search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • காப்பீடு இல்லாத வாகனத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு ெபற முடியாது
    • அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தகவல்

    அரியலூர்,

    அரியலூர் அருகே ராயம்புரம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான மகாலட்சுமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தயங்காமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரில் அனுகினால் இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து சுமூகமாக தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும்.ஆனால் குற்றவியல் வழக்குகளுக்கு இது பொருந்தாது. குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு இலவசமாக வழக்கறிஞர் வைத்து தரப்படும். மூத்த குடிமக்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் அவ்வாறு பராமரிக்க தவறினால் சட்டம் தன் கடமையை செய்யும். சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. காப்பீடு இல்லாத வாகனங்களில் குறிப்பாக லாரி மூன்று சக்கர ஆட்டோ ஆகிய வாகனங்களில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால், நஷ்ட ஈடு பெற இயலாது.பெற்றோர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும்போது சொத்துக்களை தங்களது பிள்ளைகளுக்கு மாற்றம் செய்வது தவிர்க்க வேண்டும் நீதிமன்றங்கள் இந்த மாதிரி வழக்குகள் நிறைய வருகின்றன. ஏனெனில், பிள்ளைகள் தங்களது பெயருக்கு சொத்து மாற்றம் செய்யப்பட்டவுடன் பெற்றோர்களை கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை முன் பின் தெரியாத நபர்களிடம் விடக்கூடாது. குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே பாலியல் பாலியல் புரிதல் பற்றிய கல்வி முறையை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் தயங்காது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவினை நேரில் அணுகலாம்.சட்ட விரோதமாக ஆசிட் உற்பத்தி ெசய்பவர்களை தண்டிக்க டுமையான சட்டங்களை இயற்ற ே வண்டும் என்று தெரிவித்தார்.

    • இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
    • அவர்களுக்கு வீடு திரும்பும் வரை போக்குவரத்து, தங்குமிடம், உணவு இலவசமாக செய்து தரப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தேதிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், கிருஷ்ணன் கோவில் தனியார் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம் உதவியுடன் ராமச்சந்திர ராஜா, சுப்பிரமணியராஜா நினைவாக இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள

    ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில் முகாம் நடந்தது. ஜானகிராம் மில்ஸ் இயக்குநர் என்.எஸ். சஞ்சய்குமார் ராஜா தொடங்கி வைத்தார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொருளாளர் பிரபாகரன், விருதுநகர் மாவட்ட தலைவர் கண்ணன், வட்டார பொருளாளர் கிருஷ்ணன்குட்டி, ஜானகிராம் மில்ஸ்

    ஐ.என்.டி.யு.சி தலைவர் சுகுமாரன், இணை செயலாளர் கணபதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவ மனை மருத்துவர் விக்னேசுவரி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 45 பேர் கிருஷ்ணன்கோவில் தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு வீடு திரும்பும் வரை போக்குவரத்து, தங்குமிடம், உணவு இலவசமாக செய்து தரப்பட்டது.

    • முதியோர் மற்றும் மகளி ருக்கான வலி மற்றும் வாத சிகிச்சைக்கான இலவச மூலிகை பிசி யோதெரபி மருத்துவ முகாம்
    • 200க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்

    ஆலங்குடி,

    ஆலங்குடியில் பிசியோதெரபி மையத்தில் முதியோர் - மகளிருக்கான வலி மற்றும் வாத சிகிச்சைக்கான இலவச மூலிகை பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.விழாவில் இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி வரவேற்றார். மருத்துவ முகாமிற்கு வாசகர் வட்டத் தலைவர் பாபுஜான் முன்னிலை வகித்தார்.ஓய்வு பெற்ற வட்டாச்சி யர் ராஜசேகரன் ஆரோக்கி ய வாழ்வு குறித்து பேசி னார். ஆலங்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மணிவண்ணன் பேசுகையில், நவீன உலகில் சுகாதாரம் கேள்விக் குறியாய் இருக்கிறது.முருங்கையும் முடக்கத்தானும் சாப்பிட்ட நம் முன்னோர்கள் போன்று இன்று மனித ஆரோக்கியம் இல்லை. எனவே துரித உணவுதான் இன்றைக்கு உடம்பிற்கு பல்வேறு நோய்களை உண்டாக்கி மனிதனை ஆரோக்கிய மற்றவனாக மாற்றுகிறது. இயற்கை உணவையும் மூலிகை மருந்துகளையும் உண்டாலே நோய்நொடியின்றி நீடித்து வாழலாம் என்று பேசினார். வம்பன் சிவகு மார், அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மருத்துவர்கள் கோவிந்தசாமி, சரண்யா ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். சமூக ஆர்வலர்கள் கணபதி, பெர்ணான்டஸ்,அந்தோ ணிசாமி, சுப்பிரமணியன், தைலா, முரளி, அபினேஷ் உள்ளிட் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • முகாமில் 250 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
    • 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார்.

    உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ், சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம், முகாம் சேர்மன் கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவை திட்ட மாவட்ட தலைவர் வின்சென்ட் பிரபாகரன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நடைபெற்ற முகாமில் மருத்துவர்கள் சபீரா, பூஜா குழுவினர்கள் கலந்துகொண்டு சிறியவர் முதல் பெரியவர் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி கண்ணில் குறைபாடு உள்ள அனைவருக்கும் சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.

    இம்முகாமில் 250 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். 25 பேர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர் ராஜ், சாமிநாதன், சரவணன், செந்தில் நாதன், பக்ருதீன் அலி அகமது, விவேகானந்தன், சுப்பிரமணியன், வெங்கடேசன், கஸ்தூரி கணேசன், ரவிச்சந்திரன், செல்வகுமார், சுரேஷ், முருகவேலு, கணேசன், மோகன் பாபு, முருகானந்தம், அப்துல் ஆசிப், முகமது சித்திக், அதியமான், தமிமுன் அன்சாரி, சதீஸ், சக்திவேல், ஆபிதீன் பள்ளி பொறுப்பு தாளாளர் சித்ரார்த்தன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    பாபநாசம் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    • காய்ச்சல் தடுப்பு முகாம்
    • மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டது

    திருச்சி, 

    தமிழகத்தில் தற்போது வைரஸ் காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது. இதனை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், உரிய பரிசோதனைகள் மேற் கொள்ளவும் வலியுறுத்தி உள்ளார்.மேலும் கொரோனா தாக்கமும் தொடங்கி இருப் பதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் திருச்சி உறையூர் பகுதியில் பொது மருத்துவ மற்றும் காய்ச்சல் நோய் தடுப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.உறையூர் குறத்தெரு பகுதியில் மாநகராட்சி சார்பாக நடந்த இந்த முகாமினை மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.காந்திபுரம் சுகாதார நிலைய மருத்துவர் விமலா மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இணை நோய்களுடன் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

    • புதுக்கோட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது
    • 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கலைஞர்கருணாநிதி அரசு மகளிர்கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தின. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதி வழங்கினார்.இந்நிகழ்வு மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.பின்னர்சட்டத்துறை அமைச்சர்தெர ிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-வது முறையாக நடைபெற்று வரும் இந்த தனியா ர்துறை வேலை வாய்ப்பு முகாமில் உற்பத்தி த்துறை, சேவைத்துறை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியா ளர்களை தேர்தெடுத்தனர். இம்முகாம் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார்2500-க்கும் மேற்பட்ட வேலைநாடுனர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.என்று அவர் பேசினார்.இம்முகாமில், அயல்நா ட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.இந்நிகழ்வில், மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) இர.தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர்திலகவதி செந்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன் (தொ.வ.), பெ.வேல்முருகன், கல்லூரி முதல்வர்பா.புவனேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்எஸ்.உலகநாதன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தொடர்ந்து தினமும் வட்டாரத்திற்கு மூன்று இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • தமிழகம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாமானது நடைபெற்று வருகிறது.

    தருமபுரி,

    இதில் அனைத்து மாவட்டங்களிலும், காய்ச்சல் அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து முதற்கட்டமாக முகாம் நடத்த மக்கள் நலாவாழ்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து முதற்கட்டமாக காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்று இடங்களில் இந்த காய்ச்சல் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமுக்கு வருபவர்கள் பொது மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என கண்டறியப்படுகிறது.

    முன்னதாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறியப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

    மேலும் தொடர்ந்து தினமும் வட்டாரத்திற்கு மூன்று இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த முகாமில் மருத்துவர்கள், செவிலியர், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் அருண் தலைமையில் சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட நடமாடும் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். இதில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு உள்ள 2 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    முகாமினை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவனேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், வினோத் பாபு, ஆங்கல்ஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    மேலும் இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 14 நடமாடும் குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • டெங்கு, மலேரியா உள்ளிட்ட 5 வகையான காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இன்புளூயன்சா என்னும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று 200-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் வழிகாட்டுதலின் பேரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடந்து வருகின்றன.

    தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி, கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இது தவிர ஒவ்வொரு வட்டாரங்களிலும் 14 நடமாடும் குழுக்கள் மூலமும் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. பொது சுகாதார துறை மூலம் ஏராளமான களப்பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் 28 குழுக்கள் பிரிந்து சென்று குழந்தைகள், மாணவ- மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.

    தஞ்சை மாநகராட்சியில் 210 களப்பணியாளர்களும், கும்பகோணம் மாநகராட்சி பட்டுக்கோட்டை நகராட்சியில் தலா 60 களப்பணியாளர்களும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 20 களப்பணியாளர்களும் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    இதில் காய்ச்சல் அறிகுறி தென்படுபவர்களை அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.

    தஞ்சை அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியில் குழந்தைகள் மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் ஏற்பாட்டில் நடந்த முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த மையத்தில் குழந்தைகள், பொது மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, உன்னி காய்ச்சல், லெப்டோ ஆகிய 5 வகையான காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பொது சுகாதார ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதன் முடிவுகள் வந்தவுடன் காய்ச்சல் உள்ளவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    இந்த முகாமில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பாரதி, மாவட்ட மலேரியா அலுவலர் தையல்நாயகி, சுகாதார ஆய்வாளர் அருமைத்துறை ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.

    இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி க. ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும். தேவையான அளவு மருந்து , மாத்திரைகள், கிருமி நாசினி கையிருப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    பொதுமக்கள் யாரும் மருத்துவர்கள் ஆலோசனை இன்றி மருந்து, மாத்திரைகளை வாங்க கூடாது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

    திருவாரூர் மாவட்டத்தில் மொபைல் வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது.

    ஒரு வட்டாரத்திற்கு மூன்று மொபைல் வாகனங்கள் என 10 வட்டாரத்திலும் 30 மொபைல் வாகனங்களில் மருத்துவ குழுவினர் வீதி வீதியாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பு  சிகிச்சைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இந்த காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    சூடான தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாகை- மயிலாடுதுறை

    இதேபோல் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடந்து வருகின்றன.

    அங்கு பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    • நுகர்வோர் பாதுகாப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
    • கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.

    கூட்டத்தினை, வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், அக்கூட்டம் நட த்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம் , புதுப்பாளையம் கிராம த்திற்கு தனித்துணை ஆட்சியர், சமூக பாது காப்புத் திட்டம் அரியலூர், உடையார்பா ளையம் வட்டம், வெண்மா ன்கொண்டான் (மேற்கு) கிராமத்திற்கு துணை பதிவாளர் (பொ.வி.தி) அரியலூர், செந்துறை வட்டம், ஆலத்தியூர் கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அரியலூர், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் (தெற்கு) கிராமத்திற்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரியலூர், ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோ ர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகை ப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம் என அரியலூர்பெ கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • மொபைல் குழு மூலம் மருத்துவக் ஆலோசனை வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், 52 இடங்களில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 52 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

    அதன்படி மாநகராட்சியின் நான்கு மண்டலத்திலும் தலா ஒரு இடம் வீதம், நான்கு இடங்களில் முகாம் உட்பட, 52 இடங்களில் இந்த முகம் காலை முதல் நடைபெற்று. இது தவிர, நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் வட்டாரத்துக்கு ஐந்து பள்ளிகளில் முதல்கட்டமாக காய்ச்சல் முகாம், மொபைல் குழு மூலம் ஆலோசனை வழங்கினர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:- காய்ச்சல் கண்டறியும் முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், தொடர் காய்ச்சல் பாதிப்பில் இருப்பவர் உடல் நலம் குறித்து அறியப்படும். ஒரு பகுதியில் அதிக காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர் இருந்தால், அப்பகுதியில் மாஸ்கிளினீங், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும். ஏதேனும் உடல்நலக்குறைவு இருந்தால், தங்கள் பகுதியில் நடக்கும் காய்ச்சல் முகாமில் மக்கள் பங்கேற்று, பயன் அடையலாம் என்றார்.

    • இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்து

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    முகாமில் இருதய நல சிறப்பு மருத்துவர் டாக்டர் விஜய் சேகர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அனைவருக்கும் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரைஅளவு, கொழுப்பு அளவு, இருதய சுருள் படம், இருதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை எடுக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சிறு இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு டாக்டர் விஜய் சேகர் ஆலோசனை வழங்கினார் . 25 நபர்களுக்கு மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப் பட்டனர்.

    மருத்துவர்.சுதந்திரகுமார், மார்க்கெட்டிங் தனவேந்தன், இந்திய மருத்துவச் சங்க பொருளாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புவனேஸ்வரன், ரவிச்சந்திரன், ஸ்ரீதர் ,போக்குவரத்து கா வலர்கள் ராஜசேகர், உத்தமி, சற்குணன், விஜய், தே ன்மொழி, கார்த்திக் மற்றும் ஊர்காவ ல்படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து வகையான மக்களும் முகாமில் 250 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

    ×