search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது

    அகரம்சீகூர்,

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி வளாகத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ, கால்நடை துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் லெப்பைக்குடிக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், தாங்கள் வளர்க்கும் நாய், பூனைகளை கொண்டு வந்து கால்நடை மருத்துவர்களிடம் பரிசோதனை செய்தனர். செல்லப்பிராணிகளுக்கு நோய் தாக்கம், பராமரிப்பு குறித்தும் பிராணிகள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. இம்முகாமில் மண்டல இணை இயக்குனர்சுரேஷ் கிறிஸ்டோபர், கால்நடை உதவி இயக்குனர் குணசேகரன், லெப்பைக் குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, கால்நடை உதவி மருத்துவர்கள் இ.ராமகிருஷ்ணன், திருநாவுக்கரசு , கால்நடை ஆய்வாளர் பிரேமா,மற்றும் உதவியாளர்கள் சின்னதுரை, ராஜசேகரன், கால்நடை மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பென்னங்கோணம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    21-ந் தேதி வழங்கப்படும என்று மாவட்ட கலெக்டர் தகவல்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1-19 வயதுடைய 5,23,811 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 1,27,870 மகளிருக்கும் என மொத்தமாக 6,51,681 பேருக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார்கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர்மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி வழங்கப்படும்.குழந்தைகள் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நன்றாகவும் பள்ளி வருகையில் முன்னேற்றமும் இருக்கும் என்பதால் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் இம் மாத்திரையினை உட்கொண்டு நல் ஆரோக்கியத்தினை பெற்றிடும்படி மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொ ண்டுள்ளார்.

    • அரியலூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் தண்டுவட பிரச்னைகள், நாள்பட்ட சளி, இளைப்பு, சைனசைடிஸ் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

    அரியலூர்:

    அகில இந்திய ஆயர்வேத கூட்டமைப்பின் திருச்சி மண்டலம், ஆரோக்கிய ஆயர்வேதிக் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச ஆயர்வேத மருத்துவ முகாம் அரியலூரில் நடைபெற்றது சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ரோட்டரி சங்கச் செயலர் கொளஞ்சி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தொழிலதிபர்கள் கோவை கிருஷ்ணா, அமுதன், ஏபிஎன் சுதாகர், புலவர் இளங்கோவன், மீரா மகளிர் கல்லூரி தாளாளர் கமலாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயுர்வேத மருத்துவ நிபுணர் இரா.ரேவதி தலைமையில் கார்த்திக், சிவகுரு, ஆகாஷ்,சந்தோஷ்ராஜ் ஆகியோர் கொண்டமருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, சிகிச்சை அளித்தனர். முகாமில், மூட்டுவலி, வீக்கம், மூட்டு தேய்மானம், கழுத்து, இடுப்பு மற்றும் தண்டுவட பிரச்னைகள், நாள்பட்ட சளி, இளைப்பு, சைனசைடிஸ் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. முன்னதாக ரோட்டரி சங்க நிர்வாகி பிரபு சங்கர் வரவேற்றார். முடிவில், ஆரோக்கிய ஆயுர்வேதிக் மருத்துவமனை நிர்வாகி கௌஷிக் நன்றி தெரிவித்தார்.


    • செல்லப்பி ராணிகளுக்கு வெறிநாய் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.
    • வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி, 

    தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் கால்நடை மருத்துவ வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு வெறிநாய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது. முகாமினை பொ.மல்லா புரம் பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

    அரூர் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ராமகிரு ஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாம் பணி களை டாக்டர் ரவி மபுகான், பொற்செழியன், செல்வகுமார், கண்ணகி சந்திரசேகர் ஆகியோர் மேற்கொண்டனர்.

    இதில் சுமார் 150 நாய்கள் உள்ளிட்ட செல்லப்பி ராணிகளுக்கு வெறிநாய் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.

    இந்நிகழ்வினைத் தொடர்ந்து வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பு மற்றும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, கால்நடை மருத்துவர் ரவி, ஆசிரியர்கள் செந்தில், முரளி, சேகர், தனசேகரன், கவியரசு மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டத் அலுவலர் தமிழ் தென்றல் சிறப்பாக செய்திருந்தனர்.பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.12-

    தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் கால்நடை மருத்துவ வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு வெறிநாய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது. முகாமினை பொ.மல்லா புரம் பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

    அரூர் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ராமகிரு ஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாம் பணி களை டாக்டர் ரவி மபுகான், பொற்செழியன், செல்வகுமார், கண்ணகி சந்திரசேகர் ஆகியோர் மேற்கொண்டனர்.

    இதில் சுமார் 150 நாய்கள் உள்ளிட்ட செல்லப்பி ராணிகளுக்கு வெறிநாய் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.

    இந்நிகழ்வினைத் தொடர்ந்து வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பு மற்றும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, கால்நடை மருத்துவர் ரவி, ஆசிரியர்கள் செந்தில், முரளி, சேகர், தனசேகரன், கவியரசு மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டத் அலுவலர் தமிழ் தென்றல் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய வேளாண் உழவர் நலத்துறை சார்பாக வேளாண் தொழில்நுட்ப மேளான்மை முகமை திட்டத்தில் உள் மாவட்ட அளவிலான விவசா யிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    அரூர் வேளாண்மை பொறியியல் துறையின் பொறியாளர் கௌதமன் மானாவரி நிலத்தின் வேளாண்மை செய்யும்போது இயந்திரங்களில் பயன்பாடுகள், மற்றும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து அதன் தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார்.

    இயற்கை வேளாண்மையில் பயிற்சி ஆசிரியர் பெருமாள் கோடை உழவு செய்வதின் பயண்கள், மானாவரி பயிர்களின் இடைவெளி, பயிர்களின் வரட்ச்சி தாங்கும் பயிர்கள், விதை நேர்த்தி செய்தல் , ஊட்டமேற்றிய தொழுஉரம், குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார், பின்பு மொரப்பூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    இதில் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேல் தலைமை வகித்தார். இப் பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரதளபதி சுமிதா செய்திருந்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.கடத்தூர்,பிப்,12-

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய வேளாண் உழவர் நலத்துறை சார்பாக வேளாண் தொழில்நுட்ப மேளான்மை முகமை திட்டத்தில் உள் மாவட்ட அளவிலான விவசா யிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    அரூர் வேளாண்மை பொறியியல் துறையின் பொறியாளர் கௌதமன் மானாவரி நிலத்தின் வேளாண்மை செய்யும்போது இயந்திரங்களில் பயன்பாடுகள், மற்றும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து அதன் தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார்.

    இயற்கை வேளாண்மையில் பயிற்சி ஆசிரியர் பெருமாள் கோடை உழவு செய்வதின் பயண்கள், மானாவரி பயிர்களின் இடைவெளி, பயிர்களின் வரட்ச்சி தாங்கும் பயிர்கள், விதை நேர்த்தி செய்தல் , ஊட்டமேற்றிய தொழுஉரம், குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார், பின்பு மொரப்பூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    இதில் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேல் தலைமை வகித்தார். இப் பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரதளபதி சுமிதா செய்திருந்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
    • ரேஷன்கடை தொடர்பான குறைதீர் முகாமில் பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வளங்கள் அதிகாரி பெரியநாயகி தலைமையில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் முதுநிலை வருவாய் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ரேஷன்கடை தொடர்பான குறைதீர் முகாமில் பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் தீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை அங்கீகாரச் சான று ரேஷன் கடைகள் குறித்து புகார், மொபைல் மாற்றம் மற்றும் இதர சேவைகள் குறித்த மனுக்கள் ஆகிய சேவைகள் வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் கணேசன், இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜானகி ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.


    • மணமேல்குடியில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • இதில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மணமேல்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, முடநீக்கு அறுவை சிகிச்சை, ஆரம்பகால மறுவாழ்வு பயிற்சி பரிந்துரை, உதவி உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித் தொகை, வங்கிக் கடன் வழங்குவதற்காக நபர்களை தேர்ந்தெடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியன நடைபெற்றது.

    இதில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம், தொடக்க நிலை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனியார், நலத்திட்ட அலுவலர் தினேஷ், தலைமை ஆசிரியர் சங்கர், மருத்துவர்கள் சுகன்யா, ஜெயகர், சுந்தரமூர்த்தி, சுலைத்கான், சிவரஞ்சனி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • பெரம்பலூரில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள் விவரம் வருமாறு:- பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் வட்டாரத்திற்கு பொம்மனப்பாடி, வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வெங்கனூர், குன்னம் வட்டாரத்திற்கு பேரளி (வடக்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு அணைப்பாடி ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.

    கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி பேசினார்
    • உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு,மாவட்ட காவல் துறை, சர்வதேச நீதிக் குழுமம், சென்னை ரைஷ் சமூக சேவை ஆகியவை இணைந்து நடைத்திய மனிதகடத்தல் எதிர்ப்பு மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். மகாலட்சுமி பேசியது:-கொத்தடிமை முறைக்கு எதிராக அதிகளவில் குற்றச்சாட்டுகள் வெளியு லகத்திற்கு வருவதில்லை. மேலும் கடுமையான தண்டனைகள் இந்த கொடு ஞ்செயலைச் செய்பவருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் இக்குற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    கொத்தடிமை முறையை ஓழிப்பதற்காக இந்தியாவில் 1976-இல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக கொத்தடிமைகளுக்கு உடனடியாக ரூ.1,000மும் அடுத்ததாக ரூ.19, 000மும் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது அவர்களின் மறுவாழ்வு க்காக வோளாண் நிலமும் அளிக்க வேண்டும். மீட்கப்ப டுபவர்களுக்கு மறுவாழ்வு வசதிகள் மற்றும் திட்டங்கள் (வாழ்வாதாரத் திட்டங்கள், ரேஷன் கார்டு, வீட்டு வசதி, அடையாள அட்டை போன்ற அனைத்தும்) கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மீட்கப்படுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களை குழந்தை நல குழுவிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய மனநல ஆலோசனைகளும் மருத்துவ சட்ட உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பாலியல் ரீதியான துன்புறத்தல் இருந்தாலோ அல்லது மனித கடத்தல் இருந்தாலோ அதையும் இணைத்து விசாரிக்க வேண்டும். மேலும், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

    மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் அழகேசன் ,காவல்துறை ஆய்வாளர்கள் கலா, கார்த்திகேயன் மற்றும் இந்திய நீதிக் குழுமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பிரபு, எ.மிக் ஓஸ்டின், ரைஷ் சமூக சேவை நிர்வாக இயக்குநர் அருள்தாஸ் ஆகியோர் பேசினர்.முன்னதாக அக்கல்லூ ரியின் முதல்வர் மலர்விழி வரவேற்றர். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட கூடுதல் காவல கண்காணி ப்பாளர்கள் (இணைய குற்றப்பிரிவு)ரவிசேகரன், மதுவிலக்கு அமல்பிரிவு காமராஜ் ஆகியோர் முன்னிலையில், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதே போல் மாவட்ட த்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்த காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


    • அரியலூரில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது
    • ரூ.2.6லட்சம் கல்வி உதவிதொகை கலெக்டர் வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வரி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 52 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு, 7 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இக்கூட்டத்தில் 8 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ரூ.2.60 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும், தென்பிராந்திய தளபதி, சென்னை அவர்க ளிடமிருந்து பெறப்பட்டுள்ள பாராட்டுச் சான்றிதழ் 13 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலை வாணி, உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சரவணன், கண்காணிப்பாளர் கலையரசி காந்தி மதி மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம்.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் 10-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி மற்றும் இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், புனல் குளத்தில் உள்ள கிங்ஸ் மற்றும் குயின்ஸ் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சியை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவரும்,

    இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க தலைவருமான மருத்துவர் சரவணவேல் அளித்தார்.

    பயிற்சியை கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் அற்புத விஜயசெல்வி, குயின்ஸ் கல்லூரி முதல்வர் சித்ராதேவி தொடங்கி வைத்து முன்னிலை வகித்தனர்.

    500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதில் கிங்ஸ் கல்லூரியின் நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அம்பலத்தரசு, தினேஷ், சுரேஷ்பாபு, மருத்துவமனை நிறுவனத்துறை தலைவர் ஞானசவுந்தரி கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியானது மேலும் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

    • ஆலங்குடி அருகே சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது
    • அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கைகுறிச்சி ஊராட்சியில் திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலகம் சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. கைகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி செல்வம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். திருவரங்குளம் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ரெங்கநாயகி, டாக்டர் தேவி ஆகியோ சிகிச்சை அளித்தனர். சித்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் சித்த மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    ×