search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வின்"

    • சர்வதேச அளவில் 17-வது பந்துவீச்சாளர் ஆவார்.
    • சுழற்பந்து வீரர்களில் 9-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 36 வயதான அவர் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    மும்பை வான்சுடே மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்றது.

    இந்த ஆட்டத்தில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 27 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் அனைத்துவிதமான 20 ஓவர் போட்டிகளும் சேர்ந்து 300 விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை புரிந்தார். 300 விக்கெட் எடுத்த 2-வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார்.

    ராஜஸ்தான் அணியின் சக வீரரான யசுவேந்திர சாஹல் ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 300 விக்கெட்டை தொட்டார். தற்போது அஸ்வினும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

    சர்வதேச அளவில் 17-வது பந்துவீச்சாளர் ஆவார். சுழற்பந்து வீரர்களில் 9-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

    அஸ்வின் ஐ.பி.எல். போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ளார். மலிங்கா, அமித் மிஸ்ரா, பியூஸ்சாவ்லா ஆகியோருடன் அஸ்வின் இணைந்தார்.

    பிராவோ 183 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், சாஹல் 178 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு குஜராத் அணியை வீழ்த்திய சந்தோசத்தை கொண்டாடும் விதமாக அஸ்வின்- சாம்சன் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின், ராஜஸ்தான் அணி வீரர்களுடன் "நீங்க மட்டும் தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போட்டு சந்தோஷமா இருக்கீங்க. தம்பி அடிச்ச அடியில குஜராத்தே குலுங்கிடுச்சு என்று அந்த அணியை கலாய்த்து உரையாடினார்கள்.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக பட்லர் களமிறங்காமல் தமிழக வீரர் அஸ்வின் இறங்கினார்.
    • ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்து 5 ரன்னில் தோல்வியை தழுவியது.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்து 5 ரன்னில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக பட்லர் களமிறங்காமல் தமிழக வீரர் அஸ்வின் இறங்கியது குறித்து சாம்சன் விளக்கம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில்:-

    பட்லர் பீல்டிங் செய்யும்போது கையில் காயம் அடைந்தார். அதன் காரணமாக அவருக்கு தையல்கள் போட நேரம் ஆகும் என்பதனால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்கிற காரணத்தினாலேயே அஸ்வினை நாங்கள் துவக்க வீரராக அனுப்பினோம். அதற்குள் ஜாஸ் பட்லரும் தனது சிகிச்சை முடித்துக் கொண்டார்.

    பின்னர் அஸ்வின் ஆட்டம் இழந்ததும் மூன்றாவது வீரராக பட்லர் களம் புகுந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயமடைந்த ஜாஸ் பட்லரும் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்யதது பரபரப்பாக பேசப்பட்டது.
    • பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர்.

    ஐபிஎல் 2023 சீசனில் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 197 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வெற்றிக்கு அருகில் சென்ற எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.

    முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் விளையாடியபோது ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    அவர் 7-வது ஓவரை வீசியபோது திடீரென பாதியிலேயே நின்று ஸ்டம்ப்பை திரும்பிப் பார்த்தார். அப்போது நான்-ஸ்டிரைக்கராக நின்றுகொண்டிருந்த ஷிகர் தவன் கோட்டுக் வெளியே இருந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட தவன், சட்டென்று கோட்டில் பேட்டை வைத்தார். இருவரும் பரஸ்பரம் புன்னகை செய்தனர்.

    முன்பு ஒருமுறை ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்யதது பரபரப்பாக பேசப்பட்டது.

    தற்போது பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றைய தினம் ஷிகர் தவனை அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்தபோது பீல்டிங் செய்துகொண்டிருந்த பட்லர் முகத்தை கேமிராமேன் ஃபோகஸ் செய்தார். இதனால் ரசிகர்களும் ஆர்ப்பரிக்க தொடங்கினர்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஸ்வின் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
    • பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தொடர் நாயகனாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. தொடர் நாயகனாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர்.

    அஸ்வின் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

    இந்நிலையில் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பது குறித்து எலான் மஸ்க்கை டேக் செய்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். 


    அதில் கூறியிருப்பதாவது, எனது டுவிட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகின்றது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. மார்ச் 19-ம் தேதிக்கு முன் எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என்பதை சரியான திசையில் சுட்டிக்காட்டுங்கள் ப்ளீஸ் என கூறினார்.

    இதற்கு நிறைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (807 புள்ளி) 3 இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • நாதன் லயன் 6 இடங்கள் அதிகரித்து 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கடந்த வாரம் முதலிடத்தை பிடித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியதால் 6 தரவரிசை புள்ளியை இழந்து 859 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் (859 புள்ளிகள்) ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து வகிக்கிறார்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் (849 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (807 புள்ளி) 3 இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்தில் தொடருகிறார்.

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஜொலித்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 இடங்கள் அதிகரித்து 9-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (919 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2 இடம் முன்னேறி 9-வது இடத்தை அடைந்துள்ளார்.

    • பந்துவீச்சாளர் பட்டியலில் இந்தியாவின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • இந்தப் பட்டியலில் பும்ரா 4-வது இடத்திலும், ஜடேஜா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    லண்டன்:

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 3-வது இடத்திலும், பும்ரா 4-வது இடத்திலும், ஜடேஜா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    • அஸ்வின் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார்.
    • அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும்.

    சிட்னி:

    பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் அமைந்துள்ளனர். இருவரும் இதுவரையில் 31 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தி உள்ளனர். ஜடேஜா 17 விக்கெட்டுகளும், அஸ்வின் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

    அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். 'நீங்கள் நீங்களாகவே இருங்கள்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    இந்தியாவில் விளையாடும்போது எதிரணியினர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல பந்துவீச முயற்சிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது நன்கு தெரியும். அஸ்வின் ஒரு ஸ்மார்ட்டான பவுலர். அவர் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஜடேஜா தனது பவுலிங் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

    டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி இருந்தார். ஆனாலும், ஜடேஜா அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். சில நேரங்களில் அப்படி நடக்கும். களத்தில் அவர்கள் செய்வதை உங்களால் (ஆஸி. வீரர்கள்) செய்ய முடியாது. அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும்.

    என சேப்பல் தெரிவித்துள்ளார்.

    • பேட் கம்மின்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
    • இந்திய வீரர் ஜடேஜா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார்.

    மேலும் பேட் கம்மின்ஸ் 3-வது இடத்தில உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம், 2 வது இடத்தில் அஸ்வின் உள்ளனர். அக்சர் படேல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும் ரோகித் சர்மா 7 -வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர்.

    • ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார்.
    • இந்த போட்டியில் தற்போது வரை அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த அந்த அணி சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. முக்கியமாக அஸ்வின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது.

    இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெடுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை அஸ்வின் பிடித்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த சுமித் 0 ரன்னில் அவுட் ஆனார்.
    • இந்திய அணி தரப்பில் அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.

    இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் சூர்ய குமார் யாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ரென்ஷா, ஸ்காட் போலண்ட் ஆகியோருக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், மேத்யூ குனேமேன் ஆகியோர் இடம் பெற்றனர். சுழற்பந்து வீச்சாளரான குனேமேன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

    இந்திய வீரர் புஜாரா 100-வது டெஸ்டில் களம் இறங்கினார். அவருக்கு சிறப்பு தொப்பியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். அவர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள்.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி 50 எடுத்தது. இதன் ஜோடியை முகமது சமி பிரித்தார். அவர் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே - கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

    இந்திய சுழற் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினர். 4 பவுண்டகளுடன் விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அஸ்வின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் சமி 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 

    • நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.
    • 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவரது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 42 ரன் கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 37 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    அவர் 89 டெஸ்டில் விளையாடி 457 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் கும்ப்ளேயின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். இலங்கையின் முரளீதரன் 45 முறையும், ஹெராத் 26 தடவையும் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின், கும்ப்ளே உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 97 விக்கெட் கைப்பற்றி ஹர் பஜன்சிங் சாதனையை முறியடித்தார்.

    ஹர்பஜன்சிங் 18 டெஸ்டில் 95 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் இருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் எடுத்தன் மூலம் அஸ்வின் அவரை முந்தினார். அஸ்வின் 19 டெஸ்டில் 97 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தார். ஹர்பஜன்சிங் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். கும்ப்ளே 111 விக்கெட் வீழ்த்தி (20டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    ×