search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • வட்டாட்சி யர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மார்ச் மாதம் 2-வது சனிக்கிழமையான வருகிற 11-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சி யர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கடலுார் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
    • பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம்

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர், திருமுட்டம் ஆகிய வட்டா ட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்படும். இம் முகாமில்கைரேகை யினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று பொது விநியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியா வசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். 3-ம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அளிக்கலாம். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாமில் அளிக்கலாம்.

    • 11 மனுக்களுக்கு மீது உடனடி தீர்வு காணப்பட்டது
    • சிறப்பு விசாரணை முகாமிற்கு பொதுமக்கள் வருவதற்காக சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், ஜனனி பிரியா ஆகியோர்பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 36 மனுக்களில், 11 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்

    • எல்.ஜே.நகரில் உள்ள பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 145 பேருக்கு எக்கோ, உடல் ரத்த அழுத்தம் மற்றும் பொது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமம் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டருடன் இணைந்து எல்.ஜே.நகரில் உள்ள நியூ விஷன் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.

    இந்த முகாம் நடத்திட தமிழ் பல்கலை கழக வளாக குடியிருப்போர் நலசங்க தலைவர் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பாரதி நகரில் வசித்து வரும் முன்னாள் படைவீரர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இம்மருத்துவ முகாமில் 205 நபர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 145 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இ.சி.ஜி., பி.எம்.ஐ., பொது பரிசோதனைகளை ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் குழுவினர் செய்தனர்.

    முடிவில் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ரெ.குருமூர்த்தி நன்றி கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது
    • அமைச்சர் மகேஷ் சான்றிதழ்களை வழங்கினார்

    துவாக்குடி,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் கிழக்கு மாநகரம் காட்டூர் பகுதி 43-வார்டு பிலோமினாள்புரம் பள்ளிக் கூடத்தில் இன்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்து ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். தி.மு.க. மாநகர செயலாளரும் மூன்றாவது மண்டலத் தலைவருமான மு.மதிவாணன் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஓ.நீலமேகம் தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலரும் மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ந.செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியினை மாவட்ட மருத்துவர் அணித் தலைவர் டாக்டர் தமிழரசன் மாவட்ட அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு டாக்டர் முகம்மது மன்சூர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் பதினெட்டாவது முறையாக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் ரத்தத்தை தானம் செய்தார். அவரை அமைச்சர் பாராட்டி சான்றிதழ் வழங்கி மகிழ்ந்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • நேரு யுவகேந்திரா இயக்குனர் தொடங்கி வைத்தார்
    • மருத்துவ பரிசோதனைகளுடன் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது

    திருச்சி.

    திருச்சி எல்லக்குடி பள்ளியில் இலவச மருத்துவ முகாம் சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் இ.எம். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். எல்லக்குடி கிராம தலைவர் வினோத் கனகராஜ், தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய அரசின் நேரு யுவகேந்திரா இயக்குனர் சுப்பிரமணியன் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் கனரா வங்கி மேலாளர் சுப்பிரமணியன், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாநில ஆலோசகர் ராஜசேகரன், மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மருத்துவ முகாமில் பல்வேறு நோய்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டு, இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. முடிவில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் கம்பரசம் பேட்டை தர்மராஜ் நன்றி கூறினார்.

    • விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்கினர்.
    • பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சா வடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வாக்காளர்கள் ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்கினர்.

    இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    சிறப்பு முகாமினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, தேர்தல் துணை தாசில்தார் விநாயகம், துணை தாசில்தார்கள் விவேகானந்தன், பிரியா ஆகியோர் பார்வை யிட்டனர்.

    இப்பணியில் மேற்பார்வை யாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலைய அலு வலர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • 8ம் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்
    • பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது

    அரியலூர்,

    பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு ஏற்படும் உடல் நோய்கள், மன நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் பொருட்டு வருகிற புதன்கிழமை வரும் 8ம் தேதி அன்று திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அனைத்து அரசு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, இயற்கை, யோகா மருத்துவ பிரிவு மருத்துவ முறைகளில் பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது!திருச்சி, கரூர், அரியலூர், ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரையிலும், பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஊரக சித்த மருத்துவமனைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் இச்சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும்.இம்முகாமில் தைராய்டு நோய், மாதாந்திர தீட்டு பிரச்சினை, சினைப்பை நீர்க்கட்டி, கருப்பை கட்டி, புற்றுநோய் கட்டி, குழந்தையின்மை, உடல் பருமன், மூட்டு வலி, இரத்த சோகை, சர்க்கரை நோய், இதய நோய், இரத்த கொதிப்பு நோய், ஆஸ்துமா, மார்பகக்கட்டி, மூலம், பெளத்திரம், முடி உதிர்தல், பொடுகு, வயிற்று புண்கள் போன்றவற்றிற்கு சிறப்பு ஆலோசனை மற்றும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும் என்று திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர்மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்சா.காமராஜ் தெரிவித்து உள்ளார்.

    • மாவட்ட அளவில் குறை கேட்டு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
    • முகாம் வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த விரிவான அறிவுரைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு வேலை அடையாள அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்று திறனாளிகள் அனைவருக்கும் பிரத்தியேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 7829 மாற்று திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குறை கேட்டு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த முகாம் வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற வேலை அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுக்க 1.20 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது
    • பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி போட்டு பயன்பெற கால்நடை வளர்ப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மூன்றாம் சுற்றாக கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையால், குழுக்கள் அமைக்கப்பெற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டம் வரும் 21 ந் தேதி வரை கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முழுவதும் இலவசமாக போடப்படுகிறது.இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாத வயதிற்கு மேலுள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் கறவை மாடுகள், எருதுகள், காளைகள், எருமையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


    • பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
    • இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலகு -1 சார்பாக சிறப்பு முகாம் பெரியாயிபாளையம் கிராமம் பழங்கரை ஊராட்சியில் நடைப்பெற்றது.

    சிறப்பு முகாமின் முதல் நாள் முகாம் தொடக்க விழா அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சேதுமாதவன் முன்னிலையில் நடைப்பெற்றது. முகாமின் இரண்டாம் நாள் பூண்டி காவல்நிலையம் தனலட்சுமியால் பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    இணையவழி பரிவர்த்தனை குறித்த நாடகம் பொதுமக்கள் முன்பு நடத்தப்பட்டது. 3-ம் நாள் பழங்கரை திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. 4-ம் நாள் இலவச கண் பரிசோதனை முகாம் லோட்டஸ் கண் மருத்துவமனையால் நடத்தப்பட்டது. இதில் 200 பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    5-ம்நாள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. 6-ம் நாள் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் மண்டபம் தூய்மைப்படுத்தப்பட்டது.முகாமின் நிறைவு விழா காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கவுன்சிலர் சேதுமாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. மரக்கன்றுகளும் நடப்பட்டது.முகாமுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியைகள் சந்தானலட்சுமி மற்றும் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தற்போது மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலம் நடைபெறும்.

    இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களது சுயவிபர அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×