search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயம்"

    • கரூர் தோட்டக்கலைத் துறை சார்பாக மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்
    • கரூர் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுக அழைப்பு

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் வட்டாரத்தில் உள்ள பயனாளிகளுக்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட காய்கறி விதைகள் தொகுப்புகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மணிமேகலை தலைமையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத்துறை அலுவலர் செல்வகுமார், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் அருட்செல்வன் மற்றும் மாடித் தோட்ட முன்னோடி பயனாளி உதயபானு ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு மாடித் தோட்ட காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாடித்தோட்ட காய்கறி தொகுப்பில் செடி வளர்ப்பு பைகள் 6-எண்கள், இரண்டு கிலோ தென்னை நார்கழிவு, ஆறு வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம் 200 மில்லி, பாஸ்போ பாக்டீரியா 200 மில்லி, டிரைக்கோடெர்மா 200 கிராம், வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் வளர்ப்பு முறைக்கான கையேடு ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் ரூ.450 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஒரு பயனாளிக்கு இரண்டு தொகுப்புகள் மட்டும் வழங்கப்படும். தேவைப்படுவோர் ஆதார் நகல் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு கரூர் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு கரூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • நிலக்கடலைப் பயிர் மீது சுருள்பூச்சிகள் தாக்குதல் தொடங்கி உள்ளது
    • கட்டுப்படுத்த வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் சுருள்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சுருள்பூச்சிப் புழுக்கள் இலைகளைத் துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடுநரம்பில் துளையிட்டு அதனுள் இருந்துகொண்டு சேதம் விளைவிக்கும். பின்னர், வளர்ந்த புழுக்கள் இலைகளைச் சுருட்டி அதனுள் புகுந்துகொண்டு பச்சையத்தைச் சுரண்டிச் சேதம் விளைவிக்கும். அதிகளவில் தாக்குதலுக்குண்டான செடிகள் காய்ந்தும் சுருங்கியும் காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட வயலைத் தொலைவிலிருந்து பார்த்தால் எரிந்து காய்ந்தது போல் காணப்படும்.நிலக்கடலை சாகுபடியில் ஊடுபயிராகத் தட்டைப்பயறு அல்லது உளுந்துப் பயிரினை 4-க்கு 1 எனும் விகிதத்தில் விதைக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு விளக்குப்பொறி 5 எண்கள் வீதம் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை வைத்துத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்கிற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கர் ஒன்றுக்கு 20,000 எனும் அளவில் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை வெளியிட்டுக் கட்டுப்படுத்திடலாம். செடி ஒன்றுக்கு 2 முதல் 3 புழுக்களுக்கு மேல் தென்பட்டால், அதாவது பொருளாதார சேத நிலையினைத் தாண்டும்பொழுது ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் இமாமெக்டின் பென்சொயேட் 100 கிராம் அல்லது ஸ்பினோசாடு 45 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 20 இ.சி. 500 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.மேலும் விவசாயிகள் உழவன் செயலியில் பூச்சிப் புலானாய்வு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயியின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • பருவ மழை பெய்வதை முன்னிட்டு விவசாயிகள் உற்சாகம்

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், விவசாயிகள் காய்கறி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, பாப்ப காப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்த ரப்பட்டி, திருக்காம் புலியூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் அதிகளவு காய்கறி சாகுபடி செய்து வருகின் றனர். வெண்டைக்காய், கத்திரிக்காய் களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். வெண்டைக்காய் கிலோ, 40 ரூபாய், கத்திரிக்காய், 30 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. காய்கறிகள் பறித்து லாலாப்பேட்டை, ஜெங்கொண்டம், மாயனுார் ஆகிய பழைய வார சந்தைகளில் விற்பனை செய்யப் படுகிறது. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • செல்வக்குமார் டிப்ளமோ முடித்து காஞ்சிபுரத்தில் பணி செய்து வந்தார்.
    • கிராமத்தில் இருந்து விவசாயத்தை கவனித்துக் கொள் என செல்வக்குமாரிடம் கூற தந்தை மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகன் செல்வக்குமார் (வயது 23), விவசாயத்தில் டிப்ளமோ முடித்து காஞ்சிபுரத்தில் பணி செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான கடந்த 18-ந் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது கோதண்ட பாணி, நீ வேலைக்கு செல்லவேண்டாம், கிராமத்தில் இருந்து விவசாயத்தை கவனித்துக் கொள் என செல்வக்குமாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தந்தை மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மறுநாள் காலை செல்வ க்குமாரை காணவி ல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்ய ப்பட்டி ருந்தது. காஞ்சிபுரம் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அங்கும் அவர் பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து கோத ண்டபாணி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போல செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.

    • மிளகாய் செடியில் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.
    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மிளகாயின் விலையானது வெகுவாக அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுரண்டை, சாலைப்புதூர், நாகல்குளம், மேல பட்டமுடையார்புரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், செட்டியூர், நாட்டார்பட்டி, அரியப்பபுரம், குறுங்கா வனம், வெள்ளக்கால், இடையர்தவணை, குறும்பலாபேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

    அவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு மிளகாய் செடியில் அதிக வைரஸ் நோய் பாதிப்புகள் ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.

    இதனால் மார்க்கெட்டுக்கு சுற்று கிராம பகுதிகளில் இருந்து விவசா யிகள் கொண்டு வரும் மிளகாய் வரத்து குறைந்து உள்ளதால் கடந்த 15 நாட்க ளுக்கும் மேலாக மிளகாயின் விலையானது வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையானது.

    தமிழகம் முழுவதும் மட்டுமன்றி மைசூர் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மிளகாய் கொள்முதல் விலையும் ஒரே விலை யாகவே உள்ளது. வைரஸ் நோயில் இருந்து தப்பிய மிளகாய் செடிகளின் காய்கள் நல்ல விலைக்கு செல்வதால் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் மிளகாய் விலை விற்பனையாகி வருவதாக விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

    • குட்டிகுளம் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகிறது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் கடையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது குட்டி குளம். இதன் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் உள்ள வாய்க்கால் பாசன மடை சேதம் அடைந்து சுமார் 10 வருடங்கள் ஆகிறது.

    இதனால் இந்த மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகியும், தூரத்தில் உள்ள பயிர்கள் சரிவர நீர்ப்பாசனம் இல்லாததால் கருகியும் சேதமடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குட்டி குளம் மடையை சீரமைத்து தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் பொதுமக்கள் சார்பாக, மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    • பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக இருந்து வருகிறது.
    • 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்புகா வேரி பிரிவு வாய்க்காலில் வள்ளி செடிகள் , ஆகாய தாமரை செடிகள் மண்டியுள்ளது.

    அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.

    கடந்த ஆண்டு பருவ மழை காலங்களில் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை, பொந்தையாகுளம் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    விவசாய நிலங்களை பாதுகாக்க நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள உடனடியாக ஜெம்புகாவேரி பிரிவு வாய்க்காலை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னரே தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கற்பூர வெற்றிலை என்பது கற்பூர மணத்துடன் சற்று காரம் அதிகமாக இருக்கும்.
    • வயிற்றுப்பொருமல், அஜிரணக்கோளாறுகளை நீக்கக்கூடியது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் மற்றும் கரைவழிப்பகுதிகளில் குறிப்பாக கணியூர்ப் பகுதிகளில் வெற்றிலைக்கொடி விவசாயம் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. கணியூரில் கடந்த நூற்றாண்டுகளுக்கும் முன்பு வரையிலும் பயிர் செய்யப்பட்டு வந்த வெற்றிலைகொடியில் குறிப்பாக சர்க்கரை வெற்றிலை, கற்பூர வெற்றிலை , கம்மாறு வெற்றிலை. இதில் கற்பூர வெற்றிலை என்பது கற்பூர மணத்துடன் சற்று காரம் அதிகமாக இருக்கும். கம்மாறு வெற்றிலை என்பது காரத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மென்று தின்னக்கூடியது. வயிற்றுப்பொருமல், அஜிரணக்கோளாறுகளை நீக்கக்கூடியது. சாப்பிட்டவுடன் நம் முன்னோர்கள் வெற்றிலை போடச்சொன்னதும் இதுவே காரணம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் , சுவாசப்பிரச்சினைகள், இருமல், சளி போன்றவற்றிற்கும் வெற்றிலை ஒரு மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

    கிராமப்பகுதிகளில் முதலில் திருமண அழைப்பு மற்றும் நல்ல காரியங்கள் அனைத்திற்கும் வெற்றிலை பாக்கு வைத்தே விருந்துக்கு அழைப்பர். கட்டாயம் விருந்து முடிந்தவுடன் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து விடுவர். அனைவரும் எடுத்துக்கொள்ளும் வகையில் நிரம்ப நிரம்ப வெற்றிலை பாக்கு சுண்ணாம்புடன் ஒரு தட்டில் வைத்து வழங்குவர்.

    கற்பூர வெற்றிலை, சர்க்கரை வெற்றிலை தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளம் பெருக நல்ல மருந்தாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். வெற்றிலை போட்டு நன்றாக நாக்கு சிவந்தால் அஜிரணம் நீங்குவதும், இதனால் அன்பு, பாசம் அதிகமாகும் என்று வட்டார வழக்கில் கூறுவதும் உண்டு. இன்று கரைவழியில் முப்போகம் நெல்விளைச்சலும் இல்லை. வெற்றிலை கொடி விவசாயமும் இல்லை. கணியூர் வெற்றிலை என்பது கோவை, மதுரை போன்ற பெரிய பெரிய ஊர்களிலிருந்து வந்து கணியூரில் தங்கி வாங்கிச்சென்ற காலங்களும் உண்டு.

    மேலும் கணியூர்ப் பகுதியில் விளைந்த சர்க்கரை வெற்றிலை, கற்பூர வெற்றிலை வெளிமாநிலங்களுக்கும் மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாகவும் இங்கிருக்கும் வயதான பெரியோர்கள் கூறுகின்றனர்.சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்பு வரை கணியூர் முதன்மைச்சாலையில் தற்போதிருக்கும் ஐ.ஓ.பி., வங்கி வளாகத்தில் உள்ள (பசுமடத்தில்) வெற்றிலை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றுள்ளனர்.ஒரு சில நாட்களில் பெரிய அளவிற்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகவே வேடிக்கை பார்த்ததாகவும் தற்போது வயது முதிர்ந்த பெருமக்கள் தெரிவிக்கின்றனர்.

    கரைவழி நாட்டில் நெல் மட்டுமல்லாது வெற்றிலை கொடி விவசாயம் சிறப்பாக இருந்ததையும் தற்போது அதுமிகவும் அருகி வருவதையும் நாம் நம் கண் முன்னே பார்த்து வருகின்றோம்.கரைவழிநாட்டு விவசாயம் குறித்தும் கரை வழிநாடு குறித்தும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • அமைச்சா்கள் நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்துவைத்து மலா் தூவினா்.
    • தாராபுரம் வட்டாரப் பகுதியில் உள்ள 4,744 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தாராபுரம் :

    விவசாயம் மற்றும் குடிநீா் தேவைக்காக தாராபுரம் அருகே நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்துவைத்து மலா் தூவினா். நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்திலிருந்து பிரதான கால்வாய் வழியாக 35 கன அடியும், ஆற்று மதகு வழியாக 25 கன அடியும் தண்ணீா் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராபுரம் வட்டாரப் பகுதியில் உள்ள 4,744 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பொதுமக்களின் குடிநீா் தேவையும் பூா்த்தி செய்யப்படும் என அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தாராபுரம் கோட்டாட்சியா் குமரேசன், திருப்பூா் மாநகராட்சி 4 ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்க செயற்பொறியாளா் கோபி, உதவி செயற்பொறியாளா் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • சிவபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    • கடந்த 2021-ம் ஆண்டு அந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி.ராஜன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விநாயகர், சாஸ்தா கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளன.

    ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் உள்ளன. மேலும் இந்த கிராமத்தை சுற்றி நீரோடைகளும் ஓடுகின்றன. தலையணை ரோட்டில் இருந்து, சிவபுரம் கிராமத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய களக்காடு பேரூராட்சி நிதி ஒதுக்கீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது. சிவபுரம் அருகே சாலையின் குறுக்கே செல்லும் ஓடையில் பிளாஸ்டிக் குழாய் மூலம் பாலமும் அமைக்கப்பட்டது.

    அதன்பின் கடந்த 2021-ம் ஆண்டு அந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் களக்காடு வனத்துறையினர் கடந்த மாதம் சிவபுரத்திற்கு செல்லும் சாலையை தடுப்புகள் வைத்து அடைத்தனர். அத்துடன் சாலையில் போக்குவரத்தை தடை செய்யும் நோக்கில் சாலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    நீரோடையில் அமைக்க ப்பட்ட பாலத்தையும் பெயர்த்து, குழாய்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் சிவபுரத்திற்கு செல்லும் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்களுக்கு டிராக்டர், லாரிகள் மூலம் இடு பொடுட்களை கொண்டு செல்ல முடியாமலும், விளை பொருட்களை விளைநிலங்களில் இருந்து ஊர்களுக்கு கொண்டு வர முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சேதப்படுத்தி, கிராம மக்களை அவதிக்குள்ளாகி வரும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிவபுரத்தை மூடி அங்குள்ள மக்களை வெளியேற்றி, விளைநிலங்களையும் கையகப்படுத்தி, விவசாயத்தை அழிக்க வனத்துறையினர் சதி செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இதற்காகத்தான் வனத்துறையினர் முதல் கட்டமாக சிவபுரம் சாலையை அடைத்து, பின்னர் போக்குவரத்தை தடை செய்ய, சாலையை துண்டித்துள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
    • விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

    ஆலங்குளம்:

    விவசாய மேம்பாட்டுக்காக குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து ள்ளது. இதற்கு மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வரவேண்டும் என்ற விதி உள்ளது.

    அதேபோல் விவசாயம், மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு விவசா யிகள் இலவசமாக மண் எடுத்து செல்லலாம் எனவும் அரசு விதி வகுத்து ள்ளது.

    மேலும் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்களால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் வெட்ட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக வண்டல் மண் வெட்டி எடுத்துச் செல்லப்ப டும் நிலையில், அந்த வாகன ங்கள் எவ்வித விதிகளையும் பின்பற்றுவ தில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

    தனி நபர் ஒருவர் உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில் சுமார் 15 ஜே.சி.பி. வாகனங்கள், சுமார் 100 டிராக்டர்களை கொண்டு அதிக அளவு வண்டல் மண் எடுக்கப்படுகிறது எனவும், அந்த வாகனங்கள் சாலை களில் அதிவேகத்தில் செல்லும்போது வண்டல் மண் கட்டிகள் சாலையில் விழுவதால் விபத்து அபாயம் இருப்பதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கி ன்றனர்.

    விவசாயத்திற்கு, மண்பா ண்டம் செய்ய, வீட்டு சொந்த உபயோ கத்திற்கு மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டிய மண், வர்த்தக ரீதியாக டிராக்டர் லோடு ஒன்று ரூ. 700 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை செய்யும் அரசியல் பிரமுகர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தை யாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு மண் எடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது பொது ப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை வசம் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே அதிக முறைகேடு உருவாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தகுதியான விவசாயிகள் மட்டுமே குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

    • சுமார் 60 அடி முதல் 78 அடி வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.
    • சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த குளிச்சப்பட்டு கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் வட்டம் சூரக்கோட்டை கிராம எல்லையில் ஓடும் வடிகால் குளிச்சப்பட்டு கிராம எல்லையில் உள்ள பொன்னேரியில் இருந்து வடியும் மழை நீரை தொடக்கமாகக் கொண்டு ரூ.18,00000 மதிப்பில் 5 கி.மீ. தூரம் ஜம்புகாபுரம் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் கடந்த 13-ந் தேதி நடைபெற்றது.

    இந்த வடிகால் வாய்க்கால் சுமார் 60 அடி முதல் 78 அடி வரை 16.9 மீட்டர் முதல் 24 மீட்டர் வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.

    இதில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பிலும், மேடு பகுதிகளாகவும் உள்ளது.

    இதற்கு முன் இரு கரைகளும் வண்டியில் செல்லும் அளவுக்கு பாதியாக இருந்து பயன்பாட்டில் இருந்தன.

    நாளடைவில் வயல் பகுதியாக ஆக்கிரமிப்பு உள்ளன.

    தற்போது இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேட்டின் படி தூர்வாராமல் மிகக் குறைந்த அளவில் இருக்கும் படியே தூர்வாரும் பணி நடைபெற்றது.

    அன்றைய தினமே குளிச்சப்பட்டு கிராம மக்கள் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம்.

    அதன்படி அந்த அதிகாரிகள் சர்வே செய்த பிறகு தூர்வாரும் பணிகள் செய்கிறோம் என கூறிவிட்டனர்.

    ஜம்புகாபுரம் வடிகால் பகுதியான வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.

    இந்த பகுதிக்கு சாலை வசதி கிடையாது.

    இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேடு படி தூர்வாரி கரையை உயர்த்தினால் அறுவடை செய்யும் அறுவடை இயந்திரங்கள், உழவு டிராக்டர்கள், விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே இந்த வடிகால் தூர்வாரும் பணிகளை பொன்னேரி பாயிண்டில் இருந்து குளிச்சப்பட்டு சாலை அல்லது வாளமர் கோட்டை சாலை பகுதி வரை தூர்வாரும்படியும், கரைகளை உயர்த்த ஆவணம் செய்யும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    ×