    கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையம் அருகே சிவசக்தி நகரில் ஒரு தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கோவில்பாளையம் போலீ–சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று கிணற்றுக்குள் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் தொடர்ந்து கிணற்றில் கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி(63) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் எஸ்.ஆர்.பி.மில் அருகே துணிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட–னர்.

    அப்போது ரங்கசாமி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், திடீரென்று கோவில்களில் சென்று அமர்ந்து விடுவதாகவும் அங்கிருந்து அவரை மீட்டு வீட்டுக்கு கூட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.நேற்றும் அதேபோன்று வீட்டில் இருந்து வெளியே சென்றதாக தெரிவித்தனர்.

    ஆனால் தற்போது அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து ேகாவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் உடலை வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். துணிக்கடை முதலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது.
    • சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதி பின்புறமுள்ள சிதம்பரனார் வீதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் மூலம் அவரை மீட்டனர். பின்னர் பல்லடம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த மவுனராஜ், (வயது 30) என்பதும், குடிபோதையில் நண்பரை தேடி வந்தவர், தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • சுந்தரம் தனது வீட்டில் மாடு வளர்த்து வருகிறார்.
    • பசு மாடு 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

    அரவேணு

    கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது வீட்டில் மாடு வளர்த்து வருகிறார். தினமும் அந்த மாட்டை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.


    நேற்றும் வழக்கம்போல் மாட்டை தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பசு மாடு ஒன்று கால் தவறி அங்கு பராமரிப்பின்றி சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்த 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.


    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோத்தகிரி தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீய ணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலை மையி லான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேர போரா ட்டத்திற்கு பிறகு பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    ×