என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223204"
- மணமேல்குடி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சீனியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் காமராஜ். ஆணையர் திலகவதி, துணைத் தலைவர் செந்தாமரை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசும்பொழுது புதிய அங்கன்வாடி கட்டிடம் கால்நடை மருத்துவமனைகளில் போதுமான பணியாளர்களை நியமிப்பது ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பேசும்பொழுது, கந்தர்வக கோட்டைக்கு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதே போல தரமான மருத்துவ சிகிச்சைகள் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் புதிய நவீன மருத்துவமனை கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாண்டியன், திருப்பதி, முருகேசன், பாரதி பிரியா ஐயாத்துரை, சுதா ராஜேந்திரன், மலர் சின்னையன், கலியபெருமாள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மன்ற பொருள்களை ஒன்றிய அலுவலர் வை.பரமேஸ்வரி வாசித்தார்.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான வரகூர் அருணாசலம், முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரகூர் அருணாசலம் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடுகள் நடந்து வருகிறது.
கள்ளச்சாராயம் மற்றும் போலிமதுபானங்களால் தொடர் இறப்பு ஏற்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம் ஆகியவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த அரசு தவறி வருகிறது. இதனால் தி.மு.க. அரசை கண்டித்தும், இதற்கு முழு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என தெரிவித்தார்.இதில் தமிழக அரசை கண்டித்து வரும் 29-ந் தேதி பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வக்குமார், சிவப்பிரகாசம், செல்வமணி, ரவிச்சந்திரன், சசிக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் ராஜாராம், ராணி, ராஜேஸ்வரி, லெட்சுமி, முத்தமிழ்செல்வன், ராஜேந்திரன், கருணாநிதி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மாவட்ட அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
- சுண்ணாம்புகல் சுரங்க விரிவாக்கம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது
- அரியலூர் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது:
அரியலூர்,
அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டால்மியா சிமெண்ட்நநிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள்செங்கமுத்து, கல்லங்குறிச்சி தமிழரசன், சமூக ஆர்வலர் சங்கர், இளவரசன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், மண்டி செல்வராஜ், ஏகேஎம் மெயின்ஸ் கதிர்கணேசன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் மகாலிங்கம், அதிமுக பாஸ்கர், திமுக பாலு, விடுதலைசிறுத்தைகள் கட்சி பாலசிங்கம், சிமெண்ட் ஆலை அதிகாரிகள், அரசுஅலுவலர்கள், சமூகஆர்வலர் கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தி ல்குமார், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அனைவரின் கருத்துக்களை கலந்து ஆலோசித்துநட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும், பொதுமக்கள் நலன்கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும், பொது மக்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு புதுடில்லியில் உள்ள மத்திய சுற்றுசூழல் வனத்துறை மற்றும்பருவநிலை மாறுபாடு அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி ேமரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது
- விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 31-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் கற்பகம் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 11 கூட்டப்பொருட்களும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறு கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ராம்லால் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 11 கூட்டப்பொருட்களும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- கரூரில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது
- கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட அனைத்து கேஸ் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களுடன் டி.ஆர்.ஒ., தலைமையில் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் நுகர்வோருக்கு கேஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தனப் போக்கு தொடர்பாக வரும் புகார் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆயில் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யபடும். எனவே கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
- அரசின் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்
புதுக்கோட்டை:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டைக்கு நாளை (வியாழக்கிழமை) வருகை தரும் அவர்,கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசின் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் அவர் கலந்தாய்வு மேற்கொண்டார்.இக்கூ ட்டத்தில் வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலா ண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்க உள்ளது.
- கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரடியாக கலந்து கொள்ள உள்ளார்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்க உள்ளது.
இதில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரடியாக கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார். எனவே கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இந்த கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு பயன் பெறலாம். குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வரும் விவசாயிகள், கொரோனா விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
- 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரியலூரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழர் நீதிகட்சி, ஏர் உழவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரியலூர்,
தமிழர் நீதி கட்சி, ஏர் உழவர் சங்க கூட்டத்தின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் அரியலூர் ஒற்றுமைத் திடலில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் இரா.பாக்கியராசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரியலூர் மாவட்ட முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அரியலூரிலுள்ள சிமெண்ட் ஆலை வேலை வாய்ப்புகளில், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். உள்ளூர் மக்களுக்கு சிமெண்ட் மூட்டைகள் உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும். ஒப்பந்த பணிகள் அனைத்தும் அரியலூர் மக்களுக்கே வழங்கிட வேண்டும்.
சிமெண்ட் ஆலைகள், சுண்ணாம்புக் கல் சுரங்கங்களுக்கிடையே தனி சாலை அமைக்க வேண்டும். சிமெண்ட் ஆலைகள், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அரசு அறிவித்த முந்திரி தொழிற்சாலையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராசேந்திரசோழனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்கட்சியின் நிறுவனரும், ஏர் உழவர் சங்கத்தின் தலைவருமான சுபா.இளவரசன், தலைமை நிலையச் செயலர் சி.மதியழகன், மாநில மகளிர் அணித் தலைவர் இள.கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
- ராமநாதபுரத்தில் 26-ந் தேதி மீனவர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
- கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் கலெக்டரை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து வருகிற 26-ந்தேதிமாலை 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மீனவர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம். மேலும் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்