search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223236"

    • வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சாலையின் இருபுறமும் அரை அடியில் பள்ளம் உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் கிராமம் உள்ளது.

    இங்குள்ள வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், இங்குள்ள ராமர் பாதம் முதல் கோடியக்கரை வரை உள்ள சாலையின் இருபுறமும் அரை அடியில் பள்ளம் உள்ளது.

    இதனால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    மேலும், அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் பயணம் செல்பவர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

    இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும், அப்பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற குழகர்கோவிலில் வைகாசி விசாக திருவிழா இந்த மாதம் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி மணல்மேடு கிராமம் உள்ளது.

    இங்கு சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு காய்கறி சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது.

    இக் கிராமத்திலிருந்து அடுத்து உள்ள மீனவர் காலனி செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பி மற்றும் மணல் சாலையாகவே உள்ளது.

    இதனால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதி அடைகிறார்கள்.

    இதனால் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருந்து அன்னவாசல் கிராமத்துக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அன்னவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    இந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 143 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் தகுதியுடைய 83 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அந்த மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறய தினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்ப டுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு 6.8 கிலோ மீட்டர் தொலைவில் புதிய சாலை அமைப்பதற்கென பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ4.08கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அரசாணை பெறப்பட்டு, பணிகள் ெதாடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.38லட்சத்து 30ஆயிரத்து 910 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முககையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மாரிமுத்து, அன்னவாசல் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயலட்சுமி, வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருமுட்டிவரை ரோடு அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • மலைவாழ் கிராம மக்களும், மலையடிவார பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலைபுலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரக ங்கள் உள்ளன. வன ப்பகுதியில்உள்ள செட்டில்மெ ண்ட்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.

    இவ்வசதிகளை செய்து தருமாறு அவர்கள் வனத்துறையிடமும் தமிழக அரசிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள குழிப்பட்டி, மாவடப்பு, புளிய ம்பட்டி, கருமுட்டிஉட்பட மலைவாழ் கிராமங்களில் இருந்து சமவெளிக்கு வர நேரடி இணைப்பு ரோடு இல்லை.கடந்த சிலஆண்டுகளுக்கு முன்தேவனூர்புதுாரில் இருந்து, மயிலாடும்பாறை வழியாகநல்லார் காலனி வரை ரோடுஅமைக்கப்பட்டது.ஆனால்கருமுட்டிவரை ரோடு அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் கிராம மக்களும், மலையடிவார பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், கருமுட்டி திட்ட ரோடு பணிகளை மேற்கொள்ள பலஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரோடு அமைக்கப்பட்டால் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பல மலைவாழ் கிராமங்களை இணைக்க முடியும்.இத்திட்ட த்தை செயல்படுத்த வேண்டும் என காண்டூர் கால்வாய் பணிகள் நடக்கும் போதே அப்பகுதியினர்அரசை வலியுறுத்தினர்.பலஆண்டு கால போரா ட்டத்துக்குப்பிறகு நபார்டுதிட்டத்தின் கீழ் வறப்பள்ளம் வரை ரோடு அமைக்கப்பட்டது.வறப்ப ள்ளத்தில் பாலம் அமைத்து மலைவாழ் கிராமம் வரை இத்திட்டத்தை முழுமை ப்படுத்தினால் 300க்கும் அதிகமான தோட்டத்து சாளைகளில் வசிக்கும் மக்களும் மலைவாழ் மக்களும் பயன்பெறுவார்கள்.

    மாவடப்பு உட்பட பல செட்டி ல்மெண்ட்களுக்கு உடுமலை பகுதியிலிருந்து செல்ல வசதி இல்லை. அவசர தேவைக்காக கூட பல கி.மீ., தூரம் சுற்றி வரும் நிலை தவிர்க்கப்பட்டு அவர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பிரச்னையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    • தொண்டியில் சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல்நிலை பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகே காமாட்சி அம்மன் கோவில் சாலை உள்ளது. இந்த சாலை மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சேதமானது. இந்த சாலையை சீரமைக்க அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்த சாலையில்தான் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன, அக்ரஹாரம் தெரு, புதுக்குடி, வட்டக்கேணி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது.

    எனவே இந்த சாலையை உடடினயாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
    • திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாபநாசம்:

    கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சா லையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும், திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாகவும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் பசுபதி கோயில், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டா ரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலைத்துறை, சுவாமிமலை ஆகிய 11 இடங்களில் மழைநீர் வடிகால் வசதிக்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் பழனியப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    • மதுரை 20-வது வார்டு பகுதியில் சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
    • வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை 20-வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக சாலைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டுகின்றனர்.

    அப்போது ஊழியர்களின் கவனக்குறைவால் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு சேதமடைகிறது. இதனால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாக தோண்டிய சாலைகளை சரி செய்யாமல் இருப்பதால் சேறும், சகதியுமாக காட்சிய ளிக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சாகசங்கள் செய்து மெயின் ரோட்டுக்கு வர வேண்டியுள்ளது.

    இதுகுறித்து கவுன்சிலர் நாகஜோதி சித்தன் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் சரி செய்யப்படவில்லை. போராட்டங்கள் நடத்தியும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இதனால் பொது மக்கள் சாலையில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

    சேலம்:

    மாநில நெடுஞ்சா லைத்துறை சார்பில் சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல், நெத்திமேடு முதல் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலும், அம்மாபேட்டை மிலிட்டரி சாலையில் பாலபாரதி பள்ளி முதல் அணைமேடு வரையிலும் மற்றும் நெய்க்காரப்பட்டி முதல் உத்தமசோழபுரம் வரையி லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. பொன்னம்மா பேட்டை ெரயில்வே கேட் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சாலையின் நீளம், அகலம், தடிமன், அடர்த்தி, சாலை தளத்தின் சாய்மானம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், சாய்வு தளம் மற்றும் தரத்தை ஆய்வு செய்து மழைநீர் தேங்காத வகையில் சாலைகள் அமைக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ரா.சவுந்தர்யா, சுமதி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள் கவின், பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சாலை அமைக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆனதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது.
    • குண்டும் குழியுமான சாலையை, சீரமைத்து விபத்துக்கள் நேரா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி 14வது வார்டுக்குட்பட்ட உண்ணாமுலை அம்மன் கார்டன் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த சாலை குப்பிச்சிபாளையத்திலிருந்து அல்லாளபுரம் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலை அமைக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆனதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை, சீரமைத்து விபத்துக்கள் நேரா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • இந்த சாலையின் தரம் மற்றும் பணிகள் குறித்து சென்னை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ரூ.115 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும்பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம்:

    பல்லடத்திலிருந்து தாராபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பல்லடத்தில் இருந்து புத்தெழுச்சல் வரை ரூ.115 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும்பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் தரம் மற்றும் பணிகள் குறித்து சென்னை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பணிகள் குறித்து சில அறிவுரைகளையும் வழங்கினார். இந்த ஆய்வின் போது திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி, திருப்பூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, திருப்பூர் தரகட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்லடம் உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர்கள் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார்.
    • நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சாதாரணக்கூட்டம் நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் வாசுதேவன், துணை தலைவர் ம.சுப்பராயன், மேலாளர் காதர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, நித்தியாதேவி பாலமுருகன்: எனது வார்டில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் தெருக்களிலேயே எரியூட்டுகின்றனர். அதனை தடுத்துநிறுத்த வேண்டும்.

    ஜெயந்திபாபு: பண்டாரகுளம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். ராமு: மீன்மார்கெட் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவேண்டும். காய்கனி மார்கெட் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டைகளாக கட்டி பிரதான சாலையோரம் வைக்கப்பட்டு வருவதால் நாள்தோறும் குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்லவேண்டும்.

    வள்ளி முத்து: நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் இருசக்கர வா–கனங்களிலோ, நடந்தோ செல்லமுடியவில்லை. நாய்கள் துரத்தி கடிக்கிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ராஜசேகரன்: எரியவாயு தகனமேடையில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை மாற்றிவிட்டு தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் பங்கேற்றனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் நன்றி கூறினார்.

    • செம்பொன் விளை-திக்கணங்கோடு சாலையில் நாட்டு வைத்திய சாலை நடத்தி வருகிறார்.
    • 4 பவுன் நகை பறிப்பு

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பெத்தேல்புரம் படுவாக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71).

    இவர் செம்பொன் விளை-திக்கணங்கோடு சாலையில் நாட்டு வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி வைத்திய சாலையில் ஜார்ஜ் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை தாக்கிவிட்டு 4 பவுன் நகையை பறித்து சென்றார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக கொடுப்ப குழியை சேர்ந்த சிவசங்கு (53) அவரது மகன் கார்த்திக் என்ற ஜோதி (29), அபிஷேக் (22), சுபின் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபிஷேக் அரசு ஊழியர் ஆவார். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் கொடுப்ப குழியை சேர்ந்த சிவா (27) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    முக்கிய குற்றவாளியான இவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டி ருந்தது. தனிப்படை போலீ சார் சிவாவை தேடி வந்த னர். இந்த நிலையில் சிவா இரணியல் கோர்ட்டில் நேற்று மாலை சரணடைந்தார். போலீசார் அவரை காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    ×