search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223230"

    • வேல்குமார் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    • கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த இட்டேரி பாலாஜி கோல்டன்சிட்டியில் வசித்து வருபவர் வேல்குமார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    திருட்டு

    கடந்த 19-ந்தேதி இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் அங்கு புகுந்துள்ளனர். அங்கு இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.

    இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிதாஸ் என்பவரது வீட்டில் இருந்த 10 கிராம் தங்கநகை மற்றும் சில்வர் பொருட்களை மர்மநபர்கள் அதே நாளில் திருடிச்சென்றனர்.

    ரூ.4 லட்சம் பணம்

    பின்னர் அங்குள்ள வெங்கடேஷ் என்பவரது வீட்டுக்கும் அந்த கும்பல் சென்றுள்ளது. அப்போது வெங்கடேஷ் தனது மனைவி முத்துலெட்சுமியுடன் குமரிக்கு சென்றுவிட்டார். இதனால் ஆட்கள் யாரும் அங்கு இல்லை என அறிந்த அந்த கும்பல் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றது.

    அங்குள்ள பீரோவில் இருந்த 74 கிராம் தங்கநகைகள் மறறும் ரூ.4 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் அவர்கள் வந்து பார்த்தபோது 3 வீடுகளிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

    இதுதொடர்பாக முன்னீர் பள்ளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஜெயிலுக்கு சென்றவர் வீட்டில் நகைகளை திருடி ஆடம்பரமாக செலவு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது

    மதுரை 

    மதுரை கோரிப்பாளை யம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (வயது 83). இவர் மதுரா கோட்ஸ் நிறு வனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தோணி ஒரு கொலை வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 110 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். வீடு திரும்பிய அந்தோணி கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இதுபற்றி அவர் தல்லா குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    இதுபற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷ னர் ஜெகன்நாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (36), கணேசன் (46), செல்வகுமார் (33)ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் கைதான விஜயகுமார் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார்.

    நகையை கொள்ளை யடித்த 3 பேரும் தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ.24 லட்சம் வாங்கி உள்ள னர். அந்த பணத்தை 3 பேரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • விவசாயி வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • ஓட்டு வீட்டின் மேல் ஓடுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு இருந்தது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி கிராமம் மேல தெருவில் வசிப்பவர் பெருமாள் (வயது 55). விவசாயி, இவரது மனைவி தெய்வக்கண்ணி.

    இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று பெருமாள் அருகிலுள்ள வீரமாங்குடி மடம் கிராமத்திற்கு தனது உறவினர் இறந்த துக்கத்திற்கு அவரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    மறுநாள் வீட்டை வந்து பார்த்தபொழுது இவரது ஓட்டு வீட்டின் மேல் ஓடுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் இறங்கி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் இருந்த தங்க தோடு, தங்க மோதிரம், தங்க காசு, உள்ளிட்ட 6 கிராம் நகைகளையும், ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பெருமாள் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கூகுள்பே கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரத்தையும் திருடிய கும்பல்
    • வடசேரி பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதி புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை தனது காரில் பூதப்பாண்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

    வடசேரி அண்ணாசிலை அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் கையை காட்டி காரை நிறுத்தினார். இதையடுத்து கார் நின்றது. அப்போது அந்த வாலிபர் தான் தாழக்குடி செல்ல வேண்டும் என்றும் தன்னை அழைத்து செல்லுமாறும் கூறினார். உடனே அவர் தனது காரில் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தாழக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென 4 பேர் காரை வழிமறித்தனர்.

    காரை நிறுத்தியதும் அந்த கும்பல் காரை ஓட்டி சென்றவரிடமிருந்த ரூ.2000 ரொக்கப்பணத்தை பறித்தனர். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்த கும்பல் அவரது கூகுள்பே கணக்கிலிருந்து ரூ.75 ஆயிரம் பணத்தையும் திருடியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. காரில் லிப்ட் கேட்டு வந்தவரும் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து பூதப் பாண்டி போலீசில் காரை ஓட்டி வந்தவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். லிப்ட் கேட்டு வந்த வாலிபர் தான் திட்டமிட்டு இந்த கை வரிசையில் ஈடு பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து வடசேரி பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் தாழக்குடி பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். காரில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு வந்து நகை பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.
    • போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த சேவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியிடம் கவரிங் சங்கலி பறித்த இருவரை போலீசார் கைது செய்தனா். சேவூா் அருகே உள்ள தாசராபாளையம் நடுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் சிகாமணி (64). இவா் தாசராபாளையம் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா். பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.

    தகவல் கிடைத்தது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேவூர் போலீசார் இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள்

    கோவை சித்தாபுதூா் சரோஜினி நகரைச் சோ்ந்த சின்னமருது (24), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (27) என்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டியிடம் பறித்தது கவரிங் நகை என்பதும் தெரிய வந்தது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • வீட்டில் யாரும் இல்லை.
    • வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 35). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் 2-ந் தேதி இரவு இவரது தாயார் சீதாலட்சுமிக்கு கரூரில் உள்ள பல் மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை நடந்ததால் கரூர் சென்று விட்டார்.ஈஸ்வரமூர்த்தியின் மனைவி சத்திய பிரியங்கா அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லை.

    நேற்று காலை ஈஸ்வரமூர்த்தி வீட்டின் அருகில் வேலை செய்யும் எலக்ட்ரீஷியன்கள், ஈஸ்வரமூர்த்தி வீட்டை பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளன. இதுகுறித்து எலக்ட்ரீஷியன்கள் ஈஸ்வரமூர்த்திக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் செயின், தோடு, கொடி, மோதிரம் ஆகியவை சேர்த்து மொத்தம் 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை அருகே ரூ.7 லட்சம், 10 பவுன் நகைகள் கேட்டு புதுப்பெண்ணை சித்ரவதை செய்துள்ளனர்.
    • கடந்த மாதம் 10-ந்தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் செய்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கற்பகநகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் நாகேஸ்வரி(வயது23). இவருக்கும் திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் மகன் உதயசங்கர்(28) என்பவருக்கும் கடந்த 10-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுன் நகைகள், ரூ. 50ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.3லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை நாகேசு வரியின் குடும்பத்தினர் வழங்கி யுள்ளனர். இந்த நிலையில் 25-7-2022 அன்று மேலும் 10 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கப்பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி உதயசங்கர் தனது மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.

    உதயசங்கருக்கு ஆதர வாக அவரது தந்தை ராஜவேலு, தாய் மீனா, அண்ணன் ரகு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இதுபற்றி கடந்த மாதம் 10-ந்தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் உதயசங்கர், அவரது தந்தை ராஜவேலு, தாய் மீனா, அண்ணன் ரகு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உதயசங்கர் பட்டதாரி என்றாலும் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை ராஜவேலு ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தாய் மீனா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மர்ம நபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க நகையை பறித்தனர்.
    • போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58) விவசாயி.

    இவரது மனைவி அருள்செல்வி (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் வழக்கம்போல இரவு வீட்டின் கதவை சாத்தி விட்டு அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது வீட்டில் வாசல் கதவு வழியாக வீட்டிற்க்குள் வந்த மர்ம நபர்கள் அருள்செல்வி கழுத்தில் கிடந்த சுமார் 6 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனால் அருள்செல்வி எழுந்து திருடன், திருடன் என சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர், ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருள்செல்வியின் கழுத்தில் லேசானகாயம் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை 6 மணி அளவில், வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தோணியம்மாள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த சுமார் 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு காணவில்லை.
    • தோழிகள் இருவருக்கும் போன் செய்துள்ளார். ஆனால் அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள காரங்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் சுதா (வயது 50). இவருக்கு குருந்தன்கோடு சேர்ந்த ஜெயலட்சுமி (22) மற்றும் ஜெயராணி (20) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி, ஜெய ராணியும் ஜாஸ்மின் சுதா வீட்டில் தங்கி உள்ளனர். அப்போது ஜாஸ்மின் சுதா வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் அவரது நண்பர்கள் இருவரும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜாஸ்மின் சுதா பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்பொழுது பீரோவில் இருந்த சுமார் 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணவில்லை. இதையடுத்து தோழிகள் இருவருக்கும் போன் செய்துள்ளார். ஆனால் அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து குறுந்தன் கோட்டில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார் அங்கு அவர்கள் இல்லை

    இது குறித்து ஜாஸ்மின் சுதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயலெட்சுமியை கைது செய்தனர். தோழி வீட்டிலேயே நகையை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காற்றாலை மின் உற்பத்தி நிலைய இயக்குனராக உள்ளார்.
    • வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். காற்றாலை மின் உற்பத்தி நிலைய இயக்குனராக உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவை ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது ரவிச்சந்திரன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.9 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய ரவிச்சந்திரன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (74). கணக்காளர். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இவரது மனைவி மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று இருந்தார்.

    அப்போது இவர்களது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து

    உள்ளே நுைழந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அரிசிபாளையத்தில் நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் சையத் கபூர் தெருவை சேர்ந்தவர் பரணி என்கிற பழனி (வயது 45). இவர் தம்மண்ணன் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர்.

    இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து கிடந்தது.

    மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பழனி உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதே போல் அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளி சக்திவேல் (45) என்பார் வீட்டிலும் நேற்று மதியம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

    இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

    ×