search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223226"

    • உண்ணாவிரத போராட்டத்தை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பல்ராம் துவக்கி வைத்து பேசினார்.
    • பி.ஏ.பி.திட்டத்தில் நீர் பற்றாக்குறை இருந்து வருவதால் நீர் பங்கீட்டில் தமிழக- கேரளம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

    பொள்ளாச்சி

    பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டி.எம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் நீர் பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும்.

    இதில் பி.ஏ.பி.திட்டத்தில் நீர் பற்றாக்குறை இருந்து வருவதால் நீர் பங்கீட்டில் தமிழக- கேரளம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில், கேரளாவிற்கு தண்ணீர் வழங்கும் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு கேரளத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாலக்காடு மாவட்டம், சித்தூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    உண்ணாவிரத போராட்டத்தை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பல்ராம் துவக்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திர த்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் பாரதப்புழா விவசாயிகளை வறட்சியிலும், குடிநீர் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.

    இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும். திட்டத்தை கேரள அரசு தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் மேலும் தொடர்ந்து போராட்டங்கள் செய்யப்படும்.

    சித்தூர் எம்எல்ஏவும், அமைச்சருமான கிருஷ்ணன்குட்டி இருமாநில தண்ணீர் பிரச்சனையில் தொடர்ந்து எதிர்வினை யாற்றிவருகிறார். கடந்த காலங்களில் கிருஷ்ணன்குட்டி எம்எல்ஏவாக இருந்தபோது தமிழகத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். தற்போது, ஒட்டன்சத்திரம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்க்காமல் அமைதி காத்துவருகிறார். இது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சுமேஷ் அச்சுதன், கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் சதானந்தன், ப்ரீத், கே.எஸ்.தனிகாச்சலம், கோபால்சாமி, ராஜமாணிக்கம், சீபா உட்பட பலர் பங்கேற்றனர்.

    • பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் நாகராஜ் (வயது 52). கூலித் தொழிலாளி வசித்து வருகிறார்.
    • அப்போது அவர்களிடம் நாகராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறினார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் நாகராஜ் (வயது 52). கூலித் தொழிலாளி வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் வேலைக்கு சென்று இருந்தனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நாகராஜ் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கு வைத்து சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். இதனையடுத்து நாகராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இரவு பெற்றோர் ேவலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் அவர்களிடம் சிறுமி தனது கால், வயிறு வலிப்பதாக கூறினார். இதனையடுத்து அவரிடம் பெற்றோர் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர்களிடம் நாகராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறினார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

    • தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த கோரியும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னை விவசாயிகள்சார்பில் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு காரணங்க ளால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. ஆனால், தேங்காய் விலை மட்டும் தொடர்ந்து சரிந்து வருகிறது

    பொள்ளாச்சி :

    தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த கோரியும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னை விவசாயிகள்சார்பில் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    பல்வேறு காரணங்க ளால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. ஆனால், தேங்காய் விலை மட்டும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    வறட்சி நோய் தாக்குதல் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

    தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்காய் விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கட்டுப்படியான விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். ஆகவே தேங்காய் விலை சரிவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேங்காய் ஆதார விலை, கொப்பரை கொள்மு தலை 150 ஆக உயர்த்த வேண்டும். மேலும் அரசு ஆதார விலை கொப்பரை கொள்மு தலை முறையாக செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கொப்பரை கொள்முதல் நிர்ண யிக்கப்பட்ட இலக்கில் 15 சதவீதம் மட்டுமே கொள்முதல் நடை பெறுகிறது. ஆகவே கொள் முதலை முறைப்ப டுத்த வேண்டும்.

    பாமாயில் இறக்கு மதியை தடை விதித்து தேங்காய் எண்ணையை நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும். தென்னை மரத்தி ற்கான காப்பீடுகளை முறைப்படுத்த வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டி விவசாயிகள் வைத்து வரும் கோரிக்கையை புறக்கணிக்காமல் தென்னை நல வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர்களின் நட்பு அமைப்பு தென்னிந்திய தென்னை சாகுபடி ஆளர் சங்கம் மற்றும் விவசாயிகள் செய்திருந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ. தாமோதரன், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, பா.ஜ.க வசந்தராஜன் உள்பட பலர் பங்கேற்று பேசினார்.

    • குடிபோதையில் கனகராஜின் வீட்டின் முன்பு வெகு நேரமாக சத்தம் போட்டு கொண்டு இருந்தார்.
    • கணவரின் சத்தத்தை கேட்டு கவிதா ஓடி வந்தார். அவர் மொய்தீனை தகராறில் ஈடுபடாமல் செல்லுமாறு கூறினார்

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ெதாழில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). மில் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (38).

    அதேபகுதியை சேர்ந்தவர் முகமது மொய்தீன் (47). கார் டிரைவர். இவர் அடிக்கடி குடிபோதையில் அந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அதே போன்று குடிபோதையில் கனகராஜின் வீட்டின் முன்பு வெகு நேரமாக சத்தம் போட்டு கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த கனகராஜ் அவரிடம் சென்று வீட்டின் முன்பு சத்தம் போட வேண்டாம் இங்கு இருந்து சென்று விடு என்றார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரின் சத்தத்தை கேட்டு கவிதா ஓடி வந்தார். அவர் மொய்தீனை தகராறில் ஈடுபடாமல் செல்லுமாறு கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மொய்தீன் கணவன்-மனைவி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் கனகராஜை தாக்கி விட்டு 2 பேரையும் மிரட்டி அங்கிருந்து சென்றார்.

    இதுகுறித்து கவிதா பொள்ளாச்சி கிழக்கு போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொய்தீனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நான்சிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சந்திரா (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர்.

    கடந்த 10-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றார். அங்கு வைத்து சந்திரா அவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார்.

    இந்தநிலையில் 11-ந் தேதி இரவு இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சந்திராவுக்கு தகவல் தெரி வித்தார். அவர் உடனடியாக தனது வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். 

    • பா.ஜ.க. கோவை தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்
    • அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது

     பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற பாஜக கோவை தெற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள அந்த திட்டத்தை கைவிடக்கோரியும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் நாளை கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிக்கோரியும், ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் முக்கிய கோரிக்கை முன்வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்கள் ஆனந்த், கோவிந்தராஜ், துரை, மாநில விவசாய அணி துணைத்தலைவர் குமரேசன், மாவட்ட பார்வையாளர் மோகன்மந்தராச்சலம் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்ட வருவதாக புகார் இருந்து வருகிறது.
    • கேரளாவில் கனிம வளங்களை சுரண்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்ட வருவதாக புகார் இருந்து வருகிறது.

    குறிப்பாக தமிழகத்தில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கற்கள் அதிகளவிற்கு கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த லாரிகளை அவ்வப்போது பொது மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

    குறைந்த அளவு கருங்கற்கள் ஏற்றி செல்ல அனுமதி வாங்கிவிட்டு அதிக அளவிலான கருங்கற்களை கொண்டு செல்வது, ஒருமுறை அல்லது இரண்டு முறை கருங்கற்கள் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்று விட்டு பலமுறை கருங்கல்களை கொண்டு செல்வது என்று விதிமீறல்கள் நடந்து வருகிறது.

    கேரளாவில் கனிம வளங்களை சுரண்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு கேரளாவில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இதை தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்பது இயற்கையாக அவர்களின் புகாராக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற லாரி இன்று காலை கோபாலபுரம் -நெடும்பாறை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

    • ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    கோவை:

    ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 13-ந் தேதி பாரதீய ஜனதா சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.5 டிஎம்சி தண்ணீர் கிடைப் பதில்லை. தண்ணீர் கிடைக்கா ததற்கு காரணம் ஆனை மலையாறு மற்றும் நல்லாறு திட்டம் நிறைவேற் றப்படாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் நீண்ட கால கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், தற்போதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

    இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 13-ந் தேதி பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில்ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றகோரிக்கை வைத்து மாவட்டத்தலைவர் வசந்தராஜன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன ்சத்திரத்திற்கு தண்ணீர்கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக கோரியும  கோரிக்கை வைக்கப்பட உள்ளது.  

    • தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.
    • நாட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    பொள்ளாச்சி:

    தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.

    இந்த சந்தையானது வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகள் என 2 நாட்கள் நடக்கும். செவ்வாய்க்கிழமைகளில் மாடு விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.

    இந்த சந்தையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வரும்.மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

    கடந்த மாதம் சில மாதங்களாக சந்தை நாட்களில் ஒரு கோடி மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வந்தது.தற்போது வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி நேற்று பொள்ளாச்சி மாட்டு சந்தை களை கட்டி இருந்தது.

    வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர்.இதனால் காலை முதலே சந்தை களை கட்டி இருந்தது. மழை பெய்து கொண்டு இருந்தாலும் விற்பனை விறு, விறுப்பாக நடைபெற்றது.

    நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக நாட்டு காளை ஒன்று ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது.இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் செல்வராஜ் கூறியதாவது:-பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,500 மாடுகள் கொண்டு வரப்பட்டன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் விறு, விறுப்பான நடைபெற்றது.

    நாட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    நாட்டு எருமை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், முராரக எருமை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், ஜெர்சி ரக பசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், ஜெர்சி எச்.எப் ரக பசு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் விற்பனையானது. நேற்று மொத்தமாக ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி அதிகமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகைகளை காட்டும்படி கூறினார். இதையடுத்து உதயகுமார் கடையில் இருந்த தங்க நகைகளை காண்பித்தார்.
    • போலீசார் உதயகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அஜயை கைது செய்தனர்.

    கோவை:

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் நல்லி கவுண்டர் லே- அவுட் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 31). இவர் அதே பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகினார்.

    சம்பவத்தன்று அவரது கடையில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் உதயகுமாரிடம் தங்க நகை வாங்க வேண்டும், நகைகளை காட்டும்படி கூறினார். இதையடுத்து உதயகுமார் கடையில் இருந்த தங்க நகைகளை காண்பித்தார்.

    அந்த வாலிபரும் ஒன்றோன்றாக பார்த்தார். அப்போது உதயகுமார் அசந்த நேரம் பார்த்து அந்த வாலிபர் 3 பவுன் தங்க நகை இரண்டை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமார் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து உதயகுமார் அந்த வாலிபரை துரத்தி சென்றார்.

    அப்போது அந்த வாலிபர் தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மடக்கி பிடித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அஜய் (43) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் உதயகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அஜயை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறுத்தை நடமாட்டம் அறிந்ததால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பொள்ளாச்சி :

    ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள், பறவைகள் உள்ளன.

    இந்த வனவிலங்குகள் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது. சில நேரங்களில் மனித, விலங்கு மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

    பொள்ளாச்சி வனச்சரகம் அருகே ஆழியாறு அணை ஜூரோ பாயிண்ட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளது.

    இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்ததாகவும், அந்த சிறுத்தை நாய் ஒன்றை அடித்து கொன்று விட்டு வனத்திற்குள் செல்வதாகவும் அந்த பகுதி முழுவதும் தகவல் பரவியது. சிறுத்தை நடமாட்டம் அறிந்ததால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி விட்டு, அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததா என்பதை அறிய, வனத்துறை சார்பில் அந்த பகுதியில் தானியங்கி காமிராக்களை பொருத்தி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.
    • கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ150 வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

    பொள்ளாச்சி:

    தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுபடுத்தக்கோரி வருகிற ஜூலை 13-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.கடந்த பல மாதங்களாக தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லை அர சு கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலைக்கு தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ150 வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்னை விவசாயிகளின் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தாகவும் தெரிவித்தனர்.பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை சந்தித்த விவசாயிகள் மனு அளித்தனர்.

    ×