என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223204"
- ஆலோசனை கூட்டம் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
- புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளை மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.
ஊட்டி,
ஊட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்றார்.
மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர்கள் துரை, பில்லன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ். பாபு, கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன், கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊட்டி தெற்கு ஒன்றிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழுவினர் விவரங்களையும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளையும் மாவட்ட செயலாளர் முபாரக் ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் ஊட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சாகுல் அமீது, ஈஸ்வரன், மாவட்ட பிரதிநிதிகள் சத்யநாதன், முத்து, ஈஸ்வரன், சந்திரன், ராதாகிருஷ்ணன், நேரு, உதகை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தமிழ்வானி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ், உமர், சண்முகம், கீழ்குந்தா பேரூராட்சி உறுப்பினர்கள் சண்முகம், மாடாகண்ணு, சாரதா, தீபா, காஞ்சனா, நாகம்மா, மாலினி, பிக்கட்டி பேரூராட்சி உறுப்பினர்கள் சாந்தி, நித்யா, சிவகாமி, லட்சுமி, கட்சி நிர்வாகிகள் மனோகரன், சிவகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.
- வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது.
வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது.
ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
- இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது. ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும்,
- பெரம்பலூரில் அரசு ஊர்தி டிரைவர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
- இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூரில் அரசு துறை ஊர்தி டிரைவர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெளி மாவட்ட ஓட்டுநர்கள் இயற்கை இல்லா மரணம் அடைந்தால் நமது சங்க உறுப்பினர்களால் இயன்ற தொகையை சேர்த்து சங்கத்தின் பெயரில் உதவி தொகையாக வழங்க வேண்டும், சங்க உறுப்பினர்கள் இயற்கை மரணம் அல்லது அகால மரணம் அடைந்தால் உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,அதேபோல் மற்ற மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், டிரைவர்களுக்கு கல்வி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்,15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதனை தொடர்ந்து சென்னையில் வருகின்ற 22-ம்தேதி நடைபெறும் கோட்டை நோக்கி பேரணியில் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆதித்தமிழர் பேரவை கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாடிப்பட்டி
மதுரை வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் செயற்குழு கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அம்பேத்செல்வம், நிதிச்செயலாளர், பகலவன், கொள்கை பரப்புச் செயலாளர், சாந்தி முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் சிறுவாலை செல்வபாண்டி வரவேற்றார்.
தொழிலாளர் பேரவை மாநில செயலாளர் ஈழவேந்தன் பேசினார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் கவுரி, மாவட்ட துணைச் செயலாளர் ஆதி அழகன், துணைத் தலைவர் சரவணன், கலை இலக்கிய அணி செயலாளர் ஆதிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது, மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொடியேற்றுவிழா நடத்துவது, மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
- கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
- பொதுக்கூட்டம் தவபாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மாங்கோட்டை ஊராட்சி கீழப்பட்டியில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் புதுக் கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா–ளர் வழக் கறிஞர் கே.கே.செல்ல–பாண்டியன் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறினார்.
மேலும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, தலைமைக்கழக பேச்சா–ளரும், தலைமை கழக பாடகருமான ஜக்கரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ்.கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் என்.ஆர்.பரிமளம், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் மலையூர் ராமசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சிவபெருமாள் நன்றி கூறி–னார்.
- காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான மறுகுடியமர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக விராலிமலை, குளத்தூர் மற்றும் புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 448.81 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 143.32 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.
விராலிமலை வட்டம், குன்னத்தூர் கலிமங்கலம், புதுக்கோட்டை தாலுகா நத்தம்பண்ணை, செம்பாட்டூர் மற்றும் கவிநாடு மேற்கு ஆகிய கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்படவுள்ள குடும்பங்கள் ஆகியவற்றிற்கான மறுவாழ்விற்காக, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட நிர்வாகி இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரால் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரால் சமர்ப்பிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான இறுதி திட்ட வரைவு அறிக்கையினை பரிசீலனை செய்து மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் நில நிர்வாக ஆணையருக்கு ஒப்புதலுக்கு அனுப்பும் பொருட்டு மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பத்திரப்பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் கிராமங்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் மேற்கண்ட காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில், துணைதலைவர் அசோகன் முன்னிலையில் நடைபெற்றது. அலுவலக செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, சகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனசெல்வி, கீதா, அலுவலக இளநிலை உதவியாளர் ரமேஷ், சிவக்குமார் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அரசின் திட்டபணிகள் மக்களுக்கு சென்று சேர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் ஏரிகுளம் நீர்வரத்து வாய்க்கால் பகுதிகளில் சுண்ணாம்புகல் சுரங்கம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அரியலூரில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
- நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கபடும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தருமபுரி,
தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் தருமபுரி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிட வளாக அலுவலகத்தில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் முன்னிலையில் நடைபெற்றது.
சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் முத்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் ஜெய்சங்கர், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் ஆகியோர் கருத்து கேட்பு கூட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப் பொருட்கள் விலை ஏற்றம், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் குறைகளை கேட்டு அறிந்தனர்.
- மேலூரில் தி.மு.க. கூட்டம் நடந்தது.
- மேலூர் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
மேலூர்
மேலூர் நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செக்கடி திடலில் நடந்தது. நகர செயலாளர் முகமது யாசின் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் சேகர், ரமேஷ், மணிமாலா குணா, பொருளாளர் மலம்பட்டி ரவி முன்னிலை வகித்தனர். அவை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றினார்.
மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா பேகம் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு பாண்டி, ரகுபதி, துரைபுகழேந்தி, கென்னடியான், துரை மகேந்திரன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் எழில்வேந்தன், முருகானந்தம், அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலூர் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
- போகலூரில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார்.
பரமக்குடி
பரமக்குடி அருகே போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிதட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார். பொட்டிதட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் அப்பாஸ்கனி மற்றும் ரவிச்சந்திரன், கனகராஜ், கலைச்செல்வி, ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் பற்றி பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
உதயநிதி மன்றத்தைச் சேர்ந்த துரைமுருகன், போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் மற்றும் போகலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே.கதிரவன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்